Tuesday 26 March 2024

ஜமாஅத் தொழுகைக்கு முன் கூட்டியே வருவதால் நாம் அடையும் நன்மைகள்⭐

 ஜமாஅத் தொழுகைக்கு முன் கூட்டியே வருவதால் நாம் அடையும் நன்மைகள்⭐


✅ தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது உடைய நன்மையை அறிந்தால் அதற்காக விரைந்து செல்வார்கள்.


புகாரி 615


✅ பஜ்ர் மற்றும் இஷா தொழுகையை ஜமாத்தோடு தொழுவதின் நன்மையை அறிந்தால் தவழ்ந்தாவது வருவார்கள்.


புகாரி 615


✅ முதல் வரிசையில் நின்று தொழுவதின் நன்மையை அறிந்தால் அதற்காக போட்டி போடுவார்கள் சீட்டு குலுக்கி போடும் நிலைக்கு செல்வார்கள்..


புகாரி 615


✅ பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது..


அஹ்மத் 13357


✅ தொழுகைக்காக காத்திருக்கும் வரை தொழுத நன்மையே கிடைக்கும்


புகாரி 5869


✅ ஒருவர் தொழுகைக்காக காத்திருக்கும் வரை இறைவா இவரை மன்னித்துவிடு இவருக்கு கருணை காட்டு என்று மலக்குமார்கள் துஆ செய்வார்கள்


புகாரி 659


✅ உளூ செய்து விட்டு பள்ளிவாசலுக்கு நடந்து வந்தால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் பத்து நன்மைகளை இரு வானவர்களும் பதிவு செய்கின்றனர்...


இப்னு ஹிப்பான் 2045


✅ பள்ளிவாசலுக்கு நடந்து வரும் ஒவ்வொரு எட்டும் தர்மம் ஆகும்


புகாரி 2891


✅ பள்ளிவாசலுக்கு நடந்து வரும் இரு காலடிகளில் ஒன்று பாவத்தை அழிக்கின்றது மற்றொன்று அந்தஸ்தை உயர்த்துகின்றது


முஸ்லிம் 1184


✅ பள்ளிவாசலுக்கு ஒருவர் காலையிலும் மாலையிலும் செல்லும் போதெல்லாம் அல்லாஹ் சொர்க்கத்தில் அவருக்கு ஒரு இடத்தை தயார் செய்கின்றான்


புகாரி 662


✅ தனியாக தொழுவதை விட ஜமாத்தாக தொழுவது 27 மடங்கு சிறந்தது


புகாரி 645


✅ தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வரும் போதெல்லாம் வெளியூர் சென்றவர் ஊர் திரும்பும்போது அவருடைய குடும்பத்தார்கள்  சந்தோஷப்படுவதைப் போன்று அல்லாஹ் சந்தோஷப்படுகின்றான்


முஸ்னத் அஹ்மத் 8065


✅ தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு செல்பவர் அல்லாஹ்வின் விருந்தாளியாவார் விருந்தாளியை கண்ணியப்படுத்துவது விருந்தளிப்பவர் மீது கடமையாகும்


அல்முஃஜம் அல்கபீர்  6145


✅ இஷா தொழுகையை ஜமாத்தோடு தொழுதவர் இரவில் பாதி வரை நின்று தொழுதவர் போல் ஆவார்


முஸ்லிம் 1162


✅ பஜ்ர் தொழுகையை ஜமாத்தோடு தொழுதவர் இரவு முழுவதும் நின்று தொழுதவர் போல ஆவார்


முஸ்லிம் 1162


✅ ஃபஜ்ர் தொழுதவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார்


முஸ்லிம் 1163


✅ ஐவேளை தொழுகையை பேணுதலாக தொழுபவருக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் உயர்ந்த சொர்க்கம் கிடைக்கும்


அல்குர்ஆன் 23:9,10,11


✅ பஜ்ரையும் அஸரையும் பேணித் தொழுதவர் சொர்க்கம் புகுவார்


புகாரி 574


✅ஃபஜ்ர் மற்றும் அஸர் தொழுகையின் போது பகல் நேர வானவர்களும் இரவு நேர வானவர்களும் சந்தித்துக் கொள்கின்றனர்.


புகாரி 7486


 ✅ஃபஜ்ர் நேர தொழுகை அல்லாஹ்விடத்தில் சாட்சி சொல்ல கூடிய நேரமாக இருக்கின்றது


புகாரி 648


✅ பஜ்ரையும் அஸரையும் பேணித் தொழுதவர் முழு நிலவை நெருக்கடி இன்றி பார்ப்பது போல் அல்லாஹ்வை மறுமையில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கும்


புகாரி 554


✅ அஸரைப் பேணி தொழுதவருக்கு இரு மடங்கு நற்பலன் உண்டு


முஸ்லிம் 1510


✅ ஜமாத் தொழுகையில் ஆண்களின் வரிசையில் சிறந்தது முதல் வரிசையாகும் தீயது கடைசி வரிசையாகும்


முஸ்லிம் 749


✅ முதல் வரிசையில் தொழுபவருக்கு அல்லாஹ் அருள் புரிகின்றான் வானவர்கள் அருளை வேண்டுகின்றனர்


அஹ்மத் 18506


✅ நபியவர்கள் முதல் வரிசையில் தொழுபவருக்கு மூன்று முறையும் இரண்டாவது வரிசையில் தொழுபவருக்கு ஒரு தடவையும் பாவமன்னிப்பு கேட்பவராக இருந்தார்கள்


அஹ்மத் 17141


✅ தொழுகையில் இமாம் ஆமீன் கூறும் பொழுது நீங்கள் ஆமீன் கூறுங்கள் யாருடைய ஆமின் மலக்குமார்களுடைய ஆமினோடு ஒத்துப் போகின்றதோ அவருடைய முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது


புகாரி 780


குறிப்பு:ஜவேளை தொழுகையில் சப்தமிட்டு ஓதும் ரக்அத்கள் 6 மட்டுமே 


✅ இமாம் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறும்போது நீங்கள் ‘அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து’ எனக் கூறுங்கள்! யாருடைய இந்தக் கூற்று வானவர்களின் கூற்றுடன் ஒத்து அமைகிறதோ அவரின் முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன


புகாரி 796


அன்பானவர்களே இவ்வுலகில் கிடைக்கும் கோடி ரூபாயை விட மறுமையில் கிடைக்கும் ஒரு நன்மை சிறந்தது நன்மைக்கு முந்திக்கொள்ளுங்கள்.

Tuesday 31 October 2023

🌺இஸ்லாத்தில் ஐந்து கலிமா- தமிழ் மொழிப்பெயர்ப்புடன்🌺

 

🌺இஸ்லாத்தில் ஐந்து கலிமா- தமிழ் மொழிப்பெயர்ப்புடன்🌺

1.  அவ்வல் கலிமா தய்யிப்

லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்

பொருள்: வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹு தஆலாவைத் தவிர வேறு நாயன் இல்லை. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வுடைய திருத்தூதராக இருக்கிறார்கள்.

2.  இரண்டாம் கலிமா ஷஹாதத்

அஷ்ஹது அ(ன்)ல்லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு

பொருள்: நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹுவைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு யாதோர் இணையுமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். இன்னும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவனுடைய அடியாரும் இன்னும் அவனுடைய திருத்தூதருமாக இருக்கிறார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்.

3.  மூன்றாம் கலிமா தம்ஜீத்

ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹில் அலிய்யில் அலீம்.

பொருள்: அல்லாஹு தஆலா மிகப் பரிசுத்தமானவன். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அல்லாஹ் மிகப் பெரியவன். (பாவங்களை விட்டுத்) திரும்புதலும், இன்னும் (நன்மைகள் செய்யச்) சக்தியும் அல்லாஹு தஆலாவின் உதவியைக் கொண்டே தவிர இல்லை.

4.  நான்காம் கலிமா தவ்ஹீத்

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீது பிய திஹில் கைரு வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்

பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு யாதோர் இணையுமில்லை. ஆட்சியெல்லாம் அவனுக்கே, புகழனைத்தும் அவனுக்கே, அவனே (எல்லாப் பொருட்களுக்கும்) உயிர் கொடுக்கிறவன்; அவனே (எல்லாப் பொருட்களையும்) மரணிக்கச் செய்கிறவன், நன்மையெல்லாம் அவன் கைவசமே இருக்கின்றன. அவன் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தி உடையவன்.

5.  ஐந்தாம் கலிமா ரத்துல் குப்ர்

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அன் உஷ்ரிக பிக ஷைஅன்(வ்) வஅன அஃலமு வஅஸ்தஃபிருக லிமாலா அஃலமு இன்னக அன்த அல்லாமுல் குயூப் துப்து அன்ஹு வதபர்ரஃது அன் குல்லி தீனின் ஸிவாதீனில் இஸ்லாம் வ அஸ்லம்து வ ஆமன்து வ அகூலு லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹி

பொருள்: யா அல்லாஹ்! நிச்சயமாக நான் அறிந்தவனாயிருக்கும் நிலையில் உனக்கு எப்பொருளையும் இணை வைப்பதை விட்டும் உன்னிடம் நான் காவல் தேடுகிறேன். நான் அறியாமல் செய்த பாவங்களுக்காக உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். நிச்சயமாக நீ மறைவானவற்றை நன்கு அறிந்தவன். நான் (பாவங்களான) அதனை விட்டும் தவ்பாச் செய்து மீண்டேன். இஸ்லாம் மார்க்கத்தைத் தவிர மற்றெல்லா மார்க்கங்களை விட்டும் நான் நீங்கி விட்டேன். அல்லாஹ்வுக்கு நான் வழிபட்டு விட்டேன். நான் ஈமான் கொண்டேன். லாஇலாஹ இல்லலல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்று நான் கூறுகிறேன்.
❥═════════❥

Tuesday 19 September 2023

‎99 Names of Allah with English meaning!

 ‎99 Names of Allah with English meaning!


‎1. Allah (الله) The Greatest Name

‎2. Ar-Rahman (الرحمن) The All-Compassionate

‎3. Ar-Rahim (الرحيم) The All-Merciful

‎4. Al-Malik (الملك) The Absolute Ruler

‎5. Al-Quddus (القدوس) The Pure One

‎6. As-Salam (السلام) The Source of Peace

‎7. Al-Mu’min (المؤمن) The Inspirer of Faith

‎8. Al-Muhaymin (المهيمن) The Guardian

‎9. Al-Aziz (العزيز) The Victorious

‎10. Al-Jabbar (الجبار) The Compeller

‎11. Al-Mutakabbir (المتكبر) The Greatest

‎12. Al-Khaliq (الخالق) The Creator

‎13. Al-Bari’ (البارئ) The Maker of Order

‎14. Al-Musawwir (المصور) The Shaper of Beauty

‎15. Al-Ghaffar (الغفار) The Forgiving

‎16 Al-Qahhar (القهار) The Subduer

‎17. Al-Wahhab (الوهاب) The Giver of All

‎18. Ar-Razzaq (الرزاق) The Sustainer/Provider

‎19 Al-Fattah (الفتاح) The Opener

‎20 Al-`Alim (العليم) The Knower of All

‎21 Al-Qabid (القابض) The Constrictor

‎22. Al-Basit (الباسط) The Reliever/Expander

‎23 Al-Khafid (الخافض) The Abaser

‎24 Ar-Rafi (الرافع) The Exalter

‎25 Al-Mu’izz (المعز) The Bestower of Honors

‎26 Al-Mudhill (المذل) The Humiliator

‎27 As-Sami (السميع) The Hearer of All

‎28 Al-Basir (البصير) The Seer of All

‎29 Al-Hakam (الحكم) The Judge

‎30 Al-`Adl (العدل) The Just

‎31 Al-Latif (اللطيف) The Subtle One

‎32 Al-Khabir (الخبير) The All-Aware

‎33 Al-Halim (الحليم) The Forbearing

‎34 Al-Azim (العظيم) The Magnificent

‎35. Al-Ghafur (الغفور) The Forgiver and Hider of Faults

‎36. Ash-Shakur (الشكور) The Rewarder of Thankfulness

‎37 Al-Ali (العلى) The Highest

‎38 Al-Kabir (الكبير) The Greatest

‎39 Al-Hafiz (الحفيظ) The Preserver

‎40 Al-Muqit (المقيت) The Nourisher

‎41 Al-Hasib (الحسيب) The Accounter

‎42 Al-Jalil (الجليل) The Mighty

‎43. Al-Karim (الكريم) The Generous

‎44 Ar-Raqib (الرقيب) The Watchful One

‎45. Al-Mujib (المجيب) The Responder to Prayer

‎46 Al-Wasi (الواسع) The All-Comprehending

‎47 Al-Hakim (الحكيم) The Perfectly Wise

‎48 Al-Wadud (الودود) The Loving One

‎49 Al-Majeed (المجيد) The Majestic One

‎50 Al-Ba’ith (الباعث) The Resurrector

‎51 Ash-Shahid (الشهيد) The Witness

‎52 Al-Haqq (الحق) The Truth

‎53 Al-Wakil (الوكيل) The Trustee

‎54 Al-Qawiyy (القوى) The Possessor of All Strength

‎55 Al-Matin (المتين) The Forceful One

‎56 Al-Waliyy (الولى) The Governor

‎57 Al-Hamid (الحميد) The Praised One

‎58 Al-Muhsi (المحصى) The Appraiser

‎59 Al-Mubdi’ (المبدئ) The Originator

‎60 Al-Mu’id (المعيد) The Restorer

‎61 Al-Muhyi (المحيى) The Giver of Life

‎62 Al-Mumit (المميت) The Taker of Life

‎63 Al-Hayy (الحي) The Ever Living One

‎64 Al-Qayyum (القيوم) The Self-Existing One

‎65 Al-Wajid (الواجد) The Finder

‎66 Al-Majid (الماجد) The Glorious

‎67 Al-Wahid (الواحد) The One, the All Inclusive, The Indivisible

‎68. As-Samad (الصمد) The Satisfier of All Needs

‎69 Al-Qadir (القادر) The All Powerful

‎70 Al-Muqtadir (المقتدر) The Creator of All Power

‎71 Al-Muqaddim (المقدم) The Expediter

‎72 Al-Mu’akhkhir (المؤخر) The Delayer

‎73 Al-Awwal (الأول) The First

‎74 Al-Akhir (الأخر) The Last

‎75 Az-Zahir (الظاهر) The Manifest One

‎76 Al-Batin (الباطن) The Hidden One

‎77 Al-Wali (الوالي) The Protecting Friend

‎78 Al-Muta’ali (المتعالي) The Supreme One

‎79 Al-Barr (البر) The Doer of Good

‎80. At-Tawwab (التواب) The Acceptor to Repentance

‎81 Al-Muntaqim (المنتقم) The Avenger

‎82. Al-‘Afuww (العفو) The Forgiver/Pardoner

‎83. Ar-Ra’uf (الرؤوف) The Clement/Compassionate

‎84 Malik-al-Mulk (مالك الملك) The Owner of All

‎85 Dhu-al-Jalal wa-al-Ikram (ذو الجلال و الإكرام) The Lord of Majesty and Bounty

‎86 Al-Muqsit (المقسط) The Equitable One

‎87 Al-Jami’ (الجامع) The Gatherer

‎88 Al-Ghani (الغنى) The Rich One

‎89 Al-Mughni (المغنى) The Enricher

‎90. Al-Mani'(المانع) The Preventer of Harm

‎91 Ad-Darr (الضار) The Creator of The Harmful

‎92. An-Nafi’ (النافع) The Creator of Good

‎93 An-Nur (النور) The Light

‎94. Al-Hadi (الهادي) The Guide

‎95. Al-Badi (البديع) The Originator

‎96. Al-Baqi (الباقي) The Everlasting One

‎97. Al-Warith (الوارث) The Inheritor of All

‎98. Ar-Rashid (الرشيد) The Righteous Teacher

‎99. As-Sabur (الصبور) The Patient One

நபிகள் நாயகம் ﷺ பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் - மூஃமீனும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை

 நபிகள் நாயகம் ﷺ பற்றி ஒவ்வொரு முஸ்லிமும்  - மூஃமீனும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை

 


1.   நபி (ஸல் - அம் ) அவர்களின் பிறப்பு :

      20-04-570 , திங்கட்கிழமை , 

      ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 .


2.   பிறந்த இடம் : 

      புனித  மக்காமா ந௧ா் .


3.   பெற்றோர் : 

      அப்துல்லாஹ் - அன்னை ஆமீனா .


4.   பாட்டானார் : 

      அப்துல் முத்தலீப் .


5.   தந்தை மரணம் : 

      நபி (ஸல் - அம் ) அவர்கள் கருவில்

      இருக்கும் போது !


6.   தாயார் மரணம் : 

      நபி (ஸல் - அம் ) அவர்களின் ஆறு வயதில் .


7.   பாட்டனார் மரணம் : 

      நபி (ஸல் - அம் ) அவர்களின் எட்டு வயதில் .


8.   வளர்ப்பு : 

      பாட்டனாருக்குப் பின் 

      பெரிய தந்தை அபூதாலிப் .


9.   செவிலித் தாய்மார்கள் : 

      ஹழ்லரத் துவைஃபா (ரலி..) என்ற 

      அடிமைப் பெண் ; பின்பு 

      ஹழ்லரத் ஹலிமா (ரலி..) அவர்கள் .


10. பட்டப் பெயர்கள் : 

      அல் அமீன் -

      (நம்பிக்கைக்கு உரியவர்), 

      அஸ்ஸாதிக் -

      (உண்மையானவர்).


11. முதல் வணிகம் : 

       அன்னை கதீஜா (ரலி..)

      அவர்களின் வணிகக் குழுவில் 

      சேர்ந்து , சிரியா தேசம் பயணம் .


12. முதல் திருமணம் :

       அன்னை கதீஜா (ரலி..) அவர்களுடன் .


13. மஹர் தொகை : 

      500 திர்ஹம்கள் .


14. திருமணத்தை நடத்தி வைத்தவர் :

       பொிய தந்தை அபூதாலிஃப் அவர்கள் .


15. நபி (ஸல் - அம் ) அவர்கள் மனைவியர்௧ள் :

      அன்னை கதீஜா (ரலி..) , 

      அன்னை ஸவ்தா (ரலி..) , 

      அன்னை ஆயிஷா (ரலி..) , 

      அன்னை ஹஃப்ஸா (ரலி..) , 

      அன்னை ஜைனப் பின்த் குஜாமா (ரலி...) ,

      அன்னை உம்முஸல்மா (ரலி..) , 

      அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி..) ,

      அன்னை ஜுவைரிய்யா (ரலி..) , 

      அன்னை உம்மு ஹபீபா (ரலி..) , 

      அன்னை ஸஃபிய்யா (ரலி..) , 

      அன்னை மைமூனா (ரலி..) , 

      அன்னை மரியத்துல் கிப்தியா (ரலி..).


16. ஆண் மக்கள் : 

      காஸிம் (ரலி..)

      அப்துல்லாஹ் (ரலி..)

      இப்றாஹீம் (ரலி..) 

      இவர்கள் குழந்தைப் பருவத்திலேயே

      வஃபாத்தாகி விட்டார்கள்.


17. பெண் மக்கள் : 

       ஜைனப் (ரலி..) ,  

       ருகையா (ரலி...) , 

       உம்முகுல்தூம் (ரலி..) , 

       ஃபாத்திமா (ரலி..).


18. பேரர்கள் : 

           உமாமா (ரலி..) ,

          முஹ்சின் (ரலி..) , 

           இமாம் ஹஸன் (ரலி..) ,

            இமாம் ஹுஸைன்                  (ரலி..).


19. ஊழியர்கள் : 

      ஹழ்லரத் பிலால் (ரலி..) , 

      ஹழ்லரத் அனஸ் (ரலி...) , 

      ஹழ்லரத் உம்மு அய்மன் 

      மாரியா (ரலி..).


20. அடிமை :

       ஹழ்லரத் ஜைதிப்னு ஹாரிதா (ரலி..)


21. பெருமானார் (ஸல் - அம்) அவர்களின் தகப்பனார் உடன் பிறந்தோர் : 

      மொத்தம் 12 பேர்௧ள் . அவர்களில்

      இஸ்லாத்தை ஏற்றவர்கள் 

      ஹழ்லரத் ஹம்ஜா (ரலி..) , 

      ஹழ்லரத் அப்பாஸ் (ரலி..)


22. பெருமானார் (ஸல் - அம் ) அவர்களின்

       தாய் உடன் பிறந்தோர்௧ள் : 

       மொத்தம் 6 பேர் . அவர்களில்

       இஸ்லாத்தை ஏற்றவர்கள் 

       ஹழ்லரத் அம்மாரா (ரலி..) , 

       ஹழ்லரத் ஆத்திகா (ரலி..) , 

       ஹழ்லரத் ஸஃபிய்யா (ரலி..).


23. நபிப் பட்டம் கிடைத்தது : 

       40 ஆம் வயதில் ( கி.பி. 610 )


24. நபிப் பட்டம் கிடைத்த இடம் : 

       ஹீரா குகை .


25. முதல் வஹீ : 

       " இக்ரஃ பிஸ்மி "

       என்ற வஸனம் .


26. முதல் முதலாக ஈமான்

      கொண்டவர்கள் :    

       பெண்களில்  - 

       ஹழ்லரத் அன்னை கதீஜா (ரலி..) ,

       சிறுவர்களில்  -  ஹழ்லரத் அலீ (ரலி..) , 

      ஆண்களில் ஹழ்லரத் அபூபக்கர் (ரலி..) ,

      அடிமைகளில்  -  ஹழ்லரத் பிலால் (ரலி..).


27. முஸ்லிம்களின் முதல் ஹிஜ்ரத் :

       அபிசினியாவிற்கு , நபித்துவம் 

       5 – ஆம் ஆண்டில் , 

       மன்னர் நஜ்ஜாஸி ஆட்சியில் .


28. முதல் ஹிஜ்ரத் செய்தவர்கள் : 

       நபி (ஸல் - அம் ) அவர்களின் 

       மகள் ருகையா (ரலி..) , 

       மருமகன் ஹழ்லரத் உஸ்மான் (ரலி..) ,

       மற்றும் 

       ஆண்கள் 11 பேர் , பெண்கள் 4 பேர் .


29. தாயிஃப் நகரில் தவ்ஹீத் : 

       நபித்துவ 10 – ஆம் ஆண்டில் ,

      துணையாகச்  சென்றவர் 

      ஹழ்லரத் ஜைது (ரலி..).


30. மக்காவில் தீன் அழைப்புப் பணி : 

      13 ஆண்டுகள் .


31. மதீனாவிற்கு ஹிஜ்ரத் : 

      நபித்துவ 14 – ஆம் ஆண்டில் .


32. உடன் சென்றவர் : 

       ஹழ்லரத் அபூபக்கர் (ரலி..) .


33. ஹிஜ்ரத்தின் போது மறைந்திருந்த

      குகை : 

      " தௌர் " .


34. மதீனா சேர்ந்த நாள் : 

       ஈஸவி 25 - 09 - 622 - இல் .


35. பத்ரு யுத்தம் : 

      ஹிஜ்ரி 2 , ரமளான் மாதம் .


36. தொழுகைக்கு பாங்கு

       அறிமுகப்படுத்தப்பட்டது : 

       ஹிஜ்ரி - 2 இல் .


37. நபி (ஸல் - அம் ) அவர்கள் காலத்தில் கஃபா

      கிப்லாவாக ஆக்கப்பட்டது :

      ஹிஜ்ரி - 2 இல் .


38. உஹது யுத்தம் : 

       ஹிஜ்ரி - 3 இல் .


39. அகழ் யுத்தம் : 

       ஹிஜ்ரி - 5 இல் .


40. ஹுதைபிய்யா உடன்படிக்கை : 

       ஹிஜ்ரி - 6 இல் .


41. மது ஹராமாக்கப்பட்டது :

       ஹிஜ்ரி - 6 இல் .


42. நபி (ஸல் - அம் ) அவர்களின் புனித பல்

      ஷஹிதான யுத்தம் : 

      உஹது யுத்தம் .


43. நபி (ஸல் - அம் ) அவர்களின் காலத்து

      போர்களில் சில :

      பனூ முஸ்தலிக் ,

      ஹுனைன் , 

      தாயிப் , 

      பனூ கைனூக் , 

      பனூ நஸீர் , 

      பனூ குறைளா , 

      கைபர் ,

      மூத்தா , 

      தபூக் யுத்தங்கள் !


44. மக்கா மீது படையெடுப்பு :

       ஹிஜ்ரி - 8 இல் .


45. மிஃராஜ் : 

       நபித்துவ 12 – ஆம் ஆண்டில் ,

       ரஜப் பிறை 27 திங்கட் கிழமை .


46. தொழுகை கடமையாக்கப்பட்டது :

       மிஃராஜில் .


47. ஹஜ் கடமை : 

       ஹிஜ்ரி - 9 இல் .


48. நபி (ஸல் - அம் ) அவர்கள் ஹஜ் செய்தது : 

       ஹிஜ்ரி – 10 இல் .


49. நபி (ஸல் - அம் ) அவர்களின் தலையிலும்

      தாடியிலும் இருந்த மொத்த நரை முடிகள் : 

      17 .


50. நபி (ஸல் - அம் ) அவர்கள் செய்த இறுதிப்

      பிரசங்கம் : 

      ஹஜ்ஜத்துல் விதாவில் .


51. இறுதி வஹி : 

       110 – ஆம் அத்தியாயம் .


52. நபி (ஸல் - அம் ) அவர்கள் உலகைப் பிரிந்து , சுவனம் புகுந்த நாள் : 

      ஹிஜ்ரி 10 ,  ரபீஉல் அவ்வல் பிறை 12 , 

      திங்கட்கிழமை .


53. நபி (ஸல் -அம் ) அவர்களின்

      புனித உடலை கழுவ நீர் 

      எடுக்கப்பட்ட கிணறு : 

      அரீஸ் கிணறு .


54. நீராட்டியவர்கள் : 

      ஹழ்லரத் அலீ (ரலி..) ,

      ஹழ்லரத் அப்பாஸ் (ரலி..) , 

      ஹழ்லரத் பழ்ல் (ரலி..) , 

      ஹழ்லரத் குஸீ (ரலி..) , 

      ஹழ்லரத் உஸாமா (ரலி..) ,

      ஹழ்லரத் ஷக்ரான் (ரலி..) , 

      ஹழ்லரத் உஸ் இப்னு கௌல் அன்சாரி (ரலி..).


55. ஜனாஸா தொழுகை : 

       72 முறை நடந்தது....!


56. கப்ரில் இறக்கியவர்கள் :  

       ஹழ்லரத் அலீ (ரலி..) , 

       ஹழ்லரத் அப்பாஸ் (ரலி..) , 

       ஹழ்லரத் பழ்ல் (ரலி..) , 

       ஹழ்லரத் குஸீ (ரலி..).


57. நபி (ஸல் - அம் ) அவர்களை இறுதியாகக்

      கண்டவர்கள் : 

      ஹழ்லரத் பழ்ல் (ரலி..) , 

      ஹழ்லரத் குஸீ (ரலி..).


58. வாழ்ந்த நாட்கள் : 

       சந்திரக் கணக்குப்படி

       63 வருடங்கள் , 3 நாட்கள் , 

       6 மணி நேரம் .  

       சூரியக் கணக்குப்படி 

       61 வருடங்கள் , 49 நாட்கள் , 

       6 மணி நேரம் .


59. உலகில் விட்டுச் சென்ற பொருட்கள் :

       ஒரு சீப்பு , 

       சுர்மா கூடு , 

       2 தொழுகை பாய்கள் , 

       ஒரு திரிகை , 

       ஜோடி காலணி ,

       போர்வை , 

       ஊன்றுகோல் ,

       கேத்தல் , 

       கீழ் ஆடை , 

       குர்ஆனில் சில தொகுப்புகள் , 

       மிஸ்வாக் , 

       ஜிப்பா , 

       மூன்று பாய்கள் , 

       இரண்டு சுர்மா கோல் .


60. அண்ணலாரைப் போன்று தோற்றம்

      அளித்த ஸஹாபி : 

      ஹழ்லரத் முஸ்அப் இப்னு உமைர் (ரலி..)


61. அண்ணலாருக்குப் பின் ஆண்ட

      கலீஃபாக்கள் : 

      ஹழ்லரத் அபூபக்கர் (ரலி..) , 

      ஹழ்லரத் உமர் (ரலி..) , 

      ஹழ்லரத் உஸ்மான் (ரலி..) , 

      ஹழ்லரத் அலீ (ரலி..).


62. அதிக அளவில் ஹதீஸ்களை

       அறிவித்தவர்கள் : 

       ஆண் ஸஹாபி  - 

       ஹழ்லரத் அபூஹுரைரா (ரலி...) , 

       பெண் ஸஹாபி  - 

       ஹழ்லரத் ஆயிஷா (ரலி..).


63. அன்னை ஃபாத்திமா (ரலி..) மரணம் :   

       பெருமானார் (ஸல் - அம்) 

       மறைந்த ஆறு மாதத்தில் .

 

நபி பெருமானார் (ஸல் - அம் ) அவர்களின் வாழ்க்கை முழுவதும் குர்ஆனாகவே இருந்தது...!


 ஸல்லல்லாஹு அலா முஹம்மது

ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம்.


இந்த குறிப்புகளை நாமும் நமது குடும்பத்தார்களும் அதிலும் குறிப்பாக நம்முடைய குழந்தைகள் மற்ற ஏனையவர்களும் தெரிந்துக் கொள்வது சிறப்பாகும் ; கட்டாயமாகும் .

Sunday 7 August 2022

புனித ஆஷுரா நாளின் நோன்பின் நிய்யத்

 புனித ஆஷுரா நாளின் நோன்பின் நிய்யத்

பிறை 9 (திங்கட்கிழமை வைக்கும்) நோன்பின் நிய்யத்:

நவய்த்து ஸவ்ம கதின் அன் அதாயி சுன்னத்தத் தாஸுஆஅ  ஹாதிஹிஸ் ஸனத்தி லில்லாஹித் தஆலா:


பொருள்:

இந்த வருடத்தின் முஹர்ரம் மாதத்தின் *ஒன்பதாம் நாளின்* *சுன்னத்தான* நோன்பை அல்லாஹ்வுக்காக நோற்கிறேன் 

(யா அல்லாஹ் இதை ஏற்றுக் கொள்வாயாக)




புனித ஆஷுரா நாளின் நோன்பின் நிய்யத்*


பிறை 10 (செவ்வாய் கிழமை வைக்கும்) நோன்பின் நிய்யத்: 


*நவய்த்து ஸவ்ம கதின் அன் அதாயி சுன்னத்தல் ஆஷுராஅ ஹாதிஹிஸ் ஸனத்தி லில்லாஹித் தஆலா:*


பொருள்:

இந்த வருடத்தின் முஹர்ரம் மாதத்தின் *பத்தாம் நாளின்* *சுன்னத்தான* நோன்பை அல்லாஹ்வுக்காக நோற்கிறேன் 

(யா அல்லாஹ் இதை ஏற்றுக் கொள்வாயாக)

ஆஷுரா நாளில் செய்ய வேண்டிய பத்து நற்செயல்கள்:

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


ஆஷுரா நாளில் செய்ய வேண்டிய பத்து நற்செயல்கள்:


*1-பிறை 9-10 ல் நோன்பு நோற்பது* அதனால் கடந்த ஆண்டின் பாவங்கள் மன்னிக்கப் படுகிறது 



*2-தன் குடும்பத்திற்கு தாராளமாக செலவு செய்வது*

 அதனால் ஆண்டு முழுவதும் விசாலமான வாழ்வாதாரத்தை அல்லாஹ் வழங்குவான்

 

*3-யாரேனும் ஒருவர் ஒரு நாளில் நோன்பு நோற்று* 

*ஏழைக்கு உணவளித்து நோயாளியை நலன் விசாரித்து ஜனாஸாவில் கலந்து கொண்டால்* 

*அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்* எனவே *ஒரே நாளில் இந்த நான்கு காரியங்களையும்* செய்திட முயற்சிக்க வேண்டும்


* 4-அதிகமாக (ஸதகா)*

*தர்மம் செய்வது* 


*5-நோன்பாளிகளுக்கு ஸஹர் இஃப்தாருக்கு ஏற்பாடு செய்து கொடுப்பது* 


*6-குளித்து சுத்தமாக இருப்பது இதனால் ஆண்டு முழுவதும் பெரும் வியாதி லிருந்து பாதுகாப்பு கிடைக்கும்*


*7-தந்தை இல்லாத அனாதை (யதீம்)களின்* *அன்பாக ஆதரவாக தலையை தடவி உதவி செய்வது* 

*அதனால் உள்ளத்தில் இரக்க குணமும் கணக்கிட முடியாத நன்மைகளும் கிடைக்கும்*


*8-பசித்தவர்களுக்கு உணவும் தாகித்தவர்களுக்கு நீரும் கொடுப்பது* 


*9-முடிந்தளவு ஆஷுரா இரவில்  அதிக அமல்கள் செய்வது* 


*10-அதிகமாக துஆக்கள் செய்வது குறிப்பாக சிறப்பு மிக்க துஆக்களை அதிகமாக ஓதுவது*


நமது அமல்களை அல்லாஹ் கபூல் செய்து நிரந்தரமான நிலையான ஈமானையும் நல்அமல்களையும் அஃப்வு என்னும் மன்னிப்பையும் ஆஃபியத் எனும் ஆரோக்கியத்தையும் நம் அனைவருக்கும் அருள்வானாக 

உங்கள் துஆவில் மறக்காமல் எங்களை சேர்த்துக் கொள்ளுங்கள் 

வஸ்ஸலாம்

ஆஷுரா (பத்தாம்) நாளின் பத்து சிறப்புகள்:

 ஆஷுரா (பத்தாம்) நாளின்  பத்து சிறப்புகள்:

1-அல்லாஹ்வின் அர்ஷ்-லைஹுல் மஹ்ஃபூல் -கலம் ஆகியவற்றை அல்லாஹ் படைத்த நாள்:


2--ஜிப்ரீல்( அலை) படைக்கப்பட்ட நாள்:


3--உலகில் முதன் முதலில் மழை பொழிந்த நாள்: 


4--அல்லாஹ்வின் ரஹ்மத் இந்த பூமியில் இறக்கப்பட்ட நாள்: 


5--ஆதம் அலை அவர்களின் பாவ மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்: 


6--நூஹ் அலை அவர்களின் கப்பல் ஜுதி மலையில் ஒதுங்கி மக்கள் பாதுகாப்பு பெற்ற நாள்: 


7--உலகின் மிகப்பெரிய அநியாக்காரனாகிய ஃபிர்அவ்னும் அந்த அநியாயக்காரனுக்கு  துனை போனவர்களும் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டு மூஸா அலை அவர்களும்  அவர்களை பின்பற்றியவர்களும் பாதுகாக்கப்பட்ட நாள்: 


8--துஆக்கள் கபூலாகும் நாள்: 

-கபூலான துஆக்கள் நிறைவேறும் நாள்:


9--அநியாயக்கார்களுக்கு முடிவு கட்டப்படுப்பட்டு நல்லவர்களுக்கு வெற்றி கிடைக்கும் நாள்:

10-கியாமத்எனும் உலக அழிவு ஏற்படும் நாள்:

Monday 2 May 2022

ஈதுல் ஃபித்ர் (ஈகை பெருநாள்) நல்வாழ்த்துக்கள்

நோன்புப்பெருநாள் அன்று நாம்  கடைப்பிடிக்க வேண்டிய சுன்னத்தான காரியங்கள்:





1.. அதிகாலையில் விரைவாகஎழுந்து விட வேண்டும்..அதில் பரகத் இருக்கிறது

2.. மிஸ்வாக் செய்து வாயை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்

3.. *பஜ்ர் தொழுகையை* உரிய நேரத்தில் தவறாமல் தொழ வேண்டும்

4..ஈதுல் பித்ர் தொழுகைக்காக குளிக்கிறேன் என *நிய்யத்* வைத்து குளிப்பது 

5.. *புத்தாடை அல்லது இருப்பதில் நல்ல சுத்தமான ஆடையை  அணிவது

6.. *நறுமணம்* பூசிக்கொள்வது
7..மார்க்கத்துக்கு முரண் ஆகாதவாறு *அலங்காரம்* செய்து கொள்வது.

8.. 3/5 என ஒற்றைப்படையாக *பேரீத்தம்பழம் அல்லது வேறு ஏதேனும் இனிப்பு சாப்பிடுவது

9..பெருநாள் தொழுகை தொழுவதற்கு முன்பே  *ஸதகத்துல் பித்ர்*  கொடுப்பது.

10..பிறை பார்த்ததில் இருந்து பெருநாள் தொழுகை முடியும் வரை அதிகதிமாக *தக்பீர்* ஓதிக் கொள்வது.

11.. உறவினர்களை சந்தித்து பெருநாள் *வாழ்த்துக்கள்* சொல்வது.
 12..எல்லோருடனும் *முஸாபஹா* செய்வது.

13..அன்றைய நாளில் *சந்தோஷமாக* இருக்க வேண்டும்.

14.. அக்கம் பக்கத்தில்  உள்ளவர்களுக்கு உணவு களை பரிமாறிக் கொள்வது*

15.. *அன்பளிப்பு* களை பரிமாறிக் கொள்வது

16.. பெருநாள் தொழுகைக்கு போகும்போது ஒரு *பாதையிலும் வரும்போது ஒரு பாதையிலும்* வருவது

17..அல்லாஹ்விடம் அதிகமாக *துஆ* செய்ய வேண்டும்

18.பெருநாளைக்கு அடுத்த நாளிலிருந்து (ஷவ்வால் மாதம்) 
6 நோன்பு வைப்பது 

***ஈதுவாழ்த்தாக.                        
                            .تقبل الله منا ومنكم صالح الأعمال18.பெருநாளைக்கு
தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் ஸாலிஹல் அஃமால் (எல்லா நல் அமல்களையும் உங்களிடமிருந்தும் நம்மிடமிருந்தும் அல்லாஹ் கபூல் செய்வானாக) என்ற துஆவை கூறுவது 
 
**நமது அனைத்து நல்லமல்களை கபூல் செய்து ஈருலக பாக்கியங்களை அருள்வானாக ஆமீன்  

***அனைவருக்கும் ஈதுல் ஃபித்ர் (ஈகை பெருநாள்) நல்வாழ்த்துக்கள் 🤲🤲🏻🤲🏽🤲🤲🏻🤲🏽🕌🕌

Monday 11 April 2022

ஜகாத் அளவு

 📚✍️✍️✍️ *ஜகாத் விளக்கம் நூல் ஆசிரியர்:* 


மெளலானா மெளலவி ஹாஃபிழ் காரி முஃப்தி A.நூருல் அமீன் மன்பயீ ஹழ்ரத் கிப்லா 


முதல்வர்: ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி,

கடலூர் மாவட்ட அரசு காஜி ஸாஹிப் 


தங்கத்திற்குரிய ஜகாத்

எண்பத்தியேழரை கிராம்

தங்கத்திற்ஐகு – 2 கிராம் 187.5

மி.கி.

11 பவுனுக்கு 2 கிராம் 250

மி.கிராம்

12 பவுனுக்கு 2 கிராம் 400 மி.

கிராம்

13 பவுனுக்கு 2 கிராம் 600 மி.

கிராம்

14 பவுனுக்கு 2 கிராம் 800 மி.

கிராம்

15 பவுனுக்கு 3 கிராம்

16 பவுனுக்கு 3 கிராம் 200 மி.

கிராம்

17 பவுனுக்கு 3 கிராம் 400 மி.

கிராம்

18 பவுனுக்கு 3 கிராம் 600 மி.

கிராம்

19 பவுனுக்கு 3 கிராம் 800 மி.

கிராம்

20 பவுனுக்கு 4 கிராம்

25 பவுனுக்கு 5 கிராம்

30 பவுனுக்கு 6 கிராம்

35 பவுனுக்கு 7 கிராம்

40 பவுனுக்கு 1 பவுன்

50 பவுனுக்கு ஒன்னேகால்

பவுன்

60 பவுனுக்கு ஒன்றரை பவுன்

70 பவுனுக்கு ஒன்னே

முக்கால் பவுன்

80 பவுனுக்கு இரண்டு பவுன்

90 பவுனுக்கு இரண்டேகால்

பவுன்

100 பவுனுக்கு இரண்டரை பவுன்


📔ஜகாத் விபரம்📔

🔹Rupees. 👉Rs.          Ps.

🔹100.        👉 2.           50 

🔹200         👉5.            00

🔹300         👉7.            50

🔹400.        👉 10.         00

🔹500.        👉12.          50

🔹600.        👉15.          00

🔹700.        👉17.          50

🔹800.        👉20.          00

🔹900.        👉22.          50

🔹1000.      👉25.          00ந்

🔹1500.      👉37.          50

🔹2000.      👉50.          00

🔹2500.      👉62.          50

🔹3000.      👉75.          00

🔹3500.      👉87.          50

🔹4000.      👉100.        00

🔹4500.      👉112.        50

🔹5000.      👉125.        00

🔹5500.      👉137.        50

🔹6000.      👉150.        00

🔹6500.      👉162.       50

🔹7000.    👉175.        00

🔹7500.       👉187.       50

🔹8000.       👉200.       00

🔹8500.       👉212.       50

🔹9000.       👉225.       00

🔹9500.       👉237.       50

🔹10000.     👉250.      00

🔹15000.     👉375.      00

🔹20000.     👉500.      00

🔹25000.     👉625.      00

🔹30000.     👉750.      00

🔹35000.     👉875.      00

🔹40000.     👉1000.    00

🔹45000.     👉1125.    00

🔹50000.     👉1250.    00

🔹55000.     👉1375.    00

🔹60000.     👉1500.    00

🔹65000.     👉1625.    00

🔹70000.     👉1750.    00

🔹80000.     👉2000.    00

🔹90000.     👉2250.    00

🔹1 lakh.      👉2500.    00

🔹2 lakh.      👉5000.    00

🔹3 lakh.      👉7500.    00

🔹4 lakh.      👉10000.  00

🔹5 lakh.      👉12500.  00

🔹6 lakh.      👉15000.  00

🔹7 lakh.      👉17500.  00

🔹8 lakh.      👉20000.  00

🔹9 lakh.      👉22500.  00

?

?10 lakh.    👉25000. 00

🔹20 lakh.    👉50000. 00

🔹30 lakh.    👉75000. 00

🔹40 lakh.    👉1 lakh.

🔹50 lakh.    👉1 lakh 25000

🔹1 crow.     👉2 lakh 50000

🔹2 crow.     👉5 lakh.


 *ஜகாத் விளக்கம் நூல் ஆசிரியர்:* 


மெளலானா மெளலவி ஹாஃபிழ் காரி  முஃப்தி A.நூருல் அமீன் மன்பயீ ஹழ்ரத் கிப்லா 


முதல்வர்: ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி,

கடலூர் மாவட்ட அரசு காஜி ஸாஹிப்

ஜகாத் குறித்த சந்தேகங்களும்! விளக்கங்களும்!!

 ஜகாத் குறித்த சந்தேகங்களும்! விளக்கங்களும்!!


யார் மீது கடமை?


ஒரு மனிதரிடம் 85 கிராம் நகையோ அல்லது அதற்கு நிகரான (ஜகாத் கடமையுள்ள சொத்து அல்லது) பணமோ இருந்தால் அவர் ஜகாத் கொடுக்க வேண்டும்.


*மனைவி இடத்தில் உள்ள நகைகளுக்கு கணவன் கொடுக்க வேண்டுமா?*


அவ்வாறில்லை. யார் சொத்துக்கு உரிமையாளரோ, அவர் மீது ஜகாத் கடமை. அவர் சார்பாக கணவனோ அல்லது மற்றவரோ ஒப்புதலோடு கொடுப்பது குற்றமில்லை. 


*கடன் இருந்தால் கொடுக்க வேண்டுமா?* 


சொத்து மதிப்பில், வர வேண்டியவைகளை சேர்த்துவிட்டு, கடனை கழித்துவிட்டு மீதமுள்ள தொகை 85 கிராம் அல்லது அதற்கு நிகரான தொகை இருந்தால் கொடுக்க வேண்டும். 


*எவ்வளவு கொடுக்க வேண்டும்?*


சொத்துக்கள்*, தங்கம், ஆபரண கற்கள், வங்கியிலுள்ள சேமிப்பு, கையிருப்பு பணம் போன்றவைகளுக்கு இரண்டரை சதவிகிதம் கொடுக்க வேண்டும். 


(40 கிராம் தங்கம் இருந்தால் ஒரு கிராம் கொடுக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான பணத்தை கொடுக்க வேண்டும். 100 கிராம் இருந்தால், மொத்தமாக 100 கிராமுக்கும் கொடுக்க வேண்டும்.) 


_*வாடகை பெறப்படும் (கடை அல்லது வீடு போன்ற) சொத்துக்களுக்கு, வாடகைக்கு மட்டும் 

ஜகாத் கொடுத்தால் போதும். மொத்த மதிப்பிற்கு அல்ல!_


*குழந்தைகளின் நகைகளுக்கு கொடுக்க வேண்டுமா?*


குழந்தைகள் பருவமடைந்து அந்த சொத்துக்களை பயன்படுத்தும் வரை, அதன் உரிமை பெற்றோர்களை சார்ந்ததே. எனவே அதற்கும் கொடுக்க வேண்டும். 


*அனாதைகளின் சொத்துக்களுக்கு கொடுக்க வேண்டுமா?*

ஆம்... அவர்களை பராமரிப்பவர், அவர்களது சொத்திலிருந்தே கொடுக்கலாம்.


*தரிசு நிலத்திற்கு கொடுக்க வேண்டுமா?*


தரிசு நிலத்திற்கு ஜகாத் இல்லை. ஆனால் விற்பனை எண்ணத்துடன் வைத்திருக்கும் தரிசு நிலத்திற்கு ஜகாத் கொடுக்க வேண்டும். 


*விவசாய நிலத்திற்கு கொடுக்க வேண்டுமா?*


விவசாய நிலத்தில் வரும், விளைச்சலுக்கு மட்டும் ஜகாத் உண்டு!


*விவசாயத்திற்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்?*


எவ்வித உழைப்பும் இன்றி, மழை நீரால் மட்டுமே கிடைக்கப்பெறும் விளைச்சலுக்கு , 10 சதவிகிதம் கொடுக்க வேண்டும். 


நீர் இறைத்து கிடைக்கப்பெறும் விளைச்சலுக்கு , 5 சதவிகிதம் கொடுக்க வேண்டும். 


மழைநீர் மற்றும் இறைத்து செலவிடப்படும் நீர் போன்றவற்றால் கிடைக்கப்பெறும் விளைச்சலுக்கு , ஏழரை சதவிகிதம் கொடுக்க வேண்டும். 


*கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டுமா?*


39 கால்நடைகள் வரை கிடையாது. 

40 கால்நடைகள் இருந்தால் ஒன்று கொடுக்க வேண்டும். 120 க்கு மேல் இருந்தால் இரண்டு கொடுக்க வேண்டும். 200க்கு மேல் இருந்தால் 3 கொடுக்க வேண்டும். 300க்கு மேல் 4.... Etc., 


*எதன் மீது ஸகாத் கிடையாது?*


வசிக்கும் வீடு, பயன்படுத்தும்  பொருட்கள், வாகனம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மீது ஸகாத் கிடையாது. 


*கொடுத்த பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?* 


ஒரு ஹிஜ்ரி வருடம் பூர்த்தி ஆகும் அனைத்து பொருட்களுக்கும், ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டும். 


*ரமலான் மாதத்தில் தான் கொடுக்க வேண்டுமா?*


அவ்வாறில்லை. சொத்துக்கள் கிடைக்கப் பெற்று ஒரு ஹிஜ்ரி வருடம் பூர்த்தி ஆனால் ஜகாத் கொடுக்க வேண்டும். அது எந்த மாதம் ஆனாலும் சரியே. 

ஆனால் அவ்வாறு கணக்கிடுவது மிகுந்த சிரமம். 


எனவே உலகம் முழுவதும் ரமலான் மாதத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இம்மாதம் நன்மைகளை பன்மடங்காக்கி தரும் மாதம் என்பதும், இம்மாதத்தை தேர்ந்தெடுத்ததற்கு ஓர் காரணம். 


*யாருக்கு கொடுக்க வேண்டும்?*


(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.

(அல்குர்ஆன் : 9:60)


*உறவினர்களுக்கு கொடுக்கலாமா?*


கொடுக்கலாம். உறவினர்களுக்கு கொடுக்கும்போது, ஸக்காத் கடமையை நிறைவேற்றிய நன்மையும், உறவைப் பேணிய நன்மையும் இணைந்து கிடைக்கும். 


(ரத்த உறவு இல்லாதவர்களுக்கும் கிடைக்கும் வகையில், நமது ஸகாத்தை சில பகுதிகள் பகிர்ந்தளிப்பது ஏற்றமானதே!) 


*தாய் தந்தையருக்கு கொடுக்கலாமா?*


யாருக்கெல்லாம் நாம் செலவு செய்ய வேண்டிய கடமை உள்ளதோ அவர்களுக்கு

கண்டிப்பாக கொடுக்கக்கூடாது. 


தாய் தந்தை, அவர்களின் பெற்றோர், அவர்களின் பெற்றோர்... அதேபோல் பெற்றெடுத்த குழந்தை, பேரக் குழந்தை, அவர்கள் பெற்றெடுத்த குழந்தை என யாருக்கும் கொடுக்க கூடாது. 


மனைவிக்கு கொடுக்கக்கூடாது. ஆனால் மனைவி, கணவனுக்கு கொடுக்கலாம். 


(மகளும், பெற்றோருக்கு ஜகாத் நிதியை கொடுக்கக்கூடாது என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்து.) 


*ஜகாத் நிதி என சொல்லாமல் கொடுக்கலாமா?*


ஜகாத் பெறுவதற்கு அவர் தகுதியானவர் தான் என கண்டிப்பாக தெரியும் பட்சத்தில்,  சொல்லாமல் கொடுக்கலாம். 


ஆனால் சிலரின் புறத்தோற்றம் பெறுவதற்கு தகுதியானவர் போல் தெரியலாம், ஆனால் அவரிடம் சொத்துக்கள் இருந்தால், தகுதியற்ற  ஒருவருக்கு, ஜகாத் அளித்தவரை போல் ஆவோம்.


(சொல்லிக் கொடுத்தால், இதனை தவிர்க்கலாம்)


*சொத்துக்கள் உண்டு... ஆனால் கஷ்டப்படுகிறார் அவருக்கு கொடுக்கலாமா?*


யார் ஜகாத் கொடுப்பதற்கு தகுதியானவரோ, அவர் அதைப் பெறுவதற்கு தகுதி இழந்து விடுகிறார்.


*ஜகாத் கடமை... ஆனால் கொடுப்பதற்கு வசதி இல்லை... என்ன செய்வது?*


நகை அல்லது ஏதேனும் பொருட்களை விற்று கொடுத்திட வேண்டும்.

தள்ளிப்போடுவதற்கு அனுமதி இல்லை...


*வாராக் கடன்களை (Bad Debts) கழித்து விடலாமா?*


ஜகாத் தொகையை பெற்றவர், அதனை விருப்பம்போல் செலவு செய்யலாம். ஆனால் வாராக் கடன்களை கழித்து விடும்போது, நமது கடனை மட்டுமே திருப்பிக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அதில் ஏற்பட்டுவிடுகிறது. எனவே அவ்வாறு கடன்களை கழித்து விடக்கூடாது. 


*வாராக்கடன்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?*


வருடங்கள் கடந்த வாராக்கடன் எனில், அதற்கு ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை. அந்த கடன் எப்போது திரும்பப் பெறப்படுகிறதோ, அந்த நேரத்தில் ஜகாத்தை கொடுத்துவிட வேண்டும்.


வீடு, கடை வாடகை போன்றவற்றிற்கு முன்பணம் (Advance / Security Deposit) கொடுத்து வைத்திருந்தால் அதற்கும் இதே சட்டமே. 


*வியாபாரப் பொருட்களுக்கு ஜகாத் உண்டா?*


எவையெல்லாம் விற்பனைக்காக தயார் செய்யப்படுகிறதோ,  அதன் மீது ஜகாத் கடமையாகின்றது. 


ஆனால் கடையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் மீது, ஜகாத் கடமை இல்லை.


*வியாபார பங்குகள் (Shares) மீது ஜகாத் உண்டா?* 


ஆம்... ஆன்லைன் பங்குகள் மற்றும் ஸ்லீப்பிங் பார்ட்னர்ஸ் பங்குகள் மீதும் உண்டு. 


பேப்பர் கோல்டு,  இ-கோல்டு போன்றவற்றின் மீதும் உண்டு. 


*குறிப்பு*: _இவை அனைத்தும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மற்றும் ஃபத்வாக்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. எனினும் தங்கள் பகுதி மார்க்க அறிஞர்களிடம் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளவும்_

Monday 24 January 2022

வட்டி என்றால் என்ன ?

 

வட்டி என்றால் என்ன ?



வட்டி என்பது நம்முடைய பணம் ஒருவரிடம் எவ்வளவு காலம் இருக்கிறதோ அதற்க்கு ஏற்ப ஆதாயம் தேடுவது. வேறு வார்த்தையில் வட்டியை விளக்குவதாக இருந்தால் நாம் ஒருவருக்கு கொடுக்கும் கடனை திருப்பி வாங்கும்போது அவர் எத்தனை காலம் நம் பணத்தை அவர் வைத்திருக்கிறார் என்பததை கணக்கிட்டு அதற்க்கு தனியாக வசூளிப்பதே வட்டியாகும்.நம்முடைய பணம் ஒரு குறிப்பிட்ட காலம் ஒருவரிடம் இருக்கிறது என்பதற்காக அவரிடமிருந்து ஒரு தொகையை தனியாக வசூலிப்பது நிச்சயமாக அநியாயமாகும்.ஒருவனுடைய ஏழ்மையையும் பணத்தாசையையும், கஷ்டமான நேரத்தை பயன்படுத்தி அவனுக்கு ஒரு தொகையை கொடுத்து அவன் எவ்வளவு காலம் கடன் பட்டு இருக்கிறானோ அந்த காலத்திற்கு ஏற்ப ஒரு தனி தொகையை வசூலிப்பதில் எந்த ஒரு ஞாயமும் இல்லை. இந்த அடிப்படையில் இஸ்லாம் வட்டியை முழுமையாக தடுக்கிறது.ஆனால் இன்றைய சூழ்நிலையில், அண்டா குண்டாவில் ஆரம்பித்து நகை, வாகனம்,வீடு கடைசியில் நாட்டையே அடகு வைத்து விடுகிற அளவிற்கு வட்டி எங்கும் பெருகி இருக்கிறது.

வட்டிக்கும் வியாபாரத்திற்கும் உள்ள வேறுபாடு

பலர் வட்டிக்கும் வியாபாரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறியாமல் இருக்கிறார்கள்.வியாபாரம் என்பது உற்பத்தியில் ஆரம்பித்து உபயோகிப்பாளர் கையில் கிடைக்கும் வரை நடைபெரும் பரிமாற்றமே ஆகும்.வியாபாரத்திற்கும் வட்டிக்கும் இரண்டு பெரிய வித்தியாசம் உள்ளது .வியாபாரத்தில் லாபமும் ஏற்படும் நஷ்டமும் ஏற்படும் ஆனால் வட்டியில் நஷ்டம் ஏற்படவே செய்யாது.வியாபாரத்தில் ஏற்படும் உறவு ஒரு பொருளோ பணமோ அந்த பரிமாற்றத்துடன் முடிந்து விடும் ஆனால் வட்டி என்பது ஒருவர் தான் பட்ட கடனை திருப்பித் தரும் காலம் வரை தொடரும்.

2:275 الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ فَمَن جَاءَهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىٰ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ ۖ وَمَنْ عَادَ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ
யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.(அல்குர்ஆன் 2:275)

இஸ்லாத்தின் பார்வையில் வட்டி

வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.எந்த குற்றத்திற்கும் இல்லாத அளவிற்கு வட்டியை, அல்லாஹ்வுடன் போர் செய்யும் ஒரு காரியமாக அல்லாஹ் தன் திருமறையிலே மனிதர்களுக்கு எச்சரிக்கிறான்.

'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)


வட்டி பெரும் பாவங்களில் ஒன்று

வட்டியை பெரும் பாவங்களின் பட்டியலில் இஸ்லாம் வைக்கிறது.வட்டி பெரும் பாவம் என்று அறிந்தே மக்கள் சர்வ சாதாரணமாக சிறிதும் பயமில்லாமல் வெளிப்படையாக வட்டி வாங்குவதை பார்க்க முடிகிறது.பெரும்பாலான மக்கள் வட்டி வாங்குவதால் ,வட்டி இஸ்லாத்தில் தடுக்கப் படவே இல்லை அல்லது இஸ்லாம் வட்டியைப் பற்றி பேசவே இல்லை என்பதைப் போல் தோற்றம் உண்டாக்கி விட்டனர்.பெற்றோர்கள் வட்டி வாங்கக் கூடியவர்களாக இருக்கும்போது அவர்களுடைய குழந்தைகளுக்கு வட்டி தவறு என்று எப்படி சொல்வார்கள்?பெரும்பாலான மக்கள் செய்வதால் இஸ்லாத்தில் வட்டி அனுமதிக்கப் பட்டதாக ஆகாது என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.


நபி(ஸல்) அவர்கள், 'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதும்ட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி)
புஹாரி 6857

வட்டியில் அல்லஹ்வின் அருள் இல்லை


ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.நம்முடைய தேவைகள் அனைத்தும் சிறிய உழைப்பிலோ அல்லது சிறிய அளவிலான செல்வதிலோ பூர்த்தி ஆகிவிட்டால் அதை அருள் என்று கூறலாம்.கோடி கோடியாக செல்வம் இருந்தும் அந்த செல்வத்திற்கு மேல் அவனுடைய தேவை இருந்தால் அந்தாள் செல்வதில் அருள் இல்லை என்றே அர்த்தம்.இப்படிப் பட்ட அருளை அல்லாஹ்வால் மட்டுமே கொடுக்க முடியும்.அல்லாஹ்விடம் அதிக செல்வதை கேட்பதை விட அல்லாஹ்வின் அருளை கேட்பதே சிறந்தது.அல்லாஹ்வே தேவையை உண்டாகுகிறான் ஆகையால் அவனிடமே அதை கேட்க வேண்டும்.அல்லாஹ் அந்த தேவையை வேறு வழியில் நிறைவேற்றுவான் அல்லது அவனது வல்லமையினால் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அந்த தேவையே இல்லாமல் ஆகிவிட போதுமானவன்.

வட்டியினால் வந்த செல்வதில் அல்லாஹ்வின் அருள் இருக்காது என்பதை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு நமக்கு எச்சரிக்கின்றார்கள்.

2:276 يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் 2:276)

30:39 وَمَا آتَيْتُم مِّن رِّبًا لِّيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِندَ اللَّهِ ۖ وَمَا آتَيْتُم مِّن زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُضْعِفُونَ
(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.(அல்குர்ஆன் 30:39)



வட்டி மறுமையின் நிலை

மறுமையில் வெற்றி பெறுவதே ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கமாக இரக்க வேண்டும் .வட்டி வாங்கியவர்கள் மறுமையில் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்று திருக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களின் போதனைகளும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

4:161 وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ ۚ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا
வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.(அல்குர்ஆன் 4:161)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்!
"அவர் யார்?' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!" எனக் கூறினார்கள்."
அறிவிப்பாளர் : ஸமுரா(ரலி)
புஹாரி 2085

வட்டி சாபத்திற்கு உரியது

பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஜுஹைஃபா(ரலி)
புஹாரி 5347

மற்ற மனிதர்களின் சபிப்பதர்க்கும் நபிமார்கள் சபிப்பதர்க்கும் வேறுபாடு உண்டு.நபிமார்கள் ஒரு விஷயத்தை மார்க்கம் என்று கூறினால் அது அல்லாஹ்வின் புறத்தே வருகிறது என்று தான் அர்த்தம்.அதே போல் ஒரு செயலை நபிமார்கள் சாபமிட்டால் அதை அல்லாஹ் சபிக்கிறான் என்று தான் புரிந்துக் கொள்ள வேண்டும்.வட்டி சாபத்திற்கு உரியது என்பதை மேலுள்ள ஹதீஸிலிருந்து நாம் விளங்க முடிகிறது.


ஃபிரான்சும் வட்டி கலாச்சாரமும்

உலகில் உள்ள பல நாடுகள் வட்டியை மையமாக கொண்டே இயங்கி வருகின்றது.அதில் பிரான்ஸ் நாடு ஒரு முக்கிய இடத்தை பிடிக்கிறது.நாம் கடையில் வாங்கும் சிறு பொருள் முதல் நாம் வாங்கும் வீடு போன்றவைகள் வரை இந்த நாட்டில் வட்டி எங்கும் நிறைந்திருக்கிறது.வட்டி வாங்குவது இஸ்லாத்தில் ஹராம் என்று வைத்திருந்தும் தங்களின் பணத்தை பெருக்கிக் கொள்வதர்காகவும் சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காகவும் பலர் வட்டி விழுந்து விடுகின்றனர்.வட்டி வாங்காமல் இந்த நாட்டில் வாழவே முடியாது ஆகையால் நிர்பந்தத்தின் அடிப்படையில் வட்டி வாங்கிக் கொள்ளலாம் என்று சில இஸ்லாமிய மார்க்கக அறிஞர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளக் கூடியவர்கள் பத்வாவும் கொடுத்திருக்கின்றனர்.நாம் ஒரு செயயலை செய்யா விட்டால் உயிர் வாழவே முடியாது போன்ற நிலை ஏற்பட்டால் அதை நிர்பந்தம் என்று கூறலாம்.இவர்கள் வட்டி வாங்குவதை நிர்பந்தம் என்று கூறுவது எந்த வகையிலும் நியாயம் ஆகாது.இவர்கள் எந்த காரணத்தை வைத்து வட்டி நிர்பந்தம் என்று கூறுகிறார்கள் என்பதையும் அதற்க்கு என்ன தீர்வு என்பதையும் பார்போம்.

பிரான்ஸ் நாட்டில் வட்டியை வாங்குவதயும் கொடுப்பதயும் முக்கியமான நான்கு காரணங்களாக பிரிக்கலாம்

பொருட்களை தவணை முறையில் வாங்கும்போதுள்ள வட்டி

விலை அதிகமான பொருட்களை அதிகமானோர் வாங்க முன்வர மாட்டார்கள் என்பதற்காக தவணை முறையில் சிறிய தொகையை மாதா மாதம் கட்ட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொருட்கள் விற்கப் படுகிறது.இந்த முறையே இன்ஸ்டால்மென்ட்(Installment) என்று அழைக்கப் படுகிறது.ஒரு பொருளை முழு தொகைக் கொடுத்து வாங்கும்போதும் இன்ஸ்டால்மென்டில் வாங்கும்போதும் அதன் தொகை மாறாமல் இருந்தால் எந்த குழப்பமும் இல்லை அதை இஸ்லாம் தடுக்க வில்லை.ஆனால் நீங்கள் தவணை முறையில் கொடுக்கும் தொகையை கூட்டி பார்த்தல் அந்த பொருளின் முழுத் தொகையின் மதிப்பை விட அதிகமாக இருக்கும்.ஒரு பொருள் நம்மிடம் குறிப்பிட்ட காலம் இருப்பதற்காக ஒரு தொகையை தனியாக செலுத்துவது வட்டியின்றி வேறில்லை.இதற்க்கு இரண்டு தீர்வுகள் உள்ளன :

முழு தொகையை கொடுத்து அந்த பொருளை வாங்குதல் .
சில நேரங்களில்,தவணை முறையில் செலுத்தும் தொகையும் தவணை இல்லாமல் செலுத்தப்படும் முழு தொகையும் சமமாக இருக்கும்(sans frais).அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு நாம் வட்டியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.


வங்கிகளிலிருந்து பெறப்படும் வட்டி

ஒருவருடைய வங்கிக கணக்கின் தொகையை பொருத்தும் அந்த தொகை எவ்வளவு காலம் அந்த வங்கியின் கணக்கில் இருக்கிறது என்பதை பொருத்தும் ஒரு கணிசமான தொகை அந்த வங்கியில் உள்ள நம்முடைய தொகையோடு சேர்க்கப் படுகிறது,இந்த தொகையானது வட்டிதான் என்பதற்கு விளக்கம் தேவை இல்லை.வட்டியை மூலதனமாக கொண்டு இயங்கும் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் முக்கியமாக இரண்டு காரணங்களுக்காக இதை விரும்புகிறார்கள்.

செல்வத்தை பெருக்கிக் கொள்வதற்காக : வங்கியில் பணம் இருந்தால் அதிலிருந்து வட்டி வரும் அதன் மூலம் நம் செல்வத்தை பெருக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பலர் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.இப்படி பெறப்படும் செல்வம் வட்டி தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இவர்கள் அல்லாஹ்வுடைய கடும் தண்டனையையும் நரக நெருப்பையும் அஞ்சிக் கொள்ள வேண்டும்.நம்மை சுற்றி இருக்கின்ற பல மக்கள் இந்த பாவத்தை செய்து கொண்டு இருக்கின்றனர் என்பது தான் பரிதாபத்திற்குரிய நிலை.


பாதுகாப்பு : வீட்டில் பணம் வைத்திருப்பதை விட வங்கியில் பாதுகாப்பாக இருக்கும் என்ற காரணத்தினால் பலர் வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றனர்.இந்த காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம் தான்.ஆனால் இதன் மூலம் வரும் வட்டியை என்ன செய்வது ? என்ற கேள்வி எழுகிறது.சிலர் அந்த வட்டி தொகையை எடுத்து வேறு யாருக்காவது(ஏழைகளுக்கு) கொடுத்து விடலாம் என்றும் சிலர் அந்த தொகையை அந்த வங்கியிலேயே விட்டு விடுவது நல்லது என்று இரண்டு தீர்வுகள் நமக்கு முன்வைக்கப் படுகிறது.இதில் இரண்டாவது தீர்வே சிறந்தது.ஏனெனில் அந்த வட்டி பணம் நம்முடைய பணம் இல்லை என்ற போது அதை நம்மால் எப்படி நம் இஷ்டம் போல் அதை பயன் படுத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது.

வாகனம் வாங்குவதில் வட்டி

வாகனம் வாங்குவதற்கு பெரிய தொகை தேவை என்பதாலும் முழுத் தொகையை செலுத்தினால் வருமான வரி(Income Tax) போன்ற சிக்கல் இருப்பதால் அதிகமானோர் தவணை முறையிலேயே வாகனம் வாங்குகின்றனர்.இந்த தவணை முறை என்பது வட்டி தான் என்பதை ஏற்கனவே நாம் விளக்கி விட்டோம்.இந்த பிரச்சனைக்கும் இரண்டு தீர்வுகளை முன்வைக்கலாம் :

பயன்படுத்திய வாகனத்தை வாங்கினால் அதன் விலை குறைவாக இருக்கும்.அந்த வகையில் முழுத் தொகையை செலுத்தி அந்த வாகனத்தை வாங்கிக் கொள்ளலாம்.
வட்டி செலுத்தி தான் வாகனம் வாங்க வேண்டும் என்று இருந்தால் வாகனமே தேவை இல்லை என்ற மனநிலைக்கு வந்து விட வேண்டியதுதான்.வாகனம் இல்லாமல் வாழவே முடியாது என்று எவராலும் கூற முடியாது.அவர்களுடைய ஆசையையும் சொந்த வாகனம் இருந்தால் உள்ள சவுகரியத்தையும் அல்லாஹ்வுக்காக தியாகம் செய்தால் உலகிலோ மருமையிலோ இதை விட சிறந்ததை அல்லாஹ் நமக்கு கொடுப்பான் என்று நம்புவதுதான் நமது ஈமானை பாதுகாக்கும் முறையாகும்.


வீடு வாங்குவதில் வட்டி

வாகனத்திற்கு நாம் கூறியது வீடு வாங்குவதிர்க்கும் பொருந்தும்.வட்டி இல்லாமல் நமக்கு சொந்த வீடு வாங்க முடியவில்லை என்றால் வாடகை வீட்டை தேர்ந்தெடுப்பது தான் நமது ஈமானை காப்பாற்றும் வழி முறையாகும்.நம்முடைய சொகுசான வாழ்விற்காக இஸ்லாத்தை மறந்து வட்டி கொடுத்து வீடு வாங்குவோர் சற்று ஃபிரவ்னுடைய மனைவி கூறியதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் "இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! (அல் குர் ஆன் 66:11)

நகை அடமானம்

சிலர் தங்களது அவசர தேவைக்காகவும் ,அனாவசிய அனாச்சரங்களுக்காகவும் தங்களது நகைகளை வங்கியிலோ வட்டிகடையிலோ அதன் மதிப்பைவிட குறைந்த தொகைக்காக அடமானம் வைக்கிறார்கள்.பின்பு அதற்கு வட்டியும் கட்டி பின்பு அதை மூழ்கவும் செய்து விடுகிறார்கள்.தன்னுடைய நகைக்கு தானே முட்டாள்தனமாக பணம் செலுத்துகிறார்களே..இவர்களை என்னவென்று சொல்வது ? தனது தேவைக்கு மட்டும் நகையை விற்று விட்டு பின்பு வாங்கிக்கொள்ளலாம் என்ற சிந்தனை கூட இவர்களிடம் இல்லை.அல்லாஹ் உங்களை சோதித்து பார்பதற்காக ஒரு அவசர தேவையை உண்டாக்குகிறான் என்று தெரியாமல் அடமானம் என்ற பெயரில் நரகப்படுகுழியில் விழுந்துவிடுகிறார்கள்.


ஏலச்சீட்டு

ஏலசீட்டில் இரண்டு முறைகள் உள்ளது.முதலாவது மாதா மாதம் ஆளுக்கு ஒரு தொகை உதாரணமாக 100€ கட்டுவார்கள் பின்பு பணத்தேவை அல்லது குலுக்கலில் வெற்றி பெற்றவருக்கு மொத்த தொகையில்(1000€ ல்) கழிப்பு போக அதாவது வட்டி போக மீதம் உள்ளதை (900€) கொடுப்பார்கள் , இதில் கழிப்பு தொகையை (100€)என்பதுதான் அதை நடத்துபவரின் லாபமாகும் ,அவர் வட்டி வாங்குகிறார் மற்றவர்கள் வட்டி கொடுக்கிறார்கள் இரண்டும் நரகத்திற்கு இழுத்துச்செல்லும் நேரடியான வட்டியாகும்.எனவே இதில் கலந்துக் கொள்ளக் கூடாது.

ஒரு சிலர் கூட்டாக சேர்ந்து கழிப்பு ஏதும் இல்லாமல் எந்த ஆதாயம் இல்லாமலும் செய்கிறார்கள் இதில் எதுவும் தவறில்லை.



வட்டியினால் ஏற்படும் விளைவுகள்


நம்முடைய தேவைக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக பலர் வட்டிக்கு பணம் வாங்குகின்றனர்.வட்டிக்கு பணம் கொடுக்கக் கூடியவர்கள் கடன் கொடுக்கும்போது சிரித்த முகத்தோடும் நட்போடும் பழகுவார்கள்.அந்த பணத்தை திருப்பி கொடுக்க தாமதமானலோ அல்லது தொகையை குறைத்து கொடுத்தாலோ அவர்களுடைய சுய ரூபம் வெளிப்படுவதை காண்கிறோம்.இவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கினால் ரவுடிகளை வைத்து மிரட்டுவது,அசிங்கமான வார்த்தைகளை கொண்டு கொச்சைப் படுத்துவது போன்ற இன்னல்களுக்கு ஆளாக வேண்டி வரும்.வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம்.அதுமட்டுமா கடன்காரர்களால் தம் மனைவியின் கற்பை இழந்த கதையும் சமீபத்தில் நடந்தேறியது.இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒரு தீய செயலை செய்தால் இப்படிப்பட்ட கேவலங்களுக்கும் அசிங்கங்களுக்கும் ஆளாக வேண்டி வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.வட்டியினால் உலகிலும் கெடும் மறுமையிலும் கேடு என்பதை மக்கள் என்று உணரப் போகிறார்களோ?


நாட்டுக்கும் கேடு : ஒருவன் தொழில் தொடங்கும்போது தன் சொந்த செலவில் அந்த தொழிலை துவக்கினால் அவன் உற்பத்தி செய்யும் பொருளில் கணிசமான லாபத்தை வைத்து விற்கப்படும்.ஆனால் வட்டிக்கு கடன் வாங்கி ஒரு தொழிலை ஆரம்பித்தால் உற்பத்தி செய்யும் பொருளில் லாபம் மட்டும் இல்லாமல் அவன் கொடுக்க வேண்டிய வட்டித் தொகையையும் சேர்த்துதான் அந்த பொருளை விற்க வேண்டிய சூழ்நிலையில் அவன் தள்ளப் படுவான்.அந்த வியாபாரி செலுத்த வேண்டிய வட்டிப் பணத்தை அந்த பொருளை வாங்குபவர்கள் மீது திணிக்கப் படுகிறது.இப்படி வட்டிக்கு வங்கி தொழில் செய்வதால்தான் விலை வாசி அதிகரிக்கிறது.


இந்தியா போன்ற நாடுகள் உலக வங்கியில் வட்டிக்கு கடன் வாங்கி இப்போது நாட்டில் வரும் வருமானத்தில் கால்வாசிக்குமேல் உலக வங்கியில் பெற்ற கனுக்காக வட்டி தொகையை செலுத்தி வருகிறது.வட்டிக்கே இந்த நிலைமை என்றால் அசலை எப்போது கொடுப்பது?சமீபத்தில் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கும் வட்டி தான் மூலக் காரணம்.பல வங்கிகள் இழுத்து மூடப்பட்டன,இதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்த நிலையையும் நாம் பார்த்தோம்.இதெல்லாம் நடந்தும் கூட உலக நாடுகள் திருந்துவதாக தெரியவில்லை.


வட்டிக்கு என்ன தீர்வு?

வட்டி இல்லாத வங்கி தான் இதற்க்கு தீர்வாக அமைய முடியும்.முஸ்லிம்கள் அனைவரும் அல்லது அதிகமானோர் வட்டி வாங்குவதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டாலே வட்டி இல்லா வங்கி அதிகரிக்கும்.வட்டி இல்லாத பொருளாதார அமைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் இந்த பொருளாதார தேக்கம் சிறிய அளவிலேயே காணப் பட்டது.இதற்க்கு ஒரு சிறிய முயற்சியாக பைத்துல் மால் போன்ற செயல்முறையை நடை முறைப்படுதலாம்.பைத்துல் மால் என்பது வட்டி இல்லா சிறிய வங்கியை போல் இயங்கக் கூடியதாகும்.பணத்தை பாதுகாப்பாக சேமிப்பதும் பணத் தேவை உடைய மக்களுக்கு வட்டி இல்லா கடன் கொடுப்பதும் மக்கள் செலுத்தும் ஜகாத் வரிகளை கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உதவுவதும் பைத்துல் மாலின் முக்கிய பணிகளாகும்.இந்த செயல்முறையின் மூலமாக வட்டியிளிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் கடன் தேவை உள்ளவர்களுக்கும் கடன் கொடுக்கலாம் அதுமட்டுமில்லாமல் ஏழை எளிய மக்களுக்கும் உதவ முடியும்.வேறு எந்த (மத) சமூகத்திலும் இல்லாத இந்த இனிய முறையை செயல் படுத்துவதின் மூலம் மற்றவர்களுக்கு நாம் ஒரு எடுத்துக் காட்டாக திகள முடியும்.


நீங்கள் வட்டி வாங்குபவரா ?

மரணத்திற்கு முன் மனிதன் செய்யும் தவறை அவன் திருந்தி பாவமன்னிப்பு கேட்டால் அதை மன்னிக்க அல்லாஹ் தயாராக இருக்கிறான் என்பது இஸ்லாத்தின் அடிப்படை .வட்டி வாங்கக் கூடியவர்கள் அவர்கள் செய்த தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு எஞ்சியுள்ள வட்டியை வாங்காமால் விட்டுவிட்டால் அவர்கள் வெற்றி அடைவார்கள் என்று அல்லாஹ் தன திருமறையிலே கூறுகிறான்.எனவே என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே அல்லாஹ் தடுத்துள்ள இந்த வட்டியை விட்டு விட்டு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு இனியாவது நரக நெருப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

2:278 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.(அல்குர்ஆன் 2:278)

3:130 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.(அல்குர்ஆன் 3:130)
source;frtj


Monday 23 August 2021

நபி (ஸல்) அவர்கள் தடுத்தவைகள்:

 நபி (ஸல்) அவர்கள் தடுத்தவைகள்:

1,குளிப்பு கடமையானவர்கள் குளிக்காமல் சாப்பிடுவதை தடுத்தார்கள் காரணம் அது வறுமை ஏற்படுத்தும்.

2, பழங்கள் தரும் மரங்களுக்கு கீழும் மனிதர்கள் நிழலுக்காக ஒதுங்குகிற மரத்துக்குக்கீளும் சிறுநீர் இருப்பதை தடுத்தார்கள்.

3, இடது கரத்தால் சாப்பிடுவதையும் குத்தவைத்து உட்கார்ந்து சாப்பிடுவதையும்  தடுத்தார்கள்.

4, பெண்கள் ஜனாசாவைத் பின்  தொடர்வதை தடுத்தார்கள்.

5, உயிரினங்களை நெருப்பால் கரிப்பதை தடுத்தார்கள்.

6, மார்க்கத்தை திட்டுவதை தடுத்தார்கள்.

7, வீட்டில் குப்பை இருக்குமிடத்தில் தங்குவதை தடுத்தார்கள் ஏனென்றால் அது ஷைத்தான் தங்குமிடமாகும்.

8, கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி வெளியேறுவதை   தடுத்தார்கள் காரணம் அனுமதி இன்றி வெளியேறும் பெண்ணை வானத்தில் உள்ள மலக்குமார்கள் சபித்துக் கொண்டே இருப்பார்கள் தீய ஜின்களும் மனிதர்களும் அவர்களை சுற்றி சுற்றி வருவார்கள் எதுவரைக்கும் என்றால் அவர் வீடு வந்து சேரும் வரைக்கும்.

9, ஒரு பெண் தன் கணவர் அல்லாத பிறருக்காக அலங்கரிப்பதை தடுத்தார்கள்.

10, புறம் பேசுவதையும் அதைக் கேட்டு மகிழ்வது தடுத்தார்கள்.

11, வெள்ளி தங்கத்திலான பாத்திரத்தில் நீர் அருந்துவதை தடுத்தார்கள்.

12, மதுவையும் மதுவை செய்பவர்களையும் அதை குடிப்பவர்களையும் விற்பவர்களையும் வாங்குபவர்களையும் அதில் கிடைக்கும் லாபத்தில் உண்ணுபவர்களையும் இறைவன் சபிக்கிறான்.

13, வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் அதற்கு சாட்சியாக இருப்பதையும் அதை எழுதுவதையும் தடுத்தார்கள். இறைவன் குர்ஆனில் கூறுகிறான் வட்டி வாங்குபவர்கள் உண்ணுபவர்கள் அதற்கு சாட்சியாக இருப்பவர்களையும் அதை எழுதுபவர்களை இறைவன் சபிக்கிறான்.

14, உயிரனங்களின் முகத்தில் அடிப்பதைத் தடுத்தார்கள்.

15, ஒரு மனிதர் பிற மனிதரின் மர்மஸ்தானத்தை பார்ப்பதை தடுத்தார்கள்.

16, ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மர்மஸ்தானத்தை பார்ப்பதை தடுத்தார்கள்.

17, உணவிலும் பானத்திலும் ஊதுவதை தடுத்தார்கள். சஜ்தா செய்யக்கூடிய இடத்தை ஊதுவதையும் தடுத்தார்கள்.

18, மிருகங்கள் கட்டி போடப்படும் தொழுவத்தில் தொழுவதை தடுத்தார்கள்.

19, தேனீக்களை கொல்வதை தடுத்தார்கள்.

20, அல்லாஹ் அல்லாதவர்களை கொண்டு சத்தியம் செய்வதை      தடுத்தார்கள்.

21, வெள்ளிக்கிழமை இமாம் மிம்பரில் ஏறி குத்பா ஓதுகின்ற போது பேசுவதை தடுத்தார்கள்.

22, சூரியன் உதிக்கும் நேரத்திலும் மறையும் நேரத்திலும் தொழுவதை தடுத்தார்கள்.

23, நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் அய்யாமுத் தஷ்ரீக் இந்த நாட்களில் நோன்பு வைப்பதை தடுத்தார்கள்.

24, மிருகங்கள் நீர் குடிப்பது போன்று ஒரேயடியாக மூச்சு விடாமல் குடிப்பதை தடுத்தார்கள்.

25, மக்கள் பயன்பாட்டில் உள்ள கிணற்றில்            உமில் வதை தடுத்தார்கள்.


அல்லாஹ்வும் ரசூலும் எதை தடுத்தார்களோ அதை விட்டு விடுவதற்கும் எதை எடுத்து நடக்க சொன்னார்களோ அதை எடுத்து நடப்பதற்கும் அல்லாஹ் தௌபீக் செய்வானாக!!!ஆமின் யாரப்பல் ஆலமீன்!

Saturday 26 June 2021

மரண இத்தா குறித்த சட்டங்கள்

 மரண இத்தா குறித்த சட்டங்கள்

⚫கணவன் இறந்துவிட்ட பெண், கர்ப்பிணியாக இல்லாவிட்டால் பிறை கணக்குப்படி நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும்.

⚫ கர்ப்பிணியாக இருந்தால் குழந்தைப் பிறக்கின்ற வரை இத்தாவின் காலம் நீடிக்கும்.

⚫ மேலும் கணவன் இறந்த சில வினாடிகளில் குழந்தை பிறந்து விட்டாலும் கூட இத்தா முடிந்துவிடும்.

⚫ இத்தாவில் பிறை கணக்கையே கடைப்பிடிக்க வேண்டும். முதல் பிறை அன்று கணவன் இறந்திருந்தால், பிறை கணக்குப்படி நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும்.மாத இடையில் கணவன் இறந்திருந்தால், மாதம் ஒன்றுக்கு 30 நாட்கள் வீதம் கணக்கிட்டு,130 நாட்கள் இத்தா இருக்க வேண்டும்.

🚫கணவன் இறந்த சில பெண்கள் வெறும் 40 நாட்கள் மட்டுமே இத்தா மேற்கொள்கின்றனர். இது மிகப்பெரிய தவறாகும்.

*மரண இத்தாவில் கடைப்பிடிக்க வேண்டிய அனுஷ்டானங்கள்*

1️⃣ வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும்.

 *சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லலாம்.

  *உணவுக்கே வழி இல்லாத ஏழைப் பெண்ணாக இருப்பின், சம்பாத்தியத்திற்காகப் பகலில் வெளியே சென்று வரலாம். இரவில் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும்.

  *உணவுப் பொருட்களை வாங்கித் தர ஆள் இல்லையெனில், உணவுப் பொருட்களை வாங்கி வர பகலில் வெளியே செல்லலாம்.

2️⃣ தன்னையும் தன்னுடைய ஆடையையும் எந்தவிதத்திலும் அலங்கரித்துக் கொள்ளக்கூடாது.

  *பவுடர் அடித்துக் கொள்வது மேக்கப் செய்வது கூடாது.

3️⃣ தங்க வெள்ளி ஆபரணங்களை அணிவது கூடாது.

*சாதாரண கவரிங் வளையல்களையும் அணியக்கூடாது.

4️⃣ சுர்மா இடுவது கூடாது.

  *கண் வலிக்காக மருத்துவ அடிப்படையில் சுர்மா இடுவது கூடும்.

5️⃣ மேனியிலும் ஆடையிலும் வாசனைப் பூசுவது கூடாது.

*குறிப்பு*கணவனைத் தவிர  தந்தை, மகன், சகோதரர் போன்றவர்கள் மரணித்தால் மூன்று நாட்களுக்கு மேல் துக்க அனுஷ்டானங்களை மேற்கொள்வது கூடாது.

*மரண இத்தாவின் பெண்களுக்கு ஆகுமான காரியங்கள்*

1️⃣ குளிப்பது.

2️⃣ நகம் வெட்டுவது.

3️⃣ அழுக்குகளை நீக்குவது.

4️⃣ சாதாரணமாக தலை வாருவது.

5️⃣ அகற்றவேண்டிய முடிகளைக் களைவது.

6️⃣ வீட்டையும் துணிமணிகளையும் விரிப்புகளையும் சுத்தமாக வைத்துக் கொள்வது.

7️⃣ ஓர் அறையில் தனியாகத் தூங்குவது.

8️⃣ வீட்டிற்குள் இருந்த படி வெளிப் பகுதியையும் வானத்தையும் பார்ப்பது.

9️⃣ மரணித்த கணவரை பார்த்து தரிசிப்பது.

🔟 திருமணம் முடிப்பது ஹராமான தந்தை, மகன், உடன் பிறந்த சகோதரன் இன்னும் மருமகன் ஆகிய ஆண்களைப் பார்ப்பது இன்னும் பேசுவது.

  இவை அனைத்தும் கணவன் மரணித்த இத்தாவில் இருக்கும்  பெண்களுக்கு ஆகுமான காரியங்களாகும்.

*குறிப்பு* இத்தாவின் காலம் - நான்கு மாதம் பத்து நாட்கள் கழிந்து விட்டால் அந்தப் பெண்ணுக்கு மேற்கூறப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்காது.

  எனவே அழகான மங்களகரமான ஆடைகளை அணிவதும், தங்க வெள்ளி ஆபரணங்களை அணிவதும் இனி அந்தப் பெண்மணிக்குக் கூடும்.

  *கணவனை இழந்து வாடும் கைம்பெண்களுக்கு அல்லாஹ் மேலான நற்கூலி களையும் நல்ல பகரத்தையும் வழங்குவானாக!*

🕌 *புரசை ஜூம்ஆ மஸ்ஜித்* இமாம் ஷாஹுல் ஹமீது காஷிஃபி