Saturday, 13 October 2018

இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர்* *ஆளுநர் விபரங்கள்

*இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர்* *ஆளுநர் விபரங்கள்:*


*தெரிந்துக் கொள்ளுங்கள்!*



*1.ஆந்திரா பிரதேசம்*

மாநிலம்: ஆந்திர பிரதேசம்

தலைநகரம்: அமராவதி ஹைதராபாத்

முதலமைச்சர்: சந்திரபாபு நாயுடு

ஆளுநர்: ஈ.எஸ்.எல். நரசிம்மன்

*2.அருணாச்சல் பிரதேசம்*

மாநிலம்: அருணாச்சல பிரதேசம்

தலைநகரம்: இட்டாநகர்

முதலமைச்சர்: பெமா கந்தூ

ஆளுநர்: Dr.B.D. மிஸ்ரா

*3. அசாம்*

மாநிலம்: அசாம்

தலைநகரம்: திஸ்பூர்

முதலமைச்சர்: சர்பானந்த சோனுவாள்

ஆளுநர்: ஜக்திஷ் முகீ

*4. பீகார்*

மாநிலம்: பீகார்

தலைநகரம்: பாட்னா

முதலமைச்சர்: நிதீஷ் குமார்

ஆளுநர்: சத்யா பால் மாலிக்

*5. சத்தீஸ்கர்*

மாநிலம்: சத்தீஸ்கர்

தலைநகரம்: புதிய ராய்பூர்

முதலமைச்சர்: டாக்டர் ராமன் சிங்

ஆளுநர்: ஆனந்திபென் பட்டேல்

*6. கோவா*

மாநிலம்: கோவா

தலைநகரம்: பானாஜி

முதலமைச்சர்: மனோகர் பாரிக்கர்

ஆளுநர்: மிருதுளா சின்ஹா

*7.குஜராத்*

மாநிலம்: குஜராத்

தலைநகரம்: காந்திநகர்

முதலமைச்சர்: விஜய் ரூபனி

ஆளுநர்: ஓம் பிரகாஷ் கோஹில்

*8. ஹரியானா*

மாநிலம்: ஹரியானா

தலைநகரம்: சண்டிகர்

முதலமைச்சர்: மனோகர் லா கஹ்தார்

ஆளுநர்: கப்டன் சிங் சோலங்கி

*9. ஹிமாச்சல பிரதேசம்*

மாநிலம்: இமாச்சல பிரதேசம்

தலைநகரம்: சிம்லா மற்றும் குளிர்காலத்தில் தர்மசாலா

முதலமைச்சர்: ஜெய் ராம் தாகூர்

ஆளுநர்: ஆச்சார்யா தேவ் வட்

*10. ஜம்மு & காஷ்மீர்*

மாநிலம்: ஜம்மு & காஷ்மீர்

தலைநகரம்: ஸ்ரீநகர் மற்றும் குளிர்காலத்தில் ஜம்மு

முதலமைச்சர்:

ஆளுநர்: சத்ய பால் மாலிக்

*11. ஜார்கண்ட்*

மாநிலம்: ஜார்கண்ட்

தலைநகரம் : ராஞ்சி

முதலமைச்சர்: ரகுபார் தாஸ்

ஆளுநர்: திரௌபதி முர்மு

*12. கர்நாடகம்*

மாநிலம்: கர்நாடகா

தலைநகரம் : பெங்களூரு

முதலமைச்சர்: எச். டி.குமாரசாமி

ஆளுநர்: வாஜூபாய் வாலா

*13. கேரளா*

மாநிலம்: கேரளா

தலைநகரம்: திருவனந்தபுரம்

முதலமைச்சர்: பினராயி விஜயன்

ஆளுநர்: பி.சதாசிவம்

*14. மத்தியப் பிரதேசம்*

மாநிலம்: மத்திய பிரதேசம்

தலைநகரம்: போபால்

முதலமைச்சர்: சிவராஜ் சிங் சௌஹான்

ஆளுநர்: ஆனந்தீபன் படேல்

*15.மகாராஷ்டிரா*

மாநிலம்: மகாராஷ்டிரா

தலைநகரம் : மும்பை மற்றும் இந்தியாவின் பொருளாதார தலைநகரம்

முதலமைச்சர்: தேவேந்திர பத்னாவிஸ்

ஆளுநர்: சி.வி.யாசாகர் ராவ்

*16. மணிப்பூர்*

மாநிலம்: மணிப்பூர்

தலைநகரம்: இம்பால்

முதலமைச்சர்: N.பிரென் சிங்க்

ஆளுநர்: நஜ்மா ஹெப்டுல்லா

*17. மேகாலயா*

மாநிலம்: மேகாலயா

தலைநகரம்: ஷில்லாங்

முதலமைச்சர்: கான்ராட் சங்மா

ஆளுநர்: கங்கா பிரசாத்

*18. மிசோரம்*

மாநிலம்: மிசோரம்

தலைநகரம்: அய்சால்

முதலமைச்சர்: பூ லால்லான்ஹவாலா

ஆளுநர்: நிர்பாய் சர்மா

*19. நாகலாந்து*

மாநிலம்: நாகாலாந்து

தலைநகரம்: கோஹிமா

முதலமைச்சர்: நேபியூ ரோ

ஆளுநர்: பத்மநாப ஆச்சார்யா

*20. ஒடிஷா*

மாநிலம்: ஒடிசா

தலைநகரம்: புவனேஸ்வர்

முதலமைச்சர்: நவீன் பட்நாயக்

ஆளுநர்: சத்யா பால் மாலிக்

*21. பஞ்சாப்*

மாநிலம்: பஞ்சாப்

தலைநகரம்: சண்டிகர்

முதல்வர்: கேப்டன் அம்ரிந்தர் சிங்

ஆளுநர்: வி.சி.சிங் பாட்னோர்

*22. ராஜஸ்தான்*

மாநிலம்: ராஜஸ்தான்

தலைநகரம்: ஜெய்ப்பூர்

முதலமைச்சர்: வசுந்தரா ராஜே

ஆளுநர்: கல்யாண் சிங்

*23. சிக்கிம்*

மாநிலம்: சிக்கிம்

தலைநகரம்: கேங்டாக்

முதலமைச்சர்: பவன் சாம்லிங்

ஆளுநர்: ஸ்ரீனிவாஸ் தாதாசாஹேப் பாட்டில்

*24. தமிழ்நாடு*

மாநிலம்: தமிழ்நாடு

தலைநகரம்: சென்னை

முதலமைச்சர்: எடப்பாடி கே.பழனிச்சாமி

ஆளுநர்: பன்வாரிலால் புரோஹித்

*25. தெலுங்கானா*

மாநிலம்: தெலுங்கானா

தலைநகரம்: ஹைதராபாத்

முதலமைச்சர்: கே. சந்திரசேகர் ராவ்

ஆளுநர்: ஈ.எஸ்.எல். நரசிம்மன்

*26. திரிபுரா*

மாநிலம்: திரிபுரா

தலைநகரம்: அகர்தலா

முதலமைச்சர்: பிப்லாப் குமார் தேவ்

ஆளுநர் : ததகதா ராய்

*27. உத்தரப் பிரதேசம்*

மாநிலம்: உத்தர பிரதேசம்

தலைநகரம்: லக்னோ

முதல்வர்: யோகி ஆதித்யநாத்

ஆளுநர் : ராம் நாயக்

*28. உத்தரகண்ட்*

மாநிலம்: உத்தரகண்ட்

தலைநகரம்: டேராடூன்

முதலமைச்சர்: திரிவேந்திர சிங் ராவத்

ஆளுநர்: கிருஷ்ணா காந்த் பால்

*29. மேற்கு வங்கம்*

மாநிலம்: மேற்கு வங்கம்

தலைநகரம்: கொல்கத்தா

முதலமைச்சர்: மம்தா பானர்ஜி

ஆளுநர்: கேசரிநாத் திரிபாதி

Wednesday, 10 October 2018

*கியாமத் நாளின் அடையாளங்கள்.*

*கியாமத் நாளின் அடையாளங்கள்.*


  *மகளின் தயவில் தாய்*

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

• அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777, 50

*பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்*

‘வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று” என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.

• அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777

ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி
வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள்.

• நூல்: புகாரி 50

*குடிசைகள் கோபுரமாகும்*

இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர். இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

• நூல் : புகாரி 7121

*விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்*

யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.

• நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231

 *தகுதியற்றவர்களிடம் பொறுப்பு*

‘நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறிய போது ’எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ’தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று விடையளித்தார்கள்.

• நூல் : புகாரி 59, 6496

*பாலை வனம் சோலை வனமாகும்*

செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக

மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது

• நூல் : முஸ்லிம் 1681

*காலம் சுருங்குதல்*

காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.

• நூல் : திர்மிதீ 2254)

*கொலைகள் பெருகுதல்*

கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

• நூல் : புகாரி 85, 1036, 6037, 7061

*நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்*

பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.

• நூல்: புகாரி 1036, 7121

*பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது*

மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

• நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,

12079, 12925, 13509.

*நெருக்கமான கடை வீதிகள்*

கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

• நூல்: அஹ்மத் 10306

*பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்*

பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

• நூல்: புகாரி 81, 5231, 5577, 6808

*ஆடை அணிந்தும் நிர்வாணம்*

ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.

• நூல் : முஸ்லிம் 3971, 5098

*உயிரற்ற பொருட்கள் பேசுவது*

விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

• நூல்: அஹ்மத் 11365

*பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்*

தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

• நூல்: அஹ்மத் 1511

*தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்*

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

• நூல்: ஹாகிம் 4/493

*பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்*

பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

• நூல்: ஹாகிம் 4/493

*சாவதற்கு ஆசைப்படுதல்*

இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

• நூல்: புகாரி 7115, 7121

*இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்*

ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

• நூல்: புகாரி 3609, 7121

*முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்*

‘உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ’வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)” என்று கூறினார்கள்.

• நூல்: புகாரி 3456, 7319

*யூதர்களுடன் மாபெரும் யுத்தம்*

யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போது ’முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்” என்று பாறைகள் கூறும்.

• நூல்: புகாரி 2926

*கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்*

கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் ’கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்” என்பது நபிமொழி.

• நூல் : புகாரி 5179

*யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்*

யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.

• நூல் : புகாரி 7119

*கஹ்தான் இன மன்னரின் ஆட்சி*

(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.

• நூல் : புகாரி 3517, 7117

*அல்ஜஹ்ஜாஹ் மன்னர்*

ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி.

• நூல் : முஸ்லிம் 5183

*எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்*

கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.

• நூல் : முஸ்லிம் 5191

*செல்வம் பெருகும்*

செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.

• நூல் : புகாரி 1036, 1412, 7121

ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்
கொடுப்பார். ’நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று எனக்குத் தேவையில்லை” என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.

• நூல் : புகாரி 1424

மாபெரும் யுத்தம்
இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள்

ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.

• நூல் : புகாரி 3609, 7121, 6936

 *பைத்துல் முகத்தஸ் வெற்றி*

*யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!*

1. எனது மரணம்

2. பைத்துல் முகத்தஸ் வெற்றி

3. கொத்து கொத்தாக மரணம்

4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில் திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு

5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்

6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம். அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12 ஆயிரம் பேர் இருப்பார்கள்.

• நூல் : புகாரி 3176

 *மதீனா தூய்மையடைதல்*

துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம் தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது என்பது நபிமொழி.

• நூல் : முஸ்லிம் 2451

*அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை*

யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.

• நூல் : முஸ்லிம் 3546

 *மாபெரும் பத்து அடையாளங்கள்*

இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.

1 - புகை மூட்டம்

2 - தஜ்ஜால்

3 – (அதிசயப்) பிராணி

4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது

5 - ஈஸா (அலை) இறங்கி வருவது

6 - யஃஜுஜ், மஃஜுஜ்

7 - கிழக்கே ஒரு பூகம்பம்

8 - மேற்கே ஒரு பூகம்பம்

9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

10 - இறுதியாக ஏமனி’லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்

ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

• அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162.

 *புகை மூட்டம்*

வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக அமைந்திருக்கும்.

• (அல்குர்ஆன் 44:10,11)

*உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல்*

பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி. மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

• அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி) நூல்: தப்ரானி

 *யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை*

இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.

• (அல்குர்ஆன் 21:96)

*ஈஸா(அலை) அவர்களின் வருகை*

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.

• (அல்குர்ஆன் 43:61)

 *மூன்று பூகம்பங்கள்*

(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

• அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்

 *பெரு நெருப்பு*

எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச் செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

• அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்:  முஸ்லிம் . 

*Please share to all...*

தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு

தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு


1.பர்ளான தொழுகைக்கு அடுத்த அந்தஸ்த்து தஹஜ்ஜுத் தொழுகைக்குத்தான்

2.கப்ரில் ஒளி கிடைக்கிறது

3.முகத்தில் ஒளி உண்டாகிறது

4.எல்லா நோய்களையும் நிவாரணமாக்குகிறது

5. இருதய நோயை விட்டுப் பாதுகாக்கின்றது

6. சிறிய பாவங்களெல்லாம் மன்னிக்கப் படுகின்றன

7. அமல்களில் இக்லாஸ் உண்டாகின்றது

8.எந்த கண்களும் பார்த்திராத எந்த காதுகளும் கேட்டிராத எந்த உள்ளமும் சிந்தித்திராத பெரிய நிஃமத்துக்களை அல்லாஹ் அளிப்பான்

9.பாவ காரியங்கள் செய்வதை விட்டும் தடுக்கின்றது

10. அல்லாஹ்வுடைய நெருக்கம் கிடைக்கின்றது

11.இல்மில் பிரகாசம் உண்டாகிறது

12. மனதை விசாலமாக்குகின்றது

13. ஆயுளை அதிகரிக்கின்றது

14. மேலும் அத்தொழுகையை நிறைவேற்றியவருக்கு சொர்க்கத்தில் ஒரு கண்ணாடி மாளிகை கிடைக்கும் அம்மாளிகையின் வெளியே இருந்து பார்த்தால் உள்ளே உள்ளதெல்லாம் தெரியும். உள்ளே இருந்து பார்த்தால் வெளியே உள்ளதெல்லாம் தெரியும்

15. சுவார்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் மேல் பட்டாடைகள் வெளியாகின்றன அதன் அடியில் யாகூத் என்னும் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை இருக்கும் அந்த குதிரையில் தஹஜ்ஜுத் தொழுபவர்கள் தாம் நாடிய இடத்திற்கெல்லாம் செல்லலாம்

16. உள்ளமும் நாவும் ஒன்றுபடுகிறது

17. என்னுடைய உம்மத்திற்கு சிரமமில்லை யென்றிருந்தால் இத்தொழுகையை நான் கடமையாக்கி இருப்பேன் (ஹதீஸ்)

18. (1) தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்றுதல் (2) நோன்பு நோற்றல் (3) அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்தல் (அதாவது தீனுடைய முன்னேற்றத்திற்காக பாடுபடுதல்) (4) அல்லாஹுதஆலா சொர்க்கத்தில் பறக்கும் குதிரையை அளிப்பான் (ஹதீஸின் கருத்து)

19. எவரொருவர் தஹஜ்ஜுத் தொழுகையை நியமமாக (தொடர்ந்து) தொழுது வருவாரோ அவர் அல்லாஹ்வுடைய (நேசராக) வலீயாக மரணமடைவார். அல்லாஹ்வுடைய நேசர்களுக்கு பயமென்பது கிடையாது. மேலும் கவலைப் படவும் மார்டார்கள் என்று அல்லாஹு தஆலா கூறுகிறான்

20.தஹஜ்ஜுத்துடைய நேரத்தில் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன

Tuesday, 2 October 2018

108 நற்பண்புகள் :


108 நற்பண்புகள் :
================

1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
10.கருணை (Mercy)

11.இரக்கம் (Compassion)
12.காரணம் அறிதல் (Consideration)
13.அக்கறையுடன் (Mindfulness)
14.பெருந்தன்மை (Endurance)
15.பண்புடைமை (Piety)
16. அஹிம்சை (Non violence)
17.துணையாக (Subsidiarity)
18.சகிப்புத்தன்மை (Tolerance)
19. ஆர்வம் (Curiosity)
20. வளைந்து கொடுத்தல் (Flexibility)

21.நகைச்சுவை (Humor)
22. படைப்பிக்கும் கலை (Inventiveness)
23.வழிமுறை (Logic)
24.எழுத்து கற்க பிரியம் (Philomathy)
25.காரணம் (Reason)
26.தந்திரமாக (Tactfulness)
27.புரிந்து கொள்ளுதல் (Understanding)
28.பிறர் நலம் பேணுதல் ( Altruism )
29.நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
30.அறம் (Charity)

31.உதவுகின்ற (Helpfulness)
32.தயாராக இருப்பது (Readiness)
33.ஞாபகம் வைத்தல் (Remembrance)
34.தொண்டு செய்தல் (Service)
35.ஞாபகசக்தி (Tenacity)
36மன்னித்தல் (Forgiveness)
37.வாக்குறுதி (Commitment)
38.ஒத்துழைப்பு (Cooperativeness)
39.சுதந்திரம் (Freedom)
40.ஒருங்கிணைத்தல் (Integrity)

41.பொறுப்பு (Responsibility)
42.ஒற்றுமை (Unity)
43.தயாள குணம் (Generosity)
44.இனிமை (Kindness)
45.பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
46.சுத்தமாயிருத்தல் (Cleanliness)
47.அருள் (Charisma)
48. தனித்திருத்தல் (Detachment)
49.சுதந்திரமான நிலை (Independent)
50.தனிநபர் உரிமை (Individualism)

51.தூய்மை (Purity)
52.உண்மையாக (Sincerity)
53.ஸ்திரத்தன்மை (Stability)
54.நல்ஒழுக்கம் (Virtue ethics)
55.சமநிலை காத்தல் (Balance)
56.பாரபட்சமின்மை (Candor)
57.மனஉணர்வு (Conscientiousness)
58.உள்ளத்தின் சமநிலை (Equanimity)
59.நியாயம் (Fairness)
60. நடுநிலையாக (Impartiality)

61. நீதி (Justice)
62. நன்னெறி (Morality)
63.நேர்மை (Honesty)
64.கவனமாக இருத்தல்(Attention)
65.விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
66.எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
67.சீரிய யோசனை (Consideration)
68.பகுத்தரிதல் (Discernment)
69. உள் உணர்வு (Intuition)
70.சிந்தனைமிகுந்த (Thoughtfulness)

71.கண்காணிப்பு (Vigilence)
72.அறிவுநுட்பம் (Wisdom)
73.லட்சியம் (Ambition)
74.திடமான நோக்கம் (Determination)
75.உழைப்பை நேசிப்பது (Diligence)
76.நம்பிக்கையுடன் (Faithfulness)
77.விடாமுயற்சி (Persistence)
78.சாத்தியமாகின்ற (Potential)
79.நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
80.உறுதி (Confidence)

81.ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
82.கண்ணியம் (Diginity)
83.சாந்த குணம் (Gentleness)
84.அடக்கம் (Moderation)
85.அமைதி (Peacefulness)
86.சாதுவான (Meekness)
87.மீளும் தன்மை (Resilience)
88.மௌனம் (Silence)
89.பொறுமை (Patience)
90.செழுமை (Wealth)

91.சுய அதிகாரம் (Autonomy)
92.திருப்தி (Contentment)
93.மரியாதை (Honor)
94.மதிப்புமிக்க (Respectfulness)
95.கட்டுப்படுத்துதல் (Restraint)
96.பொது கட்டுப்பாடு (Solidarity)
97.புலனடக்கம் (Chasity)
98.தற்சார்பு (Self Reliance)
99. சுயமரியாதை (Self-Respect)
100.உருவாக்கும் கலை (Creativity)

101.சார்ந்திருத்தல் (Dependability)
102.முன்னறிவு (Foresight)
103.நற்குணம் (Goodness)
104.சந்தோஷம் (Happiness)
105.ஞானம் (Knowledge)
106.நேர்மறை சிந்தனை (Optimism)
107.முன்யோசனை (Prudence)
108.விருந்தோம்பல் (Hospitality)

📢🌟🌟🌟🌟🌟🌟🌟🌟📮

இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் 100.

இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் 100.



1. நாம் யார்?
 💚நாம் முஸ்லிம்கள்.

2. நம் மார்க்கம் எது?
💚 நம் மார்க்கம் இஸ்லாம்.

3. இஸ்லாம் என்றால் என்ன?
 💚அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவது.

4. இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் எத்தனை? அவை யாவை?
 💚இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் ஐந்து.
அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்.

5. கலிமாவை கூறு
💚 லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்

6. கலிமாவின் அர்த்தத்தை கூறு.
 💚வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்.

7. ஒரு நாளைக்கு கடமையான தொழுகை எத்தனை? அவை யாவை?
 💚ஒரு நாளைக்கு கடமையான தொழுகை ஐந்து. அவை
சுப்ஹு, லுஹர், அஸர், மக்ரிப், இஷா

8. நோன்பு நோற்பது எப்போது கடமை?
 💚ரமலான் மாதத்தின் 30 நாளும் நோன்பு நோற்பது கடமையாகும்.

9. ஜகாத் என்றால் என்ன?
 💚பணக்காரர்கள், ஏழைகளுக்கு தம் செல்வத்திலிருந்து 40ல் ஒரு பகுதியை கொடுப்பது ஜகாத் ஆகும்.

10. ஹஜ் என்றால் என்ன?
 💚துல்ஹஜ்ஜி மாதத்தில் மக்காவில் புனித 'காபா'வை வலம் வந்து, முக்கிய இடங்களில் தங்கி, வணக்கம் புரிவது ஹஜ் ஆகும்.

11. ஹஜ் செய்வது யார் மீது கடமை?
 💚உடல் வசதியும், பண வசதியும் உடையவர்கள் மீது ஆயுளில் ஒரு முறை
ஹஜ் செய்வது கடமையாகும்.

12. ஈமான் என்றால் என்ன?
 💚ஈமான் என்பது உறுதியான நம்பிக்கை ஆகும்.

13. முதன் முதலில் படைக்கப்பட்ட மனிதர் யார்?
 💚முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்கள்.

14. முதன் முதலில் படைக்கப்பட்ட பெண்மணி யார்?
 💚ஆதம் (அலை) அவர்களின் மனைவியான ஹவ்வா (அலை)

15. தாயும், தந்தையும் இல்லாதவர் யார்?;
💚 நபி ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகிய இருவர்.

16. தந்தை இல்லாமல் பிறந்தவர் யார்?
 💚நபி ஈஸா (அலை) அவர்கள்.

17. நாம் யாருடைய பிள்ளைகள்?
 💚நபி ஆதம் (அலை) அவர்களின் பிள்ளைகள்.

18. நாம் யாருடைய உம்மத்தினர்?
 💚நாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர்.

19. அல்லாஹ் மனிதனை எதிலிருந்து படைத்தான்?
 💚அல்லாஹ் மனிதனை களி மண்ணிலிருந்து படைத்தான்.

20. மலக்குகளை அல்லாஹ் எதிலிருந்து படைத்தான்?
 💚அல்லாஹ் மலக்குகளை ஒளியிலிருந்து படைத்தான்.

21. அல்லாஹ் ஷைத்தானை எதிலிருந்து படைத்தான்?
 💚அல்லாஹ் ஷைத்தானை நெருப்பிலிருந்து படைத்தான்.

22. ஷைத்தான்களின் தலைவன் யார்?
 💚இப்லீஸ்.

23. மனிதர்களின் எதிரி யார்?
 💚இப்லீஸ. ஷைத்தான்.

24. குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன?
💚 25 பேர்

25. அல்லாஹ் மனிதர்களை எதற்காக படைத்தான்?
 💚அல்ல
ாஹ்வை வணங்குவதற்காக.

26. அல்லாஹ் மனிதனை என்ன தன்மையில் படைத்தான்?
 💚எல்லா படைப்பினங்களிலும் சிறந்தவனாக

27. ஷைத்தான் என்பதின் பொருள் என்ன?
 💚அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமானவன் என்பதாகும்.

28. இப்லீஸ் என்பதன் பொருள்?
 💚குழப்பவாதி என்பது பொருள்.

29. ஷைத்தான்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள்?
 💚ஜின் இனத்தைச் சார்ந்தவர்கள்.

30. நம் வேதத்தின் பெயர் என்ன?
💚 அல்குர்ஆன்

31. நபி (ஸல்) அவர்களுக்கு அல்குர்ஆன் எந்த இரவில் வழங்கப்பட்டது?
 💚ரமலான் மாதம் லைலதுல் கத்ர் இரவில் வழங்கப்பட்டது.

32. நபி (ஸல்) அவர்கள் எந்த வயதில் நபி ஆனார்கள்?
💚 40 வயதில்

33. மக்கீ சூரா என்றால் என்ன?
💚 மக்காவில் இறங்கிய சூரா.

34. மதனீ சூரா என்றால் என்ன?
💚 மதீனாவில் இறங்கிய சூரா.

35. குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா எது?
 💚குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா அத்தவ்பா ஆகும்.

36. (ஸல்) என்ற சுருக்கத்தை எப்படி வாசிக்க வேண்டும்?
 💚ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வாசிக்க வேண்டும்.

37. நபிமார்கள் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
 💚அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும்.

38. நம் நபியின் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
 💚ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று சொல்ல வேண்டும்.

39. திருக்குர்ஆனில் உள்ள சூராக்கள் எத்தனை?
💚 114 சூராக்கள் ஆகும்.

40. ரசூல்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?
💚 313 பேர் ஆவார்கள்.

41. திருக்குர்ஆனில் உள்ள சஜ்தா ஆயத்துக்கள் எத்தனை?
 💚14

42. குர்ஆனில் முதன் முதலில் இறங்கிய வசனம் எது? 
💚இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ

43. இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதம் எது?
💚 முஹர்ரம்

44. நபி (ஸல்) எந்த மாதத்தில் பிறந்தார்கள்?
💚 ரபீயுல் அவ்வல்

45. மிஃராஜ் என்றால் என்ன?
 💚நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம்

46. பிறர் தும்மினால் நாம் என்ன சொல்லவேண்டும்?
 💚யர்ஹமுகல்லாஹ்.

47. திருக்குர்ஆனிலேயே மிகச் சிறிய அத்தியாயம்-சூரா எது?
 💚சூரா கவ்ஸர்.

48. நபிப் பட்டம் கொடுக்கப்பட்ட போது, நபி (ஸல்) அவர்களின் வயது எத்தனை?
 💚40 வயது

49. துன்பம் ஏற்பட்டால் என்ன சொல்ல வேண்டும்?
 💚இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

50. உயிரை வாங்கும் வானவர் யார்?
 💚மலக்குல் மௌத்

51. திருக்குர்ஆனின் மொத்த வசனங்கள் (ஆயத்துக்கள்) - எத்தனை?
 💚6666

52. தும்மினால் என்ன சொல்ல வேண்டும்?
 💚அல்ஹம்து லில்லாஹ்

53. வஹீ என்றால் என்ன?
 💚அல்லாஹ்வின் செய்தி.

54. வஹீ கொண்டு வரும் வானவர் யார்?
💚 ஜிப்ரயீல் (அலை)

55. இஸ்திக்பார் என்றால
் என்ன?
 💚பாவமன்னிப்பு தேடுவது.

56. முதன் முதலில் பாங்கு சொன்னவர் யார்?
 💚பிலால் (ரளி)

57. முதல் கலீபா யார்?
 💚அபூ பக்கர் சித்தீக் (ரளி)

58. மன்னிக்கப்படாத பாவம் எது?
 💚குப்ர் - இறைமறுப்பு, ஷிர்க் - அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்.

59. கொடுங்கோல மன்னன் பிர்அவ்னை எதிர்த்துப் போராடிய நபி யார்?
 💚நபி மூஸா (அலை)

60. எவருடைய பெற்றோருக்கு கியாமத்து நாளில் கிரீடம் சூட்டப்படும்?
 💚குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களின் பெற்றோருக்கு

61. அல்லாஹ்வுக்கு பிரியமான இடம் எது?
 💚பள்ளிவாசல்

62. யாருடைய காலின் கீழ் சொர்க்கம் உள்ளது?
 💚தாயின் காலின் கீழ்.

63. பிள்ளைகளை தொழுகைக்கு ஏவ வேண்டிய வயது.
💚  7 வயது.

64. பிள்ளைகள் வெளியே போகும் போது வீட்டிள்ளோர் என்ன சொல்ல வேண்டும்?
 💚ஃபீ அமானில்லாஹ்

65. நமது செயல்களை பதிவு செய்யும் மலக்குகளின் பெயர் என்ன?
💚 கிராமன் காதிபீன்.

66. பிர்அவ்ன் ஆட்சி செய்த நாடு எது?
💚 எகிப்து (மிஸ்ர்)

67. இறைத் தூதர்களை அரபியில் எப்படி சொல்வது?
💚 நபி, ரசூல்

68. இஸ்லாம் என்பதின் பொருள் என்ன?
 💚அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிவது.

69. உலகம் முழுவதையும் படைத்தது யார்?
 💚அல்லாஹ்.

70. அஸ்ஸலாத் என்றால் என்ன?
💚தொழுகை

71. திருக்குர்;ஆன் எந்த மொழியில் உள்ளது?
 💚அரபி மொழியில்.

72. அர் ரஹ்மான் என்பதின் பொருள் என்ன?
 💚அளவற்ற அருளாளன்.

73. திருக்குர்ஆனின் முதல் சூரா எது?
 💚சூரா அல் பாத்திஹா

74. முஸ்லிமின் முதல் கடமை என்ன?
 💚தொழுகை.

75. மக்காவில் உள்ள அல்லாஹ்வின் இல்லம் எது?
 💚கஃபா.

76. அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர்கள் மறுமையில் தண்டனை பெறும் இடம் எது?
 💚நரகம்.

77. பத்ருப் போரில் கலந்துக் கொண்ட ஸஹாபாக்கள் எத்தனை பேர்.?
 💚313 நபர்கள்.

78. ஹஜ்ஜதுல் விதா என்றால் என்ன?
 💚நபி (ஸல்) அவர்கள் மறைவதற்கு முன் செய்த கடைசி ஹஜ் ஆகும்.

79. நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ் எத்தனை?
 💚ஒன்று

80. நபிமார்களில் மிகச்செல்வந்தரராக வாழ்ந்த நபி யார்?
💚 நபி சுலைமான் (அலை)

81. நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்?
 💚ஏழுபேர். 3ஆண்கள்  4 பெண்கள்

82. ஹதீஸ்களை அதிகம் அறிவிப்பு செய்த ஸஹாபி யார்?
💚 அபூ ஹுரைரா (ரளி)

83. அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பு செய்த நபி (ஸல்)   மனைவி யார்?
💚 அன்னை ஆயிஷா (ரளி)

84. திருக்குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா எது?
💚 சூரா தவ்பா.

85. முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?
💚 கதீஜா (ரளி)

86. திக்ருகளில் சிறந்தது எது?
💚 லாஇலாஹ இல்லல்லாஹ்

87.
சிறுவர்களில் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?
💚 அலி (ரளி)

88. நபித் தோழர்களில் அதிகம் செல்வம் படைத்தவர் யார்?
💚 அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரளி)

89. ஜும்ஆ தொழுகைக்கு எத்தனை ரக்அத்கள்?
💚 2 ரக்அத்கள்.

90. நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் யாவர்?
💚 தாயார் ஆமினா, தந்தையார் அப்துல்லாஹ்.

91. நபிமார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
💚அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும்.

92. நபித்தோழர்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும்?
💚 ரலியல்லாஹு அன்ஹூ என்று சொல்ல வேண்டும்.

93. இறைநேசர்கள் நல்லடியார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும்?
💚 ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்று சொல்ல வேண்டும்.

94. முதன் முதலில் ஏற்பட்ட கொலை எது?
💚 ஆதம் (அலை) அவர்களின் மகன் காபில்,  தன் சகோதரர் ஹாபிலை கொலை செய்தது.

95.  உயர்ந்த சொர்க்கம் எது?
💚 ஜன்னதுல் பிர்தவ்ஸ்.

96. எந்த முஸ்லிமுக்கு தொழுகை கடமையில்லை?
💚 மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு

97. நபி (ஸல்) காலத்தில் தன்னை 'நபி' என்று சொன்ன பொய்யன் யார்?
💚 முஸைலமதுல் கத்தாப்.

98. ஹதீஸ் கிரந்தங்களில் முதலிடம் பெற்ற நூல் எது?
💚 ஸஹீஹுல் புகாரி.

99. உண்மையான வீரன் யார்?
💚 கோபம் வரும்போது தன்னை கட்டுப்படுத்திக்கொள்பவன்.

100. நபி (ஸல்) அவர்கள் வாழ்வு காலம்.
💚 63 ஆண்டுகள்

#####################################