Monday 16 December 2019

பழமொழி விளக்கம்:


பழமொழி விளக்கம்:


1. 'தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது.* அப்படிச் செய்தா... வீட்டுல சண்டை வரும்.'

அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.

*2. 'வீட்டுக்குள்ள நகம் வெட்டினா... வீடு விளங்காது.*'

வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.

*3. 'நகத்தைக் கடித்தால் தரித்திரம*்.'

நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.

*4. 'உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.'*

கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.

*5. 'இருட்டிய பிறகு குப்பையை வெளியே கொட்டினால் லட்சுமி வெளியே போய்விடுவாள்.*'

வீட்டுக்குள் பகல் முழுக்க நடமாடும் நாம், ஏதாவது சின்னஞ்சிறு நகை போன்ற பொருட்களை தவறவிட்டிருந்தால், அது குப்பையில் சேர்ந்திருக்கும். இரவு நேரத்தில் அள்ளி தெருவில் கொட்டிவிட்டால், பிறகு தேடிக் கண்டுபிடிப்பது சிரமத்திலும் சிரமம்.

*6. வீட்டில் புறா வளர்க்கக் கூடாது. வளர்த்தால் குடும்பம் அழிந்துவிடும்.'*

புறாக்கழிவுகளின் வாசனை பாம்பை ஈர்க்க வல்லது. அதனால் அதைத் தேடி விஷப்பாம்புகள் வரும்.
*7.  'இரவு நேரங்களில் கீரை சாப்பிட்டால்... எமனுக்கு அழைப்பு வைப்பதுபோல!'*

கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் படுத்தால், தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே, பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.

*8.  'புளிய மரத்துக்கு கீழே படுத்தால் பேய் அடிக்கும்.'*

புளிய மரம் இரவில் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடும். அதனால் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். இதைத்தான் அமுக்குவான் பிசாசு என்றுகூட சொல்வார்கள்.
*9.  முருங்கை மரம் வாசலில் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.'*

மரங்களிலேயே மிகவும் மென்மையான மரம் என்பதால், குழந்தைகள் ஏறினால்கூட பட்டென்று கிளைகள் முறிந்து, விபத்துக்கு வழி வகுத்துவிடும். தவிர, அதில் வரும் கம்பளிப்பூச்சி உள்ளிட்டவை எளிதாக வீடு தேடி வந்து தாக்குதல் நடத்தும்

*10.  தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக் கூடாது...'*

சமைக்கும்போதும்... பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக!

*11. . 'வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.'*

பூமியின் காந்த சக்தியானது வடதுருவத்தை நோக்கி நிற்கிறது. வடதிசையில் தலை வைத்து படுக்கும்போது அதன் ஈர்ப்பு சக்தியானது நம் தலையையும் மூளையையும் தாக்குகிறது. அதனால் ஆரோக்கியம் குறையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.

*12. . 'வாழை இலை போடாமல் விசேஷம் நிரக்காது.'*  இந்த இலையில் 'பினாலிக்ஸ்' எனும் இயற்கை சத்து உள்ளது. இதில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு. இதை அனுபவத்தில் கண்டுணர்ந்து காலகாலமாகக் கடைபிடிக்கிறார்கள்.

படித்ததில்.  பிடித்தது...

Tuesday 10 December 2019

வாடகை ஒப்பந்த பத்திரம் - Rental Agreement

வாடகை ஒப்பந்த பத்திரம் - Rental Agreement

வாடகை ஒப்பந்த பத்திரம்

--------- ம் வருடம் ---------------- மாதம் ---- ஆம் தேதி 23, சேதுபதி நகர், chennai திரு Raja அவர்கள்
1வது பார்ட்டியாகவும்(வீட்டின் உரிமையாளர்)

சொந்த ஊரான் -----------------மாவட்டம், --------------- வட்டம்,-----------------தெரு, கதவு எண்---------- ல் வசித்து வரும் திரு/திருமதி ------------------------
அவர்கள் 2வது பார்ட்டியாகவும் (வாடகைதாரர்)


மேற்சொன்ன 1வது பார்ட்டிக்குச் சொந்தமான 23 சேதுபதி நகர், chennai முதல் தளத்தில் அமைந்துள்ள வீட்டினை நம்மில் 2வது பார்ட்டி
குடியிருப்பதற்காக வேண்டி 1வது பார்ட்டியினை அணுகி வாடகைக்குக் கேட்க, அதற்கு 1வது பார்ட்டி, 2வது பார்ட்டிக்கு வாடகைக்கு விடுவதற்க்கு ஒப்புக்கொண்டு
கீழ்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தை எழுதிக் கொண்டுள்ளனர்.

ஆக, நாம் 1,2 ம் பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம் என்னவென்றால்

1. நம்மில் 2வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு மாத வாடகையாய் ரூபாய் ---------------------(ரூபாய் ------------------------------------------------------------------------------------------------------------------------------)
பிரதி ஆங்கில மாதம் 7-ம் தேதிக்குள் 1வது பார்ட்டி வசம் கொடுத்து விட வேண்டியது.

2. 1வது பார்ட்டியிடம் 2வது பார்ட்டி இன்று ----------------------------------------------------- ரூபாய் -------------------------------------------------------- மட்டும் ரொக்கமாக செலுத்தி உள்ளார். மேற்படி
தொகையை நம்மில் 2வது பார்ட்டி வீட்டினை காலி செய்து கொண்டு போகும் போது 1வது பார்ட்டி திருப்பிக் கொடுத்து விட வேண்டியது. மேற்படி இந்த அட்வான்ஸ் தொகைக்கு
வட்டி ஏதும் கிடையாது.

3. 1வது பார்ட்டி தற்போதுள்ள வீட்டினை எப்படி ஒப்படைத்தாரோ அதே நிலையில் 2வது பார்ட்டி மேற்படி வீட்டினை காலி செய்யும் சமயத்தில் சேதமில்லாமல் ஒப்படைக்க வேண்டும்.
  மேற்படி வீட்டில் ஏதாவது சேதம் இருந்தால் 1வது பார்ட்டி அட்வான்ஸ் தொகையில் சேதத்தின் மதிப்பை கழித்துக் கொண்டு 2வது பார்டியிடம் ஒப்படைக்க வேண்டும்.

4. 2வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தை மீட்டர் அளவுப்படி மின்சார அலுவலகத்தில் தானே செலுத்திக் கொள்ள வேண்டியது.

5. 2 வது பார்ட்டி பொதுப் பயன்பாட்டிற்கான மின்கட்டணம் மற்றும் தண்ணீர் போன்றவற்றிக்கு ரூபாய் ------------- பிரதி ஆங்கில மாதம் 7-ம் தேதிக்குள் 1வது பார்ட்டி வசம் கொடுத்து விட வேண்டியது.

6. இந்த வாடகை ஒப்பந்தம் இன்றைய தேதியிலிருந்து 11 மாத காலக் கொடுவிற்கு உட்பட்டது. அதாவது ------------------------- தேதி முதல் ------------------------------- தேதி வரையிலான 11 மாத காலத்திற்கு உட்பட்டது.

7. 11 மாத காலக் கெடுவிற்குள் 1வது பார்டிக்கு வீடு தேவைப்பட்டால் 2வது பார்ட்டிக்கு 2 மாத முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். அதே போல் 2வது பார்ட்டி வீட்டை காலி செய்ய விரும்பினால் 2 மாத முன்னறிவிப்பு
கொடுத்து விட்டு காலி செய்ய வேண்டியது.

8. மேற்படி வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை 11 மாத காலம் முடிந்த பின்பு இருவரின் ஒப்புதலின் பேரில் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது.

9. 2வது பார்ட்டி மேற்படி வீட்டில் குடியிருப்பதைத் தவிர வேறு எந்த விதமான உபயோகத்திற்கும் பயன் படுத்த்தக் கூடாது.

10. 2வது பார்ட்டி மேற்படி வீட்டை வேறு யாருக்கும் மேல் வாடகைக்கோ அல்லது உள் வாடகைக்கோ விடக்கூடாது.

11. 2வது பார்ட்டி தொடர்ந்து மூன்று மாத காலம் வாடகையைத் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேற்படி வீட்டை காலி செய்ய 1வது பார்ட்டிக்கும் உரிமையுண்டு.

இப்படியாக நாம் இரண்டு பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம்.



வாடகை சொத்து விபரம்.

23, முதல் தளம்,  சேதுபதி நகர், chennai-600026,


1வது பார்ட்டி
(வீட்டின் உரிமையாளர்)


2வது பார்ட்டி
(வாடகைதாரர்)



சாட்சிகள்


1)




2)