Wednesday, 25 June 2025

குர்ஆனிய தொடர்பு...

 

குர்ஆனிய தொடர்பு...

குர்ஆனை ஓதுகின்ற குர்ஆனோடு தொடர்பு
கொள்கின்ற மனிதர்கள் நால்வகைப் படுகிறார்கள்.என நபி (ஸல்) அவர்கள் வகைப்
படுத்தி கூறினார்கள்.

1. ஸாலிஹான மனிதர் குர்ஆனை ஓதுவார்:
அதனைப்ற்றி ஆராய்வார், அதனுடைய வழியில்
தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வார். இவர் கொழுமிச்சங்காயைப்
போன்றவர். கொழுமிச்சங்காய் அழகிய நறுமணம் மிக்கது நற்சுவையுள்ளது.

2. குர்ஆனை ஓதாத ஸாலிஹான மனிதர்:
குர்ஆனை அடிக்கடி ஓத மாட்டார். ஆயினும்
குர்ஆனுடைய வழியில் தன்னுடைய
வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்.
குர்ஆனைப் பின்பற்றுபவர். இவர்  பேரீச்சம்
பழத்தை போன்றவர். பேரீச்சம் பழம் நல்ல
சுவையுள்ளது. ஆயினும் மணமில்லாதது.

3. குர்ஆனை ஓதும் தீயவன்:
குர்ஆனைப் பின்பற்றும் நோக்கமில்லாமல்
வேறு வேறு நோக்கங்களுக்காக குர்ஆனை
ஓதுபவன். குர்ஆனை உபதேசிப்பவன்.
மக்களிடம் எடுத்துரைப்பவன். இவன் காட்டு
மலருக்கு ஒப்பானவன். காட்டு மலருக்கு
மணமுண்டு ஆனால், சுவையோ பயங்கர
கசப்பு.

4. குர்ஆனை ஓதப் படிக்காத தெரியாத தீயவன்:
படிக்கவும் மாட்டான். பின்பற்றவும் மாட்டான்.
இவனுடைய நிலை எட்டிக்காய்க்கு ஒப்பானது.
எட்டிக்காய் கசப்போ கசப்போ. எந்த மணமும்
கிடையாது. ( நூல்: புகாரி, முஸ்லிம் )

இந்த
நான்கு நிலைகளில் நம்முடைய நிலை
எந்த நிலை உங்கள் மனதிடம் கேள்வியாக!

இறைவா!
குர்ஆனுடைய வாழ்க்கையை வாழும்
பாக்கியத்தைத் தருவாயாக!!

*ஆமீன் ! ஆமீன்!*
*யாரப்பில் ஆலமீன்!!*
.____________
*°,¸¤ª“˜¨¨¯¯¨🍃🌸*

No comments:

Post a Comment