Sunday, 29 September 2019

நபிகள்_நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் உபதேசங்கள்...

நபிகள்_நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் உபதேசங்கள்...
------------------------------
🎀01. Fajr மற்றும், அசர் மற்றும் மக்ரிப், மக்ரிப் மற்றும் இஷா இடையே தூங்க வேண்டாம்.
------------------------------
🎀02. நாற்றமுற்றவர்கலோடு அமர வேண்டாம்.
------------------------------
🎀03. தூங்கும் முன் மோசமான பேச்சு பேசக் கூடிய மக்களிடையே தூங்க வேண்டாம்.
---------------------------------
🎀04. உங்கள் இடது கையால் குடிக்க, சாப்பிடவோ வேண்டாம்.
------------------------------
🎀05. உங்கள் பற்களின் இடையே மாட்டிய உணவை எடுத்து சாப்பிட வேண்டாம்.
---------------------
🎀06. உங்கள் விரலில் நெட்டி முறிக்க வேண்டாம்.
------------------------------
🎀07. காலணிகளை அணியும் முன் சரிபார்க்கவும்.
------------------------------
🎀08. தொழுகையின் போது வானத்தை பார்க்க கூடாது.
------------------------------
🎀09. கழிவறை உள்ளே எச்சில் துப்பக் கூடாது.
------------------------------
🎀 10. கரியைக் கொண்டு பற்களை சுத்தம் செய்யக்கூடாது.
------------------------------
🎀11. உங்கள் கால்சட்டையை உட்கார்ந்து அணியவும்.
------------------------------
🎀12. கடினமானதை பற்களைக் கொண்டு கடிக்கக் கூடாது.
------------------------------
🎀13. சூடான உணவை ஊதி சாப்பிடக் கூடாது.
------------------------------
🎀14. மற்றவர்களின் தவறுகளை பார்க்க வேண்டாம்.
------------------------------
🎀15. Azan மற்றும் Iqamath இடையே பேச வேண்டாம்.
------------------------------
🎀16. கழிப்பறை உள்ளே பேச வேண்டாம்.
------------------------------
🎀17. உங்கள் நண்பர்கள் பற்றி கதைகள் பேச வேண்டாம்.
------------------------------
🎀18. உங்கள் நண்பர்களை விரோதம் கொள்ள வேண்டாம்.
------------------------------
🎀19.நடந்து செல்லும்போது பின்னால் அடிக்கடி திரும்பி பார்க்க வேண்டாம்.
------------------------------
🎀20. நடக்கும் போது உங்கள் கால்களை பூமியில் முத்திரை பதிக்க வேண்டாம்.
------------------------------
🎀21. உங்கள் நண்பர்கள் பற்றி சந்தேகம் வேண்டாம்.
------------------------------
🎀22. எந்த நேரத்திலும் பொய் பேச கூடாது.
------------------------------
🎀23. சாப்பிடும் போது உணவை நுகரக்கூடாது.
------------------------------
🎀24. மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி தெளிவாக பேசுங்கள்.
------------------------------
🎀25. தனியாக பயணம் செய்ய வேண்டாம் .
------------------------------
🎀26. உங்கள் சொந்த முடிவு ஆயினும் மற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.
------------------------------
🎀27. உங்களை பற்றி பெருமை கொள்ள கூடாது.
------------------------------
🎀28. உணவை குறைக்கூற வேண்டாம்.
------------------------------
🎀29. பெருமை வேண்டாம்.
------------------------------
🎀30. பிச்சைக்காரர்களை விரட்டியடிக்காதீர்கள்.
------------------------------
🎀31. விருந்தாளியை நல்ல மனதோடு உபசரியுங்கள்.
------------------------------
🎀32. வறுமையின் போது பொருமை காக்கவும்.
------------------------------
🎀33. நல்ல விஷயத்திற்காக உதவி செய்யுங்கள்.
------------------------------
🎀34. செய்த தவறுகளை நினைத்து வருந்துங்கள்.
------------------------------
🎀35. உங்களுக்கு கெட்டது செய்தவர்களுக்கு நல்லது செய்யுங்கள்.
------------------------------
🎀36. இருப்பதைக் கொண்டு திருப்தி அடையுங்கள்.
------------------------------
🎀37. அதிகம் தூங்க கூடாது - அது மறதியை ஏற்படுத்தும்.
------------------------------
🎀38. ஒரு நாளைக்கு குறைந்தது 100 முறை பாவமன்னிப்பு தேடுங்கள்.
------------------------------
🎀39. இருட்டில் சாப்பிட கூடாது.
------------------------------
🎀40. வாய் முழுக்க சாப்பிட வேண்டாம் .‼‼‼‼‼‼‼‼‼‼
*முடியுமான வரை பகிருங்கள்.

Saturday, 28 September 2019

சுவர்கத்தின் சுருக்கமான பயணம்

#சுவர்கத்தின் சுருக்கமான பயணம்.
முழுமையாக படியுங்கள்
இத்தகைய சிறப்பு மிக்க சுவனம் எட்டு ஆகும்.

1. தாருல் ஜலால் ஒளியாலும் !

2. தாருல் ஸலாம் செம்மனியாலும் !

3. தாருல் கரார் பவளத்தாலும் !

4. ஜன்னத்துல்  அத்ன் மரகதத்தாலும் !

5. ஜன்னத்துல் மஃவா பொன்னாலும் !

6. ஜன்னத்துல் குல்து வெள்ளியாலும் !

7. ஜன்னத்துல் ஃபிரதவ்ஸ் முத்தாலும் !

8. ஜன்னத்துன் நயீம் வைடூரியத்தாலும் படைக்கப்பட்டு இருக்கிறது !

     ஆதாரம் : திர்மதி

பத்து வகையான மனிதர்களை சுவனம் தேடுகின்றன.

1. நள்ளிரவில் இரண்டு ரக அத் தொழுபவர் .

2 கோடைகாலத்தில்   நோன்பு நோற்பவர் .

3. முதல் தக்பீரை ஜமாத்துடன் தவறவிடாதவர் .

4. இரவில் அதிக நேரம் தூங்காதவர் .

5. உண்மையை அன்றி வேறெதனையும் பேசாதவர் .

6. தம் மனைவி மக்களிடம் இரக்கம் உடையவர் .

7. எப்பொழுதும் உளுவுடன் இருப்பவர்கள் .

8. மது அருந்தாமலும் ஹராமான செயல்களை செய்யதிருப்பவர் .

9. எப்பொழுதும் அண்ணல்  நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லிக் கொன்டிருப்பவர் .

10. பசித்தவனுக்கு உணவளிப்பவர் தாகமுள்ளவருக்கு தண்ணீர் புகட்டியவர்.

இவர்களை சுவனம் தேடுகின்றது .
 
சுவனம் செல்லாத பத்து பேர்கள்

1. இரக்கம் இல்லாதவர் .

2. கோள் சொல்பவன் புறம் பேசுவபன் .

3. பெண்களை வைத்து விபச்சாரம் செய்பவன் .

4. தன் மனைவியைக் கூட்டிக்குடுப்பவன் .

5. மோசடி செய்வபன்.

6. இசைக்கறுவி இசைப்பவர் .

7. பிறர் கேட்கும் மன்னிபை எற்காதவர் .

8. ஆடை அணிந்த நிர்வாணிகள்

9. உலகில் மீது  அதிகம் ஆசை உள்ளவன் .

10. தன் தாய் தந்தையரை துன்புறுத்துபவன்.

    ஆதார நூல்: முநப்பிஹாத்

நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் )அவர்கள் கூறினார்கள். நீங்கள் ஆறு விஷயங்களைச் செய்வதாக எனக்கு உறுதி அளித்தால் நான் உங்களுக்கு சுவர்கத்தை பெற்றுத்தர உறுதியளிப்பேன்.

1. பேசினால் உன்மையே பேசுங்கள் .

2. வாக்களித்தால் நிறைவேற்றுங்கள்.

3. அமானிதத்தைப் பாதுகாத்து வாருங்கள்.

4. நாவையும் மர்ம உறுப்பையும் பாதுகாதுக்கொள்ளுங்கள்.

5. தீமையை விட்டும் உங்கள் பார்வைத் திருப்பிக்கொள்ளுங்கள்.

6. உங்கள் கரங்களை தீமையை விட்டும் தடுத்துக்கொள்ளுங்கள்.
 
   ஆதாரம் : மிஷ்காம் பக்கம் 415

சுவர்கவாசிகளுக்கு அல்லாஹுத்தாலா சுவர்கம் நுழையும்  மறுமையில் உலகம் ஒரு ரொட்டியாக மாறிவிடும்

அதனை அல்லாஹ் தன் சக்திமிக்க கைகளால்  சுவர்கவாசிகலுக்கு புரலச்செய்வான்.

அல்லாஹுத்தால மீன் இறைச்சியும் மாட்டு இறைச்சியும் சுவனவாசிகளிக்கு கறியாக கொடுப்பான்

அந்த மீனின் ஈரலை மட்டும் 80.000 பேர் புசிப்பார்கள்

ஆதாரம் : புகாரி முஸ்லிம் .

சுவனத்தினுல் போகும் முதல் கூட்டத்தினரின் உருவங்கள் முழுமதி போல் ஒளிரும்.

இரண்டாம் கூட்டத்தினரின் உருவம் விண்மீன் போன்று ஒளிரும்.

சுவனத்தில் எச்சில் மலம் சிறுநீர் தும்மல்  இருமல் சளி நோய் நொடி எதுவும் கிடையாது

சுவர்கத்தில் பாத்திரங்கள் வெள்ளியாலும் தங்கத்தாலும் இருக்கும்

அங்கு தலை சீவும் சீப்பு தங்கமாகவும் அவர்களின் நறுமணப்புகை சந்தனக்கட்டையாகவும் வியர்வை கஸ்தூரி மணமுள்ளதாகவும் இருக்கும். 
         ஆதார நூல் : புகாரி முஸ்லிம்.

நபி (ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

 சுவனவாசிகலுக்குப் பணிவிடை செய்ய அழகிய சிறுவர்கள் இருப்பார்கள்.

மேலும் அவர்களுக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட ஹூருல் ஈன் எனும் கண்ணழகிகள் இருப்பார்கள்.

அவர்கள் ஆனிமுத்துக்களைப் போல் இருப்பார்கள். அந்த ஹூருல் ஈன்கள் இந்த உலகை எட்டிப்பார்த்தால்,,,

இந்த பூமி வெளிச்சமாகவும் நறுமணமாகவும் ஆகிவிடும் அந்த ஹூருல் ஈன் பெண்களின் எச்சில் கடலில் பட்டால் கடல் தேனாக மாறிவிடும்.

 சுவர்கத்தில் ஒவ்வெரு ஆணுக்கும் மானிடப்பெண்கள் 70 பேரும் ஹூருல் ஈன்கள் 30 பேரும் மனைவியாக்கி கொடுக்கப்படும்
     ஆதாரம் : திர்மதீ

சுவர்க்கவாசிகள் வாரத்தில் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் தங்களின் உற்றார் உறவினர்களை சந்திப்பார்கள்.

1. பிள்ளைகள் சனிக்கிழமையன்று தங்கள் பெற்றோரைச் சந்திப்பார்கள்.

2. ஞாயிற்றுக்கிழமையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சந்திப்பார்கள்.

3. திங்கட்கிழமையன்று மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களைச் சந்திப்பார்கள்.

4. செவ்வாய்கிழமையன்று ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களைச் சந்திப்பார்கள்.

5. புதன்கிழமையன்று நபிமார்களை தனது உம்மத்தினர் சந்திப்பார்கள் .

6. வியாழன் அன்று உம்மத்தினரை நபிமார்கள் சந்திப்பார்கள்.

7. வெள்ளிக்கிழமையில் சுவனவாசிகள் அனைவரும் தங்கள் இறைவனைச் சந்திப்பார்கள் என்று நபி (ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம்)  அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் )
அவர்கள் கூறினார்கள்  சுவர்கத்தில் எப்போதும் ஒரு பாடல் ஒளித்துக்
கொண்டே இருக்கும்

நாங்கள் என்றும் வாழ்ந்து வருவோம்
நாங்கள் அழிந்து விடமாட்டோம்

நாங்கள் எப்பொழுதும் சுகபோகத்தில் இருப்போம்
நாங்கள் கவலை அடைய மாட்டோம்
நாங்கள் எப்பொழுதும் திருப்தியுடன் இருந்து வருவோம்
என்று பாடிக் கொண்டிருப்பார்கள்

சுவனத்தில் பல்வேறு பிரம்மாண்டமான மரங்கள் இருப்பினும் இம்மை மறுமை எல்லை இல்லா மரமாகும்.

இதன் கனிகள் ஒவ்வொன்றும் யானைக்காது போன்றும் அதிக ஒளி வீசக்கூடியதாகவும் ஒவ்வொரு கனியிலும் எழுபத்திரண்டு வகையான சுவையிருக்கும் .

அதன் வேர்ப்பகுதியில் இருந்துதான் சுவனத்தின் நதிகள் யாவும் ஊற்றெடுக்கும்

சுவனத்தில் எண்ணற்ற அரண்மனைகள் இருக்கும் அவை ஒவ்வொன்றிலும் ஒரே மாணிக்கத்தினால் ஆன 70.000 அறைகள் இருக்கும். 

ஒவ்வொரு சுவர்கவாசிக்கும் இது போன்ற கட்டிடங்கள் பல இருக்கும்

   ஆதாரம் : புகாரி முஸ்லிம்

நபி (ஸல்லல்லாஹூ  அலைஹி  வஸல்லம் )அவர்கள் கூறினார்கள்.

சுவர்கவாசிகலுக்கு பயணம் செய்ய விரும்புவீராயின் சிவப்பு நிறப் பவளக் குதிரையில் ஏற்றப்படுவீர்.

அது நீர் நாடிய இடத்திற்கு உம்மை பறந்து சுமந்து  கொண்டுச்
செல்லும் சுவர்கவாசியின் ஆடை பட்டினாலும் நவரத்திங்களாளும் இழைத்து உருவாக்கப்பட்டிருக்கும்.

சுவனத்தில் நிச்சயமாக கடைத்தெரு ஒன்று உள்ளது அங்கு விற்பனையோ வாங்குவதோ கிடையாது

ஆண்களின் மாற்றமும் பெண்களின் தோற்றங்கள் தான் இருக்கும்

  ஆதாரம் :  திர்மதி

அல்லாஹ் சுவர்வாசிகளை அழைப்பான் சுவர்கவாசிகள் அல்லாஹ்வுக்கு முன்னால் ஒன்று கூடுவார்கள்

அப்போ அல்லாஹ் சுவர்கவாசிகளை பார்த்து கேட்பான் திருப்தி அடைந்தீர்களா  சுவர்கவாசிகள் சொல்வார்கள்.

யா ரப்பே நீ யாருக்கும் கொடுக்காததையல்லவா  எங்களுக்கு கொடுத்திருக்கிறாய் எப்படி திருப்தி அடையாமல் இருப்போம்

அல்லாஹ் கூறுவான் இதைவிட ஒன்று நான் உங்களுக்கு அறிவிக்கவா.

சுவர்க்கவாசிகள்  சொல்லுவார்கள் இதை விட ஒன்றா..... அல்லாஹ் கூறுவான் என் பொருத்ததை உங்கள் மீது ஹலாலாக்குகிறேன்.

இதற்கு மேல் உங்கள் மீது நான் கோபபட மாட்டேன் என்று சொல்லிவிட்டு

அல்லாஹ் தனக்கு முன்னால் உள்ள எழுபது திரையையும் அகற்றுவான்.

#சுவர்க்கவாசிகள் யாருக்காக தொழுதார்களோ யாருக்காக நோன்பு வைத்தார்களோ யாருக்காக ஜகாத் கொடுத்தார்களோ,,,

யாருக்காக இரவில் எழுந்து தொழுதார்களோ யாருக்காக நல்லமல்கள் செய்தார்களோ யாரை அஞ்சி வாழ்ந்தார்களோ 

அந்த அல்லாஹ்வை அந்த இரண்டு கண்களால் சுவர்க்கவாசிகள் பார்ப்பார்கள் அதைவிட சுவர்க்கத்தில் எதும் ஈடாகாது.

யா அல்லாஹ் நகரத்தை விட்டு பாதுகாத்து இந்த உலகில் உண்மை வாழ்கை வாழ்ந்து,,,

சுவர்க்கத்தில் நுழைய வைத்து உன்னை இந்த இரண்டு கண்களால் பார்க்கக்கூடிய பாக்கியதை எனக்கும்,,,

உங்களுக்கும் இந்த உலக முஸ்லீம் அனைவருக்கும் அல்லாஹ் கொடுப்பானாகவும். آمين يا رب العالمين

ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலம்