Monday, 27 August 2018

வியக்க வைத்த வரிகள்

வியக்க வைத்த வரிகள்
"" "" "" "" "" "" "" "" "" "


👌👌👌👌👌👌👌
நோய் வரும் வரை உண்பவன்,
உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!
👌👌👌👌👌👌👌👌

பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல...
ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!
👌👌👌👌👌👌👌👌

பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?  செலவு செய்யுங்க.....!
உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!
👌👌👌👌👌👌👌👌

பிச்சை போடுவது கூட சுயநலமே...,
புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...
👌👌👌👌👌👌👌👌

அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை...,
ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.
👌👌👌👌👌👌👌👌

வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு...,
அதற்கு அவமானம் தெரியாது
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!
 👌👌👌👌👌👌👌👌

வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".
வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"
👌👌👌👌👌👌👌👌

திருமணம் -
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்...,
ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!
👌👌👌👌👌👌👌👌

முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்...,
பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.
அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
👌👌👌👌👌👌👌👌

மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும்
என்ற ஒரு காரணத்திற்காகவே,
நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன...!
👌👌👌👌👌👌👌👌



நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.
👌👌👌👌👌👌👌👌

இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட...,
வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!
👌👌👌👌👌👌👌

பகலில் தூக்கம் வந்தால்,
உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!!
இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!
👌👌👌👌👌👌👌👌

துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது
கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது.. 
👌👌👌👌👌👌👌

தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள *அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..*
👌👌👌👌👌👌👌

அழகான வரிகள்....
படித்ததில் பிடித்தது*
பிடித்திருந்தால் பகிரவும்...!!!

Friday, 24 August 2018

'உங்கள் வாழ்வு செழிக்க சில அறிவுரைகள்

'உங்கள் வாழ்வு செழிக்க சில அறிவுரைகள்'


- Dr. DHAMODHARAN, MD.
 
அவசியம் கடைபிடிக்க வேண்டிய  ஆரோக்கிய குறிப்புகள்..!!

1🕹. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.

2🕹. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

3🕹. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.

4🕹. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.

5🕹. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.

6🕹. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.

7🕹. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக  இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது  மனதுக்குள் சிறிது நேரம்  பிரார்த்தனை செய்யங்கள் .

8🕹. டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு  நிறைய நல்ல புத்தகங்களைப்  படியுங்கள்.  பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களை  சொல்லிக் கொடுங்கள்.

9🕹. குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள். தேவயற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் நேரத்தை வீனடிக்காதீர்கள்.

10🕹. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

11🕹. தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக  நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)

12🕹. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது.

13🕹. எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள். 

14🕹. கடுமையாக உழைக்காதீர்கள்.  உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

15🕹. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீனாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாதீர்கள்.

16🕹. நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.  அதை செயல்படுத்தவும்  முயற்சி செய்யுங்கள்.

17🕹. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

18🕹. கடந்த காலத்தை மறந்து விடுங்கள்.  முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ் காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.

19🕹. குறுகிய கால இந்த வாழ்க்கையில்  யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.

20🕹. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள் சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

21🕹. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.

22🕹. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, SMS மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள். இது உங்களுக்கும் அவர்களுக்கும் மன அமைதியையும், பரஸ்பர அன்பையும் மேம்படுத்தும்.

23🕹. மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள்.  உங்கள் மனபாரம் நீங்கும்.

24🕹. 60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். பணம் முக்கியமல்ல.

25🕹. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைநினைப்பதுப்பது மற்றவர்களின் வேலையல்ல.

26🕹. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27🕹. உங்களின் நிறைவேறிய தேவைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.

28🕹. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.

29🕹. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுங்கள்.
     
30🕹. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல. கவலைகளும், நோய்களும் கூட...
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

மற்றவர்களுக்கும் இதை பகிருங்கள்..!

இதுதான் வாழ்க்கை ! கேரள வெள்ளம் உணர்த்தும் பாடம்!

இதுதான் வாழ்க்கை ! கேரள வெள்ளம் உணர்த்தும் பாடம் !

“இந்தப் பகுதி இன்னும் அரைமணி நேரத்தில் மூழ்கிவிடும்.
முக்கியமானதை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்”

இதைக் கேட்டபோது அவர்கள் முழங்கால் அளவு

தண்ணீரில் நின்றுகொண்டிருந்தார்கள்.

இப்போது அவர்கள் பிரச்சினை
எதையெல்லாம் எடுத்துக்கொள்வது என்பதல்ல
எதையெல்லாம் கைவிடுவது என்பதுதான்.

முதலில் கைகளில் எதையெல்லாம் தூக்கிக்கொள்ள முடியாதோ அதையெல்லாம் கைவிட்டார்கள்.

பிறகும் கைவிடுவதற்கு ஏராளமாக இருந்தன.

பரிசுப்பொருள்கள்
தெய்வப்படங்கள்
புகைப்பட ஆல்பங்கள்
ஆடைகள்
உள்ளாடைகள்
புத்தகங்கள்
இசைக்கருவிகள்
இசைப்பேழைகள்
ஸ்பூன்கள்
கண்ணாடிக் கோப்பைகள்
பொம்மைகள்
கண்ணீரின் உப்புப் படிந்த தலையணைகள்
உடல் வாசனையுள்ள போர்வைகள்

அழகு சாதனப்பொருள்கள்

கைவிடுவதற்கு முடிவேயில்லாமல் ஏராளமாக இருந்தன.

நீங்கள் கைவிடும்போது உங்கள் மனதை ஒரு பனிக்கட்டியைப்போல உறையச் செய்ய வேண்டும்.

எவ்வளவு கருணையற்றவராக இருக்கமுடியுமோ அவ்வவு கருணயற்றவராக மாறவேண்டும்.

ஒரு தூக்கிலிடுபவனைப்போல உங்கள் கண்கள் மரத்துப் போக வேண்டும்.

ஒரு பாலித்தீன் பை அளவுக்கு மட்டுமே எதையும் எடுத்துக்கொள்ள அவர்களுக்கு அவகாசம் இருந்தது. அனுமதி இருந்தது.

அவர்கள் ஒரு பிரம்மாண்டமான விற்பனையகத்தின் முன்னால்கூட அப்படி திகைத்து நின்றதில்லை.

தேர்வு என்பது அத்தனை கடினமானதாக இருந்தது.

அத்தனை உணர்ச்சிகரமானதாக இருந்தது.

எதுவுமே அவ்வளவு முக்கியமல்ல என்று தோன்றிய கணத்தில் அவர்கள் தோள் அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டிருந்தது.

கடவுச்சீட்டுகளை எடுத்துக்கொண்டார்கள்.

வங்கிக் கணக்குப் புத்தகங்களை எடுத்துக் கொண்டார்கள்.

சான்றிதழ்ககளை எடுத்துக் கொண்டார்கள்.

ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களை எடுத்துக்கொண்டார்கள்.

ரேஷன் கார்டுகளை, வாக்காளர் அட்டைகளை, ஆதார் அட்டைகளை, வாகனங்களை கைவிட்டு ஓட்டுனர் உரிமங்களை, கடன் பத்திரங்களை இன்னும் என்னென்னவோ!

முத்திரையிடப்பட்ட காகிதங்களை, ஆவணங்களைத் தவிர நம் வாழ்வை மீண்டும் நீட்டிக்கச் செய்வதற்கு வேறு எதுவுமே முக்கியமல்ல என்பது அவர்களை ஒரு கணம் அதிர்ச்சியடைய வைத்தது.

பிறகு வீடுகளை அப்படியே திறந்து போட்டு விட்டு ஒரு பாலீத்தின் கவரை தலைக்கு மேலாக தூக்கிப் பிடித்தபடி மேட்டு நிலம் நோக்கி தண்ணீரில் வேக வேகமாக நடந்து சென்றார்கள்.

இதுதான் வாழ்க்கை! இவ்வுலகில் நீங்கள் எதை விட்டுச் செல்ல போகிறீர்கள்?

நாளைக்கு எதை இங்கிருந்து எடுத்துச் செல்ல போகிறீர்கள் ?

இருக்கும் வாழ்க்கையில் நல்லவைகளைச் செய்து எவருக்கும் தீங்கிழைக்காமல் வாழ்வோம்!

Monday, 13 August 2018

வீடுகளில் பரகத் ஏற்படுவதற்கான வழிமுறைகள்

*வீடுகளில் பரகத் ஏற்படுவதற்கான வழிமுறைகள்*


🔖பரகத் (அபிவிருத்தி) என்பது நாம் அடிக்கடி செவிமடுக்கும் ஒரு சொற்பதம் ஆகும். ஆனால் எமது வீடுகளில் நாம் அதனை இழந்துள்ளோம். எமக்கு நேரத்தில், வாழ்வாதாரத்தில், செல்வத்தில், குழந்தைகளில் பரகத் இல்லை என்பதே கவலைக்குரிய விடயம்.

🤔அவ்வாறாயின், பரகத்துக்கான திறவுகோள்கள் யாவை?

🔖 **பரகத்தை ஏற்படுத்தக் கூடிய   எட்டு வகையான திறவுகோள்கள் காணப்படுகின்றன.*
*
அவை,

🔑 *சங்கை மிக்க அல்குர்ஆனை ஓதுதல்*

அல்லாஹ் கூறுகின்றான் " பரகத் செய்யப்பட்ட இந்த வேதத்தை  நாமே இறக்கி வைத்தோம்". (6:155)
அல்லாஹ் அல்குர்ஆனை, அதனை ஆராய்வதனூடாகவும் அன்றாட வாழ்வில் அதன் போதனைகளை நடைமுறைப்படுத்துவதனூடாகவும் பாக்கியம் நிறைந்ததாக ஆக்கியுள்ளான். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் அல்குர்ஆன் ஓதப்படுகின்ற வீட்டைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்: "(அவ் வீட்டில்) மலக்குமார்கள் குடியிருப்பர். ஷைத்தான்கள் வெளியேறிவிடும். குடும்பத்தில் அபிவிருத்தி ஏற்படும். நன்மைகள் அதிகரிக்கும்".

🔑 *பிஸ்மி கூறலும், அல்லாஹ்வை நினைவுபடுத்தலும்* .

ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு மனிதர் தனது வீட்டினுள்   நுழைகின்ற போதும், உணவு உட்கொள்கின்ற போதும் அல்லாஹ்வை நினைவு கூறுகின்றார். அப்போது ஷைத்தான் தனது தோழர்களைப் பார்த்து 'இங்கு (எமக்கு) தங்குமிடமும் இல்லை. உணவும் இல்லை' எனக் கூறுவான்.

🔑 *தர்மம்*

வீட்டினுள் பரகத் ஏற்படுவதற்கான பிறிதொரு வழிமுறையாக தர்மம் செய்தல் காணப்படுகின்றது. (அதிலும்) குறிப்பாக இரகசியமாக வழங்கப்படும் தர்மம். ஏனெனில் அது இரட்சகனின் கோபத்தை தனித்து விடும்.

🔑 *குடும்ப உறவுகளைப் பேணுதல்*

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: "நிச்சயமாக குடும்ப உறவுகளைப் பேணுவதும் நன்னடத்தையும் நல்ல நட்பும் வாழ்வாதாரத்தை விருத்தி செய்து, வாழ்நாட்களையும் அதிகரிக்கின்றது."

🔑 *தொழிலுக்காக  அதிகாலையிலே புறப்பட்டுச் செல்லுதல்*

ஒரு ஹதீஸில் "எனது சமூகத்திற்கு அதன் அதிகாலைப் பொழுதுகளில் பரகத் செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அதிகாலைப் பொழுதில் வாழ்வாதாரத்தைத் தேடிச் செல்வதில் பரகத் இருக்கின்றது.

🔑 *தொழுகையை நிலைநாட்டல்*

தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுதல். அல்லாஹ் தஆலா கூறுகின்றான்: "மேலும் நீர் உம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கொண்டு ஏவுவீராக! நீரும் அதன் மீது (பொறுமையுடன்) நிலைத்திருப்பீராக. நாம் உம்மிடம் உணவைக் கேட்கவில்லை. உமக்கு  நாமே உணவளிக்கின்றோம். மேலும் நல்ல முடிவு பயபக்திக்கே உரியதாகும்". (20:132)

🔑 *அல்லாஹ் மீதான உண்மையான தவக்குல்*

ஒரு ஹதீஸில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "நீங்கள் அல்லாஹ் மீது உண்மையான தவக்குல் வைப்பீர்களானால் பறவைகளுக்கு உணவளிப்பது போல் அவன் உங்களுக்கு உணவளிப்பான். அவை வெறும் வயிற்றோடு (கூட்டை விட்டு) வெளியேறுகின்றன. பின்னர் வயிறு நிரம்பியவையாக (கூட்டை) அடைகின்றன"

🔑 *தொடர்ந்தேர்ச்சையாக பாவமன்னிப்புக் கோறல்*

பாவமன்னிப்பு என்பது வாழவாதாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான ஓர் அடிப்படையாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "யார்  தொடர்ச்சியாகப் பாவமன்னிப்புக் கோறுகின்றாரோ அவருக்கு அல்லாஹ் அனைத்து வகையான கஷ்டங்களிலிருந்தும் மீளக்கூடிய வழியையும், அனைத்துத் துன்பத்திலிருந்தும் விடிவையும்  ஏற்படுத்துகின்றான். எதிர்பாரா விதத்தில் அவருக்கு வாழ்வாதாரங்களையும் வழங்குவான்".

🤲🏻அல்லாஹ் உங்களுக்கும் எமக்கும் (வாழ்வில்) பரகத்தையும் (அவனது) திருப்தியையும் வழங்குவானாக...🤲🏻

Sunday, 12 August 2018

நண்பர்களே உங்களை நம்புங்கள் - வெற்றி நமதே!

*நண்பர்களே உங்களை நம்புங்கள் - வெற்றி நமதே!*


*எல்லாவற்றுக்கும் அடிப்படை தன்னை நம்புதலாகும்.*

*ஒரு வாகனத்தை, ஒரு இரயில் வண்டியை ஏதோ ஒரு இயந்திர சக்தி உந்தி தள்ளி விடுகிறதல்லவா.*

*அது போல  மனித சக்தி நம்மில் நிறைந்திருந்தால்தான் அது முன்னேற்ற பாதையை நோக்கி நம்மை உந்திச் செல்லும்*

*சிறிதளவேணும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது.*

*இயற்கையிலே நாம் நம்மீது நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறோம்.*

*அது போதுமான அளவு இருப்பதில்லை அதை வளர்த்துக் கொள்வதே நம் வளச்சிக்கான சரியான வழியாகும்.*

*சிறிதளவே நம்பிக்கையை வைத்துக்கொண்டு செயலில் இறங்கினால் இறுதியில் சோர்ந்து, துவண்டு போய் விடுவோம். முழுவதுமாக நிரம்பப்பெற்ற நம்பிக்கையே வெற்றியின் உச்சியில் நம்மை கொண்டுசெல்லும்.*

*உங்கள் பலகீனங்களை விட பலத்தை அதிகப்படுத்துங்கள்.*

*சோம்பல்களை விட உற்சாகத்தை அதிகப்படுத்துங்கள்.*

*அறியாமையை விட அறிவை அதிகப்படுத்துங்கள்.*

*எதிர்மறை சிந்தனைகளை விட நேர்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துங்கள்.*

*இப்படி உங்களிடமுள்ள அழிவு சக்திகளை விட ஆக்க சக்திகளை அதிகரிக்கச் செய்யும்போது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.*

*அப்படி ஏற்படும் நம்பிக்கையை குறைக்கவிடாமல் தினந்தோறும் அவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும். நேற்றைவிட இன்று வளர்சியடைந்துள்ளேன், இன்றை விட நாளை வளர்ச்சியடைவேன் என்பதில் உறுதியாயிருங்கள்..*

*தன்னம்பிக்கைக்கும் ஆழ்மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு.*

*ஆழ் மனதின் வல்லமையை தட்டி எழுப்ப நம்பிக்கை தருகின்ற விஷயங்களை, வார்த்தைகளை அதற்கு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.*

*எத்தனை தோல்விகளை நீங்கள் சந்தித்திருந்தாலும் 'வீழ்வது இழிவல்ல வீழ்ந்தே கிடப்பதுதான் இழிவு' எனவே விழித்துக்கொள், வெற்றியை நோக்கி விரைந்திடு சற்றும் தாமதியாதே என்று ஆழ்மனதில் பதித்துக்கொள்ளுங்கள்.*
*உங்கள் லட்சியத்தையும் பெரிதாக வைத்துக்கொள்ளுங்கள்*

*தன்னம்பிக்கை என்னும் உந்து சக்தியை உயர்ந்த குறிக்கோளை நோக்கி வையுங்கள்.*

*இவனா..!*

*இவனுக்கு என்ன தெரியும்,*

*இவனுக்கு ஒன்றுமே தெரியாது,*

*இவனிடம் அப்படி ஒன்றுமில்லை*

*இப்படி உங்களைப் பற்றி பேசுகிறவர்களுக்கு ,*

*நீங்கள் நிரூபிக்க வேண்டியது உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறது என்பதைதான்*.

*நீங்கள் யாராகவும் இருக்கலாம்.*

*தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.*

*உங்கள் ஆர்வத்தை, திறமையை சற்று கண்ணோட்டமிடுங்கள்.*

*அடுத்த கணமே களத்தில் இறங்குங்கள்.*

*எதையாவது சாதியுங்கள்.*

*திரும்பி பார்க்க வேண்டாம்.*

*உங்கள் கண்முன்னே தெரிவதெல்லாம் வெற்றி படிக்கட்டுகளாக இருக்கட்டும்*.

*வெற்றி படிகளில் பயணியுங்கள்*.

*மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணியாகுங்கள்*.

*இனி நாளை காலம் என்றும் நம்மோடுதான்*..

******************************************

Sunday, 5 August 2018

*#பெண் நறுமணத்துடன்* *வெளியேறுதல், இஸ்லாம் கூறும்எச்சரிக்கை!*


*#பெண் நறுமணத்துடன்*
  *வெளியேறுதல், இஸ்லாம் கூறும்எச்சரிக்கை!*
               🍃 🌺 🍃

  👉 #பெண்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது நறுமணம் பூசுவதையும் நறுமணத்துடன் ஆண்களை கடந்து செல்வதையும் #மார்க்கம் தடுக்கிறது.
இப்பழக்கம் இக்காலத்தில் பல்கிப்பெருகியுள்ளது.

🔊 இதனை நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

📚 👉 நபி (ஸல்) அவர்கள் #கூறுகிறார்கள்:
*யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாசனையை பிறர் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தினரை கடந்து சென்றால் நிச்சயமாக அவள் விபச்சாரியாவாள்.*

(அறிவிப்பவர்: மூஸா(ரலி)
நூல்: அஹமத்).

🔥 வாகன ஓட்டுனர், நடத்துனர், கடைக்காரர், பள்ளிக் கூடங்களின் வாயில் காவலர்கள் ஆகியோரின் விஷயத்தில் சில பெண்கள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.
இதனை மார்க்கம் கடுமையாக எச்சரிக்கிறது. நறுமணம் பூசிய பெண் வெளியே செல்ல நினைத்தால் அது பள்ளிவாயிலுக்கு #தொழச் செல்வதானாலும் சரியே கடமையான குளிப்புபோல் குளித்து அவ்வாசனையைப் போக்கி விட்டுத்தான் வெளியே செல்ல வேண்டும்.

📚 👉 நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
*#யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசி,பள்ளிக்கு வந்தால் அவளிடம் நறுமணம் வீசினால் கடமையான குளிப்பு போன்று குளிக்கும் வரை #அவளுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.*

(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: அஹமத்).

👉 எனவே!
பெண்கள்  நறுமணம் போன்றவைகளை பூசிக்கொண்டும்,
மணம் நிறைந்த பூக்களை வைத்துக் கொண்டும் வெளியில் செல்வதை கண்டிப்பாக தவிர்த்து,
இதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்து தடுத்திறுப்பதையும்.் கவணத்தில் கொண்டு செயல்பட வேண்டும் .

┈┉┅━❀• 🌿🌼🌿 •❀━┅┉┈

     بلغوا عني ولو أية     
   *"என்னிலிருந்து ஒரு* *செய்தி கிடைத்தாலும் அதை பிறருக்கு எத்தி வையுங்கள். என*
 *நபி (ஸல்) கூறினார்கள்."*
                    ( நூல்: புகாரி )

 " கடுமையான நோய்கள் அதை மனிதர்கள் தாங்களாகவே வரவழைக்கிறார்கள்..,

⚄ " அந்த நோய்களிலிருந்து நமது நல்ல செயல்கள்மூலமாக நம்மை பாதுகாத்து கொள்ளலாம் ,

⚃ " அதிகமானோர் உணவு உண்ட உடன் தண்ணீர் குடிக்கிறார்கள் அந்த தண்ணியானது ரத்தத்தில் புற்றுநோய் உருவாக காரணமானசெல்களுக்கு ஆக்ஸிஜனாக ஆகிவிடைகிறது .

⚂" நபிகள்நாயகம் (ஸல்)கூறினார்கள் :-
" சாப்பிடும்முன் தண்ணீர் குடிப்பது ஷிஃபா (நிவாரணம்)ஆகும் .

⚁ "சாப்பாடுக்கு மத்தியில் தண்ணீர் குடிப்பது துஆ ஆகும் ,

⚀ "சாப்பாடுமுடியும்முன் தண்ணீர் குடிப்பது மருந்தாகும்,

⚅ " சாப்பிட்ட உடன் தண்ணீர்குடிப்பது நோய் ஆகும்.

⚄ "மிக நல்லது என்னவென்றால் சாப்பிட்டு சிறிது நேரத்திர்குபின் தண்ணீர் குடிப்பதாகும்..

⚃ " இந்தசெய்தியை உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு பகிருங்கள் .

⚂ " இதை உங்கள் மொபைலில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் (முஸ்லிமான) அனைவருக்கும் பகிரலாமே

⚁ " நோயே அண்டாமல்இருக்க, தினமும் ஒருஆப்பிள் டாக்டரே தேவைஇல்லை.

⚀ தினமும் ஐந்து பாதம் சாப்பிட்டால் கேன்ஸர் வராது.

⚅ "தினமும் ஒரு எழுமிச்சை கொழுப்புசேராது.

⚄ " தினமும்12டம்ளர் தண்ணீர் குடிச்சால் நோ ஸ்கின் பிராப்ளம்.

⚃ "தினமும் 4 பேரித்தம்பழம் சாப்பிடுங்க நோ வீக்னஸ்.

⚂ " தினமும்1கிளாஸ் பால்குடிங்க எலும்பு பிரச்சனை இராது.

⚁ " தினமும் 5வேளை தொழுகை ,நோ டென்ஷன்.

⚀ " அர்தத்துடன் தினம்சிறிதுநேரம்குர்ஆன் ஓதினால் மனசு.நிம்மதிக்கு மேல் நிம்மதி அடையும்.,

⚅ " ஸ்கின்னுக்கு உளூவின்தண்ணீர்.,

⚄ " மன அமைதிக்கு குர்ஆன் ஓதுதல்,

⚃ " உடல் ஆரோக்யத்திற்கு தொழுகை,

⚂ " சந்தோஷத்திர்கு திக்ர்.,

⚁ " நல்ல விஷயங்கள் தர்மமாகும்.,

⚀ " நன்மைகள் அதிகம் எழுதப்படும் மறுமையில் ஒவ்வொரு நன்மைக்காகவும் மனிதன் ஏங்கி அலைபாயுவான்,

⚅ " அப்போது இந்தநன்மைகள் நம்மை "இன்ஷா அல்லாஹ் " வந்தடையும்...!

இன்ஷா அல்லாஹ்!