*வீடுகளில் பரகத் ஏற்படுவதற்கான வழிமுறைகள்*
🔖பரகத் (அபிவிருத்தி) என்பது நாம் அடிக்கடி செவிமடுக்கும் ஒரு சொற்பதம் ஆகும். ஆனால் எமது வீடுகளில் நாம் அதனை இழந்துள்ளோம். எமக்கு நேரத்தில், வாழ்வாதாரத்தில், செல்வத்தில், குழந்தைகளில் பரகத் இல்லை என்பதே கவலைக்குரிய விடயம்.
🤔அவ்வாறாயின், பரகத்துக்கான திறவுகோள்கள் யாவை?
🔖 **பரகத்தை ஏற்படுத்தக் கூடிய எட்டு வகையான திறவுகோள்கள் காணப்படுகின்றன.*
*
அவை,
🔑 *சங்கை மிக்க அல்குர்ஆனை ஓதுதல்*
அல்லாஹ் கூறுகின்றான் " பரகத் செய்யப்பட்ட இந்த வேதத்தை நாமே இறக்கி வைத்தோம்". (6:155)
அல்லாஹ் அல்குர்ஆனை, அதனை ஆராய்வதனூடாகவும் அன்றாட வாழ்வில் அதன் போதனைகளை நடைமுறைப்படுத்துவதனூடாகவும் பாக்கியம் நிறைந்ததாக ஆக்கியுள்ளான். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் அல்குர்ஆன் ஓதப்படுகின்ற வீட்டைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்: "(அவ் வீட்டில்) மலக்குமார்கள் குடியிருப்பர். ஷைத்தான்கள் வெளியேறிவிடும். குடும்பத்தில் அபிவிருத்தி ஏற்படும். நன்மைகள் அதிகரிக்கும்".
🔑 *பிஸ்மி கூறலும், அல்லாஹ்வை நினைவுபடுத்தலும்* .
ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு மனிதர் தனது வீட்டினுள் நுழைகின்ற போதும், உணவு உட்கொள்கின்ற போதும் அல்லாஹ்வை நினைவு கூறுகின்றார். அப்போது ஷைத்தான் தனது தோழர்களைப் பார்த்து 'இங்கு (எமக்கு) தங்குமிடமும் இல்லை. உணவும் இல்லை' எனக் கூறுவான்.
🔑 *தர்மம்*
வீட்டினுள் பரகத் ஏற்படுவதற்கான பிறிதொரு வழிமுறையாக தர்மம் செய்தல் காணப்படுகின்றது. (அதிலும்) குறிப்பாக இரகசியமாக வழங்கப்படும் தர்மம். ஏனெனில் அது இரட்சகனின் கோபத்தை தனித்து விடும்.
🔑 *குடும்ப உறவுகளைப் பேணுதல்*
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: "நிச்சயமாக குடும்ப உறவுகளைப் பேணுவதும் நன்னடத்தையும் நல்ல நட்பும் வாழ்வாதாரத்தை விருத்தி செய்து, வாழ்நாட்களையும் அதிகரிக்கின்றது."
🔑 *தொழிலுக்காக அதிகாலையிலே புறப்பட்டுச் செல்லுதல்*
ஒரு ஹதீஸில் "எனது சமூகத்திற்கு அதன் அதிகாலைப் பொழுதுகளில் பரகத் செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அதிகாலைப் பொழுதில் வாழ்வாதாரத்தைத் தேடிச் செல்வதில் பரகத் இருக்கின்றது.
🔑 *தொழுகையை நிலைநாட்டல்*
தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுதல். அல்லாஹ் தஆலா கூறுகின்றான்: "மேலும் நீர் உம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கொண்டு ஏவுவீராக! நீரும் அதன் மீது (பொறுமையுடன்) நிலைத்திருப்பீராக. நாம் உம்மிடம் உணவைக் கேட்கவில்லை. உமக்கு நாமே உணவளிக்கின்றோம். மேலும் நல்ல முடிவு பயபக்திக்கே உரியதாகும்". (20:132)
🔑 *அல்லாஹ் மீதான உண்மையான தவக்குல்*
ஒரு ஹதீஸில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "நீங்கள் அல்லாஹ் மீது உண்மையான தவக்குல் வைப்பீர்களானால் பறவைகளுக்கு உணவளிப்பது போல் அவன் உங்களுக்கு உணவளிப்பான். அவை வெறும் வயிற்றோடு (கூட்டை விட்டு) வெளியேறுகின்றன. பின்னர் வயிறு நிரம்பியவையாக (கூட்டை) அடைகின்றன"
🔑 *தொடர்ந்தேர்ச்சையாக பாவமன்னிப்புக் கோறல்*
பாவமன்னிப்பு என்பது வாழவாதாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான ஓர் அடிப்படையாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "யார் தொடர்ச்சியாகப் பாவமன்னிப்புக் கோறுகின்றாரோ அவருக்கு அல்லாஹ் அனைத்து வகையான கஷ்டங்களிலிருந்தும் மீளக்கூடிய வழியையும், அனைத்துத் துன்பத்திலிருந்தும் விடிவையும் ஏற்படுத்துகின்றான். எதிர்பாரா விதத்தில் அவருக்கு வாழ்வாதாரங்களையும் வழங்குவான்".
🤲🏻அல்லாஹ் உங்களுக்கும் எமக்கும் (வாழ்வில்) பரகத்தையும் (அவனது) திருப்தியையும் வழங்குவானாக...🤲🏻

No comments:
Post a Comment