Tuesday, 18 September 2018

ஸாலிஹான_மனைவி

💐🌷🌻#ஸாலிஹான_மனைவி🌷💐

💁💁💁👉🏻👉🏻👇👇 #ஸாலிஹான_மனைவியின்_அடையாளங்கள்!!

😍தீனுடைய விஷயத்தில் கணவருக்கு உதவி செய்வாள்!!

😍 கணவன் மனைவியை பார்த்தால் அவளுடைய குணங்களால் பார்வையால் சந்தோஷப்படுவார்!!

😍 கணவனுக்கு கட்டுப்படுவாள்!!

😍 தனது மானத்தையும், மரியாதையும் , கணவருடைய பொருள்களையும் பாதுகாப்பாள்!!

😍 அல்லாஹ்வை புகழ்ந்த வண்ணமாக சமைப்பாள்!!

😍 வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்வாள்!!

😍 மற்ற பெண்களை பற்றி (நல்லதும், கெட்டதும்) கணவரிடம் சொல்லமாட்டாள்!!

😍 கணவரை வீட்டின் வாசல் வரை வந்து (பர்தாவுடன், துஆவுடன் வழியனுப்புவாள்)!!

😍 கணவர் வீட்டிற்கு வருவதற்கு முன் தன்னையும், வீட்டையும் சுத்தமாக வைத்திருப்பாள்!!

😍 உறவினர் வீட்டிற்கும், மற்ற வெளி இடங்களுக்கு செல்லுகையில் பர்தாவை பேணுவாள்!!

😍 நல்ல விஷயங்களை செய்வதற்கு முன் சதக்கா கொடுப்பதற்கு கணவருக்கு ஆர்வமூட்டுவாள்!!

😍 வீட்டில் தொழுகைக்காக ஒரு இடத்தை ஒதுக்கிவைப்பாள்!!

😍 கணவருடய பார்வையில் தனது மதிப்பை தாழ்த்தி விடமாட்டாள்!!

😍 குழந்தைகளின் விஷயத்தில் ஒவ்வொன்றையும் கணவரிடம் ஆலோசனை செய்வாள்!!

😍 கணவருடய தேவையை பூர்த்தி செய்வதில் தாமதிக்கமாட்டாள்!!

😍 கணவரின் கஷ்டமான நேரத்தில் ஆறுதலாக இருப்பாள்!!

😍தன்னுடய தப்பை ஓப்புக்கொள்வாள்!!

😍 கணவருடய உறவினர் இடத்தில் நல்ல முறையில் நடந்துகொள்வாள்!!

😍 அல்லாஹ்வுக்கு மாற்றமான விஷயத்தில் யாருக்கும் கட்டுப்படமாட்டாள்!!

😍 கணவரை கண்ணியமான வார்த்தைகளை கொண்டு அழைப்பாள்!!

😍 எந்த கஷ்டத்திலும், சிரமத்திலும் அல்லாஹ்வுக்காக பொறுமையாக இருப்பாள்!!

😍 போதும் என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்துவாள்!!

😍 ஒவ்வொரு நிலையிலும் கணவருக்கு உதவியாக இருப்பாள்!!

😍 கணவர் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து நடப்பாள்!!

😍 எப்போதும் முகம் சுழிக்கமாட்டாள்!!

😍 கணவர் எந்த பொருளை (மட்டமானதும்) கொடுத்தாலும் அதை மதிப்பாள்!!

😍கணவனின் முன்னால் எப்போதும்  சுத்தமாக இருப்பாள்!!

😍 கணவரை தீனுடையவிஷயத்தில் ஆர்வமூட்டுவாள்!!

😍 கணவரிடத்தில் மட்டும் தன்னை அலங்கரித்துகொள்வாள்!!

😍 கணவருடய குறைகளை பார்க்காமல் நிறைகளை மட்டுமே பேசுவாள்!!

😍 கணவரின் உத்தரவு இல்லாமல் எங்கும் செல்லமாட்டாள்!!

😍 கணவரின் வருமானத்திற்கு ஏற்ற படி தனது வாழ்கையை சிக்கனமான முறையில் நடத்துவாள்!!

😍 எப்பொழுதும் தன்னுடய குணத்தாலும் உடல் மற்றும் உடையில் சுத்தமாக இருப்பாள்!!

😍 கணவரை விட எவ்வகையிலும் தன்னை சிறப்பாக , உயர்வாக நினைக்கமாட்டாள்!!

😍 கெட்ட நடத்தை உள்ள பெண்களிடம் எந்த தொடர்பும் வைத்துகொள்ளமாட்டாள்!!

😍 இல்லம் எப்பொழுதும் சந்தோஷத்துடன் இருக்கவேண்டும் என்று நினைப்பாள்!!

😍 கணவரை தவிர அந்நிய ஆணுடன் குழைந்து பேச வெட்கப்படுவாள்!!

💐#ஸாலிஹான_மனைவியைப்_பற்றிய_ஹதீஸ்கள்💐 :

🌹 உலகம் , நற்பலனை அடைவதற்கான ஒரு சாதனமாயிருக்கிறது. அந்த நற்பலன், நல்ல குணவதியான மனைவியைக் கொண்டு தான் கிடைக்கும். (நூல்: முஸ்லிம் , நசயீ)

🌹நல்ல பொக்கிஷம் நற்செயல்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த பொழுது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ''எல்லாவற்றையும் விட ஒரு நல்ல பொக்கிஷம் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க வேண்டாமா? என்று கேட்டுவிட்டு, ''அதுதான் நல்ல மனைவி அவளுடைய கணவன் அவள் பக்கம் பார்க்கும் பொழுது, அவள் அவனைச் சந்தோஷப்படுத்துகிறாள், அவன் என்ன வேலை சொன்னாலும் உடனே அதனைச் செய்து முடிக்கிறாள், அவன் வெளியில் சென்றிருக்கும் பொழுது, அவள் அவனுடைய வீட்டையும், தன்னையும் பாதுகாத்துக் கொள்கிறாள்,'' என்று கூறினார்கள். (நூல் அபூதாவூத்)

🌹ஒரு பெண்ணை, அவளது நான்கு வகையான காரணங்களுக்காகத் திருமணம் செய்யப்படுகிறது.
1. அவளுடைய செல்வம் ,,
2. அவளது குடும்பம் அல்லது தகுதி.
3. அவளுடைய அழகு,
4. அவளது மார்க்கப் பேணுதல்.

🌷எனவே மார்க்கப் பேணுதலுள்ள பெண்ணை மணமுடித்துக் கொள்ளவும். [இல்லாவிடில்] உன் கரங்களில் மண்தான்! என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் புகாரீ, முஸ்லிம், நசயீ , அபூதாவூத்)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

#இன்ஷா_அல்லாஹ்.....

#ஸாலிஹான_மனைவியாக_இறுதிவரை_வாழ_இறைவனிடத்தில்_துஆ_செய்யுங்கள்

No comments:

Post a Comment