Friday, 30 November 2018

*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

Dr.NK.Gobinath B.S.M.S
     (CENCER SPECIALIST)
       9444522298,
        9445226034.

*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்*
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*

உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*

*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*💎சித்தம் தெளிய வில்வம்*💚
*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚

*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*💚

*🎀நலம் உடன் வாழ்வோம்...

💎💎💎💎💎💎💎
ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க எல்லோருக்கும் பயன்படட்டும்

அன்பு மனைவிகளுக்கு !* *அருமையான உபதேசங்கள்!!*

🍇🍇🍇🍇🍇🍇🍇


*அன்பு மனைவிகளுக்கு !*
*அருமையான உபதேசங்கள்!!*



*1. நீங்கள் தான் உங்கள் வீட்டின் வாசனை. கணவன் வீட்டினுள் நுழைந்த உடன் நீங்கள்தான் முதல் வாசனை என்பதை கணவருக்கு உணரச் செய்யுங்கள். நல்ல மணமுடன் எப்போதும் இருங்கள்.*

*2. கணவன் ஓய்வு எடுக்க கூடிய இடங்களை தயார் செய்து வையுங்கள். எப்பொழுதும் அழகிய தோற்றத்தில் சுறுசுறுப்பானவராக செயல்படுங்கள்.*

*3. கணவனுடனான தொடர்ச்சியான கலந்துரையாடலை பேணிக்கொள்ளுங்கள். வாதாட்டம், தங்களது கருத்தில் பிடிவாதம் போன்றவற்றை தவிர்த்து கொள்ளுங்கள்.*

*4. உங்களுக்கு ஷரிஅத் விதித்துள்ள பொறுப்புகளை விளங்கி கொள்ளுங்கள். பெண்களுக்கு இயல்பாக இருக்க கூடிய விடயங்களை ஷரீஅத் தங்களுக்கு வழங்கியுள்ளது.*

*5. உங்கள் சத்தத்தை அவருக்கு முன் உயர்த்தாதீர்கள். குறிப்பாக கணவன் இருக்கும் பொழுது.*

*6. நீங்கள் இருவரும் "கியாமுல் லைல்" போன்ற பின்னிரவுத் தொழுகைகளை ஒன்றாக நிறைவேற்றுவதில் கவனமாக இருங்கள். ஏனெனில், அது உங்கள் இருவருக்கும் இடையில் சந்தோஷத்தையும், அன்பையும், ஒளியையும் ஏற்படுத்துகின்றது.*

*7. கணவன் கோபத்திலிருக்கும் போது, நீங்கள் அமைதியாக இருங்கள். கணவனின் திருப்தியின்றி, இரவில் உறங்க செல்ல வேண்டாம்.*

*8. கணவன் ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் உதவி செய்யுங்கள். அவருக்கு பொருத்தமான ஆடைகளை தேர்ந்தெடுத்து வழங்குங்கள்.*

*9. கணவனின் தேவைகளை விளங்கி கொள்வதற்கும், அவருடன் அழகிய முறையில் பழகுவதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள்.*

*10. உங்களுடைய தோற்றத்திலும் உடையிலும் கவனம் செலுத்துங்கள்.*

*11. உங்களுடைய கணவன் தனது அன்பை, விருப்பத்தை வெளிப்படுத்தும் வரை காத்து கொண்டிருக்காதீர்கள்.*

*12. ஒவ்வொரு இரவிலும் கணவனுக்கு புதுமண பெண்ணை போல தயாராகி தோற்றமளியுங்கள். கணவனை முந்தி நீங்கள் உறங்க செல்ல வேண்டாம்.*

*13. கணவன் அழகிய முறையில் உங்களை எதிர் கொள்வார் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில், அவர் பல வேலைப்பளுக்களில் ஈடுபட்டவராக இருப்பார்.*

*14. எப்போதும் புன்னகையுடனும், அன்பை வெளிப்படுத்தும் உணர்வுகளுடனும் கணவன் பயணித்திலிருந்து திரும்பும் போது வரவேற்பளியுங்கள்.*

*15. கணவனின் திருப்தி அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறுவதற்கு முக்கியமானது என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். எப்போதும் தோற்றத்திலும், வார்த்தையிலும் அவரை வரவேற்கும் போது புதிய விடயங்களை செய்யுங்கள்.*

*16. ஏதாவது ஒரு விடயத்தை கணவன் கேட்கும் போது மறுக்கவோ அல்லது தாமதிக்கவோ வேண்டாம். மாறாக, உற்சாகத்துடன் விரைவாக அதனை நிறைவேற்றுங்கள்.*

*17. வீட்டில் உள்ள பொருட்களை கணவன் பயணத்திலிருந்து திரும்பும் போது புதிய முறையில் ஒழுங்குபடுத்துங்கள். அதனை கணவனின் மகிழ்ச்சிக்காக செய்கின்றீர்கள் என்பதை உணர்த்துங்கள்.*

*18. வீட்டை அழகிய முறையில் நிர்வகிப்பதற்கும், நேரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், முதன்மைபடுத்த வேண்டிய விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.*

*19. பெண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய திறமைகளை(உதாரணம்: சமையல்) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், அவை உங்களது வீட்டிற்கும், உங்கள் தஃவாவிற்கும் அவசியமானவையாகும்.*

*20. கணவன் வீட்டுக்கு கொண்டுவரும் எந்தவொரு பொருளாக இருந்தாலும் அவற்றை இன்முகத்தோடு பெற்று கொள்ளுங்கள். அதற்காக நன்றி செலுத்துங்கள்.*

*21. வீட்டை சுத்தமாக வைப்பதிலும், ஒழுங்காக வைப்பதிலும் பேணுதலாக இருங்கள். சில வேலை கணவன் அதனை உங்களிடம் எதிர்பார்க்காத போதும் கூட.*

*22. எப்போதும் திருப்திப்படுபவராக இருங்கள். வீண் விரயங்களை விட்டும் தவிர்த்திடுங்கள். வரவுக்கு மேலதிக செலவுகளை ஏற்படுத்தாதீர்கள்.*

*23. குடும்ப ஒன்று கூடல்களை பொருத்தமான நேரத்தில் ஏற்பாடு செய்யுங்கள்.*

*24. கணவன் நீண்டதொரு இடைவெளியின் பின்னர் வீட்டுக்கு வரும் போது, அவரிடம் முறைப்பாடுகளை வேதனைகளை முன் வைக்காதீர்கள்.*

*25. குழந்தைகள் கணவனை வரவேற்கும் வகையில் தயார்படுத்தி வையுங்கள்.*

*26. குழந்தைகளை பற்றி கணவன் வீடு திரும்பியவுடன் அல்லது தூங்கி எழுந்தவுடன் அல்லது உணவு சாப்பிடும் போது முறையிடாதீர்கள்.*

*27. கணவன் குழந்தைகளுடன் உரையாடும் போது அல்லது ஏதாவது ஒரு விடயத்திற்காக தண்டிக்கும் போது நீங்கள் தலையிட வேண்டாம்.*

*28. குழந்தைகளுக்கும் தந்தைக்கும் இடையில் சிறந்த தொடர்பை பேணிக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.*

*29. நீங்கள் எவ்வளவு தான் வேலை பளுவுடன் இருந்தாலும், குழந்தைகளை பராமரிப்பதில் பொடுபோக்காக இருப்பதில்லை என்பதை உணர செய்யுங்கள்.*

*30. குழந்தைகளுக்கு ஓய்வு கிடைக்கும் போது அவர்களது திறமைகளை வளர்ப்பதிலும்,  அவர்களுக்கு அவசியமான விடயங்களை கற்று கொடுப்பதிலும் அதிக கவனம் செலுத்துங்கள்.*

*31. நீங்கள் தொழுகையை பேணி கொள்ளுங்கள். கணவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் தொழுகையை பேண சொல்லி, அன்பு கட்டளையிடுங்கள்.*

*32. சிறு குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு தேவையான விடயங்களை செய்யுங்கள்.*

*33. குழந்தைகள் மீதும் கணவர் மீதும் உள்ள உங்கள் கடமைகளுக்கு இடையில் நடுநிலைமையை பேணுங்கள்.*

*34. கணவனின் பெற்றோருக்கு கண்ணியம் செலுத்துங்கள். அவரையும் அவரது பெற்றோரையும் பிரிக்கும் செயலில் ஈடுபடாதீர்கள்.*

*35. கணவனின் குடும்பத்தினரை அன்புடனும், கண்ணியத்துடனும் நடத்துங்கள். அவர்களுக்கு பொருத்தமான சந்தர்ப்பங்களில் பரிசு பொருட்களை வழங்குங்கள்.*

*36. கணவனின் விருந்தினர்களை கவனிப்பதில் அக்கறை செலுத்துங்கள். திடீரென்று அவர்கள் வந்தாலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்.*

*37. கணவனின் உபகரணங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.*

*38. எப்போதும் எந்தவொரு விருந்தாளியையும் அழைத்து வரும் நிலையில் நல்ல முறையில் உபசரித்துக் கொள்ளுங்கள்.*

*39. கணவன் தாமதமாக வரும் போது, அவரை கடிந்து கொள்ளாதீர்கள். மாறாக, அவரை எதிர்பார்த்து இருந்ததை நளினத்துடன் உணர செய்யுங்கள்.*

*40. வீட்டின் ரகசியங்களை பேணி பாதுகாத்து கொள்ளுங்கள்.*

*இவை ஒரு மனைவி கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள் மட்டுமே. ஆனால், மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது.*
♦♦♦♦♦♦♦

*எப்போதும் நாம் அல்லாஹ்வின் திருப்தியின் பால் தேவையுடையவர்களாக இருக்கின்றோம். அதனை ஒரு போதும் மறந்துவிட கூடாது.*

_*அல்லாஹ் நம் பெண்கள் அனைவரையும் விவாகரத்து என்னும் கொடிய விடயத்திலிருந்து பாதுகாப்பானாக..!*

*_குறிப்பு_*: *இச்செய்தியை தங்களது குடும்பத்தில் மற்றும் நட்பு வட்டத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பகிரவும். ஏதேனும் ஒரு பெண் இச்செய்திகளை தனது வாழ்க்கையில் பேணி நடந்து, இறைவனின் பொருத்தத்தை பெற்றுக்கொண்டால், அதில் நமக்கும் நன்மை கிடைக்கும்.

Thursday, 29 November 2018

பொது அறிவு சம்பந்தமான கேள்விகளும், அதற்கான பதில்களும்.



❇ *பொது அறிவு சம்பந்தமான கேள்விகளும், அதற்கான பதில்களும்.

*1. ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?*

_வோலடைல்._

*2.தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?*

_கங்காரு எலி._

*3.ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?*

_ஏழு._

*4.பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?*

_330._

*5.தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது?*

_மக்ரானா._

*6.பனிக்கட்டிகளின் மேல் வளரும் செடிகளின் பெயர் என்ன?*

_க்ரயோ பைட்ஸ்_

*7.டயாலிஸிஸ் இயந்திரத்தைக் கண்டறிந்தவர் யார்?*

_வில்லியம் கோல்ப்_

*8.உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?*

_நெதர்லாந்து._

*9.கடற்கரை மணலைச் சுத்தம் செய்யும் கருவியின் பெயர் என்ன?*

_பீச் கோம்பர்._

*10.நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன?*

_ஆறு தசைகள்._

*11.அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?*

_பிப்ரவரி 28._

*12.நாய்களே இல்லாத ஊர் எது?*

_சிங்கப்பூர்._

*13.மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?*

_ஆன் ட் ரோ •போபியா._

*14.எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?*

_ஹீலியம்._

*15.உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது?*

_தாலின் - இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது._

*16.வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?*

_ஆறு மூலைகள்._

*17.சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன?*

_சிரிக்க - 17 தசைகள் உம் - 43 தசைகள்_

*18.மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது. அதுபோல மாட்டை அடையாளம் காண பயன்படுவது எது?*

_மூக்கு ரேகை._

*19.கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?*

_வவ்வால். (வௌவால்)_

*20.ருத்ராட்சம் எத்தனை வகைப்படும்?*

_38 வகைகள்._

*21.விமானத் தபால்தலைகள் வெளியிட்ட முதல்நாடு எது?*

_பாரதம் 1929._

*22.உலகிலேயே பத்திரிகைகளுக்கு அதிக நேரம் பேட்டியளித்த பிரதமர் யார்?*

_திரு. வி.பி.சிங். இவர் பதவியேற்ற இரண்டாவது சந்திப்பில் 800 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு டெல்லி ஸ்ரீபோர்ட் ஆடிட்டோரியத்தில் 2 மணி நேரம்வரை பதில் அளித்து உலக சாதனை புரிந்தார்._

*23.உலகின் மிகச் சிறிய சந்து எது?*

_புனித ஜான் சந்து. ரோமில் உள்ளது. 48 செ.மீ. அகலம்._

*24.உலகிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் உள்ள நாடு எது?*

_ஸ்வீடன்._

*25.இந்திய விமானப்படையின் வாசகம் எது?*

_Touch of the glory._

Wednesday, 28 November 2018

❇ *பொது அறிவு சம்பந்தமான கேள்விகளும், அதற்கான பதில்களும்.*



❇ *பொது அறிவு சம்பந்தமான கேள்விகளும், அதற்கான பதில்களும்.*


1. ‘உள்ளாட்சியின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?

2. தேசிய இயற்பியல் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

3. போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் யார்?

4. சாக்பீஸ் எந்த வேதிப்பொருளால் ஆனது?

5. பிராண வாயு சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் இந்தியர் யார்?

6. பீனியல் சுரப்பி எங்கு அமைந்துள்ளது?

7. அமெரிக்க டாலர் நோட்டின் பெயர் என்ன?

8. தேசிய காவலர் பயிற்சி அகாடமி எங்குள்ளது?

9. மலைப்பகுதியில் நெல் சாகுபடிக்கு புகழ்பெற்ற இடம் எது?

10. முதன்முறையாக தமிழை ஆட்சிமொழியாக அறிவித்த வெளிநாடு எது?

11. மழையின் அளவை கணக்கிட உதவும் கருவி எது?

12. பென்சில் செய்ய உதவும் மரம் எது?

13. மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு எது?

14. இந்தியாவில் உப்புச்சுரங்கம் எங்குள்ளது?

15. முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது?

*விடைகள் :*

1. ரிப்பன் பிரபு, 2. புதுடெல்லி, 3. ஜோனாஸ் சால்க், 4. கால்சியம் கார்பனேட், 5. புதோர்ஜி, 6. மூளையில், 7. கிரீன்பேக், 8. ஐதராபாத், 9. கொல்லிமலை,10.சிங்கப்பூர், 11. ரெயின் கேஜ், 12. கோனிபெரஸ், 13. அயர்லாந்து, 14. பஞ்சாப், 15. அனிச்சம்.

*பூமான் நபிகள் சொன்ன* *பொருளாதாரத் திட்டம்*

☄☄☄☄🌈☄☄☄☄

*பூமான் நபிகள் சொன்ன*
 *பொருளாதாரத் திட்டம்*

☄☄☄☄🌈☄☄☄☄




திருத் தூதர் வழிகாட்டிய ஏழ்மையும், வறுமையும் என்பது, நம்மை நாமே வதைத்துக் கொள்ளும் ஒரு வகை சுயவதை அல்ல. மாறாக, இருப்பதை இல்லாத மக்களுக்கு பகிர்ந்தளித்து விட்டு அடுத்த நாளைக்கு படைத்தவனை நம்பி உறங்கச் செல்லும் உத்தமப் பண்பு அது.

காரணம், இந்த உலகத்தில் உள்ள எந்தப் பொருளும் நாம் படைத்தது அல்ல. இவை அனைத்துமே வல்ல இறைவன் படைத்த பொருட்கள் தான். வல்ல இறைவன் படைத்த பொருள்களின் மீது நமது உழைப்பைச் செலுத்தி, நாம் அதை இன்னொரு பொருளாக மாற்றுகிறோம். எனவே, இங்கு மூலப் பொருள் என்பது இறைவன் தந்ததுதான். ஏன் ? அதன் மீது நாம் செலுத்தும் உழைப்பும் கூட இறைவன் தந்த சக்தியின் புற வடிவம் தான் .

அப்படி இருக்க,
இங்கு பொருளும் நம்முடையதல்ல. உழைப்பும் நம்முடையதல்ல.
ஏன்? நாமே கூட நம்முடையதல்ல.

இந்த சூழலில், 
நான் உழைத்தேன், நான் உருவாக்கினேன்,  நான் சேர்த்து வைக்கிறேன் என்பதெல்லாம் ஒரு எல்லைக்கு வெளியே நின்று பார்க்கும் போது இவை அத்தனையுமே கேலிக் குறியதாகி விடும். இப்படிப் பார்க்க நமக்கு ஒரு வகை மனப் பக்குவம் வேண்டும்.

இதை உணர்ந்த மேன் மக்கள் தான் , அன்றைய உழைப்பை அன்றே தானம் செய்து விட்டு அடுத்த வேளைக்கு ஆண்டவனிடம் போய் நிற்பார்கள்.

அதற்காக, வணிகம் செய்து செல்வம் சேர்ப்பதை கூடாத செயலாகப் பார்க்க கூடாது. இந்த உலகம் என்னும் வர்த்தக உருண்டையை சுழலச் செய்வதே இந்த வணிக செயல்பாடுகள் தான்.
எனவே, சக்தி உள்ளவரை வணிகத்தை மேன்மைப் படுத்தி, அதன் மூலம் வருகின்ற  செல்வத்தை மலையளவு சேர்த்து வை. இந்தப்
பரந்த பூமிப் பரப்பில் பயணம் செய்து உன் செல்வாக்கை நிலை நாட்டு.ஆனால், அந்த செல்வத்தை செயல் இழக்கும் வகையில் கொண்டு போய்  dead investment- ஆக முடக்கி  வைத்து விட வேண்டாம். அதனை தொடர்ச்சியான பொருளாதார மாற்றத்திற்கு உட்படுத்து. ஒரு மிகப் பெரிய பொருளாதார சுழற்ச்சியை உன்னைச் சுற்றி உருவாக்கி அதன் மையப் பகுதியில் நின்று கொள்.
இப்பொழுது தான் உன் உழைப்பும், உன் செல்வமும் உன் கண்களுக்கு பேரழகாகத் தெரியும். அதன் ஒளித் திவலைகள் எல்லாம் உனக்கு மறுமைக்கான வீதி விளக்குகளாக மாறும். இதுதான் இம்மையை வளப்படுத்தி அதன் வழியாக மறுமையை வசப்படுத்தும் உயரிய வித்தை.

அதற்கான மூல சூத்திரம் தான் *"ஜக்காத்"* எனும் உயரிய பொருளாதாரத் திட்டம் என்பது. இதன் மூலம் உன்னைச் சுற்றி இயங்கி வரும் சிறு தொழில்களை
( cottage industries ),
புதிய முயற்சிகளை ( start-up )
புதிய காலத் தேவையான கண்டு பிடிப்புகளை ( innovative development) எல்லாம் உன் முதலீட்டைக் கொண்டு உயிர்த்தெழச் செய். அப்பொழுதான் இந்த உயரிய பொருளாதாரத் திட்டம் பொலிவு பெறத் தொடங்கும். இந்த பொருளாதார  திட்டத்தின் தத்துவமே இந்த diversification- தான்.  அதுவரையிலும், இது வெறும் தர்மக் கணக்காக மட்டுமே நீடிக்கும்.

நம்மில் எத்தனை பேர் இந்த திட்டத்தில் இணைந்து இதனை ஆக்கப்பூர்வமான திட்டமாக மாற்றத் தயாராக உள்ளோம் ?  அல்லது ஏற்கனவே இதில் இணைந்து அதனை ஆக்கபூர்வமாக பயன் படுத்தி வருகிறோம் ?

*சொல்லை விட செயல் அழகானது*

☄☄☄☄🌈☄☄☄☄

Friday, 23 November 2018

இவற்றில் உங்களிடம் எத்தனை செல்வங்கள் இருக்கின்றது என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்

︻︻︻︻︻︻︻︻︻︻︻︻︻︻︻︻
🌙人
    ( ◎ )  _______ 人
  ║∩║____   .-:''''''"''";-.
  ║∩║___ (*(*(*|*)*)*)
  ║∩║_    ⎡⎡⎡⎡⎡⎡⎡⎡⎨⎬⎤⎤⎤⎤⎤⎤⎤⎤
▤▤▤▤.  ⎟⎟⎟⎟⎟⎟⎟⎟⎧▦⎫⎜⎜⎜⎜⎜⎜ ▣▣▣▣▣▣▣▣▣▣▣
⬛⬛⬛⬛⬛⬛⬛⬛□□□□□□□□□□□□
▒▒▒▒▒▒▒▒▒▒▒▒
🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲
  *⚜بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ⚜*
︶︵︶︵︶︵︶︵︶︵︶︵︶︵︶︵

*❀◎•••••••••••🌙•••••••••••◎❀*
_*அஸ்ஸலாமு அலைக்கும்*_
_*வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு*_
|💠♦💠♦💠♦💠♦💠♦💠



இவற்றில் உங்களிடம் எத்தனை செல்வங்கள் இருக்கின்றது என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

இதோ 16 வகையான செல்வங்கள்

1. புகழ் 2. வெற்றி 3. பணம் (பொன்), 4. இரக்கம் 5. அறிவு 6. அழகு 7. கல்வி 8. நோயின்மை 9. வலிமை 10. நல்விதி 11. உணவு 12. நன் மக்கள் 13. பெருமை 14. இனிமை 15. துணிவு 16. நீண்ட ஆயுள்.

16 செல்வங்களைப் பெரும் வழிகள்

1. புகழ்

யாரும் புகழோடு தோன்றுவதில்லை. செய்யும் செயலிலும், நடக்கும் விதங்களிலும், நன்னடத்தை மற்றும் உதவி மனப்பான்மையான குணங்களைப் பொறுத்து தான் புகழ் கிடைக்கும்.

2. வெற்றி

வெற்றி என்பது பிறரை தோற்கடித்து நாம் வெற்றி பெறுவது அல்ல. நம்மை நாமே வெற்றி கொள்வதாகும். இன்றைய நிலையை விட நாளைய நிலைமை உயர்த்துவதற்கு கடின உழைப்பும், விடாமுயற்சியும் மேற்கொள்ளுதல் வேண்டும்.

3. பணம் (பொன்)

செழிப்பான வாழ்க்கைக்குத் தேவையானவைகளில் பணமும், பொன்னும் ஆகும்.அவற்றைப் பெறுவதற்குச் சிறந்த வழிகள் தொழில் செய்வது அல்லது நல்ல வேலைக்குச் சென்று சம்பாதிப்பது.

4. இரக்கம்

இருப்பவர்களுக்கு கொடுக்கிற மனமில்லை. மனமிருப்பவர்களுக்கோ கொடுப்பதற்கு ஏதுமில்லை. இது தான் இன்றைய நிலை. அன்பு காட்டுவது, அரவணைப்பிற்கு கூட பணம் கேட்கும் காலம். இருப்பினும் வெகு சிலர் இரக்கம் காட்டி பல ஏழைகளுக்கு உதவி செய்து இறைவனைப்போல் தரிசனம் தந்து கொண்டிருக்கின்றனர்.

5. அறிவு

கல்வியும், அறிவும் வேறு வேறு என்று உணர வேண்டும். படித்துத் தெரிந்து கொள்வது கல்வி. அறிவோ பார்த்து, கேட்டு, அனுபவப்பட்டு வருவது. அறிவுடையோருக்கு கல்வி குறைவாக இருந்தாலும் எந்த நேரத்தில் என்ன செய்தால் வாழ்க்கை நன்றாக வாழ முடியும் என்பதில் அதிக அறிவு இருக்கும்.

6. அழகு

பார்த்தவுடன் கவருகின்ற தன்மையை அழகு என்று பெரும்பாலோர் எண்ணிக்கொண்டு சற்று கருப்பாக, குண்டாக இருப்பவர்கள் ‘தாங்கள் அழகில்லையே’ என்று தாழ்வு மனப்பான்மையோடு வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்குள் பலவகையான அழகுகள் இருப்பதை தெரிந்துகொண்டால் இந்த மாதிரி தாழ்வுமனப்பான்மை எண்ணங்கள் வரவே வராது.சில வகை அழகுகள் இதோ ! குரல் இனிமை, கவரும் பேச்சு, தாளம் போட வைக்கும் பாட்டு, நளினமான நடனம், உடை அழகு, அறிவு, அன்பு, கருணை காட்டுதல் இன்னும் பல.

7. கல்வி

கல்வி பெரிதாக தேவைபடாவிட்டாலும் அடிப்படை கல்வி மிகமிக அவசியம். அதுவும் படித்து மனப்பாடம் செய்யும் ஏட்டுக் கல்வி வாழ்க்கை வாழ்வதற்கு உதவாது. அதோடு செய்முறை பயிற்சி வளமான துணையோடு கையும் கொடுக்கும். வளமான வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்வது நல்லது.

8. நோயின்மை

நல்ல உணவு, சிந்தனை மற்றும் செயல் நோயற்ற வாழ்வுக்கு ஆணிவேராகும். ‘நோயின்மை’ ஒருவன் வாழ்நாளில் பெற்ற விலைமதிப்பில்லாத பொக்கிசமாகும். எங்கே நோய் இல்லையோ அங்கே மகிழ்ச்சி பொங்கி வழியும்.

9. வலிமை

உடல் வலிமை பெற உடற்பயிற்சியும், மனவலிமை பெற தியானம் மற்றும் தன்னம்பிக்கை வேண்டும். வலிமை பெற அதிக நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. வெறும் 5 முதல் 10 நிமிடங்களே போதுமானது.

10. நல்விதி

நல்ல எண்ணமும், செயலும் நல்விதிக்கு அடிப்படை காரணமாக விளங்குகின்றது.’விதி’ என்பது கஷ்டம் தருவது மட்டுமல்ல. நன்றாக மகிழ்ச்சியோடு இருப்பது கூட விதியாகும். ஆக விதி என்பது உன் கையில் தான் இருக்கின்றது. அதை நமக்கு சாதகமாக ஏற்படுத்திக்கொள்வது நமது புத்திசாலித்தனத்தில் இருக்கின்றது.

11. உணவு

உடை, இருப்பிடம் முக்கியமானதாக இருந்தாலும் வேளா வேளைக்கு நல்ல உணவு உண்ணுவது அவசியம் வேண்டும். உணவு , உடலும் அருவும் வளர்வதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாகும்.

12. நன் மக்கள்

பொதுவாக குழந்தையாக இருக்கும்போது சூது, வாது ஏதும் தெரிவதில்லை.தீ ஜுவாலை கூட கவர்ச்சி மிக்க பொருளாகத் தெரியும். தீ கங்கு கூட சாப்பிடும் பழமாகத் தெரியும். ஆனால் அவர்களை நன்மக்களாக வளர்ப்பது பெற்றோர் கையிலும், சிறந்தவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள் கையிலும் , அவர்களை நன்றாக உபயோகித்துக் கொள்வது மக்கள் கைகளிலும் இருக்கின்றது.

13. பெருமை

பிறர் பெருமைபட வாழ்தல் ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் சாதனையாகும். ஆனால் ‘தற்பெருமை’ என்பது அறவே விரும்பத் தகாததாகும். பெரும்பாலும் தற்பெருமை பேசுபவர்களைச் சுற்றிலும் ஒரு கூட்டம் வெறும் பணத்திற்காகவும், பதவிக்காகவும் வேறு பல எதிர்பார்ப்போடும் இருப்பார்கள். உண்மையான பெருமை என்பது சர்க்கரையைத் தேடி எறும்பு வருவது போல நல்ல செயல்களைச் செய்யும் போது பெருமை தானாக தேடி வரும்.

14. இனிமை

பேச்சில் இனிமை, நன்மைக்களிடம் பழகுவதில் இனிமை, சொற்களில் இனிமை, எழுதுவதில் இனிமை ஆகியவைகள் என்றுமே நன்மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.

15. துணிவு

துணிவு இல்லையேல் வெற்றி இல்லை. திட்டமிடுதல் துணிவுக்கு அடித்தளம். திட்டம் சரியாக இருந்தால் எந்த செயலையும் துணிவோடு செய்யலாம். வெற்றி பெறலாம்.

16. நீண்ட ஆயுள்

மேற்கூறிய எல்லா (15) செல்வங்களை பெற்றுவிட்டால் நீண்ட ஆயுளுக்குத் துணையாய் இருக்கும்.