Friday, 30 November 2018

அன்பு மனைவிகளுக்கு !* *அருமையான உபதேசங்கள்!!*

🍇🍇🍇🍇🍇🍇🍇


*அன்பு மனைவிகளுக்கு !*
*அருமையான உபதேசங்கள்!!*



*1. நீங்கள் தான் உங்கள் வீட்டின் வாசனை. கணவன் வீட்டினுள் நுழைந்த உடன் நீங்கள்தான் முதல் வாசனை என்பதை கணவருக்கு உணரச் செய்யுங்கள். நல்ல மணமுடன் எப்போதும் இருங்கள்.*

*2. கணவன் ஓய்வு எடுக்க கூடிய இடங்களை தயார் செய்து வையுங்கள். எப்பொழுதும் அழகிய தோற்றத்தில் சுறுசுறுப்பானவராக செயல்படுங்கள்.*

*3. கணவனுடனான தொடர்ச்சியான கலந்துரையாடலை பேணிக்கொள்ளுங்கள். வாதாட்டம், தங்களது கருத்தில் பிடிவாதம் போன்றவற்றை தவிர்த்து கொள்ளுங்கள்.*

*4. உங்களுக்கு ஷரிஅத் விதித்துள்ள பொறுப்புகளை விளங்கி கொள்ளுங்கள். பெண்களுக்கு இயல்பாக இருக்க கூடிய விடயங்களை ஷரீஅத் தங்களுக்கு வழங்கியுள்ளது.*

*5. உங்கள் சத்தத்தை அவருக்கு முன் உயர்த்தாதீர்கள். குறிப்பாக கணவன் இருக்கும் பொழுது.*

*6. நீங்கள் இருவரும் "கியாமுல் லைல்" போன்ற பின்னிரவுத் தொழுகைகளை ஒன்றாக நிறைவேற்றுவதில் கவனமாக இருங்கள். ஏனெனில், அது உங்கள் இருவருக்கும் இடையில் சந்தோஷத்தையும், அன்பையும், ஒளியையும் ஏற்படுத்துகின்றது.*

*7. கணவன் கோபத்திலிருக்கும் போது, நீங்கள் அமைதியாக இருங்கள். கணவனின் திருப்தியின்றி, இரவில் உறங்க செல்ல வேண்டாம்.*

*8. கணவன் ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் உதவி செய்யுங்கள். அவருக்கு பொருத்தமான ஆடைகளை தேர்ந்தெடுத்து வழங்குங்கள்.*

*9. கணவனின் தேவைகளை விளங்கி கொள்வதற்கும், அவருடன் அழகிய முறையில் பழகுவதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள்.*

*10. உங்களுடைய தோற்றத்திலும் உடையிலும் கவனம் செலுத்துங்கள்.*

*11. உங்களுடைய கணவன் தனது அன்பை, விருப்பத்தை வெளிப்படுத்தும் வரை காத்து கொண்டிருக்காதீர்கள்.*

*12. ஒவ்வொரு இரவிலும் கணவனுக்கு புதுமண பெண்ணை போல தயாராகி தோற்றமளியுங்கள். கணவனை முந்தி நீங்கள் உறங்க செல்ல வேண்டாம்.*

*13. கணவன் அழகிய முறையில் உங்களை எதிர் கொள்வார் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில், அவர் பல வேலைப்பளுக்களில் ஈடுபட்டவராக இருப்பார்.*

*14. எப்போதும் புன்னகையுடனும், அன்பை வெளிப்படுத்தும் உணர்வுகளுடனும் கணவன் பயணித்திலிருந்து திரும்பும் போது வரவேற்பளியுங்கள்.*

*15. கணவனின் திருப்தி அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறுவதற்கு முக்கியமானது என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். எப்போதும் தோற்றத்திலும், வார்த்தையிலும் அவரை வரவேற்கும் போது புதிய விடயங்களை செய்யுங்கள்.*

*16. ஏதாவது ஒரு விடயத்தை கணவன் கேட்கும் போது மறுக்கவோ அல்லது தாமதிக்கவோ வேண்டாம். மாறாக, உற்சாகத்துடன் விரைவாக அதனை நிறைவேற்றுங்கள்.*

*17. வீட்டில் உள்ள பொருட்களை கணவன் பயணத்திலிருந்து திரும்பும் போது புதிய முறையில் ஒழுங்குபடுத்துங்கள். அதனை கணவனின் மகிழ்ச்சிக்காக செய்கின்றீர்கள் என்பதை உணர்த்துங்கள்.*

*18. வீட்டை அழகிய முறையில் நிர்வகிப்பதற்கும், நேரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், முதன்மைபடுத்த வேண்டிய விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.*

*19. பெண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய திறமைகளை(உதாரணம்: சமையல்) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், அவை உங்களது வீட்டிற்கும், உங்கள் தஃவாவிற்கும் அவசியமானவையாகும்.*

*20. கணவன் வீட்டுக்கு கொண்டுவரும் எந்தவொரு பொருளாக இருந்தாலும் அவற்றை இன்முகத்தோடு பெற்று கொள்ளுங்கள். அதற்காக நன்றி செலுத்துங்கள்.*

*21. வீட்டை சுத்தமாக வைப்பதிலும், ஒழுங்காக வைப்பதிலும் பேணுதலாக இருங்கள். சில வேலை கணவன் அதனை உங்களிடம் எதிர்பார்க்காத போதும் கூட.*

*22. எப்போதும் திருப்திப்படுபவராக இருங்கள். வீண் விரயங்களை விட்டும் தவிர்த்திடுங்கள். வரவுக்கு மேலதிக செலவுகளை ஏற்படுத்தாதீர்கள்.*

*23. குடும்ப ஒன்று கூடல்களை பொருத்தமான நேரத்தில் ஏற்பாடு செய்யுங்கள்.*

*24. கணவன் நீண்டதொரு இடைவெளியின் பின்னர் வீட்டுக்கு வரும் போது, அவரிடம் முறைப்பாடுகளை வேதனைகளை முன் வைக்காதீர்கள்.*

*25. குழந்தைகள் கணவனை வரவேற்கும் வகையில் தயார்படுத்தி வையுங்கள்.*

*26. குழந்தைகளை பற்றி கணவன் வீடு திரும்பியவுடன் அல்லது தூங்கி எழுந்தவுடன் அல்லது உணவு சாப்பிடும் போது முறையிடாதீர்கள்.*

*27. கணவன் குழந்தைகளுடன் உரையாடும் போது அல்லது ஏதாவது ஒரு விடயத்திற்காக தண்டிக்கும் போது நீங்கள் தலையிட வேண்டாம்.*

*28. குழந்தைகளுக்கும் தந்தைக்கும் இடையில் சிறந்த தொடர்பை பேணிக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.*

*29. நீங்கள் எவ்வளவு தான் வேலை பளுவுடன் இருந்தாலும், குழந்தைகளை பராமரிப்பதில் பொடுபோக்காக இருப்பதில்லை என்பதை உணர செய்யுங்கள்.*

*30. குழந்தைகளுக்கு ஓய்வு கிடைக்கும் போது அவர்களது திறமைகளை வளர்ப்பதிலும்,  அவர்களுக்கு அவசியமான விடயங்களை கற்று கொடுப்பதிலும் அதிக கவனம் செலுத்துங்கள்.*

*31. நீங்கள் தொழுகையை பேணி கொள்ளுங்கள். கணவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் தொழுகையை பேண சொல்லி, அன்பு கட்டளையிடுங்கள்.*

*32. சிறு குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு தேவையான விடயங்களை செய்யுங்கள்.*

*33. குழந்தைகள் மீதும் கணவர் மீதும் உள்ள உங்கள் கடமைகளுக்கு இடையில் நடுநிலைமையை பேணுங்கள்.*

*34. கணவனின் பெற்றோருக்கு கண்ணியம் செலுத்துங்கள். அவரையும் அவரது பெற்றோரையும் பிரிக்கும் செயலில் ஈடுபடாதீர்கள்.*

*35. கணவனின் குடும்பத்தினரை அன்புடனும், கண்ணியத்துடனும் நடத்துங்கள். அவர்களுக்கு பொருத்தமான சந்தர்ப்பங்களில் பரிசு பொருட்களை வழங்குங்கள்.*

*36. கணவனின் விருந்தினர்களை கவனிப்பதில் அக்கறை செலுத்துங்கள். திடீரென்று அவர்கள் வந்தாலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்.*

*37. கணவனின் உபகரணங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.*

*38. எப்போதும் எந்தவொரு விருந்தாளியையும் அழைத்து வரும் நிலையில் நல்ல முறையில் உபசரித்துக் கொள்ளுங்கள்.*

*39. கணவன் தாமதமாக வரும் போது, அவரை கடிந்து கொள்ளாதீர்கள். மாறாக, அவரை எதிர்பார்த்து இருந்ததை நளினத்துடன் உணர செய்யுங்கள்.*

*40. வீட்டின் ரகசியங்களை பேணி பாதுகாத்து கொள்ளுங்கள்.*

*இவை ஒரு மனைவி கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள் மட்டுமே. ஆனால், மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது.*
♦♦♦♦♦♦♦

*எப்போதும் நாம் அல்லாஹ்வின் திருப்தியின் பால் தேவையுடையவர்களாக இருக்கின்றோம். அதனை ஒரு போதும் மறந்துவிட கூடாது.*

_*அல்லாஹ் நம் பெண்கள் அனைவரையும் விவாகரத்து என்னும் கொடிய விடயத்திலிருந்து பாதுகாப்பானாக..!*

*_குறிப்பு_*: *இச்செய்தியை தங்களது குடும்பத்தில் மற்றும் நட்பு வட்டத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பகிரவும். ஏதேனும் ஒரு பெண் இச்செய்திகளை தனது வாழ்க்கையில் பேணி நடந்து, இறைவனின் பொருத்தத்தை பெற்றுக்கொண்டால், அதில் நமக்கும் நன்மை கிடைக்கும்.

No comments:

Post a Comment