Saturday, 26 June 2021

மரண இத்தா குறித்த சட்டங்கள்

 மரண இத்தா குறித்த சட்டங்கள்

⚫கணவன் இறந்துவிட்ட பெண், கர்ப்பிணியாக இல்லாவிட்டால் பிறை கணக்குப்படி நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும்.

⚫ கர்ப்பிணியாக இருந்தால் குழந்தைப் பிறக்கின்ற வரை இத்தாவின் காலம் நீடிக்கும்.

⚫ மேலும் கணவன் இறந்த சில வினாடிகளில் குழந்தை பிறந்து விட்டாலும் கூட இத்தா முடிந்துவிடும்.

⚫ இத்தாவில் பிறை கணக்கையே கடைப்பிடிக்க வேண்டும். முதல் பிறை அன்று கணவன் இறந்திருந்தால், பிறை கணக்குப்படி நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும்.மாத இடையில் கணவன் இறந்திருந்தால், மாதம் ஒன்றுக்கு 30 நாட்கள் வீதம் கணக்கிட்டு,130 நாட்கள் இத்தா இருக்க வேண்டும்.

🚫கணவன் இறந்த சில பெண்கள் வெறும் 40 நாட்கள் மட்டுமே இத்தா மேற்கொள்கின்றனர். இது மிகப்பெரிய தவறாகும்.

*மரண இத்தாவில் கடைப்பிடிக்க வேண்டிய அனுஷ்டானங்கள்*

1️⃣ வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும்.

 *சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லலாம்.

  *உணவுக்கே வழி இல்லாத ஏழைப் பெண்ணாக இருப்பின், சம்பாத்தியத்திற்காகப் பகலில் வெளியே சென்று வரலாம். இரவில் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும்.

  *உணவுப் பொருட்களை வாங்கித் தர ஆள் இல்லையெனில், உணவுப் பொருட்களை வாங்கி வர பகலில் வெளியே செல்லலாம்.

2️⃣ தன்னையும் தன்னுடைய ஆடையையும் எந்தவிதத்திலும் அலங்கரித்துக் கொள்ளக்கூடாது.

  *பவுடர் அடித்துக் கொள்வது மேக்கப் செய்வது கூடாது.

3️⃣ தங்க வெள்ளி ஆபரணங்களை அணிவது கூடாது.

*சாதாரண கவரிங் வளையல்களையும் அணியக்கூடாது.

4️⃣ சுர்மா இடுவது கூடாது.

  *கண் வலிக்காக மருத்துவ அடிப்படையில் சுர்மா இடுவது கூடும்.

5️⃣ மேனியிலும் ஆடையிலும் வாசனைப் பூசுவது கூடாது.

*குறிப்பு*கணவனைத் தவிர  தந்தை, மகன், சகோதரர் போன்றவர்கள் மரணித்தால் மூன்று நாட்களுக்கு மேல் துக்க அனுஷ்டானங்களை மேற்கொள்வது கூடாது.

*மரண இத்தாவின் பெண்களுக்கு ஆகுமான காரியங்கள்*

1️⃣ குளிப்பது.

2️⃣ நகம் வெட்டுவது.

3️⃣ அழுக்குகளை நீக்குவது.

4️⃣ சாதாரணமாக தலை வாருவது.

5️⃣ அகற்றவேண்டிய முடிகளைக் களைவது.

6️⃣ வீட்டையும் துணிமணிகளையும் விரிப்புகளையும் சுத்தமாக வைத்துக் கொள்வது.

7️⃣ ஓர் அறையில் தனியாகத் தூங்குவது.

8️⃣ வீட்டிற்குள் இருந்த படி வெளிப் பகுதியையும் வானத்தையும் பார்ப்பது.

9️⃣ மரணித்த கணவரை பார்த்து தரிசிப்பது.

🔟 திருமணம் முடிப்பது ஹராமான தந்தை, மகன், உடன் பிறந்த சகோதரன் இன்னும் மருமகன் ஆகிய ஆண்களைப் பார்ப்பது இன்னும் பேசுவது.

  இவை அனைத்தும் கணவன் மரணித்த இத்தாவில் இருக்கும்  பெண்களுக்கு ஆகுமான காரியங்களாகும்.

*குறிப்பு* இத்தாவின் காலம் - நான்கு மாதம் பத்து நாட்கள் கழிந்து விட்டால் அந்தப் பெண்ணுக்கு மேற்கூறப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்காது.

  எனவே அழகான மங்களகரமான ஆடைகளை அணிவதும், தங்க வெள்ளி ஆபரணங்களை அணிவதும் இனி அந்தப் பெண்மணிக்குக் கூடும்.

  *கணவனை இழந்து வாடும் கைம்பெண்களுக்கு அல்லாஹ் மேலான நற்கூலி களையும் நல்ல பகரத்தையும் வழங்குவானாக!*

🕌 *புரசை ஜூம்ஆ மஸ்ஜித்* இமாம் ஷாஹுல் ஹமீது காஷிஃபி

Monday, 7 June 2021

உத்தம தூதரின் உன்னத வாழ்வை உலகறியச் செய்வோம்!

 இறைவனின் சாந்தியும்

சமாதானமும் உங்கள்  மீதும்


உங்கள்  குடும்பத்தார்  மீதும்

என்றென்றும்  நிலவட்டுமாக

ஆமீன்

❖❑❑❑❑❑❑❑❑❑❑❑❖


*உத்தம தூதரின் உன்னத வாழ்வை உலகறியச் செய்வோம்!*


*ஜாதியை* ஒழித்து காட்டியவர்.


*நிறவெறியை* அழித்து காட்டியவர்.


*இன வெறியை* விரட்டி காட்டியவர்.


*மொழி வெறியை* நீக்கி காட்டியவர். 


*பெண்ணடிமைத்தனத்தை* ஒழித்து கட்டியவர்.


*பெண் சிசுக் கொலையை* தடுத்து காட்டியவர்.


*கடவுளின் பெயரால்* வயிறு வளர்ப்பதை தடுத்து காட்டியவர்.


*தீண்டாமையை* முற்றிலுமாக  ஒழித்து கட்டியவர்.


*அடிமைத்தனத்தை* பிடிங்கி எறிந்தவர்.


*மனிதனை மனிதன்* வஞ்சக புகழ்வதை தடுத்தவர்.


*சிலைகள்* வைக்கும் கலாச்சாரத்திற்கு முற்று புள்ளி வைத்தவர்.


*தனக்கே* ஆனாலும் சிலைவைக்க கூடாது என்று வழிகாட்டியவர்.


*மோசடி* செய்து வாழ்கை நடத்துவர்களை திருத்திகாட்டியவர்.


*விபச்சாத்தை* ஒழித்து காட்டியவர்.


*வட்டியை* அழித்து காட்டியவர்.


*குலதெய்வ,* பலதெய்வ முறையை நீக்கி ஒரு தெய்வ முறையை நிலைநிறுத்தி காட்டியவர்.


*கடவுளுக்கு உயிர்பழி* கொடுக்கும் முறையை மாற்றிகாட்டியவர்.


*துறவறம்* கடவுளின் பெயறால்  செல்வதை தடுத்து காட்டியவர்.


*குடும்பத்தை* கவனிப்பதே கடவுளுக்கு செய்யும் மிக பெறிய தொண்டு என்றவர்.


*ஏற்ற தாழ்வு* கடவுளின் ஆலையத்தில் கிடையாது. யாரும் முதலில் உள்ளே செல்லலாம்  என்றவர்.


*ஏற்ற தாழ்வு* இல்லாமல்

யாரும் கடவுளை தொழுலாம் என்றார்.


*கடவுளின்* ஆலையத்தில் நடத்தப்படும் தீண்டாமையை உடைத்தெறிந்தவர்.


*தீமைகளை* வெறுப்பதே கடவுளின் மீது கொண்டுள்ள அன்பு என்றவர்.


*உள்ளத்தை* கட்டுப்படுத்துவதே மிகப்பெரிய வீரம் என்றவர்.


*குலப்பெருமை* கூடாது என்றவர்.


*மனிதர்கள்* அனைவரும் சமம் என்றவர்.


*நல்ல மனிதனே* உயர்ந்த மனிதன் என்றவர்.


*ஒருவரை ஒருவர்* கொலை செய்வது கடவுளை நம்பாதவர்கள் செய்யும் செயல் என்றவர்.


*ஏற்ற தாழ்வு* பார்க்காமல் அனைவருக்கும் வாழ்த்து சொல்ல சொன்னவர்.


*அரசு பணத்தை* கொள்ளையடிப்பதை தடுத்து காட்டியவர்.


*மன்னராக வாழ்ந்து;* ஏழையாக மரணித்தவர்.


*மன்னராக* இருந்தும்

அரண்மனைகள் வேண்டாம் என்றவர்.


*மன்னராக* இருந்தும் பாதுகாப்புக்கு கூலிப்படைகளை வைத்து கொள்ளாதவர்.


*அரசு* பணத்தை வீன் செய்யாதவர்.


*தன்னுடைய* சொத்துக்களுக்கு மக்களை வாரிசாக்கியவர்.


*தன்* நாட்டு சிறுபான்மை இன மக்களுக்கும்

நீதியை சரியாக வழங்கியவர்.


*ஆன்மீகத்தை* சொல்லி பணம் சம்பாதிக்காதவர்.


*ஆன்மீகத்தை* சொன்னதால் தன் செல்வங்களை இழந்தவர்.


*வியாபாரத்தில்* நடக்கும் மோசடியை ஒழித்து காட்டியவர்.


*இப்படி* எண்ணில் அடங்கா புரட்சிகளுக்கு உண்மையான சொந்தக்காரர்.


யார் இவர்..!!


1400 ஆண்டுகளுக்கு முன்னால் அரபு பாலைவனத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதர் தான் 


முகம்மத் ( ஸல் ) என்ற *மாமனிதர் நபிகள் நாயகம் அவர்கள்.*


MuhammadMercyForMankind

SpreadTeachingsOfProphet

Sunday, 6 June 2021

குர்ஆன் இறைவேதமென பறைசாற்றும் வசனங்கள் ஒரு பார்வை....

.             ╲\


இறைவனின் சாந்தியும்

சமாதானமும் உங்கள்  மீதும்


உங்கள்  குடும்பத்தார்  மீதும்

என்றென்றும்  நிலவட்டுமாக

ஆமீன்


*┉̶̶┉̶̶̶̶┉̶❖☆͜͡❖̶┉̶̶┉̶̶┉̶̶┉̶̶┉̶̶┉*


*குர்ஆன் இறைவேதமென பறைசாற்றும் வசனங்கள் ஒரு பார்வை....*


பூமியிலிருந்து மேலேறிச் செல்பவற்றைத் திருப்பியனுப்பும் தன்மை வானத்திற்கு உண்டு என்ற அறிவியல் உண்மை - 86:11


மனித உடலின் தோல்களில் தான் வேதனையை உணரும் நரம்புகள் உள்ளன என்ற அறிவியல் விளக்கம் - 4:56


விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் போது மனித இதயம் சுருங்கும் என்ற அறிவியல் உண்மை - 6:125


பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ முடியும் என்ற உண்மை - 2:36, 7:24, 7:25


ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் பூமியின் மீது மோதாமல் இருப்பதற்குப் புவி ஈர்ப்பு விசையே காரணம் என்ற உண்மை - 16:79, 67:19


விண்வெளியில் எவ்வளவு தொலைவு செல்ல முடிந்தாலும், பூமிக்கு அடியில் மலையின் உயரம் அளவுக்குச் செல்ல இயலாது என்ற பேருண்மை - 17:37


பூமி உருண்டை என்பதை உணர்த்தும் துல்கர்ணைன் பயணம் - 18:90


பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம் - 20:53, 43:10, 78:6


பெரு வெடிப்பின் மூலமே உலகம் தோன்றியது என்ற தற்காலக் கண்டுபிடிப்பு குறித்த அறிவியல் முன்னறிவிப்பு - 21:30


கருவில் வளரும் குழந்தை மூன்று மாதங்கள் கழித்தே மனித உருவம் பெறும் - 23:14


நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது - 23:18


கடல்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலும் அவற்றுக்கு இடையே தடுப்பு உள்ளது என்ற அறிவியல் உண்மை - 25:53, 27:61, 35:12 55:19,20


காற்றின் சராசரி வேகம் எவ்வளவு என்பதைக் கணித்துச் சொல்லும் அற்புதம் - 34:12


வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி - 35:41


பல கிழக்குகள், பல மேற்குகள் என்று கூறுவதன் மூலம் பூமி உருண்டை என்பதை நிரூபித்தல் - 37:5, 55:17, 70:40


பெரு வெடிப்புக்குப் பின் தூசுப் படலத்திலிருந்து கோள்கள் உருவாயின - 41:11


மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பூமியிலிருந்தே தங்கள் எடையை எடுத்துக் கொள்கின்றன என்ற உண்மை - 6:98, 50:4, 71:17


விண்வெளிப் பயணம் சாத்தியமே என்று அறிவித்தல் - 55:33-35


விரல் ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம் - 75:4


உயிரின உற்பத்தியில் பெண்களுக்கும் பங்குண்டு - 76:2


தேனீக்களின் வாயிலிருந்து தேன் வெளிப்படவில்லை, வயிற்றிலிருந்து வெளியாகின்றது என்ற அறிவியல் - 16:69


கடலின் மேற்புறத்தில் மட்டுமின்றி கடல் ஆழத்திலும் பேரலைகள் ஏற்படுகின்றன என்ற அறிவியல் கருத்து - 24:40


அன்னியப் பொருள் எதையும் ஏற்காத கர்ப்ப அறை, கருவை மட்டும் குறிப்பிட்ட காலம் வரை ஏற்றுக் கொள்ளும் அற்புதம் - 13:8


பொய் சொல்வதற்கான நரம்புகள் மூளையின் முன் பகுதியில் தான் உள்ளன என்ற விஞ்ஞானக் கூற்றை முன்பே தெரிவித்தது - 96:15


காற்றிலுள்ள ஆக்ஸிஜன் நீக்கப்பட்டால் அது அனைத்தையும் அழித்து விடும் என்ற அறிவியல் உண்மை - 51:41,42


கைகளை விலாப்புறத்துடன் சேர்த்துக் கொள்வது பயத்தைக் குறைக்கும் என்ற மனோதத்துவ உண்மை - 28:32


விந்து எங்கிருந்து வெளியேறுகின்றது என்ற அறிவியல் உண்மை - 86:7


வான்வெளியிலும் பாதைகள் உண்டு என்று கூறும் வானியல் விஞ்ஞானம் - 51:7


பூமிக்கு ஈர்க்கும் சக்தி உள்ளது என்ற அறிவியல் உண்மை - 13:2, 31:10


சூரியனும் கோள்களும் ஓடுகின்றன என்ற அறிவியல் உண்மை - 13:2, 31:29, 35:13, 36:38, 39:5


சந்திரன் பிளந்தது பற்றியும் அதற்கான சான்று சந்திரனில் பதிவாகி உள்ளது பற்றியும் அறிவித்திருப்பது - 54:2


வான் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கின்றது என்ற அறிவியல் விளக்கம் - 51:47


உயிரினங்கள் மட்டுமின்றி அனைத்திலும் ஜோடி உண்டு என்ற உண்மை - 13:3, 20:53, 36:36, 43:12, 51:49


உலக வெப்ப மயமாதலால் பனிப்பாறை உருகி, கடல் மட்டம் உயர்ந்து நிலப்பரப்பு குறையும் என்ற அறிவியல் முன்னறிவிப்பு - 13:41, 21:44


வான் மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றை அப்படியே முழு விபரத்துடன் விளக்கும் அதிசயம் - 24:43


அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும் என்பது பற்றிய முன்னறிவிப்பு - 105:1-5, 11:82, 15:74, 26:173, 27:58, 51:32


"இருள்கள்" என்று பன்மையாகக் கூறுவதன் மூலம் நிறங்களுக்கு அலை நீளம் உண்டு என்பதையும், நிறத்திற்கு நிறம் அலை நீளம் மாறுபடும் என்பதையும் விளக்கியுள்ளது - 2:17, 2:19, 2:257, 5:16, 6:1, 6:39, 6:59, 6:63, 6:97, 6:122, 13:16, 14:1, 14:5, 21:87, 24:40, 27:63, 33:43, 35:20, 39:6, 57:9, 65:11


பொருட்களைக் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம் பற்றிய முன்னறிவிப்பு - 2:259


குளோனிங் சாத்தியம் என்பது பற்றி 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறியது - 19:21, 19:29,30, 21:91, 23:50


ஒட்டகத்தின் விந்தையான உடலமைப்பைப் பற்றிய விளக்கம் - 88:17, 36:41,42


இரும்பு இப்பூமியில் உருவாகவில்லை, வானிலிருந்து இறக்கப்பட்டது என்பது பற்றி அறிவியல் உண்மை - 57:25


படுவேகமாகச் சுழலும் பூமியை அதிர்விலிருந்து காக்கும் முளைகளாக மலைகள் உள்ளன - 13:3, 15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27. 78:7, 79:32


பூமி உருவானதற்குப் பின்னர் தான் மலைகள் உருவாயின என்ற விஞ்ஞானிகளின் கூற்றை உண்மைப்படுத்துகிறது. - 41:9,10


நவீனக் கருவிகளும் ஆய்வுக் கூடங்களும் இல்லாத காலத்தில், பாலூட்டி உயிரினங்களிடம் பால் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்பது குறித்த அறிவியல் உண்மை - 16:66


மனிதனைத் தூக்கிச் செல்லும் அளவுக்குப் பெரிய பறவைகள் உலகத்தில் இருந்தன என்ற அறிவியல் உண்மை - 22:31


வருடத்திற்கு எத்தனை மாதங்கள் என்பது நெறிமுறைப்படுத்தப்படாமல் இருந்த காலத்தில் 12 மாதங்கள் தான் என்று அறிவித்தது - 9:36


கவலையில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு, தவறான தகவல் மூலம் அதைவிடப் பெருங்கவலையை ஏற்படுத்தினால் கவலை மறைந்து விடும் என்ற மனோதத்துவ விளக்கம் - 3:153

முன்னறிவிப்புகள்

கஃபா ஆலயம் காலாகாலம் நிலைத்திருக்குமென்ற முன்னறிவிப்பு - 2:125, 3:97, 5:97, 14:35, 28:57, 29:67, 95:3, 105:1-5, 106:3,4


மக்காவாசிகள் வளமான வாழ்வை அடைவார்கள் என்ற முன்னறிவிப்பு - 9:28


நபிகள் நாயகம் மக்களோடு கலந்து வாழ்ந்திருந்தும், அவர்களை மனிதர்களால் கொல்ல முடியாது என்று பிரகடனம் - 5:67


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஃபிர்அவ்ன் என்பவனது உடல் பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற முன்னறிவிப்பு - 10:92


குதிரை, ஒட்டகங்கள் போன்ற வாகனங்களை மட்டுமே மனிதன் அறிந்திருந்த காலத்தில், நவீன வாகனங்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்ற முன்னறிவிப்பு - 16:8


மக்காவில் முஸ்லிம்கள் அடி உதைகளுக்கு ஆளாகிக் கொண்டிருந்த காலத்தில், விரைவில் இஸ்லாமிய ஆட்சி உருவாகும் என்ற முன்னறிவிப்பு - 73:20


முஸ்லிம்கள் மிகச் சிறுபான்மையாக இருந்த காலத்தில், நபிகள் நாயகத்தின் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பு - 17:76, 54:45


நபிகள் நாயகம் காலத்தில் பாரசீகர்களால் ரோமாபுரி வல்லரசு தோற்கடிக்கப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்டது. ரோமாபுரி வெற்றி பெறும் என்று கற்பனை கூடச் செய்ய முடியாத நேரத்தில், "சில ஆண்டுகளில் ரோமாபுரி, பாரசீகத்தை வெற்றி கொள்ளும்" என்ற முன்னறிவிப்பு - 30:2,3,4


நபிகள் நாயகம் அவர்கள் உயிருக்குப் பயந்து மக்காவை விட்டு வெளியேறி அகதியாக இருந்த நிலையில், அவர்கள் மக்காவை வெற்றி கொள்வார்கள் என்ற முன்னறிவிப்பு - 28:85


பாலைவனமாக இருந்த மக்காவுக்கு, உலகின் பல பகுதிகளிலிருந்தும் கனிகள் வந்து சேரும் என்ற முன்னறிவிப்பு - 28:57


ஒரு மலைக் குகையில் வேதச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டது பற்றிய முன்னறிவிப்பு - 18:9


முஹம்மது நபியின் பெரிய தந்தையான அபூலஹப் என்பவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்ற முன்னறிவிப்பு - 111:1,2


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரளயத்தின் போது நூஹ் என்ற இறைத்தூதர் கப்பலில் காப்பாற்றப்பட்டார். அந்தக் கப்பல் ஒரு மலை மீது பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற முன்னறிவிப்பு - 11:44, 29:15, 54:15


மதீனாவில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்த நயவஞ்சகர்கள், விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பு - 33:60


*குர்ஆன் காலாகாலத்துக்கும் பாதுகாக்கப்படும் என்ற முன்னறிவிப்பு...*

_____________