மரண இத்தா குறித்த சட்டங்கள்
⚫கணவன் இறந்துவிட்ட பெண், கர்ப்பிணியாக இல்லாவிட்டால் பிறை கணக்குப்படி நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும்.
⚫ கர்ப்பிணியாக இருந்தால் குழந்தைப் பிறக்கின்ற வரை இத்தாவின் காலம் நீடிக்கும்.
⚫ மேலும் கணவன் இறந்த சில வினாடிகளில் குழந்தை பிறந்து விட்டாலும் கூட இத்தா முடிந்துவிடும்.
⚫ இத்தாவில் பிறை கணக்கையே கடைப்பிடிக்க வேண்டும். முதல் பிறை அன்று கணவன் இறந்திருந்தால், பிறை கணக்குப்படி நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும்.மாத இடையில் கணவன் இறந்திருந்தால், மாதம் ஒன்றுக்கு 30 நாட்கள் வீதம் கணக்கிட்டு,130 நாட்கள் இத்தா இருக்க வேண்டும்.
🚫கணவன் இறந்த சில பெண்கள் வெறும் 40 நாட்கள் மட்டுமே இத்தா மேற்கொள்கின்றனர். இது மிகப்பெரிய தவறாகும்.
*மரண இத்தாவில் கடைப்பிடிக்க வேண்டிய அனுஷ்டானங்கள்*
1️⃣ வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும்.
*சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லலாம்.
*உணவுக்கே வழி இல்லாத ஏழைப் பெண்ணாக இருப்பின், சம்பாத்தியத்திற்காகப் பகலில் வெளியே சென்று வரலாம். இரவில் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும்.
*உணவுப் பொருட்களை வாங்கித் தர ஆள் இல்லையெனில், உணவுப் பொருட்களை வாங்கி வர பகலில் வெளியே செல்லலாம்.
2️⃣ தன்னையும் தன்னுடைய ஆடையையும் எந்தவிதத்திலும் அலங்கரித்துக் கொள்ளக்கூடாது.
*பவுடர் அடித்துக் கொள்வது மேக்கப் செய்வது கூடாது.
3️⃣ தங்க வெள்ளி ஆபரணங்களை அணிவது கூடாது.
*சாதாரண கவரிங் வளையல்களையும் அணியக்கூடாது.
4️⃣ சுர்மா இடுவது கூடாது.
*கண் வலிக்காக மருத்துவ அடிப்படையில் சுர்மா இடுவது கூடும்.
5️⃣ மேனியிலும் ஆடையிலும் வாசனைப் பூசுவது கூடாது.
*குறிப்பு*கணவனைத் தவிர தந்தை, மகன், சகோதரர் போன்றவர்கள் மரணித்தால் மூன்று நாட்களுக்கு மேல் துக்க அனுஷ்டானங்களை மேற்கொள்வது கூடாது.
*மரண இத்தாவின் பெண்களுக்கு ஆகுமான காரியங்கள்*
1️⃣ குளிப்பது.
2️⃣ நகம் வெட்டுவது.
3️⃣ அழுக்குகளை நீக்குவது.
4️⃣ சாதாரணமாக தலை வாருவது.
5️⃣ அகற்றவேண்டிய முடிகளைக் களைவது.
6️⃣ வீட்டையும் துணிமணிகளையும் விரிப்புகளையும் சுத்தமாக வைத்துக் கொள்வது.
7️⃣ ஓர் அறையில் தனியாகத் தூங்குவது.
8️⃣ வீட்டிற்குள் இருந்த படி வெளிப் பகுதியையும் வானத்தையும் பார்ப்பது.
9️⃣ மரணித்த கணவரை பார்த்து தரிசிப்பது.
🔟 திருமணம் முடிப்பது ஹராமான தந்தை, மகன், உடன் பிறந்த சகோதரன் இன்னும் மருமகன் ஆகிய ஆண்களைப் பார்ப்பது இன்னும் பேசுவது.
இவை அனைத்தும் கணவன் மரணித்த இத்தாவில் இருக்கும் பெண்களுக்கு ஆகுமான காரியங்களாகும்.
*குறிப்பு* இத்தாவின் காலம் - நான்கு மாதம் பத்து நாட்கள் கழிந்து விட்டால் அந்தப் பெண்ணுக்கு மேற்கூறப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்காது.
எனவே அழகான மங்களகரமான ஆடைகளை அணிவதும், தங்க வெள்ளி ஆபரணங்களை அணிவதும் இனி அந்தப் பெண்மணிக்குக் கூடும்.
*கணவனை இழந்து வாடும் கைம்பெண்களுக்கு அல்லாஹ் மேலான நற்கூலி களையும் நல்ல பகரத்தையும் வழங்குவானாக!*
🕌 *புரசை ஜூம்ஆ மஸ்ஜித்* இமாம் ஷாஹுல் ஹமீது காஷிஃபி
No comments:
Post a Comment