நபி (ஸல்) அவர்கள் தடுத்தவைகள்:
1,குளிப்பு கடமையானவர்கள் குளிக்காமல் சாப்பிடுவதை தடுத்தார்கள் காரணம் அது வறுமை ஏற்படுத்தும்.
2, பழங்கள் தரும் மரங்களுக்கு கீழும் மனிதர்கள் நிழலுக்காக ஒதுங்குகிற மரத்துக்குக்கீளும் சிறுநீர் இருப்பதை தடுத்தார்கள்.
3, இடது கரத்தால் சாப்பிடுவதையும் குத்தவைத்து உட்கார்ந்து சாப்பிடுவதையும் தடுத்தார்கள்.
4, பெண்கள் ஜனாசாவைத் பின் தொடர்வதை தடுத்தார்கள்.
5, உயிரினங்களை நெருப்பால் கரிப்பதை தடுத்தார்கள்.
6, மார்க்கத்தை திட்டுவதை தடுத்தார்கள்.
7, வீட்டில் குப்பை இருக்குமிடத்தில் தங்குவதை தடுத்தார்கள் ஏனென்றால் அது ஷைத்தான் தங்குமிடமாகும்.
8, கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி வெளியேறுவதை தடுத்தார்கள் காரணம் அனுமதி இன்றி வெளியேறும் பெண்ணை வானத்தில் உள்ள மலக்குமார்கள் சபித்துக் கொண்டே இருப்பார்கள் தீய ஜின்களும் மனிதர்களும் அவர்களை சுற்றி சுற்றி வருவார்கள் எதுவரைக்கும் என்றால் அவர் வீடு வந்து சேரும் வரைக்கும்.
9, ஒரு பெண் தன் கணவர் அல்லாத பிறருக்காக அலங்கரிப்பதை தடுத்தார்கள்.
10, புறம் பேசுவதையும் அதைக் கேட்டு மகிழ்வது தடுத்தார்கள்.
11, வெள்ளி தங்கத்திலான பாத்திரத்தில் நீர் அருந்துவதை தடுத்தார்கள்.
12, மதுவையும் மதுவை செய்பவர்களையும் அதை குடிப்பவர்களையும் விற்பவர்களையும் வாங்குபவர்களையும் அதில் கிடைக்கும் லாபத்தில் உண்ணுபவர்களையும் இறைவன் சபிக்கிறான்.
13, வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் அதற்கு சாட்சியாக இருப்பதையும் அதை எழுதுவதையும் தடுத்தார்கள். இறைவன் குர்ஆனில் கூறுகிறான் வட்டி வாங்குபவர்கள் உண்ணுபவர்கள் அதற்கு சாட்சியாக இருப்பவர்களையும் அதை எழுதுபவர்களை இறைவன் சபிக்கிறான்.
14, உயிரனங்களின் முகத்தில் அடிப்பதைத் தடுத்தார்கள்.
15, ஒரு மனிதர் பிற மனிதரின் மர்மஸ்தானத்தை பார்ப்பதை தடுத்தார்கள்.
16, ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மர்மஸ்தானத்தை பார்ப்பதை தடுத்தார்கள்.
17, உணவிலும் பானத்திலும் ஊதுவதை தடுத்தார்கள். சஜ்தா செய்யக்கூடிய இடத்தை ஊதுவதையும் தடுத்தார்கள்.
18, மிருகங்கள் கட்டி போடப்படும் தொழுவத்தில் தொழுவதை தடுத்தார்கள்.
19, தேனீக்களை கொல்வதை தடுத்தார்கள்.
20, அல்லாஹ் அல்லாதவர்களை கொண்டு சத்தியம் செய்வதை தடுத்தார்கள்.
21, வெள்ளிக்கிழமை இமாம் மிம்பரில் ஏறி குத்பா ஓதுகின்ற போது பேசுவதை தடுத்தார்கள்.
22, சூரியன் உதிக்கும் நேரத்திலும் மறையும் நேரத்திலும் தொழுவதை தடுத்தார்கள்.
23, நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் அய்யாமுத் தஷ்ரீக் இந்த நாட்களில் நோன்பு வைப்பதை தடுத்தார்கள்.
24, மிருகங்கள் நீர் குடிப்பது போன்று ஒரேயடியாக மூச்சு விடாமல் குடிப்பதை தடுத்தார்கள்.
25, மக்கள் பயன்பாட்டில் உள்ள கிணற்றில் உமில் வதை தடுத்தார்கள்.
அல்லாஹ்வும் ரசூலும் எதை தடுத்தார்களோ அதை விட்டு விடுவதற்கும் எதை எடுத்து நடக்க சொன்னார்களோ அதை எடுத்து நடப்பதற்கும் அல்லாஹ் தௌபீக் செய்வானாக!!!ஆமின் யாரப்பல் ஆலமீன்!
No comments:
Post a Comment