Friday, 29 August 2014

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

The last propet of al-mighty GOD, Prophet MUhammadh's(sal) Golden Words.
                         
                  அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! சலவாத் எனும் கருணையும், சலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!

எது நேர்வழி? எது சத்தியம்? எதை இறைவன் விரும்புகிறான்? எதை வெறுக்கிறான்? இறைஉவப்பைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்? இம்மை வாழ்வை நடாத்திச் செல்வது எப்படி? மறுமை வெற்றியை ஈட்டுவது எவ்வாறு? இந்தக் கேள்விகளுக்குப் பதில் பெறுவது நடக்கிற காரியமா? அசாத்தியம்: எனவே, நாம் பொய்யில் புரண்டு, அசத்தியத்தில் மூழ்கி, கடும் இயப்பாடுகளில் சிக்கி, இருளிலேயே தட்டுத் தடுமாறி உழன்று கொண்டு இருந்திருப்போம். மனிதர்களாகவே இருந்திருக்க மாட்டோம்.

ஆனால் இறைவன் நம் மீது மாபெரும் அருட்கொடையை பொலிந்து விட்டான். ஆம்! அந்த மாபெரும் அருட்கொடைதான் நமது நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) ஆவார்கள். " மனிதர்களே! இதோ, அகிலங்களுக்கு ஓர் அருட்கொடையாக, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக என்னுடைய இறுதித் தூதரை நான் அனுப்பிவிட்டேன். இனி உங்களின் இம்மை வெற்றியும் மறுமை ஈடேற்றமும் இந்த இறைத்தூதரைப் பின்பற்றுவதில் தான் அடங்கியுள்ளது!" என்று வல்ல இறைவன் குர்ஆனில் பல்வேறு இடங்களில் தெளிவாக அறிவித்துவிட்டான்.

இறைத்தூதராக நியமிக்கப்பட்ட அந்த நிமிடம் முதல் - அண்ணலாரின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் - அவர்களின் சிறுசிறு அசைவுகளும் கூட மிகக் கவனமாகப் பதிவு செய்யப்பட்டன. காரணம்: திருநபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் வாழ்க்கை திருகுர்ஆனின் செயல்வடிவாகத் திகழ்ந்தது. அதாவது, நடமாடும் குர்ஆனாக அவர்கள் திகழ்ந்தார்கள். வாழ்வின் ஏதோ ஒன்றிரெண்டு துறைகளுக்கு மட்டுமல்ல அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டினார்கள். அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகள், தந்த அறிவுரைகள், ஏவிய செயல்கள், தடுத்த காரியங்கள் ஆகிய அனைத்துமே மனிதனுக்கு வழிக்காட்டும் ஒளி விளக்குகளாய் விளங்குகின்றன.

நபிகளார் மொழிந்தவை:

1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.
 
2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
 
3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.
 
4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.
 
5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.
 
 
6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
 
7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.
 
8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.
 
9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.
 
10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.
 
11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.
 
12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.
 
13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்
 
14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.
 
15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.
 
16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.
 
17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.
 
18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.
 
19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.
 
 
20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.
21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.
 
22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
 
23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.
 
24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.
 
25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.
 
26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.
 
 
27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.
 
28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.
 
29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
 
30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.
 
31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.
 
 
32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.
33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.
 
34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.
 
35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.
 
36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.
 
37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
 
38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.
 
39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.
 
40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.
 
41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.
 
42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.
 
43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.
 
44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.
 
45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.
 
46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.
 
47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.
48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.
 
49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.
 
50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.
 
51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.
 
52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.
 
53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.
 
54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்
 
55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.
 
56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.
 
57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.
 
58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.
 
59. சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.
 
60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்.

எங்கள் இறைவா! உனது தூதர், எங்களின் சிரேஷ்டர், உலக மக்களின் நேர்வழிகாட்டி, எங்கள் ஆத்மாக்களுக்கு புத்துயிர் தந்த ஞானதீபம், அனாதைகளின் இரட்சகர், ஒப்பற்ற தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் இந்த உயர் மணி மொழிகளை எங்கள் வாழ்க்கையில் எடுத்து நடக்க நீ எங்களுக்கு அருள் புரிவாயாக. அவர்களோடு நாளை சுவர்க்கத்தில் இருக்கும் பாக்கியத்தை எனக்கும், என் குடும்பத்துக்கும், என் அன்பான சுன்னத் வல் ஜமாஅத் எனும் சத்திய கொள்கை பாதையில் இருக்கும் நண்பர்களுக்கும் நசீபாக்குவாயாக!! ஆமீன்!!

நன்றி: உண்மை உலகம்



 
 
30 பொன் மொழிகள்

  1.  பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
  2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
  3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
  4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
  5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
  6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
  7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
  8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
  9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
  10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
  11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
  12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
  13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
  14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
  15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
  16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்
  17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
  18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்
  19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
  20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
  21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
  22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
  23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
  24. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
  25. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
  26. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
  27. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
  28. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
  29. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
  30. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது
தொகுத்து வழங்கியவர்: Engr.Sulthan
-



உங்களுக்கு

தெரியுமா ?

1)நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த ஊர் எது ?

நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த ஊர் மக்கா.


2)மக்கா நகரின் பழைய பெயர் என்ன ?
மக்கா நகரின் பழைய பெயர் பக்கா.உம்முல் குரா என்பதாகும்.


3)நாயகம் (ஸல்) அவர்களின் தகப்பனாரின் பெயர் என்ன ?

நா
யகம் (ஸல்) அவர்களின் தகப்பனார் பெயர் அப்துல்லாஹ்.


4)நாயகம் (ஸல்) அவர்களின் தாயார் பெயர் என்ன ?

நா
யகம் (ஸல்) அவர்களின் தாயார் பெயர் ஆமினா.


5)நாயகம் (ஸல்) அவர்கள் நபிபட்டம் பெற்றது எப்போது ?

நா
யகம் (ஸல்) அவர்கள் நபிபட்டம் பெற்றது 40 வது வயதில்.


6)நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ்(விண்ணுலக பயணம்) சென்றது எப்போது ?
நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் சென்றது 50 வது வயதில்.


7)நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்(மக்காவை விட்டு மதீனா இடம் பெயர்தல்) எப்போது ?
நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தது 53 வது வயதில்.


8)நாயகம் (ஸல்) அவர்கள் மரணம் அடைந்த ஊர் எது ?
நாயகம் (ஸல்) அவர்கள் மரணமடைந்த ஊர் மதீனா ஆகும். அப்போது நாயகம்(ஸல்) அவர்களுக்கு வயது (63) அறுபத்துமூன்று.


கடி(மொக்கை) ஜோக்ஸ்


4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, ” பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind ‘ல் அல்ல” என்கிறார். இதைத்தான் நாம் “வெட்டி ஸீன்” போடுவது என்கிறோம்….


சர்தார்ஜி ஜோக்ஸ்!!


இரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர். அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர். அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர்.
மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றி ருந் தார். கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு இந்த சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடியது என்றார்
—————————————————————————
ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு
இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு..
எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்
பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!
ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி ” டாக்டர்
அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது..” அப்படின்னாரு..
எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.
அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம்
உதவியாள்கிட்டே ” யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு” ன்னாரு.. அதில இருந்த
லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..
சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, “தூ… தூ… இது எருமை சாணி..” அப்படின்னு
கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. ” அட.. உங்களுக்கு ருசி தெரிய
ஆரம்பிச்சுருச்சி” ன்னாரு..!
சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே
திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே..
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..
அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி ” டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது..” அப்படின்னாரு.. இப்ப
அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்..
என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு
மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..
திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட..” அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு”
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும்
தெரியலே…!!
——————————————————————————————————————————
ஜிம்மி, ஜாக்கி என்ற இரு நாய்களும் சர்தார் மாதவ் சிங்கும் ராக்கெட்டில்
விண்வெளிக்கு அனுப்பப் பட்டார்கள்.தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து
[த.க.நி.] ராக்கெட்டுக்கு ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன.
த.க.நி. ; ஜிம்மி…
ஜிம்மி ; லொள்.. லொள்..
த.க.நி. ; சிவப்பு பொத்தானை அழுத்து..! [ஜிம்மி அவ்வாறே செய்கிறது]
த.க.நி. ; ஜாக்கி….
ஜாக்கி ; லொள்..லொள்..
த.க.நி. ; நீல நிற கைப்பிடியை முன்னோக்கித் தள்ளு..[ ஜாக்கி சொன்னபடியே
செய்கிறது ]
த.க.நி. ; மாதவ்..
மாதவ் சிங் ; லொள்..லொள்..
த.க.நி. ; குரைக்கிறதை நிறுத்து.. ரெண்டு நாய்க்கும் சாப்பாட்டை வை.. வேற
எதுவும் பண்ணாதே.. ஏன்னா உனக்கு புத்திசாலித்தனமான விஷயங்கள் எதுவும்
புரியாது..!
————————————————————————————————————————————–
ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது
அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.
முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.
அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.
விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..
கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!
—————————————————————————————————————————–
நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ்
புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.
எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..
லைசென்ஸா..? அப்படின்னா..?
அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..
ஓ.. அதுவா..? ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )
அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே..
முதல்லயே சொல்லப்படாதா..?
———————————————————————————————————————————————-
நம்ம சர்தார் ஆபீஸில் இருந்து வரும்போது ஒரு சிறுவன் தன் தொப்பியை ஸ்டைலாக
திருப்பிப் போட்டிருப்பதைப் பார்த்தார். இவருக்குதான் எல்லாவற்றையும் தானும்
செய்யவேண்டும் என்ற ஆவல் ஆயிற்றே.. தன்னுடைய தலைப்பாகையையும் திருப்பி வைத்துக்
கொண்டார். வீட்டு அருகில் வரும்போது பக்கத்து வீட்டு சர்தார் கேட்டார்..
ஓயே.. ஆபீஸுக்கு போய்க்கிட்டு இருக்கியா? வந்துக்கிட்டு இருக்கியா..?
—————————————————————————————————————————-
நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக்
கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர்
சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு.
அதனாலே தங்கிட்டு காலேல போ..
சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்து
கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே
திரும்பினார்..
நண்பர் கேட்டார்..” எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?’
சர்தார் சொன்னார்.. ” எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான்
என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு…!
———————————————————————————————————————————————
ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல
எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த
மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே
தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.
மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..
அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. ” மாமியாரின் அன்புப்
பரிசு..”
ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார்
வென்றார்..” மாமியாரின் அன்புப் பரிசாக..”.
மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே
இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா ‘லுக்கு’ உட்டப்ப சொன்னான்.. “போய்த் தொலை..
எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து
வச்சிருக்க..?” மாமியார் செத்துட்டுது..
மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு..”
மாமனாரின் அன்புப் பரிசு” என்ற அட்டையோட…!
————————————————————————————————–
ஒரு அமெரிக்கர் தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க வந்தார். வழிகாட்டியிடம்
பேசும்போது அரசியல் பக்கம் பேச்சு திரும்பியது.
அமெரிக்கர் ; நாங்கள் தேர்தல் நேரங்களில் டாக்சியில் போனால், டிரைவருக்கு
மீட்டருக்கு மேல் டிப்ஸ் கொடுத்து எங்கள் கட்சிக்கு வாக்களிக்க சொல்லுவோம்.
வழிகாட்டி ; நாங்கள் டாக்சியை விட்டு இறங்கி டிரைவரின் முகத்தில் ஒரு அறை
கொடுத்து ‘காசா கேக்கறே.. ஒழுங்கா ஓட்டைப் போடுன்னு எதிர்க் கட்சி
பேரை**சொல்லிட்டு போவோம்…!
நன்றி மாதேஷ் த கிரேட்

சிரிக்க சிந்திக்க

மாத்தி யோசி

அமெரிக்காவின் நாசா,விண்வெளியில்  மனிதர்களை அனுப்ப ஆரம்பிக்கும்  போது,அவர்களுக்கு ஒரு பிரச்சினை வந்தது.வானத்தில் புவி ஈர்ப்பு விசை  இல்லாததால் அங்கு பேனாவால் எழுத முடியவில்லை.ஆனால் பார்த்த விசயங்களை எழுதி ஆக வேண்டுமே!என்ன செய்வது?அதற்கான வழியைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை ஒரு பெரிய நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள். அவர்களும் பத்துஆண்டுகள் ஆராய்ச்சி செய்து,ஒரு கோடி டாலர் செலவழித்து  புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்திலும்.நீருக்கு அடியிலும்,கடுமையான வெப்ப நிலையிலும் மேலிருந்து கீழும்,கீழிருந்து மேலும் எந்த நிலையிலும் எழுதக் கூடிய ஒரு பேனாவைக் கண்டுபிடித்தனர். ஒரு ஆர்வத்தினால் ரஷ்யர்கள் இந்தப் பிரச்சினையை எப்படி சரி செய்தார்கள் என்று விசாரித்த போதுதெரிய வந்தது; ”அவர்கள் பென்சிலை உபயோகித்தார்கள்!”

மோதிரம்

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது, ஒரு ஆங்கிலேய பிரபு மன்னர்  ஒருவரை விருந்துக்கு அழைத்தார். மன்னர் அழகான விலை உயர்ந்த வைர மோதிரம் அணிந்திருந்தார். ஆவலுடன் அதை பிரபு பார்த்ததைக் கண்ட மன்னர்  அதை கழற்றி அவரிடம் காண்பித்தார். பிரபு அதைத் தன விரலில் போட்டுப் பார்த்தார். பின் மன்னர் புறப்படும் வரை கழற்றவில்லை. தயங்கியபடியே மன்னர் அதைக் கேட்ட போது பிரபு சொன்னார், ”எங்கள் கைக்கு வந்த எதையும் திரும்பக் கொடுக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை.”
சில நாட்கள் கழித்து மன்னர் பிரபுவையும் அவர் மனைவியையும் விருந்துக்கு அழைத்தார். அவர்கள் வந்தவுடன் மன்னரின் மனைவி பிரபுவின்  மனைவியை அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றார். விருந்து முடிந்து பிரபு புறப்படும் போது தன் மனைவியை அழைத்தார். அப்போது மன்னர் சொன்னார்,’ ‘எங்கள் அந்தப்புரம் வந்த எந்தப் பெண்ணையும் திரும்ப அனுப்பும் பழக்கம் எங்களுக்கு இல்லை.” பிரபுவின் கை மோதிரத்தைக் கழட்டியது.

எடை

காட்டுவழி சென்ற ஆசிரியர் ஒருவரை பிடித்துக் கொண்டனர் கொள்ளைக் கூட்டத்தினர். அவர் கணித ஆசிரியர் என்று தெரிந்து கொண்டஅக்கூட்டத்தின் தலைவன் ஆசிரியருக்கு ஒரு சோதனைவைத்தான். தன கையில் இருக்கும் பூசணிக்காயின் எடையை அவர் சரியாகக் கூறினால் விடுதலை என்றும்,சரி பார்க்கையில் தவறாக இருந்தால் தலையை எடுத்து விடுவதாகவும் கூறினான். ஆசிரியர் சொன்னார்,” பூசணிக்காய் உன் தலையின் எடையளவு இருக்கும்” என்று கூறினார். எப்படி சரி பார்ப்பது?’ நீங்கள் சொன்ன விடை சரிதான்,’ என்று கூறி விடுதலை செய்தான்.

ஒற்றுமை

சாகும் தருவாயில் இருந்த தந்தை தன் பிள்ளைகளைக் கூப்பிட்டு, தான் இறந்த பின் அவர்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மூத்தவனைக் கூப்பிட்டு ஒரு கம்பைக் கொடுத்து, இது உடைப்பது எவ்வளவு இலகுவானது என்று உன் தம்பிகளுக்குக் காட்டு   என்றார்.
அவனும் உடைக்க முயன்று அது வலுவாக இருந்ததால் உடைக்க முடியாமல் திணறினான். தந்தை உடனே,’ ‘பரவாயில்லை. இதோ பல கம்புகள் உள்ள கட்டு. இதை உடைப்பது எவ்வளவு கடினம் என்று உன் தம்பிகளுக்குக் காட்டு,”என்றார். அவனும் அதை உடைக்க முயற்சிக்க,அது எளிதாக உடைந்து விட்டது.தந்தை முகம் வாடிவிட்டது. உடனே மூத்தவன் தன் தம்பிகளிடம் சொன்னான்,” அப்பா என்ன சொல்ல வருகிறார் என்பது தெரிகிறதா? தரமற்ற பல கம்புகளை விட தரமான ஒரு கம்பு சிறந்தது என்று தெரிகிறது. அதே போல் தந்தையை பல டாக்டர்களிடம் காண்பிப்பதை   விடுத்து,ஒரு நல்ல டாக்டரிடம் மட்டும் நம்பிக்கை வைப்போம்,என்று சொல்கிறார்.”
உடனே குடும்ப டாக்டர் வரவழைக்கப்பட்டார்.சில நாட்களில்  தந்தையும் குணமடைந்தார்.

தண்டனை ஏன்?

ஒரு முனிவர் ஒரு அரசனிடம் மரணத்தை வெல்லும்  அபூர்வக் கனி ஒன்றைக் கொடுத்தார். அப்போது அருகிலிருந்த காவலாளி அதை அவரிடமிருந்து பறித்துச் சாப்பிட்டு விட்டான். கோபமுற்ற அரசர் அவனுக்கு மரண தண்டனை விதித்தார்.’ ‘இறவாக்கனியை உண்டஎன்னை உங்கள் தண்டனை ஒன்றும் செய்ய முடியாது. ”என்றான் காவலாளி.’ தவறு செய்தவனுக்குத் தண்டனை என்பதை யாராலும் மாற்ற முடியாது. இது சாதாரண பழம்.எப்படி உன் உயிரைக் காக்கும்?’ என்று அரசன் கேட்டான்.” சாதாரணமான பழம் என்றால் அதைத் தின்ற எனக்கு நீங்கள் ஏன் மரண தண்டனை அளிக்க வேண்டும்?” என்று காவலாளி வினவினான். அவனது புத்திக் கூர்மை அரசனை வியக்க வைத்தது. அவனைத் தன மந்திரியாக்கிக் கொண்டான்.

பண்டிதர்கள்

ஒரு செல்வந்தர் இரண்டு ஞான பண்டிதர்களை விருந்துக்கு அழைத்தார். ஒருவர் முகம் கழுவச் சென்றபோது அவரைப்பற்றி புகழ்ந்து பேசினார். ஆனால் கூட இருந்த பண்டிதரோ மற்றவரை ஒரு கழுதை என்றார். பின் முகம் கழுவப் போனவர் வந்ததும் இவர் முகம் கழுவச் சென்றார். இரண்டாமவரைப் பற்றி முதல்வரிடம் பெருமையாகப் பேச ‘அவர் ஒன்றும் தெரியாத மாடு, ”என்றார்.பின்னர் இரண்டு பண்டிதர்களும் உணவு அருந்த அமர்ந்தனர். ஒருவர் தட்டில் புல்லும், மற்றவர் தட்டில் தவிடும் வைக்கப் பட்டபோது இருவரும் கூச்சலிட்டனர். தங்களை அவமானப் படுத்தி விட்டதாகக் கூறி கோபப்பட்டனர். செல்வந்தர் சொன்னார்,”நான் உண்மையில் உங்களை மகா பண்டிதர்கள்என்று கருதித் தான் விருந்துக்கு அழைத்தேன். ஆனால் நீங்கள் யாரென்று உங்கள் மூலமாகவே தெரிந்த பின் அதற்கேற்றாற்போல் உணவு படைத்தேன். என் மீது ஏன்வீணாய்க் கோபப் படுகிறீர்கள்?” பண்டிதர்கள் முகம் கவிழ்ந்து வெளியே சென்றனர்.

புரிதல்

அநாதை விடுதியில் ஒரு பிச்சைக்காரி அழுது கொண்டிருந்தாள்.”ஏன் அழுகிறாய்?”என்று அங்கே இருந்த பார்வையற்ற மூன்று பெண்கள் கேட்டனர்.
‘என் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தேன்.தி டீரென இறந்து விட்டது.’ என்றாள் பிச்சைக்காரி.”பால் எப்படியிருக்கும்?” எனக் கேட்டாள் ஒரு பார்வையற்ற பெண்.’வெள்ளையாக  இருக்கும்,’என்றார் அங்கிருந்த ஒருவர்.வெள்ளை எப்படி இருக்கும் என அடுத்த பார்வையற்ற பெண் கேட்டாள்.கொக்கு மாதிரி இருக்குமென இன்னொருவர் சொன்னார்.கொக்கு எப்படி இருக்குமென  மூன்றாவது பார்வையற்ற பெண் கேட்டாள்.உடனே ஒரு கொக்கைப் பிடித்து கொண்டு வந்து அந்தப் பெண்களின் கைகளில் கொடுத்தார்கள்.அதைத் தொட்டுப் பார்த்தஅந்த பார்வையற்ற பெண்கள் ”இவ்வளவு பெரிய ஒரு பொருளை குழந்தையின் வாயில் திணித்தால் குழந்தை சாகாமல் என்ன செய்யும்?” இதைப் போலத் தான் பல சமயங்களில்  பல விசயங்களை சரியாகப் புரிந்து கொள்ளாமல் நம் கருத்துக்களை அள்ளி வீசுகிறோம்.

நீ பாதி நான் பாதி

பக்த துக்காராமின் குடும்பம் மிக வறுமையில் வாடியது.ஒரு நாள் சாப்பாட்டுக்கு ஒன்றும் இல்லை.அவருடைய மனைவி வண்டி நிறைய கரும்புகளை ஏற்றி,சந்தையில் விற்று வரும்படி சொன்னார்.துக்காராமோ சந்தைக்கு செல்லும் வழியிலேயே யார் யார் எல்லாம் கேட்டார்களோ அவர்களுக்கெல்லாம் கரும்பை இனாமாகக் கொடுத்து விட்டு ஒரே ஒரு கரும்புடன் வீடு திரும்பினார்.
அதைக் கண்டு அவர் மனைவிக்குக் கடும் கோபம் வந்தது.அவர் அந்தக் கரும்பை பிடுங்கி அவரை ஒரு அடி அடித்தார்.கரும்பு இரண்டாக உடைந்து விட்டது.உடனே துக்காராம் சொன்னார்,”நல்லதாய்ப் போயிற்று.எனக்கு ஒரு பாதி;உனக்கு ஒரு பாதி.சாப்பிடலாம் வா.”

ஏமாற்றுக்காரன்

பைத்தியம் பிடித்த ஒருவன் ஒரு மின் கம்பத்தைச் சுற்றிக்கொண்டே,’ ‘ஆண்டவனே,  எனக்கு பத்து ரூபாய் கொடு,” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான். அவ்வழியே போன ஒருவர் அவன் மீது இரக்கப்பட்டு ஐந்து ரூபாய் கொடுத்துச் சென்றார். மறுநாள் மீண்டும் அவர் அப்பாதை வழியாக வரும்போது அந்தப் பைத்தியக்காரன் முன்போலவே,”ஆண்டவனே,எனக்குப் பத்து ரூபாய் கொடு,”என்று சொல்லிக் கொண்டிருந்தான்.இவரைப் பார்த்தவுடன் அவன் உரக்க,”ஆண்டவனே, இம்முறை நீயே நேரடியாக பத்து ரூபாய் கொண்டு வந்து கொடு. நேற்று நீ பத்து ரூபாய் கொடுத்து அனுப்பிய ஆள் ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு ஐந்து ரூபாய் தான் என்னிடம் கொடுத்தான். மகா திருடன்.” என்று கூவினான். இதனால் தான் பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்று முன்னோர் கூறியுள்ளனர்.

குதிரைக்காரன்

ஒரு குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள். கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள். குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார். அன்று நல்ல மழை.கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள். குரு வந்த போது யாருமில்லை. பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம்.அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான். என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார். அவன் சொன்னான்,”ஐயா,நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. அனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும். நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போகும் போது , எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க , ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும் , நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்.” படாரென்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக் காரனைப் பாராட்டி விட்டு, அவனுக்கு மட்டும் தன பிரசங்கத்தை ஆரம்பித்தார். தத்துவம், மந்திரம், பாவம், பு ண்ணியம், சொர்க்கம், நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார். பிரசங்கம் முடிந்ததும், எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்.
‘ஐயா,நான் குதிரைக்காரன்.எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும்.நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால், அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன்,”என்றான் அவன். அவ்வளவு தான்!குரு அதிர்ந்து விட்டார்.

லஞ்சம்

ஒரு ஊரில் எலித்தொல்லை. அதைப் பார்த்த ராஜா,”ஒரு செத்த எலி கொண்டு வந்தால் பத்து ரூபாய் தரப்படும்,”என்று அறிவித்தார்.மக்களும் நிறைய எலிகளைக் கொன்று பையில் போட்டு அரண்மனையில் கொடுத்துப் பணம் பெற்றுச்சென்றனர்.அரண்மனை துர்நாற்றம் எடுக்க ஆரம்பித்தது.அரசன் உடனே செத்த எலியின் வாலைக் கொண்டு வந்தால் போதும் என்று அறிவித்தார்.வாலைக் கொண்டு வந்து பரிசு வாங்கும் மக்களின் எண்ணக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது.அனால் எலித்தொல்லை குறையவில்லை.இது பற்றி அரசன் தீவிரமாக விசாரித்ததில்தெரிய வந்தது;
பணம் கிடைக்குமே என்றுமக்களே வீட்டில் எலி வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள்!

கழுதை லாயம்

ஒரு அரசன் சில கவிதைகளைப் புனைந்து தன அமைச்சரிடம் காட்டினான்.அமைச்சர் சொன்னார்,”இவை மோசமான கவிதைகள்.உங்களால் முடியாத காரியத்தில் ஏன்தலையிட வேண்டும்?”இது கேட்டு மன்னன் கடுங்கோபம் அடைந்து அமைச்சரைக் கழுதை லாயத்தில் அடைக்க உத்தரவிட்டான்.
சில தினங்களுக்குப் பிறகு அரசன் மேலும் சில கவிதைகளை எழுதி அமைச்சரைக் கூப்பிட்டனுப்பிக் காட்டினான்.அமைச்சர் கவிதைகளைப் படித்து விட்டு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார்.”எங்கே போகிறீர்?”என்று அரசன் கேட்டான்.”கழுதை லாயத்திற்கு”என்றார் அமைச்சர்.

முரட்டுத்தனம்

ஒரு காட்டில் இருந்த சிங்கத்திற்கு தன பலத்தின் மீது கர்வம் ஏற்பட்டது. வரிசையாக கரடி,மான்,முயல் முதலிய பிராணிகளைப் பார்த்து ,”இக்காட்டில் யார் பலசாலி?”என்று கேட்டது.அப்பிராணிகளும் பயத்துடன் ,”சந்தேகமில்லாமல் நீங்கள் தான்,”என்று பதிலளித்தன.சிங்கம் பின்னர் மேலும் கர்வத்துடன் அதே கேள்வியை ஒரு யானையிடம் கேட்டது.யானை ஏதும் பேசாமல் சிங்கத்தைத் ஒரேயடியாக தூக்கி எறிந்து விட்டது.சிங்கம் பயத்துடன் ஓடிக்கொண்டே எதிரே வந்த மிருகங்களிடம் சொன்னது,”முட்டாள்,பதில் தெரியாவிட்டால் அவன் பாட்டிற்குப் போக வேண்டியது தானே?இப்படியா முரட்டுத்தனமாக நடப்பது?”

சிரமம்

பிரெஞ்சு நாவலாசிரியர் பால்சாக் வசித்த அறைக்குள் ஓரிரவு திருடன் நுழைந்து மேஜையைத் துளாவிக் கொண்டிருந்தான்.தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த பால்சாக் இதைக் கவனித்து விட்டு உரக்க சிரித்தார்.” திருடன்
”ஏன் சிரிக்கிறாய்?”என்று மிரட்டினான்.”நான் பகலில் காண முடியாத பணத்தை இரவில் கண்டு விடலாமென இவ்வளவு சிரமப்படுகிறாயே!அதை நினைத்தேன்.சிரிப்பு வந்தது.”என்றார் பால்சாக்.

மரணபயம்

வயதான மனிதன் ஒருவன் காலையிலிருந்து மாலை வரை கஷ்டப்பட்டு விறகு வெட்டி அதைக் கட்டித் தூக்க முயலும் போதுமுடியவில்லை.நொந்து போய் ,”இந்த நிலையிலும் நான் உயிரோடிருக்க வேண்டுமா?எமதர்மனே!இப்போதே என் உயிரைக் கொண்டு போகக் கூடாதா?”என்று கத்தினான்.உடனே அவன் முன் எமதர்மன் தோன்றி,”அப்பனே,என்னை அழைக்கக் காரணம் என்ன?”என்று கேட்டான்.திடுக்கிட்ட பெரியவர் ,”ஒன்றுமில்லை,இந்த விறகுக் கட்டை தூக்கி விட இங்கே யாரும் இல்லை.அதனால் தான் உன்னை அழைத்தேன்.”என்றாராம்.

ஆறுதல்

வேடன் ஒருவன் காட்டில் ஒரு முயல் பிடித்தான்.குதிரை வீரன் ஒருவன் வந்து விலை கேட்டான்.விலை சொல்லு முன்னே முயலைப் பிடுங்கிக் கொண்டு குதிரையில் பறந்தான்.வேடன் பின்னால் ஓடினான்.பிடிக்க முடிய வில்லை.கடைசியில் சப்தம் போட்டுச் சொன்னான்,”ஏய் குதிரைக்காரா,என்னை ஏய்த்துவிட்டு என் முயலை எடுத்துக் கொண்டதாக நினைத்து விடாதே!நான் அதை உனக்கு பரிசாகக் கொடுத்து விட்டேனாக்கும்!”
குதிரைக்காரன் காதில் அது விழுந்ததோ இல்லையோ,வேடனுக்கு ஆறுதல் கிடைத்தது.

பதவி ஆசை

மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை அழைத்து ,”மழை வருமா?”எனக் கேட்டான்.”வராது”என்றான் அமைச்சன்.வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த குடியானவன் ஒருவன் கொஞ்ச நேரத்தில் மழை வரும் என எச்சரித்தான்.அதைப் பொருட்படுத்த்தாமல் போன மன்னன் வேட்டை ஆடிக் கொண்டிருந்த போதுகடும் மழை வந்து நன்றாய் நனைந்து போனான்.
திரும்பும் வழியில் குடியானவனைச் சந்தித்து ,”மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?”எனக் கேட்டான்.அவனோ,”மன்னா,எனக்குத் தெரியாது.ஆனால் என் கழுதைக்குத் தெரியும்.மழை வரும் முன் அது தன காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்.”என்றான்.
உடனே மன்னன் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு கழுதையை அமைச்சராக்கினான்.
இக்கதையை ஆபிரஹாம் லிங்கன் கூறி விட்டு சொன்னார்,”அதில் தான் மன்னன் ஒரு தவறு செய்து விட்டான்.என்னவெனில் அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி வேண்டும் என அலைகின்றன.”

அப்பாடா

ஒருவன் தன குதிரைக்கு சங்கேத மொழி கற்றுக் கொடுத்தான்.அவன் ‘ஐயோ’ என்றால் குதிரை நிற்கும்.’அப்பாடா’ என்றால் ஓடும்.ஒரு நாள் மலைப் பகுதிக்குச் சென்ற அவன் ஒரு புலியைக் கண்ட பதட்டத்தில் ,குதிரையும் தறி கெட்டு ஓட, ,அதை நிறுத்தச் சொல்ல வேண்டிய வார்த்தையை மறந்து விட்டான்.குதிரை வெகு வேகமாக ஒரு பள்ளத் தாக்கின் முனையை நோக்கி ஓடியது.எதிரே உள்ள ஆபத்தை உணர்ந்து அவன் தன்னை அறியாமல் ,’ஐயோ’என்றான்.உடனே குதிரை நின்றது.மயிரிழையில் உயிர் பிழைத்த அவன் நிம்மதியாக ‘அப்பாடா’ என்றான்.மறு நிமிடம் குதிரை பள்ளத்தாக்கில் பாய்ந்தது.

பைபிள்

ஆப்பிரிக்கா ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் வந்ததைப் பற்றி ஜோமோ என்ற முன்னாள் கென்யா நாட்டதிபர் சொன்ன விளக்கம் ;
”வெள்ளைக்காரர்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்த போதுஎங்கள் கையில் தேசம் இருந்தது.அவர்கள் கையில் பைபிள் இருந்தது.கண்களை மூடிக்கொண்டு ஜெபம் செய்ய எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.கற்றுக் கொண்டோம்.அப்புறம் கண்ணைத் திறந்து நாங்கள் பார்த்த போது எங்கள் கையில் பைபிள் இருந்தது.அவர்கள் கையில் தேசம் இருந்தது.”

குதர்க்கம்

ஒரு எண்ணெய்வியாபாரி செக்கில் எண்ணெய் ஆட்டிக் கொண்டிருந்தார்.அப்போது தர்க்கம் படித்த ஞானி ஒருவர் அங்கே வந்தார்.
ஞானி; செக்கு மாட்டுக் கழுத்தில் ஏன்மணி கட்டியிருக்கிறாய்?
வியாபாரி; வேறு வேலை பார்க்க அப்பப்போ நான் பக்கத்தில் வீட்டிற்குப் போவேன்.மணி சப்தம் கேட்டால் மாடு சுற்றிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வேன்.
ஞானி; அந்த மாடு சுற்றாமல் ,நின்ற இடத்திலேயே தலையை மட்டும் ஆட்டி சப்தம் கொடுத்தால்……..?
வியாபாரி;அய்யா,எங்க மாடு உங்க அளவுக்கு தர்க்கம் படிக்க வில்லை.அதனாலே அதற்கு குதர்க்கம் தெரியாது.
நன்றி:-  ஜெய ராஜன்

*****************************************

ஆஹா ஆடி..!

——————————————————————————————-
(நகைக்கடை அருகே கணவனும் மனைவியும்…)
‘‘சொன்னாக் கேளு, பட்ஜெட் உதைக்குது, மாப்பிள்ளைக்கு அரைப்பவுன்லயே மோதிரம் எடுத்துக்கலாம்.’’
‘‘வேணாங்க. ஆடி பதினெட்டு முதல் நோம்பி. மாப்பிள்ளை கோவிச்சுக்குவார், நமக்கும் மரியாதை இல்லை.’’
‘‘நெனைச்சுப் பாருடி, ஃபிளாஷ் பேக்கை! இதே என் முதல் நோம்பிக்கு ‘தங்கம்’ங்கற பேர்ல ஒரு கடுகை என் விரல்ல போடச் சொல்லிக் கொடுத்தானே உங்கப்பன்! அப்ப எங்கடி போச்சு இந்த மரியாதை?’’
‘‘எங்கப்பன் பொண்ணைக் கொடுத்தது, மளிகைக்கடையில பொட்டலம் கட்டுறவருக்கு…நான் என் பொண்ணைக் கொடுத்திருக்கிறது, ஹோல்சேல் காய்கறி மண்டி ஓனருக்கு!’’
(இடிக்கும் லாஜிக் அறிந்து ஒரு பவுனுக்கு சம்மதிக்கிறார் கணவர்).
__________________________________________________________
(பெட்டிக்கடை அருகே கடைக்காரரும், வாலிபரும்…)
‘‘ஏன் தம்பி, டெய்லி அந்தப் பொண்ணை ஓரம்கட்டி நின்னு பேசுறியே, எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே லவ்ஸ் விடறதா உத்தேசம்? சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?’’
‘‘அட, நீங்க ஒண்ணுங்க, அது என் பொண்டாட்டி.‘ஆடி’க்கு அவுங்க அம்மா வீட்டுக்குப் போயிருக்கா. அங்க இருந்து வேலைக்கு வர்றா… அதான் இங்கே வந்து நின்னு பேசுறோம்… இப்ப புரியுதா?’’
(ஆனாலும் கடைக்காரரின் சந்தேகக் கண்கள் இமைக்கவேயில்லை).
______________________________________________________________
குளிர்பானக் கடையொன்றில் இருவர்…
‘‘என்ன தம்பி.. வர்றவங்க, போறவங்களையெல்லாம் கூப்பிட்டு ‘கூல்டிரிங்க்ஸ்’ வாங்கித் தர்றே..?’’
‘‘அண்ணே..! வர்ற ஆவணி மாசம் எனக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுச்சு… எட்டாம் கிளாஸ் படிச்ச எனக்கு ‘எம்.சி.ஏ.’ படிச்ச பொண்ணு கிடைச்சிருக்கு… அந்த சந்தோஷத்தைத்தான் கொண்டாடறேன்…’’
‘‘இங்க பாரு தம்பி… ஏரில் பூட்டற மாடுகள், ஒரே மாதிரி இருந்தாத்தான் வயலை உழுது பயிரு பச்சையைப் பாக்க முடியும். எட்டாங்கிளாஸ் படிச்ச நீ எருது வண்டி வேகத்திலயும், எம்.சி.ஏ. படிச்ச அந்தப் பொண்ணு ஏரோப்பிளேன் வேகத்திலயும் போனாக்கா என்ன ஆகும்னு யோசிச்சுப் பாரு..’’
(‘எட்டாங்கிளாஸ்’ எரிச்சலுடன் நகர்கிறது).
_________________________________________________________________-
ஒரு வீட்டுவாசலில் கணவனும் மனைவியும்…
‘‘ஆடித்தள்ளுபடியில ஒரு புடவை எடுத்துத் தாங்களேன்!’’
‘‘நான் பணக் கஷ்டத்துல தள்ளாடிக்கிட்டிருக்கேன். உனக்குத் தள்ளுபடியில புடவை கேக்குதாக்கும்…’’
‘‘சாயங்காலமானா நீங்க ‘தள்ளாடுறது’தான் ஊருக்கே தெரியுமே…’’
(கணவர் கப்சிப்).
___________________________________

சிரிப்பு மாமு சிரிப்பு!


‘‘நண்பா… நேத்து அவசர வேலையா நான் வெளியே கிளம்பும்போது நீ வந்துட்டே! வேறவழியில்லாம நான் வீட்லயே இருக்க வேண்டியதாப் போச்சு… ராகுகாலம் வந்தால் வெளியே கிளம்பக்கூடாதாமே…!’’
————————————————————————————————————————-
‘‘‘சிங்கம் போல நடந்து வர்றான் செல்லப் பேராண்டி’னு உன்னைப் பார்த்து, உன் பாட்டி பாடினாங்களாமே! ஏண்டா வீட்டுக்குப் போகும்போது தவழ்ந்து போற அளவுக்காதண்ணியடிச்சிருந்தே?!’’
————————————————————————————————————————-
‘‘கழுத்துலதங்கச் சங்கிலிபோட்டுக்கிட்டு கலக்குறே மச்சான்.. சங்கிலியும் கழுத்துமா உன்னை பார்க்கறப்ப எங்க வீட்டு டாமி ஞாபகம்தான் வருது!
————————————————————————————————————————-
‘‘நண்பா! ‘என் ஃபுல்சப்போர்ட்டும் உனக்குத்தான்… என் ஃபுல்சப்போர்ட்டும் உனக்குத்தான்’னு சொல்லிட்டு, கடைசியில எனக்கு வெச்சிருந்த என்  ஃபுல் சாப்பாட்டையும் சேர்த்து ஒரு கட்டுக் கட்டிட்டியேடா!’’
————————————————————————————————————————-
‘‘நட்புங்கிறது ஒயின் மாதிரிடா… அது பழசாக ஆக ஸ்வீட்டாகிட்டே இருக்கும்.. உன்னையும் என்னையும் போல! நீ பழசாயிட்டே இருக்கே! நான் ஸ்வீட் ஆயிட்டே இருக்கேன்!’’
————————————————————————————————————————-
‘‘உனக்குத் தெரியுமா? கடலைவிட காதல் ஆழமானது. ஆனா ‘கடலை’ காதலை விட ஆழமானது!
————————————————————————————————————————-
‘‘நண்பா! இன்னிக்கு ஒருத்தர்,  ‘உன் நண்பனைச் சொல்…உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ அப்படின்னாரு! உன் பேரைச் சொன்னேன்… காறித் துப்பிட்டுப் போயிட்டாரு!’
————————————————————————————————————————-
இரண்டு ஆண்யானைகள் பேசிக்கொண்டு நின்றிருந்தன. அப்போது ஒரு பெண் யானை அவற்றைக் கடந்து சென்றது. ஒரு ஆண்யானை, மற்றொரு யானையிடம் சொன்னது|‘‘பியூட்டிஃபுல்… 3600, 2800.. 3600!’’
————————————————————————————————————————-
‘‘மாப்ளே! நேத்து உன்னோட பழைய காதலியை பஸ்ல பார்த்தேண்டா…இப்பவும் உன் நினைப்புதான் அவளுக்கு. வேண்டாம்டா… இது தப்புடா.. அவகிட்ட வாங்கின ஐந்நூறு ரூபாயைத் திருப்பிக் கொடுத்துடுடா. கெட்ட வார்த்தையிலயே உன்னைத் திட்டறாடா!’’
————————————————————————————————————————-
‘‘நீ ரொம்ப அழகாயிருக்கேனு நான் நினைக்கல. நான் உன்னைக் காதலிக்கல. ஆனா, ஏதாவது ஏடாகூடமா நடந்துடுமோனு பயமாயிருக்கு. உன் மூஞ்சியப் பேக்கறதுக்குள்ள ஓடிப்போயிடு!’’
————————————————————————————————————————-
‘‘பங்காளி, நான் துண்டைக் கையில் எடுத்தா குளிக்கப் போறேன்னு அர்த்தம்.. துண்டைக் கழுத்தில் போட்டா ஊருக்குப் போறேன்னு அர்த்தம்.. துண்டை இடுப்பில் கட்டினா கோயிலுக்குப் போறேன்னு அர்த்தம்.. துண்டைத் தலையில் போட்டா கடன் கேக்கறேன்னு அர்த்தம்!’’
————————————————————————————————————————-
‘‘டேய்! நீ சிரிச்சா ரஜினி..பேசினா வைரமுத்து..ஆடினா பிரபுதேவா..பாடினா ஜேசுதாஸ்..படுத்தா உசிலைமணி..வெயிட்டை குறைடா மாப்ளே!’’
————————————————————————————————————————-
‘‘மச்சான்! நீ அகநானூறைக் கரைச்சுக் குடிச்சவன்தான்,  ஒப்புக்கறேன். நீ புறநானூறைப் படிச்சு முடிச்சவன்தான்,  ஒப்புக்கறேன். ஆனா, என்னோட பணம் நானூறை முழுங்கி ஏப்பம் விட்டுட்டியேடா…நீ நல்லா இருப்பியா?’’
————————————————————————————————————————-
‘‘எங்கு சென்றாலும்புதிதாய் என்ன செய்தாலும்உன் குரலைக் கேட்டுவிட்டேஎதுவும் செய்ய விரும்புகிறேன். கழுதை கத்தினால் நல்ல சகுனமாமே!’’


‘‘‘எங்கிருந்தோ பணம் வரப்போகுது… அதான் உள்ளங்கை அரிக்குது’னு அடிக்கடி சொல்றியே.. முதல்ல உன் ‘படை’ பலத்தை ஒரு தோல் டாக்டர்கிட்டே காட்டுடா!’’
_____________________________________________________________________________
‘‘ஹமாம் 13 ரூபாய், சிந்த்தால் 19 ரூபாய், லக்ஸ் 13 ரூபாய், பியர்ஸ் 19 ரூபாய், மெடிமிக்ஸ் 16 ரூபாய்,லைபாய் 12ரூபாய், டெட்டால் 24 ரூபாய்! எதை வேணும்னாலும் வாங்கு… ஆனா, குளிச்சிருடா செல்லம்!’’
_____________________________________________________________________________
‘‘அன்பே! திருநெல்வேலிக்கு ஒரு தாமிரபரணி! மதுரைக்கு ஒரு வைகை!திருச்சிக்கு ஒரு காவிரி!சென்னைக்கு……நீ!அதாம்மே… கூவம்!’’
_____________________________________________________________________________
‘‘அந்தப் பொண்ணுங்கள்லாம் உன்னை ‘ஜெம்’னு சொன்னாங்கனு பெருமையா சொன்னியே.. உச்சி குளிர்ந்து போகாதடா! ‘ஜெம்’னா GINGER EATING MONKEY-னு அர்த்தம்டா… இஞ்சி தின்ன குரங்கே!’’
_____________________________________________________________________________
‘‘காலையில் உன் வீட்டுக்கு வந்தேன்.. மனதுக்கு ஆறுதலாய் இருந்தது. என் அப்பாவை போலவே உன் அப்பாவும் இவ்வளவு கேவலமாக உன்னை திட்டினாரே!’’
_____________________________________________________________________________
‘‘விருட்சம், அன்று விதையாய் இருந்தது. பெளர்ணமி, அன்று பிறையாய் இருந்தது. சிலை, அன்று பாறையாய் இருந்தது. மழை, அன்று மேகமாய் இருந்தது. ஆமாம்.. என் மனைவியே.. நீயும்கூட ஒரு காலத்தில் அன்பான மனுஷியாக இருந்தாய்…!’’
_____________________________________________________________________________
‘‘டேய்.. ஓ.சி. நாயகா! இனிமே என் பைக் எடுக்கும்போது கொஞ்சம் மணிசங்கர் அய்யரை நினைச்சுப் பாரு! ரெண்டு ரூபா ஏத்திட்டாருப்பா!’’
_____________________________________________________________________________
‘‘என் கல்யாணத்துக்கு நீ மொய் எழுதவே வேண்டாம். ஏன்னா..நீ எழுதப் போற பத்து ரூபாய் மொய்க்கு என் பக்கத்தில் நின்னு போட்டோவுக்கு போஸ் கொடுப்பியே, அதுக்கே எனக்குப் பதினஞ்சு ரூபா செலவாகும்! அதனால வேணாம் ராசா!’’
_____________________________________________________________________________
‘‘‘காசுமேல காசு வந்து கொட்டுகிற நேரமிது.. வாச கதவை ராஜலட்சுமி தட்டுகிற நேரமிது!’’னு எனக்கு நீ எஸ்.எம்.எஸ். அனுப்பினியே.. இன்னிக்கு உன் தட்டுல அவ்வளவு கலெக்ஷனா மச்சி?!’’
_____________________________________________________________________________
‘‘காவிரியிலகூட தண்ணியை விட்டுட்டாங்க. தடிமாடே! நீ எப்படா ‘தண்ணி’யை விடப்போறே?’’
_____________________________________________________________________________
‘‘டியர்! உன்னை மயிலுக்கும் குயிலுக்கும் ஒப்பிடலாம்… காதலோடு சொல்கிறேன்.. உனக்கு குயில் நிறம், மயில் குரல்!’’
_____________________________________________________________________________
‘‘அஞ்சாப்பு வரைக்கும் இனி எல்லோரும் பாஸாம்டா..! ம்ம்ம்.. அந்தக் காலத்துலேயே இப்படி இருந்திருந்தா நீ எலிமெண்ட்ரி ஸ்கூலையாவது தாண்டியிருப்பே..!’’
_____________________________________________________________________________
‘‘நண்பா.. பனியில் நனைஞ்ச அழகான பூக்களைப் பார்க்கும்போது, எனக்கு உன் ஞாபகம் வருது! அழகான நிலவை பார்க்கும்போதும் நீதான் ஞாபகத்துக்கு வர்றே! அழகா எதைப் பார்த்தாலும், உடனே உன்னை நினைச்சுக்குவேன். அப்பல்லாம் என்னை நானே கேட்டுக்குவேன்.. ‘இவ்வளவையும் அழகா படைச்ச ஆண்டவன் உன்னை மட்டும் ஏன் அசிங்கமா படைச்சான்?’’
_____________________________________________________________________________
‘‘உன் கல்யாணத்துக்கு நான் கட்டாயம் வரணும்னு நீ சொல்லணுமாடா..? உனக்கு ஒரு துக்கம்னா, அந்தக் கொண்டாட்டத்துல கலந்துக்காம எனக்கு வேறென்ன வேலை?’’
_____________________________________________________________________________
‘‘இன்று.. நாளை.. ஏன், எப்போதும் ஓர் இதயம் உனக்காகவே துடித்துக் கொண்டிருப்பது தெரியாதா..?மடையா.. அது உன் இதயம்தாண்டா!’’
_____________________________________________________________________________
‘‘அர்ஜுனருக்கு வில்லு..அரிச்சந்திரனுக்கு சொல்லு..குதிரைக்கு கொள்ளு..ரோஜாவுக்கு முள்ளு..நீ ஜொள்ளு..நான் லொள்ளு!’’
_____________________________________________________________________________
‘‘நன்றி நண்பா!இன்று சனிக்கிழமை. வெளியூர் வந்த இடத்தில் கோயிலே இல்லை. அவசரத்துக்கு உன்படத்தை வைத்து சுற்றிவந்து வணங்கினேன்.‘சனீஸ்வராய நமஹ!’’’

சிரிப்போ சிரிப்பு



மனைவி : நேத்து ராத்திரி கனவுல நீங்க எனக்கு நிறைய நகை வாங்கித் தந்தீங்க தெரியுமா?
கணவன் : ஓ! ஞாபகம் இருக்கே. உங்க அப்பா கூட அதுக்குப் பணம் கட்டினாரே!
*****
டாக்டர் : குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கறதுக்கு முன்னாடி நல்லா கொதிக்க வெச்சுக் குடுங்க.
ஜோ : ஏன் டாக்டர், குழந்தைகளை அடுப்பில கொதிக்க வைக்கிறது தப்பில்லையா?
*****
ஜோ : போன வாரம் போலீஸ் என்னை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
நண்பர் : நீ என்ன தப்பு செய்தே?
ஜோ : கடைக்குப் போய் ஷாப்பிங் செய்தேன்.
நண்பர் : ஷாப்பிங் செய்ததுக்கா உன்னை அரெஸ்ட் பண்ணினாங்க?
ஜோ : ஆமா.. ராத்திரி அவங்க கடையை மூடினப்புறம் ஷாப்பிங் போனேன்.
*****
காதலன் : “கண்ணே, நம்ப காதலைப் பத்தி யார் கிட்டேயும் சொல்லிடாதே”
காதலி : “மூளையில்லாதவன்கூட உன்னை காதலிக்க மாட்டான்னு சொன்ன ராதாகிட்ட மட்டும் சொல்றேனே!.”
*****
கணவன் : “உனக்குத்தான் 2 கண்ணும் நல்லா இருக்கே, ஒழுங்கா அரிசில இருந்து கல்லைப் பொறுக்க மாட்டியா?”
மனைவி : “உங்களுடைய 32 பல்லும் நல்லாதானே இருக்கு. 2,3 கல்லை கடிச்சு சாப்பிட முடியாதா?”
———————————————————————————–
நபர்: என்னுடைய பையனுக்கு வைட்டமின் மாத்திரை ஏதாவது கொடுங்க.
மருந்து கடைக்காரர்: எந்த வைட்டமின் மாத்திரை A, B (அ) C?
நபர்: அவனுக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால ஏதாவது ஒரு மாத்திரை கொடுங்க.
****
கடைக்காரர்: நீங்க உடைத்த பொருள் 100 வருஷம் பழையது தெரியுமா?
நபர்: அப்பாடா! நான் அதப் புதுசுனு நெனச்சு பயந்துட்டேன்.
****
முதலாளி: இனி நீ என்னுடைய கார் டிரைவர். உன்னுடைய ஆரம்ப சம்பளம் 3000 ரூபா. உனக்கு சந்தோஷமா?
பப்பு: ரொம்ப சந்தோஷம். வண்டி ஆரம்பிக்க 3000 ரூபா சம்பளம்னு சொன்னீங்க. ஆனா வண்டி ஓட்டறதுக்கு சம்பளம் எவ்வளவு? அத சொல்லலியே?
****
பப்பு: உன்னுடைய கார் பேர் என்ன?
அப்பு: சரியாக ஞாபகமில்லை. ஆனால் ‘T’ல ஆரம்பிக்கும்.
பப்பு: பரவாயில்லையே.. என்னுடைய கார் பெட்ரோல்லதான் ஆரம்பிக்கும்.
****
பப்பு தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சாலையில் சென்று கொண்டிருந்தான். டிராபிக் போலீஸ் கை நீட்டி, நிறுத்த சைகை செய்தார். அப்போது,
பப்பு: கொஞ்சமாவது அறிவிருக்கா? ஏற்கெனவே 3 பேர் இருக்கோம். நாலாவதா நீங்க எங்க உக்காருவீங்க?
*************


முல்லாவின் உடைவாள் – முல்லா கதைகள்

January 16, 2012Leave a comment

5 Votes

முல்லாவுக்கு வாள் எடுத்துச் சண்டை போட்டுப் பழக்கம் இல்லை என்றாலும் அண்டை வீட்டுக்காரர் அன்போடு தருவதை மறுக்கக் கூடாதே என்று அவருடைய உடைவாளை வாங்கி இடுப்பில் கட்டிக் கொண்டார். பிறகு அவர் பிரயாணத்தைத் தொடர்ந்தார். ஒரு காட்டு வழியாக முல்லா கழுதைமீது அமர்ந்து சென்று கொண்டிருந்தார். நான்கு திருடர்கள் அவரை வழிமறித்துக் கொண்டனர்.
“கிழவனாரே, உம்மிடம் உள்ள விலை உயர்ந்த பொருளைக் கொடுத்துவிடும். உம்மை உயிரோடு அனுப்பி விடுகிறோம் “ என்று திருடர்கள் கேட்டனர்.“என்னிடம் காசு பணமெல்லாம் ஏதுவும் கிடையாதே நான் ஒரு பரம ஏழை” என்றார் முல்லா.“அப்படியானால் உம்முடைய கழுதையை எங்களிடம் ஒப்படைத்து விட்டு நடந்து செல்லும் “ என்ற கள்வர்கள் மிரட்டினர்.
“என்ன யோசனை ? “ என்று கள்வர்கள் கேட்டனர்.“என்னிடம் ஒரு உடைவாள் இருக்கிறது கழுதைக்குப் பதிலாக அதைப் பெற்றுக் கொண்டு என்னை விட்டு விடுகிறீர்களா ? “ என்றார் முல்லா.கள்வர்கள் உடைவாளை வாங்கிப் பார்த்தனர் விலை மதிப்புள்ள அருமையான வாள் அது. கள்வர்களின் தொழிலுக்கும் அது பயன்படும். அதனால் அவர்கள் மகிழ்ச்சியோடு உடை வாளைப் பெற்றுக் கொண்டு முல்லாவை கழுதையுடன் தொடர்ந்து போக அனுமதித்தனர்.
“உடைவாளைப் பயன்படுத்தி அந்தக் கள்வர்களை விரட்டி அடித்திருப்பீர் என்று நினைக்கிறேன் “ என்றார் அண்டை வீட்டுக்காரர்.“உங்கள் உடைவாள் தான் என் உயிரைக் காப்பாற்றி கழுதையை மீட்டுத் தந்தது. உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் “ என்று முல்லா அண்டை வீட்டுக்காரருக்கு நன்றி கூறினார்.“உடைவாள் உங்களிடம் பத்திரமா இருக்கிறதல்லவா ? இனி உமக்கு உடைவாள் தேவைப்படாது. கொடுத்து விடுங்கள் “ என்றார் அண்டை வீட்டுக்காரர்.“உடைவாள் என்னிடம் ஏது ? “ அதைத்தான் அவர்களிடம் கொடுத்துவிட்டேனே என்றார் முல்லா. “கள்வனிடம் கொடுத்து விட்டீரா ?
அவர்களிடம் ஏன் உடைவாளைக் கொடுக்க வேண்டும். உடைவாளைக் கொண்டு சண்டைபோட்டு கள்வர்களை விரட்டியிருப்பீர் என்றல்லவா நான் நினைத்தேன்” என்று வியப்பும் திகைப்பும் தோன்றக் கேட்டார் அண்டை வீட்டுக்காரர்.காட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியை முல்லா விரிவாக எடுத்துச் சொன்னார். அண்டை வீட்டுக்காரருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

பதிலுக்குப் பதில் – முல்லா கதைகள்


3 Votes

உங்கள் விருப்பம்போல எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார் கடைக்காரர். முல்லா தலைப்பாகையை கழற்றிக் கொடுத்து விட்டு சால்வையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஐயா, நீங்கள் வாங்கிய சால்வைக்குப் பணம் கொடுக்கவில்லையே என்று கடைக்காரர் கேட்டார். நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும். தலைப்பாகைக்குப் பதிலாகத்தானே சால்வையை வாங்கிக் கொண்டேன் என்றார் முல்லா.

தலைவா என்னை மன்னித்து விடுங்கள் – முல்லா கதைகள்


5 Votes

குழப்பவாதிகள் – முல்லா கதைகள்


5 Votes

அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் “மன்னர் நீங்க அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக  குழப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும் முல்லா சொல்லிக் கொண்டு திரிக்கிறார் என்று அரசரிடம் முல்லாவைப் பிடிக்காதவர்கள் கூறித் தூண்டி விட்டார்கள்.
எல்லா பதில்களையும் அரசர் படித்து முடிக்கும்வரை பொறுமையுடம் காத்திருந்த முல்லா,  ” அரசே ! …ரொட்டி என்பது என்ன? என்ற எனது சாதாரன கேள்விக்கு, இவர்கள் அனைவரும் பலவிதமான பதில்களைக் கொடுத்துள்ளார்கள். யாருடைய பதிலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகவில்லை பார்த்தீர்களா? இதனால்தான் நம் நாட்டில் உள்ள அறிஞர்கள் குழப்பவாதிகள் என்றேன்” என்றார்.


3 Votes

சந்து பொந்தெல்லாம் மக்கள் இவ்வாறு நிரம்பி வழிகிறார்களே, இவ்வளவு கூட்டத்தில் மக்கள் எவ்வாறு தாங்கள் போக வேண்டிய இடத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள்? தாங்கள் தங்கியுள்ள விடுதியை எவ்வாறு கண்டு பிடிப்பார்கள்? அவ்வளவு ஏன், மக்கள் தங்களைத் தாங்களே கூட அடையாளம் கண்டு கொள்வது சிரமந்தான் இவ்வாறெல்லாம் அந்த சந்தேகப் பிராணி பேசிக் கொண்டேயிருந்தான்.
March 24, 20111 comment

3 Votes

March 20, 20111 comment

4 Votes


முல்லாவின்  மற்றய தொகுப்புக்கள்

நம்பிக்கை மோசம் – முல்லா கதைகள்


ஊரெல்லாம் கடன் வாங்கி அதைத் திருப்பித்தராது ஏமாற்றிக்கொண்டிருந்தான் ஒரு டம்பப் பேர்வழி. அவன் முல்லாவிடம் ஒரு பெருந்தொகையை வாங்கி அவரையும் ஏமாற்றத் திட்டமிட்டான். நிச்சையமாக முல்லாவை ஏமாற்றி ஒரு பெருந்தொகையினை கடனாக வாங்கி வருவதாக பலரிடம் மார்தட்டிக்கொண்ட அவன். முல்லாவிடம் சாமத்தியமாக செயற்படத் திட்டமிட்டான்.
முல்லா தன்னை நம்பி பெருந்தொகையினைக் கொடுக்க மாட்டார் என்பதும் அவனுக்குத் தெரியும். அதனால் தன்மீது நம்பிக்கை ஏற்படுவதற்காக ஒரு நாடகம் நடிக்க எண்ணினான். ஒருநாள் அவன் முல்லாவிடம்ட சென்றான் “முல்லா அவர்களே எனக்கு ஒரே ஒரு காசு கடனாகத் தர முடியுமா?” என்று கேட்டான். “நம்பிக்கை மோசம் செய்யாத யாருக்கும் நான் எவ்வளவு தொகைவேண்டுமானாலும் கடனாகத் தருவதற்குத் தயங்கமாட்டேன்.
நீ ஒரு காசுதானே கேடகிறாய் இதிலே நீ நம்பிக்கை மோசம் செய்யவில்லை என்றால் நான் உனக்கு பத்தாயிரம் காசுகள் கேட்டாலும் கொடுப்பேன்.” என்று கூறி டம்பனுக்கு ஒரு காசினைக் கடனாகக் கொடுத்தார் முல்லா. டம்பன் நாலு ஐந்து நாட்கள் கழித்து முல்லா கொடுத்த ஒரு காசினை எடுத்தக்கொண்டு முல்லாவிடம் வந்தான். “முல்லா அவர்களே தாங்கள் கொடுத்தது அற்ப பொருள்தான் என்றாலும் மிகுந்த நாணயத்துடன் அதைத் திருப்பித்தருவது என்று வந்திருக்கிறேன். பணவிடயத்தில் நான் மிகவும் நேர்மையானவன்
முகத்தில் மலர்ச்சி இல்லாமல் ஏதோ உபத்தைப்படுபவர் போல் அதனை வாங்கிக்கொண்டார் முல்லா. டம்பன் அந்த இடத்தை விட்டு அகலாமல் தலையினைச் சொறிந்துகொண்டு நின்றான். “என்ன சமாச்சாரம்…?” என்று கேட்டார் முல்லா. “ஒன்றுமில்லை ஒரு ஐயாயிரம் பொற்காசுகள் தேவைப்படுகின்றது கொடுத்தீர்கள் என்றால் இதைத் திருப்பிக் கொடுத்தது போல் அதனையும் நாணயமாகத் திருப்பித்தருவேன்.” என்றான் டம்பன்.
“முதலில் நான் வாங்கிய ஒரகாசைத்தான் திருப்பித் தந்துவிட்டேனே” என்று ஒன்றும் விளங்காமல் கேட்டான் டம்டபன். “நீ ஒரு காசு வாங்கிய விடையத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டாய்” என்றார் முல்லா. டம்பன் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தவனாய் ” முல்லா அவர்களே நான் வாங்கிய தொகையினைத் திருப்பிக்கொடுத்திருக்கின்ற போது எவ்வாறு நான் நம்பிக்கைத் துரோகம் செய்ததாகக் கூறுகின்றீர்கள்” என்றான்.
” நம்பிக்ககைத் துரோகம் தான் செய்துவிட்டாய் நான் கொடுத்த ஒருகாசை நீ திருப்பிக்கொடுக்கமாட்டாய் எனக நம்பினேன். நீயோ திருப்பிக் கொடுத்துவிட்டாய். ஆகவே நீ நம்பிக்கைத் துரோகம் தான் செய்து விட்டாய். உனக்கு ஒருகாசும் இனித் தர முடியாது” என்று கூறியவாறே முல்லா எழுந்து வீட்டுக்குள் சென்றுவிட்டார். டம்பன் அதிர்ச்சியுடன் வெளியேறினான்.

முல்லா அந்த மனிதனின் அருகில் சென்று அமர்ந்தார். அந்த மனிதனை நோக்கி, ”ஐயா! தங்களைப் பார்த்தால் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. தாங்கள் கவலையோ, சங்கடமோ அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால், தங்களைப் பார்த்தால் மிகுந்த கவலையும் வேதனையும் அடைந்தவர் போல் தோன்றுகிறது.
தங்கள் கவலைக்குக் காரணம் என்ன என்று நான் அறிந்து கொள்ளலாமா?” என்று வினவினார். அந்த மனிதன் முல்லாவை நோக்கி, ”நண்பரே! நீர் நினைப்பது போல, நான் வசதிகள் நிறைந்த ஒரு செல்வக்குடிமகன்தான். எனக்கு ஏராளமான செல்வம் இருக்கிறது. வீடு, நிலம் போன்ற சொத்துக்களும் நிறைய உண்டு. இவ்வளவு சுகபோக வசதிகள் இருந்தும் என்னால் ஒரு நிமிடம் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.
கடவுள் அருளால் என் பணம் திரும்பக் கிடைத்துவிட்டது. இப்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா?’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான் செல்வந்தன்.புதருக்குப் பின்னால் இருந்து வெளிவந்த முல்லா செல்வனை நோக்கி, ”செல்வக் குடிமகனாரே! வாழ்க்கையில் ஒரு நிமிடம் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்று கூறிக் கொண்டிருந்தீர்கள் அல்லவா?”கொஞ்ச நேரமாவது நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்றுதான் பணப்பையை நான் தூக்கிக் கொண்டு ஓடினேன்.
பிறகு செல்வந்தன் முல்லாவை நோக்கி, ”ஐயா! நீர் என்னைப் போல் ஒரு செல்வர் இல்லை போல் தோன்றுகிறது. சாமானிய நிலையில் உள்ள ஒரு மனிதராகத்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இவ்வாறு பொருளாதார வளத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள நீங்கள் முகமலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுகிறீர்களே, இது எவ்வாறு சாத்தியப்படுகிறது?” என்று கேட்டார்.”அது ஒரு ரகசியம்!,” என்றார் முல்லா.

கழுதையால்கிடைத்த பாடம், சூரியனா? சந்திரனா? – முல்லா கதைகள்

மீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர் – முல்லா கதைகள்

முல்லாவின் திருமண ஆசை, வேதந்த நூல் – முல்லா கதைகள்

யானைக்கு வந்த திருமன ஆசை, மலிவான பொருள் – முல்லா கதைகள்

கப்பலில் வேலை – முல்லா கதைகள்


முல்லா நஸ்ருதின் கப்பலில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார் .அவர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார் .அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியவர் கேட்டார் “புயல் வருமானால் என்ன செய்வீர் ?என்று .
அவர் சொன்னார் “நங்கூரத்தை நாட்டுவேன் “என்று “முன்னைவிட பெரியதாய் இன்னொரு புயல் வருகிறது அப்போது நீர் என்ன செய்வீர் ?”
“நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன் “என்றார் அவர் .இப்படி அது சென்று கொண்டு இருந்தது .
“…பத்தாவது புயல் !”
நஸ்ருதின் சொன்னார் “நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன் “
அந்த மனிதர் கேட்டார் .”ஆனால் இத்தனை நங்கூரத்தை நீர் எங்கிருந்து பெறுவீர் ?”என்று
அதற்கு நஸ்ருதின் சொன்னார் .”தாங்கள் எங்கிருந்து புயல்களை பெறுவீர்களோ அங்கிருந்துதான் “

முல்லாவின்  மற்றய தொகுப்புக்கள்

செயற்கரிய சாதனை – முல்லா கதை


முல்லாவைப் பிடிக்காதவர்கள் மன்னரிடம் முல்லா பற்றி ஏதாவது கோள் சொல்லி அவர் மதிப்பைக் குறைக்க முயன்றனர்.
ஒருநாள் மன்னர் முல்லாவைக் கௌரவிக்கும் விதத்தில் அவருக்கு விருது ஒன்று அளிக்கத் தீர்மானித்து சபையினர் கருத்தைக் கேட்டார்.
முல்லாவைப் பிடிக்காதவர்கள் எழுந்து முல்லா எந்த வகையிலும் அறிவாளி அல்ல. சாமானிய மக்கள் செய்யக்கூடிய செயல்களைத்தான் அவர் பேசி செய்து வருகிறார். சாமானிய மனிதர்களின் இயல்புக்கு மீறிய அற்புதம் எதையும் அவர் நிகழ்த்தியது இல்லை. அதனால் அவர் எந்த வகையிலும் சிறப்பு செய்வதற்குத் தகுதியானவர் இல்லை என்று ஒரே குரலில் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.
அந்தச் சமயம் முல்லா சபையில் இல்லை. சபையை நோக்கி வந்து கொண்டிருந்த அவருக்கு அவருடைய எதிர்ப்பாளர்களின் பேச்சு காதில் விழுந்தது.
உடனே அவர் கீழே குனிந்து கைகளைத் தரையில் ஊன்றி கால்களாலும் கைகளாலும் ஒரு விலங்கு நடப்பதுபோல நடந்து சபைக்குள் பிரவேசித்தார்.
அதைக் கண்டு சபையில் இருந்தவர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தனர்.
மன்னர் வியப்பு தோன்ற சிரித்தவாறு என்ன முல்லா அவர்களே ஏதோ ஒரு விலங்கு போல நான்கு கால்களின் உதவியுடன்  நடந்து வருகிறீரே, உமக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா என வினவினார்.
முல்லா எழுந்து மன்னரை வணங்கி மன்னர் பெருமானே, நான் மனித இயல்புக்கு மீறிய அசாதாரண செயல் எதையும் செய்யவில்லை என்று என் நண்பர்கள் சிலருக்கு வருத்தம்.
அதனால்தான் மனித இயல்புக்கு மாறுபட்டு ஒரு மிருகம்போல நடந்து புரட்சிகரமான சாதனை ஒன்று செய்து காண்பித்தேன். இனி என் நண்பர்கள் என் அறிவாற்றலைச் சந்தேகப்பட மாட்டார்கள் என்றார்.
முல்லாவின் எதிரிகளான பொறாமைக்கார்கள் வெட்கித் தலை குனிந்தார்கள். மன்னர் முல்லாவின் அறிவுச்சாதுரியத்தைக் கண்டு மகிழ்ந்து பரிசுகள் அளித்தார்.

முல்லாவின்  மற்றய தொகுப்புக்கள்

சொல்லாதே! – முல்லா கதை

March 25, 20101 comment

முல்லாவின்  மற்றய தொகுப்புக்கள்

எடுத்துச் செல்வதற்காக அல்ல -முல்லா கதை


முல்லா ஏன் அழுதார்?

March 25, 20101 comment

முல்லா ஏன் அழுதார்?
முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார்.
அவரது நண்பர் கேட்டார்: “முல்லா, ஏன் அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: “சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை
எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”
நண்பர் கேட்டார்: “அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: ” பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய்
சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”
நண்பர் கேட்டார்: “மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: “சென்ற வாரம் எனக்கு 30 இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு
எனது அத்தை இறந்துவிட்டார்.”
நண்பர் கேட்டார்: “சந்தோஷப்படுவதைவிட்டு ஏன் அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: “மூன்று நாட்களுக்குமுன் எனது தாத்தா இறக்கும்முன்
50 இலட்ச ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்.”
நண்பர் கேட்டார்: “கொண்டாடாமல் ஏனப்பா அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: “இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்துபோறதுக்கு
எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் இல்லையே, அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்”
கேட்ட நண்பர் மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார்.
******************************************************
நன்றி :- அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
நன்றி:- நிலா முற்றம்

மீன் – முல்லா கதை


ஒரு தடவை அறவொழுக்கத்தை நேசிக்கும் பிரபலமான தத்துவவாதி ஒருவர் முல்லா வசிக்கும் ஊரை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது சாப்பாட்டு நேரமாகையால் அவர் முல்லாவிடம் நல்ல உணவு விடுதி எங்குள்ளது என்று கேட்டார். முல்லா அதற்கு பதில் சொன்னவுடன், தத்துவவாதி போகும் போது பேச ஆள் கிடைத்தால் நல்லது என்ற எண்ணத்தில் முல்லாவையும் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்தார்.
முல்லாவும் நெகிழ்ந்து போய் அந்த படிப்பாளியை அருகிலிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே போன பிறகு ‘அன்றைய ஸ்பெசல் அயிட்டம் என்ன?’ என்று கடைச் சிப்பந்தியிடம் கேட்டார் முல்லா. ‘மீன்! புதிய மீன்!’ என்று பதில் சொன்னார் சிப்பந்தி. ‘இரண்டு துண்டுகள் நல்லதாக கொண்டு வாருங்கள்’ என இருவரும் ஆர்டர் செய்தனர்.
சிறிது நேரம் கழித்து ஹோட்டல் சிப்பந்தி ஒரு பெரிய தட்டில் இரு மீன் துண்டுகளை வைத்துக் கொண்டு வந்தார். அதில் ஒரு துண்டு பெரியதாகவும், இன்னொரு துண்டு சிறியதாகவும் இருந்தது. அதைக் கண்டவுடன் முல்லா எந்தவொரு தயக்கமில்லாமல் பெரிய மீன் துண்டை எடுத்து தனது தட்டில் போட்டுக் கொண்டார். முல்லாவின் செய்கையால் கடுப்படைந்து போன தத்துவவாதி முல்லாவைப் பார்த்து கடுமையாக முறைத்து விட்டு, ‘முல்லா நீங்கள் நடந்து கொண்ட முறையானது எந்த தர்ம, நீதி, நியாய, மத சாஸ்திரத்துக்கும் ஒத்துவராத ஒன்றாகும்’ என்றார்.
முல்லா, தத்துவவாதி சொல்லுவதையெல்லாம் மிக அமைதியுடன் பொறுமையாக கேட்டுக் கொண்டு வந்தார். கடைசியாக அந்த மெத்தப் படித்தவர் பேசி முடித்தவுடன், “நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்றார் முல்லா. “நான் மனச்சாட்சியுள்ள மனிதனாகையால் சிறு மீன் துண்டை எடுத்திருப்பேன்”. ‘அப்படியா, ரொம்ப நல்லது. இந்தாருங்கள் உங்கள் பங்கு’ என்று சொல்லி சின்ன மீன் துண்டை அந்த தத்துவவாதி தட்டில் வைத்தார் முல்லா.

முல்லாவின்  மற்றய தொகுப்புக்கள்

தளபதியின் சமரசம் – முல்லா கதைகள்


மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார்.
அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.
மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள்.
அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.
மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும்.
முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது.
இது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார் ? என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார்.
மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார்.
கீழே என்ன செய்கிறாய் ? என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார்.
கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக கட்டத் தீர்மானித்திருக்கிறேன் என்றார் முல்லா.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே, கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா ? என்று கோபத்தோடு கேட்டார்.
மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார்.
பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார்.
நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரை யொருவர் அனுசரித்தச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்றார் தளபதி.
நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான்! என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.