Wednesday, 20 August 2014

கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்!- மவ்லவி கே.எஸ்.ஸிராஜுத்தீன் காஷிஃபி

[ ''தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்களுக்கும்பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்'' என்று தனது திருமறையில் கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ் வலியுறுத்துகிறான்அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை குறிப்பிடுகிறான் என்பதை ஆண்கள் கவனிக்கவும்.
அல்லாஹ் திருக்குர்ஆனின் 33 ஆவது அத்தியாயமான ‘அல் அஹ்ஸாப் – ன் 35 ஆவது வசனத்தில்;இஸ்லாம்ஈமான்இறைவழிபாடுஉண்மைபொறுமைஇறையச்சம்தான தர்மம்நோன்புகற்பொழுக்கம்,திக்ரு செய்வது ஆகிய இந்த பத்து விஷயங்களை குறிப்பிட்டுஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சுவனம் செல்ல இந்த பத்து தன்மைகளும் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறான்.
இதில் ஒன்பதாவதாக தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்களுக்கும்,பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்” என்று கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ் வலியுறுத்துகிறான்அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை குறிப்பிட்டிருப்பதை எவரும் கண்டு கொண்டதாகத்தெரியவில்லை.
ஃகாத்திமிய்யா என்ற வமிசத்தை சார்ந்த பெண்ணொருத்தி திருமணம் முடித்த பின் விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டு, ”யா ரசூலல்லாஹ்நான் தகாத உறவில் ஈடுபட்டு விட்டேன்” என்று கூறியபோது அப்பெண்மணியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்லெறிந்து கொல்லச்சொன்னார்கள்அதுபோல் மாயிஜ் என்ற நபித்தோழர் தவறான உறவு வைத்து விட்டு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தபோது அவரையும் கல்லெறிந்து கொல்லச்செய்தார்கள்.
ஒரு பெண் அந்நிய ஆணின் மூலமாக நிர்பந்திக்கப்பட்டு உறவு கொள்ளப்படும்போது தன் கற்பு சூறையாடப்பட்டு விட்டது என்று நீதிமன்றங்களின் படிகளில் ஏறுவதுபோல் அமெரிக்காவில் படித்துக்கொடுக்கும் ஒரு பெண் ஆசிரியர் தன்னுடைய மாணவனிடத்தில் தவறான உறவு வைத்தபோது எங்களது குடும்பப் பையனின் கற்பு சூறையாடப்பட்டு விட்டது” என்று மாணவனின் உறவுக்காரர்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர் என்ற பத்திரிகை செய்தி பெண்ணுக்கு கற்பு இருப்பது போல் ஆணுக்கும் கற்புண்டு என்பதை நிரூபித்தது.
கற்பொழுக்கத்திற்கு பெயர் போனவர்கள் ஹளரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்எந்த அந்நிய ஆணையும் சந்தித்திராதவர்கள்ஆனால்கணவன் இல்லாத இவர்கள் ஹளரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈன்றெடுத்தபோது ஊர்மக்கள் தூற்றினார்கள்அப்போது தொட்டில் குழந்தையாக இருந்த ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பேச வைத்து மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கற்பொழுக்கத்தை நிரூபித்தான் ஏக இறைவன்.
அதுபோலவே யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னை நாடி வந்த அரசியிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கிறார்கள்ஒழுக்க சீலராக நடந்து கொள்கிறார்கள்ஆனால்தன் ஆசைக்கு இணங்காத யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்மீது அவப்பெயரை அரசி ஏற்படுத்துகிறார்இந்த நேரத்தில் அரசியின் குடும்பத்தை சார்ந்த ஒரு தொட்டில் குழந்தையை பேச வைத்து யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பத்தினித்தனதை இறைவன் நிலைநாட்டினான்.
இவைகளில் எல்லவற்றிலும் மனிதனை அதிகமாக வழி தவறச்செய்யக்குடியது பார்வைபார்வையை ஒரு மனிதன் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் இன்ஷா அல்லா ஹ் நிச்சயம் அவன் கற்பொழுக்கத்தில் மிகப்பெரிய வெற்றியைக் காணுவான்எனவேதான் திருமறையிலும்திருநபி போதனைகளிலும் பார்வை பேணுதலைப்பற்றி அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
பார்வையை பேணுவதற்காக பொது இடங்களில் அமருவதை விட்டும் ஸஹாபாக்களை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள்நிர்பந்தமாக அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பார்வையை தாழ்த்திக்கொண்டு அமருங்கள் என் கட்டளையிட்டார்கள்அனேகமாக இன்று பெரும்பாலான ஆண்கள் இதற்கு நேர்மாறாகத்தானே நடக்கிறார்கள்பெண்களுடைய ஒழுக்கம் பற்றி பேசக்கூடிய இவர்களில் எத்தனை பேர் இதனைப் பின்பற்றுகின்றனர்.
ஸஹாபாக்கள் ஒரு யுத்த்திற்காக நாடு கடந்து செல்கிறார்கள் அந்நாட்டை நெருங்கியபோது முஸ்லீம் எதிரிகள் முஸ்லீம்களை முறியடிப்பதற்காக தந்திரம் செய்கிறார்கள்அதாவது பல நாட்களாக மனைவியர்களைப் பிரிந்து வாழும் இந்த முஸ்லீம்களை பெண்களைக் கொண்டு தான் வீழ்த்த வேண்டும்அதன்படி ஊரின் ஆரம்பத்திலுள்ள கடைத்தெரு வழியாகவே இஸ்லாமிய படை நுழைய வேண்டும்எனவேதங்களுடைய இளம் வாலிபப் பெண்களை அரைகுறை ஆடையுடன் கடைத்தெருவில் நிற்க வைத்துவிட்டு நீங்கள் இங்கு வருகின்ற முஸ்லீம் வீரர்களை தொட்டு சீண்ட வேண்டும்” என்றும் யோசனை சொல்லித்தருகிறார்கள்.
ஊரை நெருங்கிய ஸஹாபாக்களுக்கு நிலைமை தெரியவந்த போது இஸ்லாமிய படைத்தளபதி உபைதுப்னுல் ஜர்ராஹ் ரளியல்லாஹு அன்ஹுபோர் வீரர்கள் அனைவரும் பார்வையை தாழ்த்தும்படி கட்டளையிடுகிறார்கள்எல்லா ஸஹாபாக்களும் பார்வையை தாழ்த்தியவர்களாக ஊருக்குள் நுழைகிறார்கள்இவர்களின் இந்த செயல் யுத்தமில்லாமல் வெற்றி கிடைக்க காரணமாகிவிட்டது.நின்றிருந்த பெண்களும்ஊர்மக்களும் இஸ்லாத்தை தழுவினார்கள் என இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.

No comments:

Post a Comment