Wednesday, 17 September 2014

பழமொழி & ஜொக்ஸ்

1. பிறரைச் சீர்திருத்தும் கடமையை விட, தன்னை சீர்த் திருத்துவதே முதல் கடமைபெர்னாட்ஷா

2.
தலைசிறந்த மனிதர் ஒவ்வொருவரும், தனித்தன்மை வாய்ந்தவர்எமர்சன்

3.
நல்ல நூல்களைப் படிப்பது, தலைசிறந்த மனிதருடன் உரையாடுவதைப் போன்றதுதெகார்த்

4.
உன் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டுமானால், எதிலும் மிதமாக இரு - சார்லஸ் அகஸ்டின்

5.
சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும்எமர்சன்

6.
சண்டைக்கு இருவர் தேவை, நீங்கள் அவ்விருவரில் ஒருவராக இருக்காதீர்கள்ஆவ்பரி

7.
தவறு செய்து விட்டோம் என்று தெரிந்தும், அதை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதேஆவ்பரி

8.
சிறிய மனிதர்களைப் பெருந்தன்மையுடன் நடத்துபவன் தான் பெரிய மனிதன் - கார்லைல்

9.
எல்லாருக்கும் நண்பனாயிருப்பவன், யாருக்கும் நண்பனல்லமுல்லர்

10.
பெரியோர் பேச்சு, அறிவைத் தரும், பெரியோர் மௌனம், அன்பைப் பெருக்கும்கதே

11.
அளவுக்கு மிஞ்சி கிண்டல் செய்தால், அன்பு முறிந்து, ஆபத்தில் போய் முடியும்- வால்டேர்

12.
அழகு என்பது, சில காலமே நிற்கும் கொடுங்கோலாட்சி, அதற்கு நீ அடிமையாகாதேவால்டேர்
13. குற்றங்கள் பிறக்கும் இடங்களில் முக்கியமானவை குடியும், அறியாமையுமேஆவ்பரி

14. பூரண ஞானம் அடைந்தவனுக்கு, துயரம் என்பது இல்லைகாந்திஜி


15. கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை உணராதவனே குருடன்காந்திஜி


16. அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும் வரை, உங்களுக்கு என்றைக்கும் விடிவுகாலம் தான்பிளாட்டோ


17. அதிகமான எதிர்பார்ப்பு நிச்சயம் கை கூடப் போவதில்லைஷேக்ஸ்பியர்


18. அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையால் அல்ல, விடாமுயற்சியால் தான் - ஜேம்ஸ் ஆலன்


19. பகைமையை அன்பால் வெல்லுங்கள்; சோம்பலை செயல் ஊக்கத்தால் வெல்லுங்கள்காந்திஜி 


20. எவன் ஒருவன் தனக்குத்தானே மனக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ, அவனே சுதந்திர மனிதனாவான்காந்திஜி


21. பெரிய பெரிய சாதனைகளெல்லாம் செய்து முடிக்கப்படுவது ஆழ்ந்த மௌனத்தால்தான்எமர்சன்


22. திறமைதான் ஏழையின் மூலதனம்எமர்சன்


23. இதயத்தின் வாசல்கள் திறக்கப்படாதவரை, ஒரு நாடு சுதந்திரம் பெற்றதாகச் சொல்ல முடியாது - வல்லபாய் படேல்


24. நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்திக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால், இன்னொரு தவறைச் செய்தவராகி விடுவீர்கள்கன்பூசியஸ்


25. சதுரங்க விளையாட்டைப் போல, வாழ்விலும் முன் யோசனை வெற்றி பெறுகிறதுபாக்ஸ்டன்


26. நாம் துணிச்சலோடு இருந்தால், எந்த சக்தியும் நமக்குத் துணையாக வந்துவிடும்பெசில்சிங்


27. எப்போதும் உண்மையை மறைக்காமல் சொல்கிற மனத்தின்மை வேண்டும்காந்திஜி


28. தியாகம் தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத் தந்த பாடம்காந்திஜி


29. மிருகத்தைப் போல நடக்கும் மனிதன், மிருகத்தை விடவும் மோசமானவன்காந்திஜி


30. மன அமைதியோடு இருப்பவனுக்கு என்றும் ஆபத்து இல்லைலாவோட்சே


31. ஒருவருக்கொருவர் நல்ல பண்புகளுடன் நடந்து கொள்வது, வாழ்க்கையில் மிகவும் அடிப்படையான தேவையாகும் - நபிகள் நாயகம்


32. இந்த உலகம் கோழைகளுக்கல்ல; பயந்து ஓட முயலாதே, வெற்றியோ தோல்வியோ எதிர்பார்க்காதேவிவேகானந்தர்


33. நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாதுப்ரெமர்


34. நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால், நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகிவிடும்காந்திஜி


35. கல்வியில் சிறந்தவன் என்று பெயர் வாங்குவதை விட, ஒழுக்கத்தில் சிறந்தவன் என்று பெயர் வாங்க வேண்டும்காந்திஜி
36. உயர்ந்த எண்ணங்களை உடையோர், ஒருநாளும் தனித்தவராகார்காந்திஜி

37. மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே, உண்மையான கல்விகாந்திஜி


38. வெற்றி என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வதுநைட்டிங்கேல்


39. குழந்தையின் எதிர்காலம், எப்போதும் தாயின் வேலையால் அமைகிறதுநெப்போலியன்


40. பொய்யை மெய்யாலும், விரோதத்தை அன்பாலும், ஆத்திரத்தை, சகிப்புத் தன்மையாலும் வெல்லலாம்காந்திஜி


41. எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள்காந்திஜி


42. எவர் ஒருவர் தன் கடமைகளை சரிவர செய்கிறாரோ, அவருக்கு உரிமைகள் தானாகவே வந்தடையும்காந்திஜி


43. கீழான லட்சியத்தில் வெற்றி காண்பதை விட, உயர்ந்த லட்சியத்தில் தோல்வி காண்பது சிறந்ததுபிரவுனிங்


44. சிக்கல் எது என்று அறிந்தாலே, பாதி சிக்கல் தீர்ந்துவிடும்கிப்ளிங்


45. நம்பிக்கையுடையவன் எதையும் எளிதில் முடிக்கும் திறமையுடையவன்காந்திஜி


46. மன்னிக்கும் குணம், ஆற்றல் வாய்ந்தவர்களுக்கு ஓர் அடையாளம்காந்திஜி


47. யாருமே உதவாக்கரை இல்லை, அவர்கள் நேரத்தை வீணாக்காமல் இருக்கும் வரை - மார்த்தா  எச்


48. பிறர் தவறு கண்டு தன் தவறை திருத்திக் கொள்பவன் அறிவாளிகாந்திஜி


49. செயலில் கெட்டவனை விட, மனதில் கெட்டவனே மிகவும் கெட்டவன்காந்திஜி


50. அகிம்சை மனித குலத்திற்கு கிடைத்திருக்கும் மாபெரும் சக்திகாந்திஜி
51. பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும்   சாதிக்க முடியும்முல்லர்

52. வாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை - இம்மூன்றும் இருந்தால் போதும் - தாமஸ் ஆல்வா எடிசன்


53. துக்கத்தால் தற்கொலை செய்து கொள்பவன் தைரியசாலி என்றால், அந்தத் துக்கத்தைத் தாங்கிக் கொள்கிறவனோ பெரும் வீரன்மாஸிங்கர்


54. நாளைக்கு நல்ல காரியம் செய்வேன் என்று சொல்பவன் முட்டாள்; அறிவுள்ளவன் நேற்றே அதைச் செய்து முடித்திருப்பான்மார்ஷல்


55. பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும், துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரணத்திற்கு ஒப்பானது; வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கைவிவேகானந்தர்


56. உலகத்தின் ரகசியத்தை அறிவு ஒன்றால் மட்டும் அளந்து விட முடியாதுகதே


57. வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவைகாண்டேகர்


58. மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே, ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம் - செஸ்டர் பீல்டு


59. மனத் திருப்தி, நமக்கு இயற்கையாகக் கிடைத்த செல்வம்; ஆடம்பரம், நாம் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட பஞ்சம்சாக்ரடீஸ்


60. தன்னைத் தானே மேதாவியாக நினைத்திருக்கும் இளைஞர்கள், இருந்த இடம் தெரியாமல் போய் விடுகின்றனர்மகாவீர்


61. லட்சியத்தில் கவனம் செலுத்தி, அதை அடைவதற்கு முயல்கிறவன், தன்னை அறியாமலேயே மேதையாக உருவாகிறான் - நெப்போலியன் ஹில்


62. பிரச்சனைகள் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றனகென்னடி


63. ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும் மாறும் போது, அமைதி அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடுகிறது - மார்க்ஸிம் கார்க்கி


64. எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதேயாரையும் ஒதுக்காதே; உன் பணியை ஊக்கத்துடன் செய்அரவிந்தர்


65. சுறுசுறுப்பாய் உள்ள மனிதன், எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பான்ஹென்றி போர்டு


66. உலகம் அனைத்தையும் ஒரு தட்டிலும், தாயை மறுதட்டிலும் வைத்து நிறுத்தினால், உலகின் தட்டுதான் மேலே இருக்கும் - லாங்க்டேல் பிரபு 


67. மேலோர்கள் கெட்டாலும், அவர்களுடைய மேன்மையான பண்புகள் ஒரு போதும் கெடாதுலாங்பெல்லோ


68. தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லைபுக்கன்ஸ்


69. சிக்கனமாக வாழும் ஏழை, சீக்கிரம் செல்வந்தனாவான்செனேகா


70. சிறிய ஓட்டைதான், பெரிய கப்பலையும் மூழ்கடித்து விடும்சாணக்கியன்


71. அறிவு காட்டும் வழியில் மட்டும் செல்லாதே; ஆன்மா கூறும் வழியிலும் செல்டால்ஸ்டாய்


72. அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாதுசாணக்கியன்
73. செல்வமும், சிபாரிசும் வளர்ச்சிக்கு உதவாதுமாத்யூஸ்

74. அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும்இங்கர்சால்


75. ஆசையில் உள்ளவன் கையில், அவனையும் அறியாமல் விலங்கு பூட்டப்பட்டிருக்கும் - எபிக் டெட்டஸ்


76. திட்டங்கள் தீட்டிக்கொண்டிருப்பதை விட்டு ஒழியுங்கள்; முதலில் செயலில் இறங்குங்கள்பிளாரன்ஸ்


77. புறக்கணிப்பு என்ற நோய்க்கு, மருந்தே கிடையாது; எனவே யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள்இங்கர்சால்


78. நமக்கு எதையெல்லாம் பிறர் செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ, அதையெல்லாம் நாம் பிறருக்குச் செய்யக் கூடாதுகான்பூசியஸ்


79. பொறுமை உள்ள மனிதன் நிச்சயம் வெற்றி பெறுவான்எபிடேட்ஸ்


80. உலகத்தை வெறுக்கலாம்; ஆனால் உலகமின்றி வாழ முடியாது - வேஸ்ஸன் பர்க்


81. கசப்பான மருந்து தான் நோயை குணப்படுத்தும்சாணக்கியன்


82. செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்; செய்ய முடியாதவன் போதிக்கிறான்பெர்னாட்ஷா
83. தவறாகச் செய்ததால் தோல்வியடைந்த காரியத்தை, மீண்டும் முழுமையாக, அதிகக் கவனத்துடன் முறைப்படி செய். வெற்றி நிச்சயம்மில்டன்

84. வாழ்க்கைக்கு வழிகாட்டும் சான்றோருடைய வாழ்க்கை வரலாறுகள்அவர்களைப் போல் நாமும் 

      ஆகலாம் என்று நினைவூட்டுகின்றன  –  லாங்பெல்லோ


85. சமயத்தின் பெயரால் தெய்வத்தின் எந்த வடிவத்தையும் இகழாதே! -  ராமகிருஷ்ண பரமஹம்சர்


86. உடலில் அணியும் உடையை விட மேலானது, முகத்தில் அணியும் மலர்ச்சி –  ரூஸ்வெல்ட்


87. உறுதியற்ற, குழப்பமான மனிதர்கள், ஒரு காரியத்திற்கும் உதவாதவர்கள்  - ராமகிருஷ்ண பரமஹம்சர்


88. சண்டை போடும் நேரமெல்லாம், உண்மை அதன் சத்தியத்தை இழந்து விடுகிறது  – பைரன்


89. பெரும் அறிவாளிகள், புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்து  படிக்கின்றனர்வின்யூடவ்


90. இன்று செய்ய முடிந்ததை இன்றே செய், நாளை வரை தள்ளிப் போடதே –  பிராங்களின்


91. சட்டம் ஏழைகளை கசக்கிப் பிழிகிறது; பணக்காரர்களுக்கு பணிவிடை  செய்கிறது - கோல்டு ஸ்மித்


92. நீ குழந்தையை போல் இருக்க பாடுபடு, ஆனால் உன்னைப் போல் அவர்களை ஆக்க முயலாதே -            கலில் கிப்ரான்


93. நல்ல மனமே மதத்தின் பயன், மனம் கெட்டால் மதம் இல்லை- சத்ய  சாய்பாபா


94. மன உறுதியுள்ளவன், மிகப் பெரிய கஷ்டங்களையும் கூட,எளிதாக தாண்டி வெற்றி பெற்று விடுகிறான் - எச்.ஜி.வெல்


95. கடவுள் உனக்கு நிறைய ஆடுகளைக்  கொடுப்பார்; ஆனால் நீ தான் மந்தையைக் காத்துக் கொள்ள வேண்டும்ஆலன்போ


96. விரைவில் உயர்ந்த நிலைக்கு வருவது பெரிதன்று; எப்பொழுதும் உயர்ந்தபடி இருக்க வேண்டும் அது தான் பெரிதுஇப்தார்க்


97. பொருள் உள்ள அளவு மண்ணுலகில் மதிப்பு; புண்ணியம் உள்ள அளவு விண்ணுலகில் மதிப்பு 

      - பகவத் கீதை


98. அனைவருக்கும் சொந்தமாக இல்லாத சகல செல்வமும், அதர்ம செல்வமே - பால் ரிச்சர்ட்


99. தற்பெருமை, தன் எஜமானனை ஒருமுறையாவது கீழே தள்ளாமல் விடாது -   பிளெச்சர்


100.  உழைப்பால் உடல் நலமும், உடல் நலத்தால், உள்ள நிறைவும் உண்டாகும் - பியாட்டி


101. வாய்ப்பு தானாக வருவதல்ல; மனிதன் தானே, அதை உண்டு பண்ணிக் கொள்ள வேண்டும் -         பெர்னாட்ஷா


102. அறவழியில் நிற்பவர் அடையும் அமைதியும், மகிழ்ச்சியும் இவ்வளவென்று அறுதியிட 

        இயலாது - தோமல்


103. ஆசைகளை திருப்தி செய்வதில் அல்ல, மட்டுப்படுத்துவதில் தான் அமைதி உள்ளதுஹீபர்


104. இன்பம் வரும் போது, அதைப் பற்றி சிந்தனை செய்யாதே; அது போகும்போதுஅதைப் பற்றி சிந்தனை செய் - அரிஸ்டாட்டில்


105. சோகம் எனும் பறவைகள், உங்கள் தலைக்கு மேல் பறப்பதை தடுக்க இயலாது. ஆனால்உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதை தவிர்க்கலாம் - ஸ்டீலி


106. பெரிய வெற்றிகள் கிட்டும் போதும், பெரிய தோல்விகள் ஏற்படும் போதும் அமைதியுடன் செயல்பட வேண்டும் - பெர்ட் ரண்ட் ரஸ்ஸல்


107. அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது, அது தகுதியானவர்களுக்கு இலவசமாக 

        தரப்படுகிறது - லாங்பெல்லோ


108. தாயின் கண்ணீரைத் துடைப்பவனே சிறந்த மகன் - வெல்ஸ்


109. தாயின் கோபம், பூ மேல் விழுந்த பனி மாதிரி - கார்ல் மார்க்ஸ்


110. ஒரு நல்ல தாய், நூறு ஆசிரியர்களுக்குச் சமம் - ஹெர்பர்ட்


111. தாயின் பணியைப் பொறுத்தே, குழந்தையின் எதிர்கால விதி இருக்கிறதுநெப்போலியன்


112. தன் வேலையைக் கண்டு கொண்ட மனிதன் பாக்கியசாலி - கார்லைல்


113. சுறுசுறுப்பு எல்லா கடன் களையும் அடைத்து விடும் - ஆரோன்புர்


114. தெய்வ நம்பிக்கைக்கு அடுத்து, உழைப்பில் நம்பிக்கை வை - போவீ


115. அடிமை போல் உழைப்பவன், அரசனை போல் உணர்கிறான் - சால்புர்ஸ்


116. மிகக் குறைவாக பேசுபவர்களே, உலகில் மிகக் சிறந்த மனிதர்கள் - ஷேக்ஸ்பியர்


117. கடுமையான உழைப்பைத் தவிர, வெற்றிக்கு வேறு ரகசியம் ஏதுமில்லைடர்னர்

1.   தொண்டன் 1:   பிரச்சாரபீரங்கியாஇருந்தவரை தீடீர்ன்னு கட்சியை விட்டு நீக்கிட்டாரே நம்ம தலைவர் ஏன்?

     
தொண்டன் 2:    இப்ப இருக்குற
 
நிலைமையில், “ ஆயுதம்வச்சிருக்கிறதா அரஸ்ட்  பண்ணிடுவாங்களோன்னு தலைவர் பயப்படுறாராம்.

3.  
தொண்டன் 1: தலைவரோட தமிழ்ப்பற்று தாறுமாறா போயிருச்சு !

தொண்டன் 2: எப்படி?

தொண்டன் 1: ஈரோடுங்கிற ஊர் பேரை,
 "
ஈசாலை" ன்னு மாத்தணும்ன்னு சொல்றாரே!!!


5.
திருடன் 1 : விமானத்தில போகும் போது, கபாலி தன் கை வரிசையை காட்டிட்டான்!

திருடன் 2 : என்ன செஞ்சான்..??

திருடன் 3 : அங்க இருந்த "கருப்பு பெட்டியை" திருடிட்டு வந்திட்டான்....!!!


7. 
தொண்டன் : தலைவரே ! சொன்ன கேளுங்க... இன்"லேண்டு"ங்கிறது லெட்டர் எழுதுற காகிதம் தான். அதை போய் வளைச்சு போடணும்ன்னு சொல்றீங்களே!!



9.  
தொண்டன் 1  : தலைவர் திடீர்னு டிக்ஸனரி கேக்கறாரே ஏன்?

 
தொண்டன் 2 : அர்த்த சாஸ்திரம் படிக்கப் போறாராம்!!!
2.   தொண்டன் 1:   தூக்கைரத்து     செய்யணும்ன்னு தலைவர் கிட்ட சொன்னது தப்பா ஏன்?

தொண்டன் 2:     “தூக்குக்குபதிலா வேறு என்னபாத்திரம்அறிமுகப்படுத்தலாம்னு கேட்கறாரு!!


4. 
பெண் 1 : மகளிரணி தலைவி புதுசா போராட்டம் அறிவிச்சிருக்காங்களே ... என்ன அது?

பெண் 2 : ஆண்களுக்கு, "குண்டர் சட்டம்" இருக்கும் போது, சம உரிமையாக "குண்டம்மா சட்டம்" ஒண்ணு தேவைன்னுதான்..



6. 
தொண்டன் 1 : தலைவர், கூலிப்படையை வேண்டாம்னு சொல்லிட்டராமே!!

தொண்டன் 2 : ஆமா, நம்ம ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி, "பணக்காரப் படைக்கு" ஏற்பாடு பண்ணுங்கன்னு சொல்லிட்டாராம்!!



8. 
பெண் 1 : குடிச்சிட்டா அவர் குழந்தை மாதிரி ஆகிடுறாரா... எப்படி??

பெண் 2 : ஊறுகாய்க்கு பதிலா மண் அள்ளி திங்கிறார்!!!


10. 
போலீஸ் 1: கபாலிக்கு சமூக சிந்தனை கூடுதல்ன்னு சொல்றீயே!!! ஏன்?

போலீஸ் 2 : சமச்சீர் திருட்டையும் கொண்டு வரணும்கிறானே!!!!

11. தொண்டன் 1:  தலைவர், குடிபோதையில் பேசுறார்ன்னு எதை வச்சு சொல்ற?

தொண்டன் 2: வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன், நகைக்கடன் வழங்குவது போல, நேர்த்திக்கடனும் வழங்க வங்கிகள் முன்வர வேண்டும்ன்னு பேசுறாரே!!!


13. 
தலைவர் 1: என்னய்யா இதுயசோதாவை அறிமுகப்படுத்துறோம், படுத்துறோம்றாங்க.... இன்னும் கண்ணுல காட்ட மாட்டேங்கிறாங்களே??

தொண்டன் 2: ஐயோ!!! தலைவரே... அது யசோதா இல்ல.. மசோதா!!!


15. 
தொண்டன் 1: ஜெயிலுக்கு போயிட்டு வந்த தலைவர் வீட்டுல, யார்யா காலிங்பெல்லை அடிச்சது?

தொண்டன் 2: ஏன் என்ன ஆச்சு?

தொண்டன் 1: பாரு... சாப்பாட்டு நேரம்னு நெனச்சி, தலைவர் தட்டை தூக்கிட்டு ஓடறார்!!!

17. 
ராமு:   ன் பொண்டாட்டிய ன்ன தான் செய்றது?

சோமு:  ன் ன்ன ண்றாங்க?

ராமு:  நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.

சோமு கார் ஓட்டி பாரேன்

19.  
ஜோசியர் ப்பவே சொன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நான் தான் ரியா புரிஞ்சிக்கல..

ன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?

நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. ண்டைல செம அடி அடிச்சிட்டா ன்ன



12. ரெக்சோனா சோப் பிடிக்கும்ன்னு நண்பர்கிட்ட பேசிக்கிட்டிருக்கும் போது சக்சேனாவுக்கும் எனக்கும் தொடர்புன்னு நீங்க
என்னை புடிச்சிட்டு வந்தது தப்பு சார்!!!




14. 
தொண்டன் 1: மூன்றாம் உலகப்போர் வருமான்னு தலைவர் கிட்ட கேட்டது தப்பா போச்சா.... ஏன்??

தொண்டன் 2: அப்படின்னா ஏற்கனவே ரெண்டு உலகம் இருந்ததான்னு கேட்கறாரு!!!




16. 
நோயாளி:   டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை. ங்களத்தான் நான் தெய்வமாநினைக்கிறே‌‌ன்...

டாக்டர்:  அப்போ... ஆபரேஷன் முடிஞ்தும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க?


18.
  
நேர்முகத் தேர்வுக்குப் போனியே என்ன ஆச்சு?

அதன் ன் கேக்குறீங்க..

ன் ன்ன ச்சு?

மறைமுகமா ஏற்கெனவே ஆளை செலக்ட் பண்ணிட்டாங்களாம்



20. 




ஒளவையாரின் - ஆத்திச்சூடி

கடவுள் வாழ்த்து

ஆத்தி் சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே

உயிர் வருக்கம்

- அறம் செய விரும்பு
- ஆறுவது சினம்
- இயல்வது கரவேல்
- ஈவது விலக்கேல்
- உடையது விளம்பேல்
- ஊக்கமது கைவிடேல்
- எண் எழுத்து இகழேல்
- ஏற்பது இகழ்ச்சி
- ஐயம் இட்டு உண்   
- ஒப்புரவு ஒழுகு
- ஓதுவது ஒழியேல்
ஒள - ஒளவியம் பேசேல்
  - அஃகம்  சுருக்கேல்

ககர வருக்கம் 

கடிவது மற
காப்பது விரதம்
கிழமைப்பட வாழ்
கீழ்மை அகற்று
குணமது கைவிடேல்
கூடிப் பிரியேல்
கெடுப்பது ஒழி
கேள்வி முயல்
கைவினை கரவேல்
கொள்ளை விரும்பேல்
கோதாட்டு ஒழி
கௌவை அகற்று

தகர வருக்கம்

தக்கோன் எனத் திரி
தானமது விரும்பு
திருமாலுக்கு அடிமை செய்
தீவினை அகற்று
துன்பத்திற்கு இடம் கொடேல்
தூக்கி வினை செய்
தெய்வம் இகழேல்
தேசத்தோடு ஒட்டி வாழ்
தையல் சொல் கேளேல்
தொன்மை மறவேல்
தோற்பன தொடரேல்

பகர வருக்கம்

பழிப்பன பகரேல்
பாம்பொடு பழகேல்
பிழைபடச் சொல்லேல்
பீடு பெற நில்
புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
பூமி திருத்தி உண்
பெரியாரைத் துணைக் கொள்
பேதைமை அகற்று
பையலோடு இணங்கேல்
பொருள்தனைப் போற்றி வாழ்
போர்த் தொழில் புரியேல்

வகர வருக்கம்

வல்லமை பேசேல்
வாது முற்கூறேல்
வித்தை விரும்பு
வீடு பெற நில்
உத்தமனாய் இரு 
ஊருடன் கூடி வாழ்
வெட்டெனப் பேசேல்
வேண்டி வினை செயேல்
வைகறைத் துயில் எழு 
ஒன்னாரைத் தேறேல்
ஓரம் சொல்லேல்


<< முன்னே
உயிர்மெய் வருக்கம் 

கண்டொன்று சொல்லேல்
ங்ப் போல் வளை
சனி நீராடு
ஞயம்பட  உரை  
இடம்பட வீடு எடேல்
இணக்கம் அறிந்து இணங்கு
தந்தை தாய்ப் பேண்
நன்றி மறவேல்
பருவத்தே பயிர் செய்
மண் பறித்து உண்ணேல்
இயல்பு அலாதன செய்யேல்
அரவம் ஆட்டேல்
இலவம் பஞ்சில் துயில்
வஞ்சகம் பேசேல்
அழகு அலாதன செய்யேல்
இளமையில் கல்
அரனை மறவேல்
அனந்தல் ஆடேல்

சகர வருக்கம்

சக்கர நெறி நில்
சான்றோர் இனத்து இரு
சித்திரம் பேசேல்
சீர்மை மறவேல்
சுளிக்கச் சொல்லேல்
சூது விரும்பேல்
செய்வன திருந்த செய்
சேரிடம் அறிந்து சேர்
சையெனத் திரியேல்
சொற் சோர்வு படேல்
சோம்பித் திரியேல்


நகர வருக்கம்

நன்மை கடைப்பிடி
நாடு ஒப்பன செய்
நிலையில் பிரியேல்
நீர் விளையாடேல்
நுண்மை நுகரேல்
நூல் பல கல்
நெற்பயிர் விளைவு செய்
நேர்பட ஒழுகு
நைவினை நணுகேல்
நொய்ய உரையேல்
நோய்க்கு இடம் கொடேல்

மகர வருக்கம்

மனம் தடுமாறேல்
மாற்றானுக்கு இடம் கொடேல்
மிகைபடச் சொல்லேல்
மீதூண் விரும்பேல்
முனைமுகத்து நில்லேல்
மூர்க்கரோடு இணங்கேல்
மெல்லி நல்லாள் தோள்சேர்
மேன்மக்கள் சொல் கேள்
மை விழியார் மனை அகல்
மொழிவது அற மொழி    
மோகத்தை முனி










No comments:

Post a Comment