Thursday, 18 April 2019

ஏழு செயல்களால் வறுமை சீக்கிரம் வந்து விடும்:

🌹🌹🌹 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🌹🌹
____________________________
ஏழு செயல்களால் வறுமை சீக்கிரம் வந்து விடும்

(1) வேக வேகமாக தொழுவது.

(2) நின்று கொண்டு சிறு நீர் கழிப்பது.

(3) சிறு நீர் கழித்த இடத்தில் ஒலு செய்வது.

(4) நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது.

(5) விளக்கை வாயால் ஊதி அனைப்பது.

(6) நகத்தை பல்லால் கடிப்பது.

(7) அணிந்திருக்கும் ஆடையைக் கொண்டு முகத்தை துடைப்பது.
________🌹🌹🌹🌹________
ஏழு செயல்களால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

(1) குர்ஆன் அதிகமாக ஓதுவது.

(2) ஜந்து நேரம் விடாமல் தொழுவது.

(3) அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது.

(4) ஏழைகளுக்கு உதவி செய்வது.

(5) பாவங்களிலிருந்து விலகிக் கொள்வது. மற்றும்
பாவ மன்னிப்புத் தேடுவது.

(6) பெற்றோர்கள் மற்றும் உறவினர்களோடு நல்ல முறையில் சேர்ந்து வாழ்வது.

(7) காலையில் சூரா யாசீன் ஓதுவது. மாலையில் சூரா வாகிஆ ஓதுவது.

 வறுமையை உண்டாக்கக்கூடிய அந்த ஏழு செயல்கலில்யிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.ஆமீன்

இன்னும் செல்வச் செழிப்பை ஏற்படுத்தும் ஏழு செயல்களை செய்யக்கூடிய பாக்கியத்தை தந்து அருள்புரிவானாக.

ஆமீன் ஆமீன் ஆமீன்.

     (நூல்: خطبات ذوالفقار)

Tuesday, 16 April 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. மஞ்சரி என்றால் என்ன?*

ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட

பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும்.

*2. மலரின் உறுப்புகள் என்ன?*

பூவடிச் செதில்,
பூக்காம்பூச் செதில், பூத்தளம்,
புல்லிவட்டம், அல்லிவட்டம்,
 மகரந்ததாள் வட்டம், சூலக வட்டம்

*3. மிக வேகமாக வளரும் தாவரங்கள் ஒன்று இத்தாவரம் வெப்பமண்டல தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது?*
                                ஆகாயத்தாமரை

*4. கார்த்திகைப் பூஎன்றும் அழைக்கப்படுவது?*
                                காந்தள்(Gloriosa)

*5. அல்லி வகைகள் என்ன ?*

குளிரை தாங்குகிற நீர் அல்லிகள்

பகலில் மட்டுமே பூக்கும்,

ஆனால் வெப்ப நீர் அல்லிகள் பகலில் அல்லது இரவில் பூக்கின்றன.

*6. இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விரூதில், பத்ம வார்த்தை எந்தபூவைக்குறிக்கும் ?*

தாமரை

*7. எந்த மலரின் தேநீர் சீனா நாட்டினர் பருகுகின்றனர்?*

மல்லிகை. அங்கு இதனை மல்லிகைப் பூ தேநீர்  என்றழைக்கிறார்கள்.

*8. எது இந்தியாவில் கட்டப்பட்ட முதல்கப்பல் செப்பனிடும் துறை?*

மும்பையில் சாசன் கப்பர் செப்பனிடும் துறை.

இது தற்போது மீன் சந்தையாக உள்ளது

*9. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போது காஷ்மீர் மன்னர் யார்?*

ஹரி சிங்.


*10. 2010 ஆம் ஆண்டும், FIFA(பிபா)உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன?*
                                 ஜபுலணி(Jabulani).

*11. ஏது ஆசியாவில் மிக பெரிய சேரி இருக்கிறது?*
மும்பை தாராவி.

Monday, 15 April 2019

மகத்தான நற்பாக்கியங்களைப் பெற்றுத் தரக் கூடிய முப்பது சிறந்த அமல்கள்.

மகத்தான நற்பாக்கியங்களைப் பெற்றுத் தரக் கூடிய முப்பது சிறந்த அமல்கள். இவற்றைப் பேணுதலாகச் செய்து அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெற்ற சிறந்த அடியானாக மாற நாம் ஒவ்வொருவரும் முயற்சிப்போமாக!..இன்ஷா அல்லாஹ்!..

1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்

2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.

3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.

4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார்.

5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு ரக்அத் சுன்னத்தை தொழுது வருவாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்

6) எவர் நபியின் மீது ஒரு தடவை ஸலவாத்துச் சொல்வாரோ அல்லாஹ் அவருக்கு பத்து முறை அருள் புரிகின்றான்

7) எவர் மஸ்ஜிதுக்கு செல்வாரோ அல்லது மஸ்ஜிதில் இருந்து திரும்புவாரோ மஸ்ஜிதுக்கு செல்லும் போது அல்லது திரும்பும் போது வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.

8.) எவர் அதிகாலை (ஃபஜ்ரு)த் தொழுகையைப் பேணுகிறாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் வந்து விடுகிறார்...

9) எவர் கடமையான தொழுகையின் பின் ஆயதுல் குர்ஸியை ஓதி வருவாரோ அவருக்கு சுவர்க்கம் நுழைவதற்கு மரணத்தை தவிர வேறெதுவும் தடையாக இருக்காது.

10) எவர் அழகான முறையில் ஒழுச் செய்து பிறகு ஜும்ஆவுக்கு வந்து மொளனமாக செவி தாழ்த்தி உரையை செவிமடுப்பாரோ அவரது ஜும்ஆவுக்கு இடைபட்ட பாவங்களும், மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படும்.

11) எவர் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்கின்றாரோ அல்லாஹ் அவரது ரிஸ்கை விஸ்தீர்ணப்படுத்துவதோடு, அவரது ஆயுளையும் நீட்டுகிறான்.

12) எவர் தனது சகோதர முஸ்லிமுக்கு மறைவில் பிரார்த்திக்கின்றாரோ அவருக்காக ஒரு வானவர் மறைவில் சாட்டப்பட்டு ஆமீன் கூறுவார். உமக்கும் அதே போன்று என கூறுவார்.

13) எவர் பாங்கின் பின் ‘அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித்தஃவதித் தாம்மஹ் வஸ்ஸலாதில் காஇமா ஆதி முஹம்மதனில் வஸீலத வல்பழீலத வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதல்லதி வஅத்தஹு’ என்று ஓதுவாரோ அவருக்கு மறுமையில் நபிகளார் (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும்.

14) எவர் அவையில் அமர்ந்து அதன் இறுதியில் அந்த அவையை விட்டு எழுந்து செல்வதற்கு முன் ‘ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்’ என்று ஓதவாரோ, அவர் அவையில் இருக்கும் போது நிகழ்ந்த அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.

15) எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.

16) எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லது அதைவிடவும் அதிகமாக நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான்.

17) அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்றால் அல்லாஹ் எழு நூறு வருட தொலைவுக்கு அவரது முகத்தை நரகை விட்டு தூரப்படுத்துவான்.

18) எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து தொழுகையையும், நிரை வேற்றி, ஜனாஸாவை அடக்கும் வரை இருப்பாரோ அவர் இரண்டு கீராத் நன்மைகளை பெற்றவராக திரும்புவார். (கீராத் என்பது உஹத் மலைக்கு சமமாகும்).

19) ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று அதை அடக்கம் செய்வதற்கு முன் திரும்புவாரென்றால், அவர் ஒரு கீராத் அளவு நன்மைகளை பெற்று திரும்புகிறார்.

20) ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்கச் சென்றால் அவர் தீரும்பும் வரை சுவர்க்கத்தின் ஒரு இறக்கையில் இருக்கின்றார்.

21) எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.

22) யார் கல்வியை கற்பதற்காக வெளியேறிச் செல்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாதையை இழகு படுத்துகின்றான்.

23) ஒரு முஸ்லிமுக்கு துன்பம் ஏற்படும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்ஃஜுர்னீ பீஃ முஸீபதி வஹ்லுஃப் லீ ஹயிரம் மின்ஹா’ அல்லாஹ் அவரது துன்பத்திற்கு நற்கூலி வழங்குவதோடு, அவரது துன்பத்தையும் மாற்றி அதை விட சிறந்ததை வழங்குவான்.

24) எவர் ஒருவர் அழகான முறையில் ஒழுச் செய்வாரோ, அவரது பாவங்கள் அவரது உடலை விட்டு வெளியேறும், நகத்தின் கீழிருந்து நிகழ்ந்த பாவங்கள் உட்பட.

25) ஒரு முஸ்லிமின் சோதனையை எவர் இந்த உலகில் போக்குவாரோ, அவரது துன்பத்தை அல்லாஹ் மறுமையில் நீக்குவான்.

26) எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறையை நாளை மறுமையில் மறைப்பான்.

27) எவர் ஒருவரின் கடனை இலகு படுத்துகின்றாரோ, அல்லது அதை தல்லுபடி செய்கின்றாரோ நிழலே இல்லாத நாளான மறுமையில் அல்லாஹ் அர்ஷின் கீழ் அவருக்கு நிழல் வழங்குவான்.

28) எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ என்று ஓதுவாராகின், அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.

29) எவர் நேர் வழியின் பால் அழைப்பு விடுப்பாரோ அவரை பின் பற்றியவர்களின் கூலி இவருக்கு உண்டு, அவர்களது கூலியில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது.

30) நன்மையை எதிர்ப்பார்த்து தனது குடும்பத்துக்கு எவர் செலவளிப்பாரோ அவருக்கு தர்மத்தின் நன்மை உண்டு.

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. நவீன அணுக்கொள்கையின் அணுவைப் பற்றி கூறுவது என்ன?*

அணுக்கள் பிளக்ககூடியவை.

*2. அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்?*

எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford)

*3. அணு எண் என்றால் என்ன?*
             
அணு எண் என்பது ஒரு அணுக்கருவில் உள்ள

        *4.ப்ரோட்டான்களின்(Protons) எண்ணிக்கையாகும். தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்?*

நெல்சன் மண்டேலா

*5. மண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்?*

27 ஆண்டுகள்

*6.மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது?*
                                    ராபன்தீவில்

*7. மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்?*

பிப்ரவரி 2 1990 ஆண்டு

*8. மண்டேலா விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவை/வயது என்ன?*
                                                    71

*9. அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது?*
                                             1993

*10. மண்டேலா அவர்கள் பெற்ற வேறு விருதுகள்?*

 பாரத ரத்னா,அமைதி,நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி  சர்வதேச விருது.

*11. மண்டேலா அவர்களின் முழுப்பெயர்?*
நெல்சன்ரோபிசலா மண்டேலா

Friday, 12 April 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. சீனாவின் தலைநகரம் எது?*

அ) தாய்லாந்து

ஆ) பீஜிங்

இ) ஹாங்காங்

ஈ) சிட்னி

*2. இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி?*

அ) காவிரி

ஆ) சட்லஜ்

இ) பிரம்மபுத்ரா

ஈ) ரவி

*3. பாரதியார் பிறந்த ஊர் எது?*

அ) பூம்புகார்

ஆ) மதுரை

இ) எட்டயபுரம்

ஈ) மயிலாப்பூர்

*4. கேனிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு எது?*

அ) நரி

ஆ) புலி

இ) சிறுத்தை

ஈ) பூனை

*5. தமிழகத்தின் பரப்பளவு?*

அ) 130,058 சதுர கி.மீ.,

ஆ) 10,000 சதுர கி.மீ.,

இ) 22,500 சதுர கி.மீ.,

ஈ) 99,338 சதுர கி.மீ.,


*விடைகள் :-* 1(ஆ), 2(இ), 3(இ), 4(அ), 5(அ).

Wednesday, 10 April 2019

திருக்குறள் இனியவைகூறல்:


            *_திருக்குறள் 100_*
          *10.இனியவைகூறல்*                                           
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
*குறள்: 100:-*
*_இனிய உளவாக இன்னாத கூறல்_*
*_கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று._*
*பால் வகை:-* 1. அறம்
*இயல்:-* 2. இல்லறவியல்
*அதிகாரம்:-* 10. இனியவைகூறல்
*சாலமன் பாப்பையா உரை:-*
மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.
*மு. வரதராசனார் உரை:-*
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.
*மு. கருணாநிதி உரை:-*
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
*மணக்குடவர் உரை:-*
பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்க ளின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல், பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.
*ஆங்கிலம்:-*
When pleasant words are easy, bitter words to use,
Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.
*ஆங்கில உரை:-*
To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•