Wednesday 10 April 2019

திருக்குறள் இனியவைகூறல்:


            *_திருக்குறள் 100_*
          *10.இனியவைகூறல்*                                           
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
*குறள்: 100:-*
*_இனிய உளவாக இன்னாத கூறல்_*
*_கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று._*
*பால் வகை:-* 1. அறம்
*இயல்:-* 2. இல்லறவியல்
*அதிகாரம்:-* 10. இனியவைகூறல்
*சாலமன் பாப்பையா உரை:-*
மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.
*மு. வரதராசனார் உரை:-*
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.
*மு. கருணாநிதி உரை:-*
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
*மணக்குடவர் உரை:-*
பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்க ளின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல், பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.
*ஆங்கிலம்:-*
When pleasant words are easy, bitter words to use,
Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.
*ஆங்கில உரை:-*
To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

No comments:

Post a Comment