﷽﷽﷽﷽﷽﷽﷽﷽
"இருப்பதை போதுமாக்கிக் கொண்டு தன்னிறைவோடு வாழ்வோம்"
وتحبون المال حبا جما
நீங்கள் பொருளை அளவுகடந்து நேசிக்கிறீர்கள் (89 ; 20)
அல்லாஹ்வின் கிருபையால் நாம் குர்ஆனின் இறுதிப்பகுதியை நெருங்கி விட்டோம்.இன்றைக்கு நமது சிந்தனைக்கு விருந்தாக தேன்மறையின் ஒரு துளி.சூரத்துல் ஃபஜ்ரில் ஒரு வசனம்.நமது மன ஓட்டத்தை அப்படியே பிரதிபலிக்கின்ற ஓர் வசனம்.
இது திருமறைக்குர்ஆனின் எச்சரிக்கையூட்டும் வசனங்களில் ஒன்று.
உண்மையில் செல்வந்தர்கள் என்றால் யார் ? எவரிடம் பணம்,பொருள், வசதி எல்லாம் அதிகமாக இருக்கிறதோ அவர் தான் செல்வந்தர் என்று நாம் விளங்கி வைத்திருக்கிறோம்.ஆனால் செல்வந்தர் என்பதற்கு நபி ஸல் அவர்கள் கூறும் முகவரி வித்தியாசமானது.
عن أبي هريرة -رضي الله عنه- قال -صلى الله عليه وسلم-:
( ليس الغنى عن كثرة العَرَض، ولكن الغنى غنى النفس ) (1) متفق عليه
பொருள் அதிகமாக இருப்பது செல்வமல்ல. போதுமென்ற மனமே செல்வமாகும்.
அல்லாஹ் எனக்கு கொடுத்தது போதும், அல்ஹம்துலில்லாஹ்! என்று தனக்கிருக்கும் வசதியைக் கொண்டு தன்னிறைவோடு வாழ்பவர் தான் உண்மையில் செல்வந்தர்.நிறைய செல்வங்கள் இருந்தும் திருப்தி இல்லாமல் இது போதாது என்று சொல்பவர், என்று நினைப்பவர் அண்ணல் நபி ஸல் அவர்களின் பார்வையில் செல்வந்தரே அல்ல.
இதன்படி பார்த்தால் இன்றைக்கு உலகில் நிறைய பணக்காரர்கள் இந்த நிலையில் தான் இருக்கிறார்கள்.அதனால் அவர்கள் செல்வம் இருந்தும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.
போதுமென்ற தன்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
قوله -صلى الله عليه وسلم-: ( قد أفلح من أسلم، ورزق كفافا، وقنعه الله بما آتاه )
رواه مسلم والترمذي وأحمد وابن ماجة عن ابن عمرو
போதுமென்ற மனம் கொடுக்கப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார் என்பது நபிமொழியாகும்.
وكان من دعائه صلوات الله وسلامه عليه: ( اللهم إني أعوذ بك من قلب لا يخشع، ومن دعاء لا يسمع، ومن نفس لا تشبع، ومن علم لا ينفع، أعوذ بك من هؤلاء الأربع ) رواه الترمدي
அல்லாஹ்வை அஞ்சாத உள்ளம்,பதிலளிக்கப்படாத பிரார்த்தனை, நிரம்பாத உள்ளம்,பயன் தராத கல்வி இந்நான்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்பது நபி ஸல் அவர்கள் கேட்கும் துஆக்களில் ஒன்றாகும்.(திர்மிதி)
قال سعد بن أبي وقاص لابنه: "يا بني، إذا طلبت الغنى فاطلبه بالقناعة. فإن لم تكن قناعة. فليس يغنيك مال .. "
நீ செல்வத்தைத் தேடுவதாக இருந்தால் போதுமென்ற தன்மையோடு தேடு. அந்த தன்மை இல்லையென்றால் எந்த பொருளும் உன்னை நிறைவாக்காது என்று ஸஃது பின் அபீவக்காஸ் ரலி அவர்கள் தன் மகனுக்கு கூறுவார்கள்.
مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا). رواه الترمذي
உங்களில் யார் நிம்மதி பெற்றவராகவும் உடல் ஆரோக்கியம் பெற்றவராகவும் அன்றைய நாளின் உணவு கையில் இருக்கும் நிலையில் காலையில் எழுகிறாரோ அவருக்கு உலகமே கொடுக்கப்பட்டவரைப் போல. (திர்மிதி)
وعن أبي هريرة، قال: قال رسول الله صلى الله عليه وسلم: "من يأخذ عني هؤلاء الكلمات، فيعْمَل بهن، أو يُعَلم مَن يعمَل بهن"؟ فقال أبو هريرة: فقلت: أنا يا رسول الله، فأخذ بيدي فعدّ خمسا، وقال: "اتق المحارم تكن أعبد الناس، وارض بما قسم الله لك تكن أغنى الناس، وأحسن إلى جارك تكن مؤمنا، وأحب للناس ما تحب لنفسك تكن مسلما، ولا تكثر الضحك، فإن كثرة الضحك تميت القلب". أخرجه الإمام أحمد …
அமல் செய்வதற்கோ அல்லது அமல் செய்பவருக்கு கற்றுக் கொடுப்ப தற்கோ என்னிடமிருந்து இந்த வார்த்தைகளை எடுத்துக் கொள்பவர் யார் என்று நபி ஸல் அவர்கள் கேட்ட போது ஹள்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள் “நான்” என்று கூறினார்கள்.உடனே நபி ஸல் அவர்கள் அபூஹுரைரா ரலி அவர்களின் கரத்தைப் பிடித்து 5 விஷயங்களைச் சொன்னார்கள். 1, அல்லாஹ் தடுத்தவைகளைத் தவிர்ந்து கொள் நீ மக்களில் வணக்கசாலியாக ஆகி விடுவாய். 2, அல்லாஹ் உனக்கு பங்கிட்டதை பொருந்திக் கொள்.நீ மக்களில் செல்வந்தனாக ஆகி விடுவாய். 3, உன் அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய். நீ முஃமினாக ஆகி விடுவாய். 4, உனக்கு விரும்புவதை பிறருக்கும் விரும்பு.நீ முஸ்லிமாக ஆகி விடுவாய். 5, அதிகம் சிரிக்காதே. அதிகம் சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்து விடும். (அஹ்மது)
وفي الصحيحين عن حَكيم بن حزام رضي الله عنه، قال: سألت رسول الله صلى الله عليه وسلم، فأعطاني، ثم سألته فأعطاني، ثم سألته فأعطاني، ثم قال: "يا حَكيم، إن هذا المال خَضِرَة حُلوة، فمن أخذه بسخاوة نفس بورك له فيه، ومن أخذه بإشراف نفس لم يُبارَك له فيه، كالذي يأكل ولا يشبع، اليد العليا خير من اليد السفلى"، قال حكيم: فقلت: يا رسول الله، والذي بعثك بالحق لا أرزأ أحدا بعدك شيئا حتى أفارق الدنيا، فكان أبو بكر رضي الله عنه، يدعو حكيما إلى العطاء، فيأبى أن يقبله منه، ثم إن عمر رضي الله عنه دعاه ليعطيه فأبى أن يقبل منه شيئا، فقال عمر: إني أشهدكم يا معشر المسلمين على حكيم، أني أعرض عليه حقه من هذا الفيء فيأبى أن يأخذه، فلم يرزأ حكيم أحدا من الناس بعد رسول الله صلى الله عليه وسلم حتى توفي.
தன் தேவை குறித்து நபி ஸல் அவர்களிடம் ஹகீம் பின் ஹிஸாம் ரலி அவர்கள் மீண்டும் மீண்டும் முறையிட்ட போது, பொருள் என்பது இனிப்பானது,பசுமையானது.நிறைவான மனதோடு யார் அதை எடுத்துக் கொள்வாரோ அவருக்குத்தான் அதில் பரக்கத் ஏற்படும் என்று நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்.அதன் பிறகு அந்தத் தோழர் தன் மரணம் வரை யாரிடத்திலும் தேவையாக வில்லை.(புகாரி,முஸ்லிம்)
وروى مسلم في صحيحه عن عمر بن الخطاب رضي الله عنه قال: ((دخلت على رسول الله صلى الله عليه وسلم وهو مضطجعٌ على حصيرٍ، فجلست، فأدنى عليه إزاره وليس عليه غيره، وإذا الحصير قد أثر في جنبه، فنظرت ببصري في خزانة رسول الله صلى الله عليه وسلم، فإذا أنا بقبضةٍ من شعيرٍ نحو الصاع، ومثلها قرظًا في ناحية الغرفة، وإذا أفيقٌ معلقٌ، قال: فابتدرت عيناي، قال: ما يبكيك يا ابن الخطاب؟ قلت: يا نبي الله، وما لي لا أبكي، وهذا الحصير قد أثر في جنبك، وهذه خزانتك لا أرى فيها إلا ما أرى، وذاك قيصر وكسرى في الثمار والأنهار، وأنت رسول الله صلى الله عليه وسلم، وصفوته، وهذه خزانتك، فقال: يا ابن الخطاب، ألا ترضى أن تكون لنا الآخرة ولهم الدنيا؟، قلت: بلى.. )). (القَرَظ) هو ورَق السَّلَم تدبغ به الجلود. (أفيق) جلد لم يدبغ.
நபி ஸல் அவர்கள் சாதாரண பாயின் மீது படுத்திருந்தார்கள்.அந்த பாயின் அடையாளம் நபியின் மேனியில் தெரிந்தது.அதைப் பார்த்த உமர் ரலி அவர்கள் கண்ணீர் வடித்தார்கள்.உலகில் மற்ற தலைவர்களெல்லாம் எத்தனை வசதிகளோடு வாழுகிறார்கள்.ஆனால் உங்களின் நிலை இவ்வாறு இருக்கின்றதோ என்று கூறினார்கள்.அதற்கு நபி ஸல் அவர்கள், அவர்களுக்கு உலகம் கிடைத்திருக்கிறது.ஆனால் நமக்கு மறுமை கிடைக்கும் என்றார்கள். (முஸ்லிம்)
எனவே இருப்பதை போதுமாக்கிக் கொண்டு தன்னிறைவோடு வாழ்வோம். அல்லாஹ் அருள் புரிவானாக.
ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ

No comments:
Post a Comment