Thursday, 30 May 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. தி.மு.கவை நிறுவியவர் யார்?*

 அண்ணாதுரை

*2. தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர்?*

 சர் தாமஸ் மன்றோ

*3. சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?*

 புதுமைப்பித்தன்

*4. கண்ணதாசன் வெளியிட்ட இதழ்களுள் ஒன்று?*

 வானம்பாடி

*5. தண்ணீர் தண்ணீர் என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்?*

 கோமல் சுவாமிநாதன்

*6. ஆனந்த விகடன் வெள்ளிவிழா பரிசு பெற்ற சிறுகதை எது?*

 குளத்தங்கரை அரச மரம்

*7. குடிமக்கள் காப்பியம் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெற்ற நூல்?*

 சிலப்பதிகாரம்

*8. தாய்சேய் இலக்கணக்குறிப்பறிக?*

உம்மைத் தொகை

*9. மலர்க்காரம் என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு?*

 உவமைத் தொகை

*10. பரம்பிற் கோமான் என்று அழைக்கப்பெற்றவர் ?*

பாரி.

True Happiness!!




If you have 60 seconds give this a read. Game changer!

Steve Jobs' last words
He died a billionaire at 56yrs of Pancreatic Cancer and here are his last words on the sick bed:

"I reached the pinnacle of success in the business world. In others’ eyes my life is an epitome of success.

However, aside from work, I have little joy. In the end, wealth is only a fact of life that I am accustomed to.

At this moment, lying on the sick bed and recalling my whole life, I realize that all the recognition and

wealth that I took so much pride in, have paled and become meaningless in the face of impending death.

You can employ someone to drive the car for you, make money for you but you cannot have someone to bear the sickness for you.

Material things lost can be found. But there is one thing that can never be found when it is lost – "Life".

When a person goes into the operating room, he will realize that there is one book that he has yet to finish reading – "Book of Healthy Life".

Whichever stage in life we are at right now, with time, we will face the day when the curtain comes down.

Treasure Love for your family, love for your spouse, love for your friends...

Treat yourself well. Cherish others.

As we grow older, and hence wiser, we slowly realize that wearing a $300 or $30 watch - they both tell the same time...

Whether we carry a $300 or $30 wallet/handbag - the amount of money inside is the same;

Whether we drive a $150,000 car or a $30,000 car, the road and distance is the same, and we get to the same destination.

Whether we drink a bottle of $300 or $10 wine - the hangover is the same;

Whether the house we live in is 300 or 3000 sq ft - loneliness is the same.

You will realize, your true inner happiness does not come from the material things of this world.

Whether you fly first or economy class, if the plane goes down - you go down with it...

Therefore.. I hope you realize, when you have mates, buddies and old friends, brothers and sisters, who you chat with, laugh with, talk with, have sing songs with, talk about north-south-east-west or heaven and earth, .... That is true happiness!!

Five Undeniable Facts of Life :
1. Don't educate your children to be rich. Educate them to be Happy. So when they grow up they will know the value of things not the price.

2. Best awarded words in London ... "Eat your food as your medicines. Otherwise you have to eat medicines as your food."

3. The One who loves you will never leave you for another because even if there are 100 reasons to give up he or she will find one reason to hold on.

4. There is a big difference between a human being and being human.
Only a few really understand it.

5. You are loved when you are born. You will be loved when you die. In between, You have to manage!

NOTE: If you just want to Walk Fast, Walk Alone! But if you want to Walk Far, Walk Together!

Six Best Doctors in the World
1. Sunlight
2. Rest
3. Exercise
4. Diet
5. Self Confidence and
6. Friends

Maintain them in all stages of Life and enjoy a healthy life.

God loves you!

Wednesday, 29 May 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. மாண்பு பெயர்ச் சொல்லின் வகை அறிக?*

 பண்புப்பெயர்

*2. வாழ்க இலக்கணக்குறிப்பு?*

வியங்கோள் வினைமுற்று

*3. தடந்தோள் இலக்கணக்குறிப்பு?*

உரிச்சொற்றொடர்

*4. ஆடு கொடி இலக்கணக்குறிப்பு காண்க?*

வினைத்தொகை

*5. முடைந்தவர் இலக்கணக்குறிப்பு?*

வினையாலணையும் பெயர்

*6. பதினெட்டு உறுப்புகள் கலந்து வரப் பாடப்படும் நூல்?*

 கலம்பகம்

*7. தொண்டர் சீர் பரவுவார் எனப் பாராட்டப்படும் சான்றோர்?*

 சேக்கிழார்

*8. தமிழ்மறை என அழைக்கப்படும் நூல்?*

 திருக்குறள்

*9. இந்தியாவில் தொல்லுயிர் தாவரங்களின் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம்?*

 போபால்

*10. மேட்டூர் அணையின் வேறு பெயர்?*

ஸ்டான்லி அணை.

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. சுதந்திர இந்தியாவில் முதல் பெண் மாநில கவர்னர்?*

 திருமதி சரோஜினி நாயுடு

*2. ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது?*

ஒய்-குரோமோசோம்

*3. டல்காட் பார்சனின் புகழ்பெற்ற புத்தகம்?*

 சமூக அமைப்பின் கூறுகள்

*4. ஆற்காடு நவாபுகளுள் யார் வாலாஜா என அழைக்கப்பட்டார்?*

 தோஸ்த் அலி

*5. 200 நாட்களுக்கு பனியற்ற நாட்கள் தேவைப்படும் பயிர்?*

 மக்காச் சோளம்

*6. உலகின் பரந்த மீன் பிடிக்கும் பகுதி?*

வடமேற்கு அட்லாண்டிக்

*7. பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?*

 1982

*8. எந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது?*

இரண்டாவது

*9. காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்தை துவக்கிய ஆண்டு?*

 1915

*10.இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு?*

1957

Wednesday, 22 May 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்?*

குத்புதின் ஐபெக்

*2. தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?*

1949

*3. அற இயல் கற்பிப்பது?*
ஒழுக்கக் கொள்கை

*4. அளவையியல் என்பது?*

 உயர்நிலை விஞ்ஞானம்

*5. இயற்கை கவிதை தத்துவ அறிஞர்?*

 ரவிந்திரநாத் தாகூர்

*6. ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர்?*

ஸ்ரீஅரவிந்தர்

*7. தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி?*

திருநீலகண்டர்

*8. சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர்?*

அம்பேத்கார்

*9. அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம்?*

 மஹாராஷ்டிரா

*10. இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி?*

திருவனந்தபுரம்

Tuesday, 21 May 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு?*

உருவகம்

*2. தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை?*

தன்வினை

*3. போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது? இது எவ்வகை வினை?*

எதிர்மறை

*4. போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்?*

 உடன்பாடு

*5.இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்?*

கழிவு வீதம்

*6. தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது?*

தூத்துக்குடி

*7. அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர்?*

அபுல் ஃபாசல்

*8. மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?*

 1971

*9. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது?*

 65 வயது

*10. இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது?*

 ஆங்கிலம்

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது?*

 சேலம்

*2. திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்?*

காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார்.

*3. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது?*

 ஜெனிவா

*4. பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்?*

மூன்றாம் ராஜேந்திரன்

*5. மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது?*

அரிஸ்டாடில்

*6. நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர்?*

 பி.டி.ராஜன்

*7. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?*

 26 நவம்பர்,1949

*8. யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?*

20

*9. இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்?*

5 ஆண்டுகள்

*10.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்?*

துணை சபாநாயகர்.

கவலைகளை விட்டொழியுங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள்:




🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.

பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .

குரங்குக்குக் கொஞ்சம் பயம்
வந்து விட்டது.

கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .
இது கொத்துனா உடனே மரணந்தான்.

குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது

" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,

எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு ,

மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.

"ஐயோ. புத்தி கெட்டுப் போய்
நானே வலிய வந்து இந்த
மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".

குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.

கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*
🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.

குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.

🌼குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.

அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.

அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
*
🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

*
🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

🌼கவலைகளை விட்டொழியுங்கள்.
*******
🌼மகிழ்ச்சியாய் இருங்கள், , ,

🌼ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்

🌼பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்

🌼கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்

🌼துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்

🌼பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்

🌼எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்

🌼அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.

🌼ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.

🌼பசிக்கும் போது உணவருந்துங்கள்.

பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும்.

எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.

Thursday, 16 May 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. மனிதர் அல்லாத உயிருள்ளவையும், உயிரற்றவையும் ?*

– _அஃறிணை_

*2. ஷேக்ஸ்பியர் ?*

– _ஆங்கில நாடக ஆசிரியர்_

*3. மில்டன்?*

 – _ஆங்கிலக் கவிஞர்_

*4. பிளேட்டோ?*

– _கிரேக்கச் சிந்தனையாளர்_

*5. காளிதாசர்*

– _வடமொழி நாடக ஆசிரியர்_

*6. டால்ஸ்டாய்?*

– _ரஷ்யநாட்டு எழுத்தாளர்_

*7. பெர்னார்ட்ஷா?*

 – _ஆங்கில நாடக ஆசிரியர்_

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. மெய்யெழுத்து?*

 – அரை மாத்திரை

*2. உயிரெழுத்து (குறில்)?*
– ஒரு மாத்திரை

*3. உயிரெழுத்து (நெடில்)?*

 – இரு மாத்திரை

*4. உயிர்மெய் (குறில்)?*

 – ஒரு மாத்திரை

*5. உயிர்மெய் (நெடில்)?*

 – இரு மாத்திரை

*6. காய்களின் இளமைப் பெயர்கள்?*

 – அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு.

*7. சொல் பொருள் : களஞ்சியம்?*

 – தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி – கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி – உலகம்

Saturday, 11 May 2019

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்: வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள் :-

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்: வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள் :-



1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்
முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே
ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம்
முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை
மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்
குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை
வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்
ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள்
இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில்
புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும்
நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல,
எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை
முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.
பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு
வெளிப்படையாக ஒருவருடன்
விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய்
பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான்
துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத்
தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும்
தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .
அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது
வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன்
பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக்
கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த
வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான்
சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான்
கடினம்.

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால்
எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச்
செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச்
சிந்திக்க வைக்கிறது.

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?*

_தண்ணீர்._

*2. இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?*

_மார்ச் 21._

*3. இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன?*

_4_

*4. பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?*

_ஓடோமீட்டர்._

*5. உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?*

_கிரண்ட்டப்._

*6. சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?*

_எட்டயபுரம்._

*7. சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?*

_காம்டே._

*8. பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?*

_ஜார்கண்ட்._

*9. தமிழகத்தின் புகழ் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?*

_ஈரோடு._

*10. 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?*

_ஜெர்மனி._

*11. 2010 ஆண்டின் உலக கால்பந்துப் போட்டியின் முடிவுகளை கணித்து சர்ச்சைக்கு உள்ளன octopus இன் பெயர்?*

_பால்._

Friday, 10 May 2019

ஏராளமான நன்மைகளையைப் பெற்றுத் தரக்கூடிய நாவிற்கு எளிதான சில திக்ருகள்

*ஏராளமான நன்மைகளையைப் பெற்றுத் தரக்கூடிய நாவிற்கு எளிதான சில திக்ருகள்* 👇🏻

_அவ்வப்போது கண்ட கண்ட பாடல்களை முணுமுணுப்பதை விடவும். இந்த திக்ருகளை மொழிவதில் நம்முடைய நாவைத் திளைக்க செய்தால், ஏராளமான நன்மைகள் பெற்று மறுமை வாழ்வை வளமாக்கலாம். இறைவன் அந்த பாக்கியத்தை நம் அனைவருக்கும் தருவானாக._

1) *சுப்ஹானல்லாஹ்* (100 முறை)

பொருள்: அல்லாஹ் தூயவன்.

சிறப்பு: ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன.

     - முஸ்லிம் 5230

2) *அல்ஹம்துலில்லாஹ்*

பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

சிறப்பு: (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும்.

     - முஸ்லிம் 381

3) *சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி* 

பொருள்: அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது.

     - முஸ்லிம் 381

சிறப்பு: வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்டதாகும்.

4) *சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி* (100 முறை)

பொருள்: அல்லாஹ் தூயவன் என்று போற்றித் துதிக்கிறேன்.

சிறப்பு: கடலின் நுரை அளவிற்கு (அதிகமாக) பாவங்கள் இருந்தாலும் அனைத்தும் மன்னிக்கப்படும்.

     - புஹாரி 6405

5) *சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம்*

பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன். அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன்.

சிறப்பு: நன்மை தீமை நிறுக்கப்படும் மீஜான் என்னும் தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனுக்குப்  பிரியமானவை.

     - புஹாரி 7563

6) *அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா*

பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்.

சிறப்பு: இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இறையருள் கிடைக்கின்றன.

     - முஸ்லிம் 1052

7) *அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி*

பொருள்: தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது.

சிறப்பு: 12 வானவர்கள் இதை இறைவனிடம் கொண்டு செல்ல போட்டி போடும் அளவிற்கு நன்மை நிறைந்தது.

     - முஸ்லிம் 1051

8) *லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்* (100 முறை)

பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்.

சிறப்பு: 10 அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும்.
மேலும், 100 நன்மைகள் எழுதப்படும். 100 தவறுகள் அழிக்கப்படும். அந்த நாளின் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் இருக்கும்.

     - புஹாரி 3293

9) சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ்.

பொருள்: இறைவன் தூயவன், அவனுக்கே எல்லாப்புகழும், அவன் மிகப்பெரியவன், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை.

சிறப்பு: ஒவ்வொரு வார்த்தைக்கும் தர்மம் செய்த நன்மை கிடைக்கும்.

     - முஸ்லிம் 1302

➡ நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் அதிகாலையில்  என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், "நான் உன்னிடமிருந்து சென்றது முதல்  இதே நிலையில்தான் நீ  இருந்துகொண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன்.
நபி (ஸல்) அவர்கள், "நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை:)

*சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி*

பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.

     - முஸ்லிம் 5272

Thursday, 9 May 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*வினாக்கள் பகுதி - 9*

*1. ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?*

*2. மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?*

*3. முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?*

*4. கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?*

*5. கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?*

*6. வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ?*

*7. சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ?*

*8. முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?*

*9. மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?*

*10. காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?*

🔘 *பதில்கள் பகுதி - 9*

_1.ஒரே ஒரு முறை,_

_2. ஓம்,_

_3. இத்தாலி,_

_4. இங்கிலாந்து,_

_5. யூரி,_

_6. சிக்ஸ்,_

_7. எகிப்து நாட்டவர்கள்,_

_8. வில்கின்சன்,_

_9. 1912-ல்,°°_

_10. ரோஸ்._

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*வினாக்கள் பகுதி - 6*

*1. முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?*

*2. குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?*

*3. ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?*

*4. சர்வதேச உணவுப்பொருள் எது ?*

*5. காகமே இல்லாத நாடு எது ?*

*6. எரிமலை இல்லாத கண்டம் எது ?*

*7. கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ?*

*8. உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?*

*9. தமிழ்நாட்டின் மரம் எது ?*

*10. முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது?*

🔘 *பதில்கள் பகுதி - 7*

*1. மெக்கா,*

*2. விஸ்வநாதன் ஆனந்த்,*

*3. மூன்று,*

*4. முட்டைகோஸ்,*

*5. நீயூசிலாந்து,*

*6. ஆஸ்திரேலியா,*

*7. SPRUCE,*

*8. கருவிழி,*

*9. பனைமரம்,*

*10. பெரு.*

நோன்பின் சட்டங்கள்

*~~~~~~~~~~~~~~~~~~~~~~~*
             நோன்பின் சட்டங்கள்
*~~~~~~~~~~~~~~~~~~~~~~~*
                        🌹🌹🌹🌹


      நோன்பின் சட்டங்களை அறிந்து நோன்பு நோற்கவேண்டும். மனம் விரும்பியவாறு நோன்பு வைத்தால் நாள்முழுதும் பசித்திருந்ததைத் தவிர வேறு எந்த பலனும் ஏற்படப்போவதில்லை.



👉   *குறைந்தளவு வாந்தி வந்தால் நோன்பு முறியாது. வாய் நிரம்ப வாந்தி வந்தால் நோன்பு முறிந்துவிடும்.*


👉  *மிஸ்வாக் செய்வதால் நோன்பு முறியாது.*


👉 *நோன்பு நினைவிருக்க வாய் கொப்பளிக்கும்போது தண்ணீர் தொண்டையினுள் சென்றுவிட்டால் நோன்பு முறிந்து விடும்.*


👉 *கண்களுக்கு சுருமா இடுவது, எண்ணெய் தேய்ப்பது, சோப்பு போட்டுக் குளிப்பது, அத்தர் பூசுவது இவைகளால் நோன்பு முறியாது.*


 👉  *பீடி, சிகரெட், பொடி போன்றவைகளை உபயோகித்தால் நோன்பு முறிந்து விடும்.*


👉 *குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் நோன்பு முறியாது.*


👉   *மாதத் தீட்டின் போது பெண்கள் நோன்பு வைக்க கூடாது. ஆனால் விடுபட்ட நோன்புகளை அவசியம் களாச் செய்யவேண்டும்.*


👉 *முடி வெட்டுவது, நகம் வெட்டுவது இவைகளால் நோன்பு முறியாது.*


 👉 *நோன்பு வைக்க எழும்போது பஜ்ரு பாங்கு சொல்லப்பட்டு விட்டால் எதுவும் சாப்பிடாமல், குடிக்காமல் நோன்பின் நிய்யத்துடன் தொடரலாம்.*


 👉 *நோன்பாளி பொய், புறம், கோள், கெட்டவார்த்தைகள் பேசுவது மாபெரும் குற்றமாகும். நோன்பை முறிக்கா விட்டாலும் நோன்பின் நன்மைகளை அழித்து விடும்.*


  👉 *எச்சிலை விழுங்குவதால் நோன்பு முறியாது.*


  👉 *நோன்பு வைத்த நிலையில் நோன்பு திறக்கும் நிய்யத்தைச் சொல்வதால் நோன்பு முறியாது.*


  👉 *தாமதம் செய்யாமல் குறித்த நேரத்தில் நோன்பு திறப்பது நோன்பின் நிபந்தனையாகும்.*


  👉  *தூங்கி எழுந்ததும் கனவின் மூலம் ஸ்கலிதம் ஆகியிருந்தால் அவரது நோன்பு முறியாது. குளித்துக் கொள்ளலாம்.*


  👉 *குளிப்பு கடமையானவர் ஸஹர் நேரம் குறைவாக இருப்பின் ஒளுசெய்துவிட்டு சஹர் செய்தபின் குளித்துக்கொள்ளலாம். நேரம் இருப்பின் குளித்துவிட்டு ஸஹர் செய்யவேண்டும்.*


  👉 *உடல் நலமில்லாவிட்டால் நோன்புடன் ஊசி போடலாம்.*


  👉 *சிறுவயது பிள்ளைகளை நோன்பு வைக்க, பழக்கப்படுத்த வேண்டும்.*


  👉 *பகலில் நோன்பிருக்கும் நினைவுடனேயே உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொண்டால் நோன்பு முறிந்து விடும்.*


  👉  *நோன்பு வைக்க முடிகிறது. ஆனால் தொழ முடியவில்லை என சிலர் நோன்பையும் விட்டுவிடுகின்றனர். நோன்பு ஒரு தனி கடமையாகும். தொழுகை தனி கடமையாகும். ஒன்றை காரணம் காட்டி ஒன்று விடுவது பெரும் குற்றமாகும். கண்டிப்பாக தொழ வேண்டும்.*


 👉 *ரமலான் மாதம் முழுவதும் நோன்புடைய காலமாகும். எனவே ஒருவர் ஸஹர் செய்து நிய்யத் வைக்காமல் தூங்கிவிட்டு காலையில் எழுந்து  நிய்யத் வைக்க மறந்து விட்டோமே என்று எண்ணம் வேண்டியதில்லை. நோன்பை தொடர்ந்து கொள்ளலாம்.*


👉 *தக்க காரணமின்றி வேண்டுமென்றே நோன்பை ஒருவர் முறித்தால் அது பெரும் பாவமாகும். அந்த நோன்புக்குப் பகரமாக 60 நோன்பு தொடர்ச்சியாக வைக்க வேண்டும். 60-ல் ஒரு நோன்பு இடையில் தவறினாலும், மீண்டும் 60 நோன்பு வைக்கவேண்டும் என குர்ஆனில் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே நோன்பு விஷயத்தில் அதிக அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும்.*


                 🌼🌻🌼🌻🌼🌻

*நாமும் தெரிந்து கொள்வோம். மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவோம்.*

          *ஜாஸ்ஸாகள்ளாஹ்*

🌹🌙🌹🌙🌹🌙🌹🌙🌹🌙🌹

Wednesday, 8 May 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

🔘 *வினாக்கள் பகுதி - 5*

*1. கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?*

*2. சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?*

*3. உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?*

*4. டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?*

*5. பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?*

*6. திட்டக்கமிஷனின் தலைவர் யார் ?*

*7. இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?*

*8. ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?*

*9. கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?*

*10. பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?*

🔘 *பதில்கள் பகுதி - 5*

*1. இந்தியா,*

*2. வன்மீகம்,*

*3. இந்தியா,*

*4. வானம்பாடி,*

*5. விக்டோரியா மகாராணி,*

*6. பிரதமர்,*

*7. விசாகப்பட்டினம்,*

*8. அல்பேனியா,*

*9.அமெரிக்கா,*

*10. சுவிட்சர்லாந்து.*

இன்றைய பழமொழி :

இன்றைய பழமொழி :

*79. பழமொழி/Pazhamozhi*
நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல.

*பொருள்/Tamil Meaning*
கிணறே நேற்றுதான் வெட்டியது; அப்படியிருக்க அதில் முந்தாநாள் முதலையைப் பார்த்ததாகச் சொல்வது எங்ஙனம்?

*Transliteration*
```Nerru vettina kinarrile munthaanal vantha mutalai pola.```

*தமிழ் விளக்கம்/Tamil Explanation*
சமீபத்தில் தெரிந்துகொண்டதை ரொம்பநாள் தெரிந்தவன் போலப் பேசும் ஒருவனிடம் அங்கதமாகக் கூறுவது.


பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

🔘 *வினாக்கள் பகுதி - 3*

*1. இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ?*

*2. திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?*

*3. சீனாவின் புனித விலங்கு எது ?*

*4. மாம்பழத்தின் பிறப்பிடம் எது ?*

*5. ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?*

*6. தங்கப்போர்வை நிலம் எது ?*

*7. தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ?*

*8. கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?*

*9. போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ?*

*10. சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?*

🔘 *பதில்கள் பகுதி - 3*

_1. பாடலிபுத்திரம்,_

_2. 8 ஆயிரம் லிட்டர்,_

_3. பன்றி,_

_4. இந்தியா,_

_5. கிமோனா,_

_6. ஆஸ்திரேலியா,_

_7. மூன்று,_

_8. வில்லோ மரம்,_

_9. நீயூசிலாந்து,_

_10. பிட்மேன்._

Thursday, 2 May 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

🔳 *வினாக்கள் பகுதி - 2*

*1. உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார் ?*

*2. மில்லினியம் டோன் எங்குள்ளது ?*

*3. உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?*

*4. பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?*

*5. லில்லி பூக்களை உடைய நாடு எது ?*

*6. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?*

*7. யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ?*

*8. சோகத்தை குறிக்கும் ராகம் எது ?*

*9. நதிகள் இல்லாத நாடு எது ?*

*10. சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?*

◾ *பதில்கள் பகுதி - 2*

*1. லெனின்,*

*2. கிரீன்விச்,*

*3. கரையான்,*

*4. சலவைக்கல்,*

*5. கனடா,*

*6. 55 மொழிகளில்,*

*7. 22 மாதம்,*

*8. முகாரி,*

*9. சவூதி அரேபியா,*

*10. மீத்தேன்.*

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*வினாக்கள் பகுதி 1*

*1. முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?*

*2. கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?*

*3. சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?*

*4. இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?*

*5. பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?*

*6. கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?*

*7. அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?*

*8. கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?*

*9. செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ?*

*10. மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?*

*பதில்கள் பகுதி - 1*

*1. அன்னை தெரசா,*

*2. கெப்ளர்,*

*3. ரஷ்யர்கள்,*

*4. 1860,*

*5. ஜனவரி 3,*

*6. கோமுகம்,*

*7. எருசேலம் நாட்டில்,*

*8. லிக்னோஸ்,*

*9. இர்வின் லாங்மூர்,*

*10. ஜப்பான்.*