Thursday 9 May 2019

நோன்பின் சட்டங்கள்

*~~~~~~~~~~~~~~~~~~~~~~~*
             நோன்பின் சட்டங்கள்
*~~~~~~~~~~~~~~~~~~~~~~~*
                        🌹🌹🌹🌹


      நோன்பின் சட்டங்களை அறிந்து நோன்பு நோற்கவேண்டும். மனம் விரும்பியவாறு நோன்பு வைத்தால் நாள்முழுதும் பசித்திருந்ததைத் தவிர வேறு எந்த பலனும் ஏற்படப்போவதில்லை.



👉   *குறைந்தளவு வாந்தி வந்தால் நோன்பு முறியாது. வாய் நிரம்ப வாந்தி வந்தால் நோன்பு முறிந்துவிடும்.*


👉  *மிஸ்வாக் செய்வதால் நோன்பு முறியாது.*


👉 *நோன்பு நினைவிருக்க வாய் கொப்பளிக்கும்போது தண்ணீர் தொண்டையினுள் சென்றுவிட்டால் நோன்பு முறிந்து விடும்.*


👉 *கண்களுக்கு சுருமா இடுவது, எண்ணெய் தேய்ப்பது, சோப்பு போட்டுக் குளிப்பது, அத்தர் பூசுவது இவைகளால் நோன்பு முறியாது.*


 👉  *பீடி, சிகரெட், பொடி போன்றவைகளை உபயோகித்தால் நோன்பு முறிந்து விடும்.*


👉 *குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் நோன்பு முறியாது.*


👉   *மாதத் தீட்டின் போது பெண்கள் நோன்பு வைக்க கூடாது. ஆனால் விடுபட்ட நோன்புகளை அவசியம் களாச் செய்யவேண்டும்.*


👉 *முடி வெட்டுவது, நகம் வெட்டுவது இவைகளால் நோன்பு முறியாது.*


 👉 *நோன்பு வைக்க எழும்போது பஜ்ரு பாங்கு சொல்லப்பட்டு விட்டால் எதுவும் சாப்பிடாமல், குடிக்காமல் நோன்பின் நிய்யத்துடன் தொடரலாம்.*


 👉 *நோன்பாளி பொய், புறம், கோள், கெட்டவார்த்தைகள் பேசுவது மாபெரும் குற்றமாகும். நோன்பை முறிக்கா விட்டாலும் நோன்பின் நன்மைகளை அழித்து விடும்.*


  👉 *எச்சிலை விழுங்குவதால் நோன்பு முறியாது.*


  👉 *நோன்பு வைத்த நிலையில் நோன்பு திறக்கும் நிய்யத்தைச் சொல்வதால் நோன்பு முறியாது.*


  👉 *தாமதம் செய்யாமல் குறித்த நேரத்தில் நோன்பு திறப்பது நோன்பின் நிபந்தனையாகும்.*


  👉  *தூங்கி எழுந்ததும் கனவின் மூலம் ஸ்கலிதம் ஆகியிருந்தால் அவரது நோன்பு முறியாது. குளித்துக் கொள்ளலாம்.*


  👉 *குளிப்பு கடமையானவர் ஸஹர் நேரம் குறைவாக இருப்பின் ஒளுசெய்துவிட்டு சஹர் செய்தபின் குளித்துக்கொள்ளலாம். நேரம் இருப்பின் குளித்துவிட்டு ஸஹர் செய்யவேண்டும்.*


  👉 *உடல் நலமில்லாவிட்டால் நோன்புடன் ஊசி போடலாம்.*


  👉 *சிறுவயது பிள்ளைகளை நோன்பு வைக்க, பழக்கப்படுத்த வேண்டும்.*


  👉 *பகலில் நோன்பிருக்கும் நினைவுடனேயே உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொண்டால் நோன்பு முறிந்து விடும்.*


  👉  *நோன்பு வைக்க முடிகிறது. ஆனால் தொழ முடியவில்லை என சிலர் நோன்பையும் விட்டுவிடுகின்றனர். நோன்பு ஒரு தனி கடமையாகும். தொழுகை தனி கடமையாகும். ஒன்றை காரணம் காட்டி ஒன்று விடுவது பெரும் குற்றமாகும். கண்டிப்பாக தொழ வேண்டும்.*


 👉 *ரமலான் மாதம் முழுவதும் நோன்புடைய காலமாகும். எனவே ஒருவர் ஸஹர் செய்து நிய்யத் வைக்காமல் தூங்கிவிட்டு காலையில் எழுந்து  நிய்யத் வைக்க மறந்து விட்டோமே என்று எண்ணம் வேண்டியதில்லை. நோன்பை தொடர்ந்து கொள்ளலாம்.*


👉 *தக்க காரணமின்றி வேண்டுமென்றே நோன்பை ஒருவர் முறித்தால் அது பெரும் பாவமாகும். அந்த நோன்புக்குப் பகரமாக 60 நோன்பு தொடர்ச்சியாக வைக்க வேண்டும். 60-ல் ஒரு நோன்பு இடையில் தவறினாலும், மீண்டும் 60 நோன்பு வைக்கவேண்டும் என குர்ஆனில் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே நோன்பு விஷயத்தில் அதிக அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும்.*


                 🌼🌻🌼🌻🌼🌻

*நாமும் தெரிந்து கொள்வோம். மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவோம்.*

          *ஜாஸ்ஸாகள்ளாஹ்*

🌹🌙🌹🌙🌹🌙🌹🌙🌹🌙🌹

No comments:

Post a Comment