Wednesday, 27 March 2019

மனஅழுத்தம் இன்றி வாழ சில வழி முறைகள்.

மனஅழுத்தம் இன்றி வாழ சில வழி முறைகள்.

* காலையில் முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை- இதைச் செய்வேன் என்பது போன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் , ‘மன்னிக்கவும்.. என்னால்செய்ய இயலாது’ என்று சொல்லப்பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

* எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தை த்தரும்.

* ஆழமாக , நிதானமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

*மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை வாழலாம்!

தொழுகையும் தடைகளும்:

தொழுகையும் தடைகளும்
+++++++++++++++++++

        *சுபஹ்*
            -------
சுருண்டு படுக்க
சுகம் வரும்.
கூதல்
மோதல் செய்யும்.
எப்போதோ சுகமான
ஏதோவொரு நோய்
இப்ப ஞாபகம் வந்து
எழும்பாதே என்று சொல்லும்.
இலேசான மழை
இருக்கிற பத்வாவை
எடுத்துக் காட்டும்.
எல்லாவற்றையும்
எடுத்தெறிந்து
எழுபவனே
ஈமான்தாரி.

          *ளுஹர்*
          +++++++
சூட்டுச் சூரியன்
சோதிக்கும்.
பார்த்த செய்தி
பாதியில் இருக்கும்.
வியர்வை அலுப்பு
வேண்டாம் என்று சொல்லும்.
லெப்பைமார் சிலரே
லேட்டாகித் தொழுவது
லேசாக ஞாபகம் வரும்.
உள்ள பிரச்சினையை
ஓரமாக்கி வைத்து விட்டு
பள்ளிக்குச் செல்பவனே
பக்குவ முஸ்லிம்.

               *அஸர்*
                   +++++
லுஹர் பின் உண்டது
லொள்ளு பண்ணும்.
கண்றாவித் தூக்கம்
கண்களைத் தாக்கும்.
கிளைமாக்ஸ் சீன்
கிக்காகப் போகும்.
மொபைல் போன் கால் (call)
மொக்கை போடும்.
அத்தனையும் ஒதுக்கி விட்டு
அஸருக்குப் பள்ளி செல்.
ஈமான் வளரும்
இதயம் மலரும்.

            *மஹ்ரிப்*
                 +++++
உழைத்த களைப்பு
ஓய்வெடுக்கச் சொல்லும்.
விளையாட்டில் இருப்போர்க்கு
விறுவிறுப்பு ஏறும்.
அடுத்த தொழுகையும்
அவசரமாய் வருவதால்
இரண்டு தரம் போக
இயலாது என்று தோன்றும்.
கூடுகின்ற கூட்டங்களில்
கூடும் சுவாரஸ்யம்.
அடுப்பில் டீ கொதிக்கிறது
அம்மணியின் குரல் கேட்கும்.
இடுப்பில் உள்ள பிள்ளை
இறங்க இயலா என்று சொல்லும்.
இத்தனையும் தாண்டி
எழுந்து மக்ரிப் செல்
சுத்தமான ஈமான்
சுரக்கத் தொடங்கும்.

              *இஷா*
                +++++
இப்பதானே போய் வந்த
என்று மனம் சொல்லும்.
அப்பாடா என்று சொல்லி
ஆறுதலாய் இருக்கச் சொல்லும்.
காப்பியைக் கொண்டு வந்து
குழந்தை படம் காட்டும்.
சில்லறைக் கடை வாசலிலே
சிலர்க்கு பிஸியாகும்.
சீரியல் நாடக்த்தில்
சிந்தனை லயித்திருக்கும்.
ஊர் பலாய் கழுவுதலில்
உற்சாகம் பீறிடும்.
இததனையும் ஒதுக்கி
இஷாத் தொழச் சென்றால்
பாவமெல்லாம்
மறையத் தொடங்கும்

Tuesday, 26 March 2019

இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்!

இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்!

முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை .

1193  : முஹம்மது கோரி
1206   :குத்புதீன் ஐபக்
1210   :ஆரம்ஷா
1211  : அல்தமிஷ்
1236  : ருக்னுத்தீன் ஷா
1236  : ரஜியா சுல்தானா
1240  : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா
1242  : ஆலாவுத்தீன் மஸூத் ஷா
1246  : நாஸிருத்தீன் மெஹ்மூத்
1266  : கியாசுத்தீன் பில்பன்
1286  : ரங்கிஷ்வர்
1287  : மஜ்தன்கேகபாத்
1290  :ஷம்ஷீத்தீன் கேமரஸ்
(கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்)
கில்ஜி வம்சம்
1290 : ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி
1292  :அலாவுதீன் கில்ஜி
1316  :ஷஹாபுதீன்  உமர் ஷா
1316  : குதுபுத்தீன் முபாரக் ஷா
1320  : நாஸிருத்தீன் குஸ்ரு ஷா
( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்)
துக்ளக் வம்சம்
1320  :கியாசுத்தீன் துக்ளக்
1325  :  முஹம்மது பின் துக்ளக்
1351  :பெரோஸ்ஷா துக்ளக்
1388  : கியாசுத்தீன் துக்ளக்
1389 : அபுபக்கர்ஷா
1389  :மூன்றாம் முஹம்மது துக்ளக்
1394  :அலெக்சாண்டர் ஷா
1394  : நாஸிருத்தீன் ஷா
1395  : நுஸ்ரத் ஷா
1399  :நாஸிருத்தீன் முஹம்மது ஷா.
1413  :தவுலத் ஷா
(துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்)
சையித் வம்சம்
1414  :கஜர்கான்
1421  :மெஹசுத் தீன் முபாரக் ஷா
1434  :  முஹம்மது ஷா
1445  :அலாவுதீன் ஆலம் ஷா
(சையத் வம்சம் 37 வருடம்)
லோதி வம்ச ஆட்சி
1451  : பெஹ்லூல் லோதி
1489  : அலெக்சாண்டர் லோதி
1517  : இப்ராஹிம் லோதி
 (லோதி ஆட்சி 75 வருடம்)
முகலாயர் ஆட்சி
1526  : ஜஹிருத்தீன் பாபர்
1530 : ஹிமாயூன்
சூரி வமிச ஆட்சி
1539   : ஷேர்ஷா சூரி
1545  :அஸ்லம் ஷா சூரி
1552  :மெஹ்மூத் ஷா சூரி
1553   :இப்றாஹிம் சூரி
1554  :பர்வேஸ் ஷா சூரி
1554 :முபாரக் கான் சூரி 1555 :அலெக்சாண்டர் சூரி
(16வருடம் சூரி ஆட்சி)
முகலாயர் ஆட்சி
1555  :ஹிமாயூன்
1556  :ஜலாலுத்தீன் அக்பர்
1605  :ஜஹாங்கீர் சலீம்
1628  :ஷாஜஹான் 
1659 : ஒளரங்கசீப்
1707 :ஷாஹே ஆலம்
1712  :பஹதூர் ஷா  1713 :பஹாரோகஷேர்   1719  :ரேபுதாராஜத், நேகஷ்யார்&மெஹ்மூத் ஷா
1754  :ஆலம்கீர்  1759 :ஷாஹேஆலம்
1806 :அக்பர் ஷா
1837 :பஹதூர்ஷா ஜஹபர்
(முகலாயர் ஆட்சி 315 வருடம் )
ஆங்கிலேயர் ஆட்சி
1858 : லார்டு கேங்க்
1862 :லார்டு ஜேம்ஸ்பரோஸ்எல்ஙன்
1864 : லார்ட் ஜான் லோதேநஷ்
1869 :லார்டு ரிசர்டு
1872 :லார்டு நோடபக்
1876 ;லார்டுஎட்வர்ட்
1880 :லார்ட் ஜார்ஜ் ரிப்பன்
1884 :லார்டு டப்ரின்
1894 :  லார்டு ஹேஸ்டிங்
1899 : ஜார்ஜ்கர்னல்
1905: லார்டு
கில்பர்ட்
1910 :லார்டு
சார்லஸ்
1916 :லார்ட் பிடரிக்
1921 : லார்ட் ரக்ஸ்
1926:.லார்ட் எட்வர்ட்
1931: லார்ட் பெர்மேன்வெலிங்டன்
1936 :லார்டு ஐ கே
1943:லார்டு அரக்பேல்
1947 : லார்டு மவுண்ட்பேட்டன்
( ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவு)
சுதந்திர இந்தியாவின் ஆட்சி
1947:ஜவஹர்லால் நேரு
1964:குல்சாரிலால் நந்தா
1964:லால் பகதூர் சாஸ்திரி
1966:குல்சாரிலால் நந்தா
1966: இந்திராகாந்தி
1977: மொராஜி தேசாய்
1979: சரண்சிங்   1980:இந்திராகாந்தி
1984:ராஜீவ்காந்தி
1989:V P சிங்
1990:சந்திரசேகர்
1991:. P.V. நரசிம்மராவ்
1996 A.B.வாஜ்பாய் 13 நாள் ஆட்சி
1996:  A.J. தேவகொளடா
1997: I.K.குஜ்ரால்
1998:A.B.வாஜ்பாய்
2004 :மன்மோஹன்சிங்
2014:நரேந்திர மோடி

இதை தொகுத்த நண்பருக்கு நன்றி!

Wednesday, 20 March 2019

பெருமானார் ஸ‌ல்ல‌ல்லாஹு அலைஹிவ‌ஸ‌ல்ல‌ம் அவ‌ர்க‌ளின் முன்னறிவிப்புகளில் ஒருசில...

பெருமானார் ஸ‌ல்ல‌ல்லாஹு அலைஹிவ‌ஸ‌ல்ல‌ம் அவ‌ர்க‌ளின் முன்னறிவிப்புகளில் ஒருசில...*
==========

o  ” *ஒரு காலம் வரும், இந்த அரபுப் பிரதேசம் செல்வச் செழிப்பாக, சோலையாக மாறும் வரை யுக முடிவுநாள் வராது”* (முஸ்லிம் -157)

o  *தகாத காரியங்களில் (விபச்சாரத்தில்) ஈடுபட்டால் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயங்கள் சந்தித்திராத உயிர்க்கொல்லி நோய் வரும்.* (இப்னுமாஜா)

o  *ஒரு காலம் வரும் ”மது அருந்துவது அதிகமாகிவிடும். தாறுமாறாக அதிகமாகும். அது இல்லாமல் இருக்கமாட்டார்கள்* ”. (புஹாரி : 5581, 5231)

o  *என்னுடைய சமுதாயத்தில் மதுவுக்கு மாற்று பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர்.* (அபூதாவூத்)

o 🎯 *அருகதையற்ற கெட்டவர்கள் தலைமைப் பதவியில் இருப்பார்கள். அநியாயக்கார அரசனை மக்கள் ஏற்றிப் போற்றுவர்.* (புகாரி)

o  *ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர்.* (முஸ்லிம் : 3921)

o  *சங்கீத உபகரணங்கள் மிகுதியாகும். இசையில் மயங்கும் மனிதர்கள் பெருகுவார்கள்* .(திர்மிதி)

o  *காலையில் ஈமானுடனும் மாலையில் குப்ருடனும் மக்கள் தீமையில் உழல்வார்கள்.* (திர்மிதி)

o  *எதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும்.* (முஸ்லிம்)

o  *முஸ்லிம்கள் உலக சுகங்களுக்காகப் போட்டி போடுவார்கள்.* (புகாரி)

o  *பூகம்பங்கள் அதிகம் ஏற்படும்.* (புகாரி)

o  *பூமி அலங்கரிக்கப்படும்* . (திர்மிதி)
 *
o  *பருவ மழைக்காலம் பொய்க்கும்.*

o  **திடீர் மரணங்கள்* *அதிகரிக்கும்,* *மனித ஆயுள் குறையும்.*
*
o  *முஸ்லிம்கள் பெருகியிருப்பர், ஆனால் கடல் நுரைபோல் இருப்பர்.*

o  *பெருமைக்காக பள்ளிவாசல் கட்டுவார்கள்.* (நஸயீ, அஹ்மது, இப்னுமாஜா)

o  *யுக முடிவு நாளின் நெருக்கத்தில் ”இட நெருக்கடி ஏற்படும். மக்கள் ஒரே இடத்தில் வந்து குவியும் போது கட்டிடங்கள் உயரமாகும்’*

o  *வியாபாரமுறைகள் மாறும்* (புகாரி)

o  *பழங்கள் பெரிதாகும். ஒரு மாதுளையை ஒரு கூட்டம் சாப்பிடும்* . (முஸ்லிம்)

o  *ஒரு தடவை ஒரு மாட்டில் கறக்கும் பால் ஒரு கலத்திற்கே போதுமானதாக இருக்கும்.* (முஸ்லிம்)

o  *திருக்குர்ஆன் தங்க மையால் அச்சிடப்பட்டிருக்கும் ஆனால் அதனைப் பின்பற்ற மாட்டார்கள். (பைஹகி) சத்திய விசுவாசிகள் அவமானப்படுத்தப்படுவர்.*

o   ( *குழப்பம்) கடலைப்போன்று அடுக்கடுக்காய் தோன்றிக் கொண்டிருக்கும்.* (புகாரி, முஸ்லிம்)

o  *சின்ன சின்ன விஷயங்களில் அலட்சியமாக இருப்பார்கள்.*

o  *பேச்சையே (அதிகம் பேசி வியாபாரம் செய்வதையே) பிழைப்பாக்கிக் கொள்வார்கள்* .

o  *சந்தைகள் அதிகரித்து அருகாமையில் வந்துவிடும். பொருளாதார வள்ச்சி அதிகமாகும்.* (புகாரி : 7121,1036,1424)

o  🎯 *பொய் மிகைத்து நிற்கும்.** (திர்மிதி)

o  *அமல்கள் (நன்மைகள்) குறைந்து போய்விடும்.* *மக்களின் உள்ளங்களில் பேராசையின் விளைவாக கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும்.* (புகாரி)

o  *முஸ்லிம்கள் மறுமையை நேசிப்பதற்குப் பதிலாக இம்மையை நேசித்து மரணத்தை வெறுப்பார்கள்.*

o  *பசியோடு இருப்பவர்கள் உணவு பாத்திரத்தின் மீது பாய்வது போல் மற்ற சமூகத்தினர் என் சமுதாயத்தின் மீது பாய்வார்கள். எதிரிகளின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றி பயம் இருக்காது. முஸ்லிம்களின் உள்ளங்களில் கோழைத்தனம் வந்துவிடும்.* (அபூதாவூத்)

Tuesday, 19 March 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது?*

 – அனிச்சம்

*2. உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு எது?*

 – சுவீட்சர்லாந்து

*3. மழையின் அளவை கணக்கிட உதவும் கருவி எது?*

 – ரெயின் கேஜ்

*4. பூனையின் கண்பார்வை மனிதனைவிட எத்தனை மடங்கு கூர்மையானது?*

-- எட்டு

*5. உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?*

– 12,500

*6. உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது?*

– டென்மார்க்

*7. கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ?*

 – இங்கிலாந்து

*8. உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?*

– மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8611 மீட்டர்கள்)

*9. எந்த நாடுகளின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது?*

 – அர்ஜென்டீனா மற்றும் உருகுவே

Monday, 18 March 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?*

– 330

*2. உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?*

 – நெதர்லாந்து.

*3. உலகின் மிகச் சிறிய சந்து எது?*

 – புனித ஜான் சந்து. ரோமில் உள்ளது. 48 செ.மீ. அகலம்.

*3. உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது?*

– இந்தோனேஷியா

*4. உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது?*

 – சீராப்புஞ்சி

*5. உலகிலேயே மிக நீளமான மலை எது?*

 – அந்தீஸ்மலை

*6. உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது ?*

 – நார்வே அரசு

*7. கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?*

 – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.

*8. உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?*

– அக்டோபர் 1

*9. உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?*

-- கிரண்ட்டப்

*10. மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு எது?*

 – அயர்லாந்து

Monday, 11 March 2019

தந்தையின் கோபத்தில் அல்லாஹ்வின் கோபம்

தந்தையின் கோபத்தில் அல்லாஹ்வின் கோபம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..

2. தந்தையின் கண்டிப்பை பொறுத்துக் கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....

3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்வார்கள்.

4. தந்தை சொல்வதை கவனமாகக் கேளுங்கள்..!

5. தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள்..!
அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு நமக்கு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!

6. தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம்.
அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டும் பயன் அடைந்துக் கொள்ளுங்கள்..

7. தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக்கூடியவர்...

8. தந்தை அழகான முறையில் நம்மை பாதுகாக்கக் கூடியவர்.

9. முகம் தெரியாத யார் யாருக்கோ மரியாதை செய்யும் நாம் எம்மை அல்லும் பகலும் வளர்த்த தந்தைக்கு எப்படி எல்லாம்  மரியாதை செய்ய வேண்டும்?

10. அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைக்கவேக் கூடாது.

11. தாய் தன் பிள்ளை பத்திரமாக இருக்க வேண்டுமென்று மார்பில் அணைத்துக்கொள்வாள்.
ஆனால்... தந்தை....

தான் பார்க்காத உலகத்தையும் தன் பிள்ளை பார்க்க வேண்டும் என்று தன் தோளின் மேல் தூக்கி,
 'நான் பார்க்காத உலகத்தை நீ பார்'
என்பவரே தந்தை*

12. அவர் உன்னுடைய அருகில்ரு இருக்கும்போதே அவரைப் பயன்படுத்திக்கொள்.

13. தந்தையை போல் உண்மையான நண்பன் இந்த உலகத்தில் யாரும் இல்லை. இதுவே உண்மை.

14. தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல்.

15. தந்தையை மதிக்காதவன் தன் வாழ்க்கையில் எந்த உயரத்திற்கும் செல்லமட்டான்.


பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. உலகின் பழமையான மலைளில் ஒன்று, உயர்ந்த சிகரம் மற்றும் மவுண்ட் அபு குருசிகார் உற்பத்தியாகும் நதி லூனி , செம்பு வெட்டியெடுக்கப்படும் பகுதி சிறப்புகளை கொண்டது எது?*

*விடை:* ஆரவல்லி

*2.  கம்பம் பள்ளத்தாக்கு கொண்ட நாடு ?*

*விடை :* வருஷ நாடு

*3. 1100 முதல் 1600 மீ உயர்ந்த சிகரம் சேர்வராயன் மலை டிஎன் நகரிகுன்று, திருப்பதி, கொல்லிமலை, பச்சமலை இதன் வகை ?*

*விடை :* கிழக்கு தொடர்ச்சி மலை

*4. தேசிய பராம்பரிய விலங்காக யானை அறிவிக்கப்பட்ட ஆண்டு?*

*விடை:* 2010

*5. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எது ?*

*விடை:* கோவை

*6. நெசவு தலைநகரம் ஊர் பெயர் எது ?*

*விடை:* கரூர்

*7. அருணா அசாப் அலி எதனோடு தொடர்புடையவர் ?*

*விடை:* வெள்ளையனே வெளியேறு இயக்கம்

*8. பர்தோலி சத்தியகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது ?*

*விடை:* குஜாராத்

*9. இந்தியாவிற்கு கடல்கண்ட போர்த்துகீசிய மாலுமியான வாஸ்கோடாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தை கண்டார் ?*

*விடை:* 1498

*10. மங்கள்பாண்டே தூக்கிலிடப்பட்ட இடம்?*

*விடை:* பேரக்பூர்

*11. வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தது ?*

*விடை:* 1921 நவம்பர்

*12. சுய மரியாதை இயக்கத்தை தொடங்கியவர் ?*

*விடை:* ஈவெரா பெரியார்

Thursday, 7 March 2019

மாதவிடாய்!!!



#மாதவிடாய்

மாதத்தில் 25 நாட்கள் நாம்மோடு நமக்கு சொர்க்கத்தில் இருப்பதை உரணர்த்துபவள் 5 நாட்கள் மட்டும் நரகத்தில் வாழ்கிறாள் என்பதை நாம் உணர்வது இல்லை....

அவள் அந்த நாட்களில் நிம்மதியாக அமருவதும் இல்லை.. பொது இடங்களில் செல்வதும் இல்லை....

அதை அவளாக விரும்பி ஏற்றுக் கொள்ள வில்லை அதை அவளால் தடுக்கவும் முடியாது...

தன் சகோதரனின் கூட சொல்ல முடியாது அந்த வேதனையை.....

ஒரு சில ஆண்மகன்கள் அவளின் உதிரத்தின் வாடையில் கொமட்டலும் வாந்தியும் வரும் என்று கூறும்போது அவளிடம் இருந்து சுகத்தை பருகும் போது எங்கே சென்றது என தெரியவில்லை.....

அவள் அந்த நாட்களில் அடையும் வேதனையை அந்த கடவுளும் அறியானோ.....

உனக்காக 25 நாட்கள் உன்னோடு வாழும் அவளுக்காக 5, நாட்கள் அவளுக்காக வாழுங்கள் வேற ஏதும் வேண்டாம்...

அவளை ஒதுக்கி வைக்காமல் அவளிடம் அன்பாக பேசி அவளின் வேதனையை புரிந்து கொள்ளுங்கள்..

அவள் மீதம் உள்ள நாட்களில் உங்களுக்காக வாழ்வாள்...

உன் ஆடையில் ஏதோ ஒரு சிறிய கரை பட்டாலே அசிங்கமாக நினைக்கும் நீ அவளை பார்த்து சிரித்துக் கொள்வது ஏனோ...

அவளுக்கு அந்த முதல் நாள் எப்படி எங்கே தொடங்கும் என தெரியாமல் அவள் அடையும் வேதனையை வார்த்தைகளால் கூறி விட முடியாது....

நீ ஒரு பெண்ணுக்கு எந்த உறவாக வேணாலும் இரு ஆனால் அந்த நாட்களில் 2 வயது குழந்தைக்கு தாயாக இருப்பது போல் இரு.. அதுவே போதும் அவளுக்கு உனக்காக வாழ்வாள்.....

*ஆண்களுக்கு அந்த வேதனையை கொடுக்காத இறைவன்*

♾🌹♾🌹♾🌹♾🌹♾🌹♾
         

Wednesday, 6 March 2019

எட்டு விதமான சொர்க்கங்கள்.










பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?*

காம்டே.

*2. பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?*

ஜார்கண்ட்.

*3. தமிழகத்தின் புகழ்ப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?*

ஈரோடு.

*4. 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?*

ஜெர்மனி.

*5. ஆஸ்கர் விருதுக்கு தமிழின் எந்த படம் முதன் முதலாக பரிந்துரை செய்யப்பட்டது?*

தெய்வ மகன் (1969)

*6. இந்தியாவின் புவியியல் மையமாக எந்த நகரம் உள்ளது?*

நாக்பூர்.

*7. இமயமலையில் அமைந்துள்ள பிற சிகரங்கள்?*

               கஞ்சன்ஜங்கா(8598 மீ)
               நங்கபர்வத்(8126 மீ)
               தவளகிரி( 8167 மீ )
               நந்திதேவி( 7818 மீ)

*8. வெள்ளகொலுசு நிறம்மாறக் காரணம் என்ன ?*

            வெள்ளி, காற்றில் உள்ள ஹைட்ரஜன் சல்பைடும்

           வினைபுரிந்து வெள்ளி சல்பைடாக(Ag2S) மாறிவிடுகிறது

Tuesday, 5 March 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?*

திருநெல்வேலி

*2. அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?*

Save Our Soul.

*3.  உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?*

அக்டோபர் 1.

*4. மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?*

கிவி.

*5. போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?*

வைரஸ்.

*6. அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?*

தண்ணீர்.

*7. இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?*

மார்ச் 21.

*8. இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?*

4.

*9. பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?*

ஓடோமீட்டர்.

*10. உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?*

கிரண்ட்டப்

Monday, 4 March 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1.இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், தந்திக்கம்பிகள் உள்ளன.?*

7 தந்திக்கம்பிகள் உள்ளன.

*2. எறும்பின் ஆயுட்காலம்?*

10 ஆண்டுகள்.

*3.சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?*

இஸ்லாமியக் காலண்டர்

*4. சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?*

2008 அக்டோபர் 22

*5. காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்?*

தமிழ்நாடு

*6. தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?*

48%

*7. நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?*

ராஜஸ்தான்

*8. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?*

பச்சேந்திரி பாய்

*9. பரப்பளவில் இந்தியா உலகளவில் ________ இடத்திலுள்ளது?*

7

*10. _______________ நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்?*

டேகார்டு

Friday, 1 March 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. ‘உள்ளாட்சியின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?*

*2. தேசிய இயற்பியல் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?*

*3. போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் யார்?*

*4. சாக்பீஸ் எந்த வேதிப்பொருளால் ஆனது?*

*5. பிராண வாயு சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் இந்தியர் யார்?*

*6. பீனியல் சுரப்பி எங்கு அமைந்துள்ளது?*

*7. அமெரிக்க டாலர் நோட்டின் பெயர் என்ன?*

*8. தேசிய காவலர் பயிற்சி அகாடமி எங்குள்ளது?*

*9. மலைப்பகுதியில் நெல் சாகுபடிக்கு புகழ்பெற்ற இடம் எது?*

*10. முதன்முறையாக தமிழை ஆட்சிமொழியாக அறிவித்த வெளிநாடு எது?*

*11. மழையின் அளவை கணக்கிட உதவும் கருவி எது?*

*12. பென்சில் செய்ய உதவும் மரம் எது?*

*13. மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு எது?*

*14. இந்தியாவில் உப்புச்சுரங்கம் எங்குள்ளது?*

*15. முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது?*

📌 *விடைகள் :*

_1. ரிப்பன் பிரபு, 2. புதுடெல்லி, 3. ஜோனாஸ் சால்க், 4. கால்சியம் கார்பனேட், 5. புதோர்ஜி, 6. மூளையில், 7. கிரீன்பேக், 8. ஐதராபாத், 9. கொல்லிமலை, 10.சிங்கப்பூர், 11. ரெயின் கேஜ், 12. கோனிபெரஸ், 13. அயர்லாந்து, 14. பஞ்சாப், 15. அனிச்சம்._

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

1. *உலகின் பழமையான மலைளில் ஒன்று, உயர்ந்த சிகரம் மற்றும் மவுண்ட் அபு குருசிகார் உற்பத்தியாகும் நதி லூனி , செம்பு வெட்டியெடுக்கப்படும் பகுதி சிறப்புகளை கொண்டது எது?*

*விடை:* ஆரவல்லி

*2. கம்பம் பள்ளத்தாக்கு கொண்ட நாடு ?*

*விடை :* வருஷ நாடு

*3. 1100 முதல் 1600 மீ உயர்ந்த சிகரம் சேர்வராயன் மலை டிஎன் நகரிகுன்று, திருப்பதி, கொல்லிமலை, பச்சமலை இதன் வகை ?*

*விடை :* கிழக்கு தொடர்ச்சி மலை

*4. தேசிய பராம்பரிய விலங்காக யானை அறிவிக்கப்பட்ட ஆண்டு*

*விடை:* 2010

*5. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எது*

*விடை:* கோவை

*6. நெசவு தலைநகரம் ஊர் பெயர் எது*

*விடை:* கரூர்

*7. அருணா அசாப் அலி எதனோடு தொடர்புடையவர்*

*விடை:* வெள்ளையனே வெளியேறு இயக்கம்

*8. பர்தோலி சத்தியகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது*

*விடை:* குஜாராத்

*9. இந்தியாவிற்கு கடல்கண்ட போர்த்துகீசிய மாலுமியான வாஸ்கோடாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தை கண்டார்*

*விடை:* 1498

*10. மங்கள்பாண்டே தூக்கிலிடப்பட்ட இடம்?*

*விடை:* பேரக்பூர்

பொது தேர்விற்காக... மாணவர்களுக்கு சில டிப்ஸ்!!!!

பொது தேர்விற்காக... மாணவர்களுக்கு சில டிப்ஸ்

1. குறித்த நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்திற்கு சென்று இறுதி நேர பதற்றத்தை தவிர்த்து கொள்ள வேண்டும்.

2. தேர்விற்கு முந்தைய நாளே தேர்விற்கான எழுது பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

3. கூடுதலாக ஒரு பேனா கையில் வைத்திருப்பது தேர்வறையில் உதவும்.

4. தேர்விற்கு முந்தைய இரவு அதிகம் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.

மன வரைப்படம் போல படித்து நினைவுகூர்தலை பயிற்சி எடுங்கள். சிறு குறிப்புகள் எடுங்கள். இறுதி நேர திருப்புதலில் உதவும்.

ஒவ்வொரு வினாவிலும் - நினைவு கூர்தலுக்காக முக்கிய கருத்துளை points ஆக மனதில் கொள்ளுங்கள்.

5. தேர்வு காலங்களில் அதிகம் பழங்கள் & காய்கறிகளை உணவாக எடுத்து கொள்ள வேண்டும்.

அதிகளவில் நீர் பருக வேண்டும்.

6. தேர்வறைக்கு செல்லும் முன் சிறு காகித துண்டு துணுக்குகள் உள்ளனவா சுய பரிசோதனை செய்து தன்னம்பிக்கையுடன் தேர்வறை செல்ல வேண்டும்.

7. முன் திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை மிக அவசியம்.

8. வினாத்தாள் படிக்கும் 10 நிமிடம் மிக முக்கிய தருணம். சலனமின்றி வினாத்தாளை படியுங்கள். வினாத்தாள் எவ்வளவு கடினத் தன்மை மிக்கதாய் இருப்பினும் பதற்றம் வேண்டாம். நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும்.

9. தேர்வு தாளில் கையொப்பமிட மறக்க வேண்டாம்.

10. தேர்வு முடிந்த பிறகு வினாத்தாள் பற்றி கலந்துரையாடலை தவிர்க்கவும். எழுதியவை மாறப்போவதில்லை.

11. சிறு உறக்கம் எடுத்து கொண்டு புத்துணர்வுடன் அடுத்த தேர்விற்கு படிக்கவும்.

12. விடுமுறை நாள் சோம்பலை தவிர்க்க குழுவாக படியுங்கள் அல்லது பள்ளி சென்று படியுங்கள்.

13. இறுதி நேரத்தில் படித்ததை மீள்பார்வை செய்யுங்கள்.
புதியவை படிக்க வேண்டாம்.

14. தேர்வை மயிலிறகை போல மென்மையாய் அணுகவும் . மகிழ்வாய் தேர்வினை எழுதுங்கள் .

15. உங்களுக்கு வழிகாட்டியான பெற்றோர் அல்லது  ஆசிரியர்களிடம் ஆசி பெற்று செல்லுங்கள். கூடுதல் நம்பிக்கை பிறக்கும்.

15. Creative வினாக்காளை பாடத்துடன் தொடர்புபடுத்தி சிந்தித்து தீர்வு கண்டு - விடையளிக்கவும்.

16. வெயில் வெப்பம் அதிகம் இருப்பதால் சரியான அளவு நீர் கொண்ட இயற்கை உணவு பொருட்களை உட்கொள்ளுங்கள்.

17. தேர்விற்கு முந்தைய நாள் தயாரிப்புகளில் - ஏற்கனவே பலமுறை படித்ததன் காரணமாக ஏற்படும் சலிப்பினை தவிர்க்க மனதை ஒருநிலைபடுத்தி மகிழ்ச்சியாய் வைத்து கொள்ளுங்கள்.

18. படிப்பதன் இடைவெளிகளில் இயற்கை சூழலை ரசிக்க நடை பயணம் மேற்கொள்ளுங்கள். TV பார்ப்பது படித்ததை மறக்க செய்யும். மாறாக நல்ல இசை கேட்கலாம்.

19. நம்மை நாம் வெளிபடுத்த _ நமக்கு கிடைத்த வாய்ப்பு என எண்ணி படியுங்கள்.

20. இறுதியாக தன்னம்பிக்கை - இது ஒன்று மட்டும் போதும். எதிர்வரும் தேர்வில் எண்ணிய இலக்கை எட்டலாம்.

முயற்சியும் - பயிற்சியும் வெற்றியின் வழிகாட்டிகள்.

வாகை சூட வாழ்த்துகளுடன்