Monday, 11 March 2019

தந்தையின் கோபத்தில் அல்லாஹ்வின் கோபம்

தந்தையின் கோபத்தில் அல்லாஹ்வின் கோபம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..

2. தந்தையின் கண்டிப்பை பொறுத்துக் கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....

3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்வார்கள்.

4. தந்தை சொல்வதை கவனமாகக் கேளுங்கள்..!

5. தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள்..!
அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு நமக்கு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!

6. தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம்.
அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டும் பயன் அடைந்துக் கொள்ளுங்கள்..

7. தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக்கூடியவர்...

8. தந்தை அழகான முறையில் நம்மை பாதுகாக்கக் கூடியவர்.

9. முகம் தெரியாத யார் யாருக்கோ மரியாதை செய்யும் நாம் எம்மை அல்லும் பகலும் வளர்த்த தந்தைக்கு எப்படி எல்லாம்  மரியாதை செய்ய வேண்டும்?

10. அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைக்கவேக் கூடாது.

11. தாய் தன் பிள்ளை பத்திரமாக இருக்க வேண்டுமென்று மார்பில் அணைத்துக்கொள்வாள்.
ஆனால்... தந்தை....

தான் பார்க்காத உலகத்தையும் தன் பிள்ளை பார்க்க வேண்டும் என்று தன் தோளின் மேல் தூக்கி,
 'நான் பார்க்காத உலகத்தை நீ பார்'
என்பவரே தந்தை*

12. அவர் உன்னுடைய அருகில்ரு இருக்கும்போதே அவரைப் பயன்படுத்திக்கொள்.

13. தந்தையை போல் உண்மையான நண்பன் இந்த உலகத்தில் யாரும் இல்லை. இதுவே உண்மை.

14. தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல்.

15. தந்தையை மதிக்காதவன் தன் வாழ்க்கையில் எந்த உயரத்திற்கும் செல்லமட்டான்.


No comments:

Post a Comment