Wednesday, 27 March 2019

தொழுகையும் தடைகளும்:

தொழுகையும் தடைகளும்
+++++++++++++++++++

        *சுபஹ்*
            -------
சுருண்டு படுக்க
சுகம் வரும்.
கூதல்
மோதல் செய்யும்.
எப்போதோ சுகமான
ஏதோவொரு நோய்
இப்ப ஞாபகம் வந்து
எழும்பாதே என்று சொல்லும்.
இலேசான மழை
இருக்கிற பத்வாவை
எடுத்துக் காட்டும்.
எல்லாவற்றையும்
எடுத்தெறிந்து
எழுபவனே
ஈமான்தாரி.

          *ளுஹர்*
          +++++++
சூட்டுச் சூரியன்
சோதிக்கும்.
பார்த்த செய்தி
பாதியில் இருக்கும்.
வியர்வை அலுப்பு
வேண்டாம் என்று சொல்லும்.
லெப்பைமார் சிலரே
லேட்டாகித் தொழுவது
லேசாக ஞாபகம் வரும்.
உள்ள பிரச்சினையை
ஓரமாக்கி வைத்து விட்டு
பள்ளிக்குச் செல்பவனே
பக்குவ முஸ்லிம்.

               *அஸர்*
                   +++++
லுஹர் பின் உண்டது
லொள்ளு பண்ணும்.
கண்றாவித் தூக்கம்
கண்களைத் தாக்கும்.
கிளைமாக்ஸ் சீன்
கிக்காகப் போகும்.
மொபைல் போன் கால் (call)
மொக்கை போடும்.
அத்தனையும் ஒதுக்கி விட்டு
அஸருக்குப் பள்ளி செல்.
ஈமான் வளரும்
இதயம் மலரும்.

            *மஹ்ரிப்*
                 +++++
உழைத்த களைப்பு
ஓய்வெடுக்கச் சொல்லும்.
விளையாட்டில் இருப்போர்க்கு
விறுவிறுப்பு ஏறும்.
அடுத்த தொழுகையும்
அவசரமாய் வருவதால்
இரண்டு தரம் போக
இயலாது என்று தோன்றும்.
கூடுகின்ற கூட்டங்களில்
கூடும் சுவாரஸ்யம்.
அடுப்பில் டீ கொதிக்கிறது
அம்மணியின் குரல் கேட்கும்.
இடுப்பில் உள்ள பிள்ளை
இறங்க இயலா என்று சொல்லும்.
இத்தனையும் தாண்டி
எழுந்து மக்ரிப் செல்
சுத்தமான ஈமான்
சுரக்கத் தொடங்கும்.

              *இஷா*
                +++++
இப்பதானே போய் வந்த
என்று மனம் சொல்லும்.
அப்பாடா என்று சொல்லி
ஆறுதலாய் இருக்கச் சொல்லும்.
காப்பியைக் கொண்டு வந்து
குழந்தை படம் காட்டும்.
சில்லறைக் கடை வாசலிலே
சிலர்க்கு பிஸியாகும்.
சீரியல் நாடக்த்தில்
சிந்தனை லயித்திருக்கும்.
ஊர் பலாய் கழுவுதலில்
உற்சாகம் பீறிடும்.
இததனையும் ஒதுக்கி
இஷாத் தொழச் சென்றால்
பாவமெல்லாம்
மறையத் தொடங்கும்

No comments:

Post a Comment