Wednesday, 20 March 2019

பெருமானார் ஸ‌ல்ல‌ல்லாஹு அலைஹிவ‌ஸ‌ல்ல‌ம் அவ‌ர்க‌ளின் முன்னறிவிப்புகளில் ஒருசில...

பெருமானார் ஸ‌ல்ல‌ல்லாஹு அலைஹிவ‌ஸ‌ல்ல‌ம் அவ‌ர்க‌ளின் முன்னறிவிப்புகளில் ஒருசில...*
==========

o  ” *ஒரு காலம் வரும், இந்த அரபுப் பிரதேசம் செல்வச் செழிப்பாக, சோலையாக மாறும் வரை யுக முடிவுநாள் வராது”* (முஸ்லிம் -157)

o  *தகாத காரியங்களில் (விபச்சாரத்தில்) ஈடுபட்டால் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயங்கள் சந்தித்திராத உயிர்க்கொல்லி நோய் வரும்.* (இப்னுமாஜா)

o  *ஒரு காலம் வரும் ”மது அருந்துவது அதிகமாகிவிடும். தாறுமாறாக அதிகமாகும். அது இல்லாமல் இருக்கமாட்டார்கள்* ”. (புஹாரி : 5581, 5231)

o  *என்னுடைய சமுதாயத்தில் மதுவுக்கு மாற்று பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர்.* (அபூதாவூத்)

o 🎯 *அருகதையற்ற கெட்டவர்கள் தலைமைப் பதவியில் இருப்பார்கள். அநியாயக்கார அரசனை மக்கள் ஏற்றிப் போற்றுவர்.* (புகாரி)

o  *ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர்.* (முஸ்லிம் : 3921)

o  *சங்கீத உபகரணங்கள் மிகுதியாகும். இசையில் மயங்கும் மனிதர்கள் பெருகுவார்கள்* .(திர்மிதி)

o  *காலையில் ஈமானுடனும் மாலையில் குப்ருடனும் மக்கள் தீமையில் உழல்வார்கள்.* (திர்மிதி)

o  *எதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும்.* (முஸ்லிம்)

o  *முஸ்லிம்கள் உலக சுகங்களுக்காகப் போட்டி போடுவார்கள்.* (புகாரி)

o  *பூகம்பங்கள் அதிகம் ஏற்படும்.* (புகாரி)

o  *பூமி அலங்கரிக்கப்படும்* . (திர்மிதி)
 *
o  *பருவ மழைக்காலம் பொய்க்கும்.*

o  **திடீர் மரணங்கள்* *அதிகரிக்கும்,* *மனித ஆயுள் குறையும்.*
*
o  *முஸ்லிம்கள் பெருகியிருப்பர், ஆனால் கடல் நுரைபோல் இருப்பர்.*

o  *பெருமைக்காக பள்ளிவாசல் கட்டுவார்கள்.* (நஸயீ, அஹ்மது, இப்னுமாஜா)

o  *யுக முடிவு நாளின் நெருக்கத்தில் ”இட நெருக்கடி ஏற்படும். மக்கள் ஒரே இடத்தில் வந்து குவியும் போது கட்டிடங்கள் உயரமாகும்’*

o  *வியாபாரமுறைகள் மாறும்* (புகாரி)

o  *பழங்கள் பெரிதாகும். ஒரு மாதுளையை ஒரு கூட்டம் சாப்பிடும்* . (முஸ்லிம்)

o  *ஒரு தடவை ஒரு மாட்டில் கறக்கும் பால் ஒரு கலத்திற்கே போதுமானதாக இருக்கும்.* (முஸ்லிம்)

o  *திருக்குர்ஆன் தங்க மையால் அச்சிடப்பட்டிருக்கும் ஆனால் அதனைப் பின்பற்ற மாட்டார்கள். (பைஹகி) சத்திய விசுவாசிகள் அவமானப்படுத்தப்படுவர்.*

o   ( *குழப்பம்) கடலைப்போன்று அடுக்கடுக்காய் தோன்றிக் கொண்டிருக்கும்.* (புகாரி, முஸ்லிம்)

o  *சின்ன சின்ன விஷயங்களில் அலட்சியமாக இருப்பார்கள்.*

o  *பேச்சையே (அதிகம் பேசி வியாபாரம் செய்வதையே) பிழைப்பாக்கிக் கொள்வார்கள்* .

o  *சந்தைகள் அதிகரித்து அருகாமையில் வந்துவிடும். பொருளாதார வள்ச்சி அதிகமாகும்.* (புகாரி : 7121,1036,1424)

o  🎯 *பொய் மிகைத்து நிற்கும்.** (திர்மிதி)

o  *அமல்கள் (நன்மைகள்) குறைந்து போய்விடும்.* *மக்களின் உள்ளங்களில் பேராசையின் விளைவாக கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும்.* (புகாரி)

o  *முஸ்லிம்கள் மறுமையை நேசிப்பதற்குப் பதிலாக இம்மையை நேசித்து மரணத்தை வெறுப்பார்கள்.*

o  *பசியோடு இருப்பவர்கள் உணவு பாத்திரத்தின் மீது பாய்வது போல் மற்ற சமூகத்தினர் என் சமுதாயத்தின் மீது பாய்வார்கள். எதிரிகளின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றி பயம் இருக்காது. முஸ்லிம்களின் உள்ளங்களில் கோழைத்தனம் வந்துவிடும்.* (அபூதாவூத்)

No comments:

Post a Comment