Wednesday, 20 February 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. ஐ.நா. பொருளாதார சமூகச்சபையின் உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?*

3 ஆண்டுகள்

*2. ஐ.நா. பாதுகாப்புச்சபையின் தற்காலிக உறுப்பினரின் பதவிக்காலம் எவ்வளவு ஆண்டு?*

1 ஆண்டு

*3. ஐ.நா. பொருளாதார சமூகச்சபையின் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?*

பொதுச்சபையால். (மூன்றில் இரண்டு பங்கு வாக்கு பெரும்பான்மையில்)

*4. ஐ.நா. பொருளாதார சமூகச்சபை எத்தனை பிரதிநிதிகளை கொண்டது?*

54 உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள்

*5. ஐ.நா. பொருளாதார சமூகச்சபையின் பணிகள் என்ன?*

பன்னாட்டு பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், கல்வி, சுகாதாரம்.

*6. ஐ.நா. பொறுப்பாண்மைக் குழுவின் (Trusteeship Council) தலைமையகம் எங்குள்ளது?*

நியூயார்க்

*7. ஐ.நா. பொறுப்பாண்மைக்குழுவின் உறுப்பினர்கள் யார்?*

சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா.

*8. ஐ.நா. பொறுப்பாண்மைக்குழு எதற்கு அமைக்கப்பட்டது?*

சுயஆட்சி அதிகாரம் பெறாத நாடுகளின் நலனைப் பாதுகாக்க அமைக்கப்பட்டது.

*9. ஐ.நா.பொறுப்பாண்மைக் குழுவின் தலைமைப் பதவி எந்த நாட்டிடம் உள்ளது?*

ஒவ்வொரு நாடும் ஒரு வருடம் மட்டும் என்ற சுழற்சி முறையில் (5 நாடுகள் மட்டும்)

*10. ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றம் எங்குள்ளது?*

International Court of Justice திஹேக், நெதர்லாந்து

No comments:

Post a Comment