Monday, 31 December 2018

பொது அறிவு வினா விடை :

பொது அறிவு வினா விடை :

*1. தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?*

234

*2. தமிழக சட்டமன்றத்தின் மேலவை எந்த ஆண்டு கலைக்கப்பட்டது?*

1986

*3. மாநகராட்சியின் மேயர், துணை மேயர் ஆகியோரின் பதவிகாலம் எவ்வளவு?*

ஐந்து(5) ஆண்டுகள்

*4. தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கபடுகிறார் ?*

சேர்மன்

*5. எந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றக்கிளை மதுரையில் தொடங்கப்பட்டது ?*

2003

*6. பேரரசி விக்டோரியாவின் பிரகடனம் எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது?*

1858

*7. அடிப்படை கடமைகள் அடங்கியுள்ள பிரிவு என்ன?*

பிரிவு 51 ஏ

*8. தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு(SAARC) மாநாடு முதல் முதலில் எங்கே நடந்தது?*

டாக்கா

*9. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?*

அம்பேத்கர்

*10. எது அடிப்படை உரிமை கிடையாது?*

சொத்துரிமை.

No comments:

Post a Comment