Monday, 31 December 2018

பொது அறிவு வினா விடை :

பொது அறிவு வினா விடை :

*1. தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?*

234

*2. தமிழக சட்டமன்றத்தின் மேலவை எந்த ஆண்டு கலைக்கப்பட்டது?*

1986

*3. மாநகராட்சியின் மேயர், துணை மேயர் ஆகியோரின் பதவிகாலம் எவ்வளவு?*

ஐந்து(5) ஆண்டுகள்

*4. தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கபடுகிறார் ?*

சேர்மன்

*5. எந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றக்கிளை மதுரையில் தொடங்கப்பட்டது ?*

2003

*6. பேரரசி விக்டோரியாவின் பிரகடனம் எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது?*

1858

*7. அடிப்படை கடமைகள் அடங்கியுள்ள பிரிவு என்ன?*

பிரிவு 51 ஏ

*8. தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு(SAARC) மாநாடு முதல் முதலில் எங்கே நடந்தது?*

டாக்கா

*9. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?*

அம்பேத்கர்

*10. எது அடிப்படை உரிமை கிடையாது?*

சொத்துரிமை.

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. 1997-ம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை எந்த விழிப்புணர்வுக்காகத் தேர்ந்தெடுத்தது?*

சுற்றிச்சுழல் மற்றும் வளர்ச்சி

*2. சென்னை மாநிலம், தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட ஆண்டு எது?*

1969

*3. அகில இந்தியா பணிகளை உருவாக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு?*

பாராளுமன்றம்

*4. இந்தியாவில் வாக்குரிமை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வயது என்ன?*

18 வருடம்

*5. கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் மைய அரசால் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?*

1976

*6. இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்?*

ஜாஹிர் உஷேன்

*7. ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?*

குடியரசுத்தலைவர்

*8. சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவானது?*

1968

*9. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் பெயர் என்ன?*

எல். ஸ்ரீராமுலு நாயுடு

*10.  ஆ.தி.மு.க முதல் முதலாக வெற்றி பேட்டர பாராளுமன்றத் தொகுதி எது?*

திண்டுக்கல்

Friday, 28 December 2018

இறுதிநாளின் அடையாளங்கள் ( குர்ஆனிலிருந்து):

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

உலகம் அழியும் போது ஏற்படும் நிகழ்வுகள் குறித்து #இஸ்லாம் கூறும் விளக்கம் :

1. இறுதிநாளின் அடையாளங்கள் ( குர்ஆனிலிருந்து):

1. ய்ஃஜுஜ், மாஃஜுஜ் கூட்டத்தாரின் வருகை
(18:94)(21:96)

2. புகைமண்டலம் உருவாகுதல் (44:10)

3.குர்ஆனை நம்பாதோரை இனங்காட்டி பேசுகின்ற பிராணியின் வருகை
(27:82)

4. ஈஸாநபியின் வருகை
(4:159)(19:33)(43:61)

" #இறுதிநாளின் ஆரம்ப நிகழ்வுகள் :

1. சூரியன் சுருட்டப்படும்.

2. நட்சத்திரங்கள் வானிலிருந்து உதிர்ந்துவிடும்.

3. மலைகள் அனைத்தும் பூமியிலிருந்து பெயர்த்து எடுக்கப்படும்.

4. கருவுற்ற #ஒட்டகங்கள் கவனிப்பாரின்றி திரியும்.

5. விலங்குகள் அனைத்தும் ஒன்றாக திரட்டப்படும்.

6. கடல்கள் தீமூட்டப்பட்டு எரிக்கப்படும்.

7. உயிர்கள் அனைத்தும் தன் உடல்களுடன் ஒன்று சேர்க்கப்படும்.

8&9. உயிருடன் புதைக்கப்பட்ட பெண்குழந்தையை எழுப்பி என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டாள் என விசாரிக்கப்படும்.

10. வினைபதிவேடுகள் ( நன்மை, தீமை பதியப்பட்ட ஏடு) விரிக்கப்படும்.

11. வானம் பிளக்கப்பட்டு அகற்றப்படும்.

12. நரகம் கொழுந்துவிட்டு எரிக்கப்படும்.
(81:1to 12 )

13. குழந்தைகள் நரைத்த கிழவர்களைபோல் காட்சி அளிப்பார்கள்.
(73:17)

14. பாலூட்டும்தாய் தனது குழந்தையை மறந்துவிடுவாள். (22:2)

15. கர்பமுடைய #பெண் தன்வயிற்றில் இருக்கும் குழந்தையை பயத்தால் ஈன்றுவிடுவாள்.
(22:2 )

16. மனிதன் தனக்கு எதிராகவே #சாட்சி கூறுவான்.!
(24:24)

17.மனிதனின் உற்றார் உறவினர்கள் அவனைவிட்டு ஓடுவார்கள்.
(6:94)(16:111)(31:33)(35:18)(60:3)(75:10)(80:35)

18. தீயோர் நீலநிறக்கண்களுடன் எழுப்பப்படுவார்கள்.
(20:102)

19. காலோடு #கால் பின்னிக்கொள்ளும்.
(75:29, 30)

20. மனிதன் செருப்புஅணியாத நிலையில் எழுப்பப்படுவான்.!
புகாரி :4740

21. மனிதன் #ஆடை அணியாத நிலையில் எழுப்பப்படுவான்.!
புகாரி : 4740

22. மனிதன் #விருத்தசேனம் (சுன்னத்) செய்யப்படாத நிலையில் எழுப்பப்படுவான்.!
புகாரி :4740

" நடந்து முடிந்த #ஐந்து மறுமைநாளின் அடையாளங்கள் யாவை? "

1. புகை.

2. ரோமர்கள் பாரசீகர்களால்
தோற்கடிக்கப்பட்டு மீண்டும்
வெற்றிபெற்றது.

3.சந்திரன் பிளந்தது.

4. பத்ருப்போரில் ஏதிரிகள் வெற்றியடைந்தது.

5.இறைவனின் #தண்டனை ( 7ஆண்டுகள் ஏற்பட்ட கடும் பஞ்சம். ஆதாரம் : புகாரி :4820, 4825

" #இறுதிநாளின்^அடையாளங்கள் "
NOTE : ஹதீஸிலிருந்து தொகுக்கப்பட்டவை :

1. ஒரு அடிமைப்பெண் தன் எஜமானை பெற்றெடுப்பாள்.
புகாரி :4777

2. காலில் செருப்பணியாத, நிர்வாணமாணவர்கள் மக்களின் தலைவராவார்கள்.
புகாரி : 4777

3. #தர்மம் செய்யப்படும் பொருட்களை மனிதர்கள் வாங்கமறுப்பார்கள் (அந்த அளவு செல்வம் கொழிக்கும்).
புகாரி : 1411, 1412, 1413, 1414, 1424

4. ஈஸா நபியின் வருகை.
புகாரி : 2222

5. #ஈஸா_நபி " சிலைகளை " உடைப்பார்கள்.
புகாரி :2222

6. ஈஸா நபி #பன்றியை கொல்வார்கள்.
புகாரி : 2222

7. ஈஸா நபி ஜிஸ்யாவரியை நீக்குவார்கள்.
புகாரி : 2222

8. #செல்வம் கொழிக்கும்.
புகாரி :2222, 1036

9. #கல்வி குறைந்துபோகும்.
புகாரி : 80, 81, 1036

10. அறியாமை வெளிப்படும்.
புகாரி : 80, 81

11. #விபச்சாரம் பகிரங்கமாக நடக்கும்.
புகாரி : 80, 81

12. 50 பெண்களுக்கு 1 ஆண் என்ற பிறப்புவிகிதம் ஏற்ப்படும் .
புகாரி :80, 81, 5231, 5577, 6808

13. இறுதிநாளின் முதல் அடையாளம் ஒரு நேருப்பு கிழக்கிலிருந்து மக்களை துரத்திக்கொண்டு வந்து மேற்குத்திசையில் ஒன்று சேர்க்கும் புகாரி : 4480 , முஸ்லிம் : 5162

14. "#தஜ்ஜாலின் " வருகை
முஸ்லிம் :5228, 5237
திர்மீதி : 2163

15. #மதுபானம் பெருகும்.
புகாரி : 80, 81

16. கருத்த ஒட்டகங்களை மேய்தவர்கள் உயரமான கட்டிடங்களைகட்டி தமக்குள் பெருமையடித்துக் கொள்வார்கள். புகாரி : 50

17. பெண்கள்! ஒட்டகத்திமில் போல் கொண்டை அணிந்துயிருப்பார்கள் .

18. #பூகம்பங்கள் அதிகரிக்கும்.
புகாரி : 1036, 7121

19. காலம் சுருங்கும்.
புகாரி : 1036, திர்மிதீ : 2254

20. குழப்பங்கள் அதிகரிக்கும்.
புகாரி : 1036, 3176

21. கொலைகள் அதிகரிக்கும்.
புகாரி : 85 ,1036, 6037, 7061.

22. குடிசைகள் கோபுரமாகும்.
புகாரி : 7121

23. தகுதியற்றவர்களிடம் பொருப்புகள் ஒப்படைக்கப்படும். புகாரி :59 6496

24. பாலைவனம் சோலைவனமாகும்.
முஸ்லிம் : 1681

25. பள்ளிவாசல்களை கட்டி ( அதைக்காட்டி) தமக்குள் பெருமையடித்துக்கொள்வார்கள்.
நஸயி : 682,
அபூதாவூத் : 379,
இப்னுமாஜா : 731
அஹ்மத் : 11931, 12016, 12079, 12925, 13509

26. நெருக்கமான கடைவீதிகள் ஏற்படும்.
அஹ்மத் : 10306

27. ஆடைஅணிந்தும் #நிர்வாணமாக காட்சியளிக்கும் பெண்கள்
தோன்றுவார்கள்.
முஸ்லிம் : 3971, 5098

28. உயிரற்ற பொருட்கள் பேசும். அஹ்மத் : 11365

29. பேச்சை தொழிலாக்கி #பொருள் திரட்டப்படும்.
அஹ்மத் : 1511

30. தெரிந்தவர்களுக்கு மட்டும் " #ஸலாம் " சொல்லும் காலம் வரும். ஹாக்கிம் : 4/493

31. பள்ளிவாசல்களை போக்குவரத்துக்கு பொதுப்பாதையாக பயன்படுத்தும் #காலம் வரும்.
ஹாக்கிம் : 4/493

32. மனிதன் மரணிப்பதற்கு ( #தற்கொலை செய்துகொள்ள) ஆசைப்படுவான்.
புகாரி : 7115, 7121

33. 30 பொய்யர்கள் தன்னை " #இறைத்தூதர் " என சொல்லும் காலம்வரும்.
புகாரி : 3609, 7121

34. முந்தைய சமுதாயமக்களை ஜானுக்கு ஜான், முழத்திற்கு முழம் பின்பற்றும் காலம்வரும். அவர்கள் #உடும்பு பொந்தில் நுழைந்தால் இவர்களும் நுழைவார்கள்.
புகாரி : 3456, 7319

35. யூதர்களுடன் முஸ்லிம்கள் மாபெரும் #போர் தொடுப்பார்கள். புகாரி : 2926

36. " #காபா " ஆலயம்! கால்கள் சிறுத்த அபிசீனியர்களால் சேதப்படுத்தப்படும். ( அல்லாஹ் காப்பாற்றுவானாக)
புகாரி : 5179

37. #யூப்ரடீஸ் ( ஃபுராத்) நதியில் தங்கப்புதையல் கிடைக்கும் அதைஎடுக்க வேண்டாம்.
புகாரி : 7119

38. யமன் நாட்டு #கஹ்தான் இன மன்னரின் ஆட்சி ஏற்படும்.
புகாரி : 3517, 7117

39. அல் ஜஹ்ஜாஹ் மன்னரின் #ஆட்சி ஏற்படும்.
முஸ்லிம் : 5183

40. ஒரு மன்னர் தன் ஆட்சியில் கொடைவள்ளலாக திகழ்ந்து மக்களுக்கு வாரிவழங்குவார்.
முஸ்லிம் : 5191

Thursday, 27 December 2018

பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு; சட்டமன்ற தொகுதிகள் வாரியாக

பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு; சட்டமன்ற தொகுதிகள் வாரியாக

இந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக சட்டமன்ற தொகுதிகள் ப‌ட்டிய‌ல் இங்கே...

 *1. திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதி*

1.கும்மிடிப்பூண்டி
2. பொன்னேரி (தனி)
3. திருவள்ளூர்
4. பூந்தமல்லி (தனி)
5. ஆவடி
6. மாதவரம்

 *2. வட சென்னை பாராளுமன்ற தொகுதி.*

1திருவொற்றியூர்
2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
3. பெரம்பூர்4. கொளத்தூர்
5. திரு.வி.க. நகர் (தனி)
6. ராயபுரம்

 *3. தென் சென்னை பாராளுமன்ற தொகுதி.*

1விருகம்பாக்கம்
2. சைதாப்பேட்டை
3. தியாகராயநகர்
4. மயிலாப்பூர்
5. வேளச்சேரி
6. சோழிங்கநல்லூர்

 *4. மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி*

1. வில்லிவாக்கம்
2. எழும்பூர் (தனி)
3. துறைமுகம்
4. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
5. ஆயிரம் விளக்கு
6. அண்ணாநகர்

 *5. ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி*

1. மதுரவாயல்
2. அம்பத்தூர்
3. ஆலந்தூர்
4. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
5. பல்லாவரம்
6. தாம்பரம்

 *6. காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதி*

1. செங்கல்பட்டு
2. திருப்போரூர்
3. செய்யூர் (தனி)
4. மதுராந்தகம் (தனி)
5. உத்திரமேரூர்
6. காஞ்சிபுரம்

 *7. அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி*

1. திருத்தணி
2. அரக்கோணம் (தனி)
3. சோளிங்கர்
4. காட்பாடி
5. ராணிப்பேட்டை
6. ஆற்காடு

 *8. வேலூர் பாராளுமன்ற தொகுதி*

1. வேலூர்
2. அணைக்கட்டு
3. கீழ்வைத்தியணான் குப்பம் (தனி)
4. குடியாத்தம் (தனி)
5. ஆம்பூர்
6. வாணியம்பாடி

 *9. கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி*

1. ஊத்தங்கரை (தனி)
2. பர்கூர்
3. கிருஷ்ணகிரி
4. வேப்பனஹள்ளி
5. ஓசூர்
6. தளி

 *10. தர்மபுரி பாராளுமன்ற தொகுதி*

1. பாலக்கோடு
2. பென்னாகரம்
3. தர்மபுரி
4. பாப்பிரெட்டிபட்டி
5. அரூர் (தனி)
6. மேட்டூர்

 *11. திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி*

1. ஜோலார்பேட்டை
2. திருப்பத்தூர்
3. செங்கம் (தனி)
4. திருவண்ணாமலை
5. கீழ்பெண்ணாத்தூர்
6. கலசப்பாக்கம்

 *12. ஆரணி பாராளுமன்ற தொகுதி*

1. போளூர்
2. ஆரணி
3. செய்யார்
4. வந்தவாசி (தனி)
5. செஞ்சி
6. மைலம்

 *13. விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதி*

1. திண்டிவனம் (தனி)
2. வானூர் (தனி)
3. விழுப்புரம்
4. விக்கிரவாண்டி
5. திருக்கோயிலூர்
6. உளுந்தூர்பேட்டை

 *14. கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி*

1. ரிஷிவந்தியம்
2. சங்கராபுரம்
3. கள்ளக்குறிச்சி (தனி)
4. கங்கவல்லி (தனி)
5. ஆத்தூர் (தனி)
6. ஏற்காடு (தனி - பழங்குடியினர்)

 *15. சேலம் பாராளுமன்ற தொகுதி*

1. ஓமலூர்
2. எடப்பாடி
3. சேலம் (மேற்கு)
4. சேலம் (வடக்கு)
5. சேலம் (தெற்கு)
6. வீரபாண்டி

 *16. நாமக்கல் பாராளுமன்ற தொகுதி*

1. சங்ககிரி
2. ராசிபுரம் (தனி)
3. சேந்தமங்கலம் (தனி - பழங்குடியினர்)
4. நாமக்கல்
5. பரமத்தி வேலூர்
6. திருச்செங்கோடு

 *17. ஈரோடு பாராளுமன்ற தொகுதி*

1. குமாரபாளையம்
2. ஈரோடு (கிழக்கு)
3. ஈரோடு (மேற்கு)
4. மொடக்குறிச்சி
5. தாராபுரம் (தனி)
6. காங்கேயம்

 *18. திருப்பூர் பாராளுமன்ற தொகுதி*

1. பெருந்துறை
2. பவானி
3. அந்தியூர்
4. கோபிச்செட்டிபாளையம்
5. திருப்பூர் (வடக்கு)
6. திருப்பூர் (தெற்கு)

 *19. நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதி*

1. பவானிசாகர் (தனி)
2. உதகமண்டலம்
3. கூடலூர் (தனி)
4. குன்னூர்
5. மேட்டுப்பாளையம்
6. அவிநாசி

 *20. கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி*

1. பல்லடம்
2. சூலூர்
3. கவுண்டம்பாளையம்
4. கோயம்புத்தூர் (வடக்கு)
5. கோயம்புத்தூர் (தெற்கு)
6. சிங்காநல்லூர்

 *21. பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி*

1. தொண்டாமுத்தூர்
2. கிணத்துக்கடவு
3. பொள்ளாச்சி
4. வால்பாறை (தனி)
5. உடுமலைப்பேட்டை
6. மடத்துக்குளம்

 *22. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி*

1. பழனி
2. ஒட்டன்சத்திரம்
3. ஆத்தூர்
4. நிலக்கோட்டை (தனி)
5. நத்தம்
6. திண்டுக்கல்

 *23. கரூர் பாராளுமன்ற தொகுதி*

1. வேடசந்தூர்
2. அரவக்குறிச்சி
3. கரூர்
4. கிருஷ்ணராயபுரம் (தனி)
5. மணப்பாறை
6. விராலிமலை

 *24. திருச்சி பாராளுமன்ற தொகுதி*

1. ஸ்ரீரங்கம்
2. திருச்சி (மேற்கு)
3. திருச்சி (கிழக்கு)
4. திருவெறும்பூர்
5. கந்தர்வகோட்டை (தனி)
6. புதுக்கோட்டை

 *25. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி*

1. குளித்தலை
2. லால்குடி
3. மண்ணச்சநல்லூர்
4. முசிறி
5. துறையூர் (தனி)
6. பெரம்பலூர் (தனி)

 *26. கடலூர் பாராளுமன்ற தொகுதி*

1. திட்டக்குடி (தனி)
2. விருத்தாசலம்
3. நெய்வேலி
4. பண்ருட்டி
5. கடலூர்
6. குறிஞ்சிப்பாடி

 *27. சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி*

1. குன்னம்
2. அரியலூர்
3. ஜெயங்கொண்டம்
4. புவனகிரி
5. சிதம்பரம்
6. காட்டுமன்னார்கோவில் (தனி)

 *28மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி.*

1. சீர்காழி (தனி)
2. மயிலாடுதுறை
3. பூம்புகார்
4. திருவிடைமருதூர் (தனி)
5. கும்பகோணம்
6. பாபநாசம்

 *29. நாகபட்டினம் (தனி) பா

ராளுமன்ற தொகுதி*

1. நாகபட்டினம்
2. கீழ்வேலூர் (தனி)
3. வேதாரண்யம்
4. திருத்துறைப்பூண்டி (தனி)
5. திருவாரூர்
6. நன்னிலம்

 *30. தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி*

1. மன்னார்குடி
2. திருவையாறு
3. தஞ்சாவூர்
4. ஒரத்தநாடு
5. பட்டுக்கோட்டை
6. பேராவூரணி

 *31. சிவகங்கை பாராளுமன்ற தொகுதி*

1. திருமயம்
2. ஆலங்குடி
3. காரைக்குடி
4. திருப்புத்தூர்
5. சிவகங்கை
6. மானாமதுரை (தனி)

 *32. மதுரை பாராளுமன்ற தொகுதி*

1. மேலூர்
2. மதுரை கிழக்கு
3. மதுரை வடக்கு
4. மதுரை தெற்கு
5. மதுரை மையம்
6. மதுரை மேற்கு

 *33. தேனி பாராளுமன்ற தொகுதி*

1. சோழவந்தான் (தனி)
2. உசிலம்பட்டி
3. ஆண்டிபட்டி
4. பெரியகுளம் (தனி)
5. போடிநாயக்கனூர்
6. கம்பம்

 *34. விருதுநகர் பாராளுமன்ற தொகுதி*

1. திருப்பரங்குன்றம்
2. திருமங்கலம்
3. சாத்தூர்
4. சிவகாசி
5. விருதுநகர்
6. அருப்புக்கோட்டை

 *35. ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி*

1. அறந்தாங்கி
2. திருச்சுழி
3. பரமக்குடி (தனி)
4. திருவாடானை
5. ராமநாதபுரம்
6. முதுகுளத்தூர்

 *36. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி*

1. விளாத்திகுளம்
2. தூத்துக்குடி
3. திருச்செந்தூர்
4. ஸ்ரீவைகுண்டம்
5. ஒட்டபிடாரம் (தனி)
6. கோவில்பட்டி

 *37. தென்காசி (தனி) பாராளுமன்ற தொகுதி*

1. ராஜபாளையம்
2. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
3. சங்கரன்கோவில் (தனி)
4. வாசுதேவநல்லூர் (தனி)
5. கடையநல்லூர்
6. தென்காசி

 *38. திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி*

1. ஆலங்குளம்
2. திருநெல்வேலி
3. அம்பாசமுத்திரம்
4. பாளையங்கோட்டை
5. நாங்குநேரி
6. ராதாபுரம்

 *39. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி*

1. கன்னியாகுமரி
2. நாகர்கோவில்
3. குளச்சல்
4. பத்மநாபபுரம்
5. விளவன்கோடு
6. கிள்ளியூர்

பொது அறிவு வினா விடை

பொது அறிவு வினா விடை

*1. இந்தியாவின் நீளமான ஆறு எது?*

கங்கை.

*2. இந்தியாவின் நீளமான இரண்டாவது ஆறு எது?*

கோதாவரி ஆறு.

*3. பிரம்மபுத்திரா நதி திபெத்திய மொழியில் எப்படி அழைக்கப்படுகிறது?*

யார்லுங் ட்சாங்போ(Yarlung Tsangpo)

*4. ஹிராகுட்அணைஎந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டது?*

மகாநதி ஆறு.

*5. எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது?*

ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ்.

*6. தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும் ஆறு?*

கோதாவரி ஆறு.

*7. கிருஷ்ணா நதியின் முக்கிய துணைநதி? கிருஷ்ணா நதியில் பாயும மிகவும் முக்கியமான கிளைநதி?*

துங்கபத்ரா நதி.

*8. 1600 ஆண்டுகளுக்கு முன் ஆணை எந்த நதியில் யாரால் கட்டப்பட்டது ?*

கல்லணை, கரிகாலனால்

*9. காவிரியின் குறுக்கேகட்டப்பட்டது லட்சுமி நாராயணி தங்கக் கோவில் எங்குள்ளது?*
               
வேலூர் ஸ்ரீபுரம்

*10. உலகின் மிகப்பெரிய தீவு எது?*

கிரீன்லாந்து.

படித்ததில் பிடித்தது....எது கெடும்.......?

படித்ததில் பிடித்தது....
********************************
எது கெடும்.......?
••••••••••••••••••••••

01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.

11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.

21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும்  கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.

31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.

41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.

51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.
   கெடாமல் பாதுகாக்க வேண்டியது
             அவரவர் பொறுப்பு...

Wednesday, 26 December 2018

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்:

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்:

*1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?*
7வது இடம்
*2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?*
23 வது இடம்
*3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?*
16வது இடம்
*4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?*
15வது இடம்
*5 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?* 14வது இடம்
*6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?*
மதுரை
*7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?*
2004
*8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?*
72993
*9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?*
சென்னை
*10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?*
1076 கி.மீ
*11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது?*
1986
*12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?*
கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)
*13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?*
சென்னை (23,23,454)
*14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?*
சென்னை (46,81,087)
*15 ) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?*
68.45 ஆண்டுகள்
*16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?*
13 மாவட்டங்கள்
*17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?*
234
*18 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?*
1
*19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?*
12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ளன
*20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?*
சென்னை
*21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?*
71.54 ஆண்டுகள்
*22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?*
15979
*23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?*
561
*24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?*
146
*25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?*
18
*26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?*
39
*27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?*
தர்மபுரி (64.71 சதவீதம்)
*28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?*
பெரம்பலூர் 5,64,511
*29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?*
சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)
*30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?*
நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)
*31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?*
தர்மபுரி
*32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?*
32
*33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?*
அரியலூர்
*34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?*
திருப்பூர்
*35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்?*
80.33 சதவீதம்
*36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?*
17.58 சதவீதம்
*37 ) தமிழகததின் மாநில விலங்கு எது?*
வரையாடு
*38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?*
சென்னை, எண்ணூர், தூத்துக்குடி
*39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?*
காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி
*40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?*
1. சென்னை
2. கோவை
3. மதுரை
4. திருச்சி
5 தூத்துக்குடி
6 சேலம்
*41 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?*
999பெண்கள்(1000 ஆண்கள்)
*42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?*
1. நீலகிரி
2. சேலம்
3. வேலூர்
4. கன்னியாக்குமாரி
*43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?*
1. திருவாரூர்
2. இராமநாதபுரம்
3. தூத்துக்குடி
4. கடலூர்
*44 ) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?*
மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)
*45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?*
www.tn.gov.in
*46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?*
சென்னை
*47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?*
ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்
*48 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?*
திருவில்லிபுத்தூர் கோபுரம்
*49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?*
கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்
*50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?*
நீராடும் கடலுடுத்த
*51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?*
பரத நாட்டியம்
*52 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது?*
மரகதப்புறா
*53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?*
பனைமரம்
*54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?*
செங்காந்தள் மலர்
*55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?*
கபடி
*56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?*
1,30,058 ச.கி.மீ
*57 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?*
7,21,38,958
ஆண் 36158871
பெண் 35980087

கண்டிப்பாக பகிரவும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளலாம்

மனமெனும் நப்ஸின்* *வகைகளும்* *அவைகளின் தன்மைகளும்* ‼

🌹 *மனமெனும் நப்ஸின்* *வகைகளும்*
*அவைகளின் தன்மைகளும்* ‼

 📣  ​​​*நப்ஸின்* *வகைகள்*

​1)  *அம்மாரா*

2)  *லவ்வாமா*

3)  *முல்ஹிமா*

4)  *முத்மயின்னா*

5)  *ராளியா*

6)  *மர்ளிய்யா*

7)  *காமிலா*

🌹 *​அம்மாராவின் தன்மைகள்*

கஞ்சத்தனம், மனக்கோட்டை, பேராசை, பெருமை, பொறாமை, விளம்பர மோகம், மதிமயக்கம்.

🌹 *​லவ்வாமாவின் தன்மைகள்*

பச்சாதாபம், சிந்தனை சுயநலம், தற்பெருமை, எடுத்துக் காட்டுதல்.

🌹​ *முல்ஹிமாவின் தன்மைகள்*

தர்மசிந்தனை, உள்ளதைக் கொண்டு போதுமாக்குதல், கல்வி, பாவமன்னிப்பு கோருதல், பொறுமை, ​சேவை உணர்வு.

🌹 *முத்மயின்னாவின் தன்மைகள்*

தவக்குல், சகிப்புத்தன்மை, வணக்க வழிபாடு, நன்றியுணர்வு, திருப்தி.

🌹 *ராளியாவின் தன்மைகள்*

பற்றற்றவாழ்க்கை, மனத்தூய்மை, பேணுதல், தேவையற்றதை விட்டும் ஒதுங்கிக்கொள்ளுதல், வாக்குறுதியை காப்பற்றுதல்.

🌹 *மர்ளியாவின் தன்மைகள்*

நற்குணம், அல்லாஹ்வுக்காகவே வாழ்வது, கிருபை காட்டுதல், அல்லாஹ்வின் அன்பை அடைய முயலுதல், அல்லாஹ்வின்ஆற்றல் குறித்து ஆய்வு செய்தல், அல்லாஹ்வின் களாவை முழுசாகப் பொறுந்திக் கொள்ளுதல்.

🌹 *காமிலாவின் தன்மைகள்*

*அம்மாராவில் உள்ள* தன்மைகளை விட்டு முற்றும் நீக்கம் பெற்று.

*லவ்வாமாவிலுள்ள* சுயநலம் தற்பெருமை, எடுத்துக் காட்டுதல் என்ற விஷயங்களை விட்டும் நீங்கி பச்சாதாபம், சிந்தனை.

*முல்ஹிமாவில்* உள்ள தர்மசிந்தனை, உள்ளத்தைக் கொண்டு போதுமாக்குதல், கல்வி, பாவமன்னிப்பு கோருதல், பொறுமை, சேவை உணர்வு.

*முத்மயின்னாவில்* உள்ள தவக்குல் சகிப்புத்தன்மை, வணக்கவழிபாடு, நன்றியுணர்வு, திருப்தி.

*ராளியாவில் உள்ள* பற்றற்ற வாழ்க்கை, மனத்தூய்மை பேணுதல், தேவையற்றதை விட்டும் ஒதுங்கிக் கொள்ளுதல், வாக்குறுதியை காப்பற்றுதல்.

*மர்ளியாவிலுள்ள* நற்குணம், அல்லாஹ்வுக்காகவே வாழ்வது, கிருபை காட்டுதல், அல்லாஹ்வின் அண்மையை அடைய முயலுதல். அல்லாஹ்வின்ஆற்றல் குறித்து ஆய்வு செய்தல், அல்லாஹ்வின் களாவை முழுசாக பொருந்திக் கொள்ளுதல்.

​​இவ்வாறு *நப்ஸின் முந்திய ஆறு வகைகளையும் கடந்து, நப்ஸூடன் யுத்தம் செய்து, வெற்றி கொண்டு காமிலா* என்ற.,

*ஏழாவது நப்ஸின் தன்மைகளை முழுமையாக அடைந்து கொண்டவர்கள்* தான்.,

*குதுபுக்கள், ஹெளதுகள்,  முக்தார்கள், அவ்த்தாதுகள், அன்வார்கள், உரஃபாக்கள், அக்பார்கள், புதலாக்கள், நுஜபாக்கள், நுகபாக்கள் எனும் அவ்லியாக்கள்*.

✍ *ஹாஜி அப்துல் நசீர் சேலம்*

தற்கால கணினியின் தந்தை என்று போற்றப்படும், உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர் சார்லஸ் பேபேஜ் (Charles Babbage) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 26).

டிசம்பர் - 26, இன்றைய தினம்

🖥 _கணினியின் தந்தை சார்லஸ் பேபேஜ்_


🔘 *தற்கால கணினியின் தந்தை என்று போற்றப்படும், உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர் சார்லஸ் பேபேஜ் (Charles Babbage) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 26).*

லண்டனில் (1791) பிறந்தவர்.

 பொற்கொல்லராக இருந்த தந்தை, பின்னர் வியாபாரி, வங்கியாளராக உயர்ந்தவர். சிறுவயதில் மோசமான உடல்நிலை காரணமாக சார்லஸ், பள்ளிக்குப் போக முடியவில்லை. வீட்டுக்கே ஆசிரியர்களை வரவழைத்து கல்வி கற்பித்தனர்.

ஹோம்வுட் அகாடமியில் சிறிது காலம் பயின்றார். அங்கு நூலகத்தில் இருந்த நூல்கள், இவரிடம் கணித ஆர்வத்தை தூண்டின. வானியல் ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்ட பள்ளி ஆசிரியரால் இவருக்கு அறிவியலிலும் ஆர்வம் அதிகரித்தது.

அல்ஜீப்ராவை ஆர்வத்துடன் கற்றார். 1810-ல் கேம்ப்ரிட்ஜ் ட்ரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். ஏற்கெனவே பல மேதைகளின் நூல்களைப் பயின்று சுயமாக கணிதத்தில் தேர்ச்சி பெற்றிருந்த இவருக்கு அங்கு கற்பிக்கப்படும் கணிதம் ஏமாற்றம் அளித்தது.

நண்பர்கள் ஜே.ஹெர்ஷல், ஜி.பீகாக் உள்ளிட்ட பலருடன் இணைந்து ‘அனலிட்டிகல் சொசைட்டி’ என்ற அமைப்பை 1812-ல் தொடங்கினார். கேம்ப்ரிட்ஜில் பாரம்பரிய கற்பித்தல் முறையை மாற்றி, நவீன கணித முறைகளை அறிமுகம் செய்வதுதான் இதன் நோக்கம். இந்த அமைப்பு விரைவில் பிரபலமடைந்தது.

சிறந்த கணித வல்லுநராக உயர்ந்ததால், தேர்வு இல்லாமலேயே 1814-ல் இவருக்குப் பட்டம் வழங்கப்பட்டது. கேம்ப்ரிட்ஜில் பேராசிரியர் பதவிக்கு 3 முறை விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டார். 1827-ல் தந்தையின் சொத்துகள் இவருக்கு வந்தன. அதன் பின்னர் ஐரோப்பா முழுவதும் பயணம் மேற்கொண்டார். அதுவரை மறுக்கப்பட்ட பேராசிரியர் பணி தேடி வந்தது.

வானியலிலும் சிறந்து விளங்கினார். ராயல் கல்வி நிறுவனத்தில் வானியல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிலாந்தின் முன்னணி கணித வல்லுநர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். உலகப் புகழ்பெற்ற வானியலாளர் ஹெர்சலுடன் இணைந்து மின்காந்தவியல் குறித்து ஆராய்ந்தார்.

1820-ல் வானியல் கழகம் தொடங்கப்பட உறுதுணையாக இருந்தார். கணிதம், வானியல் தொடர்பான கணிப்புகளை மேற் கொள்ள, புரோகிராம் செய்யக்கூடிய இயந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். இறுதியாக 1835-ல் இப்படிப்பட்ட ஒரு சாதனத்தை (அனலிட்டிகல் இன்ஜின்) உருவாக்கினார்.

இதில் மில், ஸ்டோர் என்ற 2 பகுதிகள் இருந்தன. மில் என்பது தற்போதைய கணினிகளின் ‘சிபியூ’வுக்கு இணையான தாகவும், ‘ஸ்டோர்’ தற்போதைய கணினியின் மெமரி பகுதியாகவும் செயல்பட்டன. இதுவே இன்றைய கணினியின் முன்னோடி யாக கருதப்படுகிறது. வானியல் கணிப்புகளுக்கும் இது பயன் படுத்தப்பட்டது.

இதற்காக இவருக்கு வானியல் கழகத்தின் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. அனலிட்டிகல் இன்ஜின் அடிப்படையில் ‘செகண்ட் டிஃபரென்ஸ்’ என்ற இன்ஜினைக் கண்டறிந்தார். மேலும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, ரயில் பாதையை அளவிடும் கருவி, சீரான அஞ்சல் கட்டண முறைக்கான கருவி, கிரீன்விச் ரேகைக் குறியீடு, சூரிய ஒளியைக் கொண்டு கண்களைச் சோதிக்கும் கருவி உள்ளிட்ட இயந்திரங்களைக் கண்டறிந்தார்.

 பல நூல்களை எழுதினார். இவரைப் பற்றி நூல்கள், நாவல்களும் எழுதப்பட்டன. திரைப்படங்கள், ஆவணப் படங்களும் தயாரிக்கப்பட்டன. கணிதம், கண்டுபிடிப்பு, பகுப்பாய்வு, தத்துவம் இயந்திரப் பொறியியல் எனப் பல்வேறு களங்களில் முத்திரை பதித்த சார்லஸ் பேபேஜ் 80-வது வயதில் (1871) மறைந்தார்.

1. வாகனமங்களின் வேகமானி
2. கண் பரிசோதனைக்கருவி
3. புகையிரதத்தின் தைனமோ மீற்றர்
4. நியமத் தொடருந்துப் பாதை (railway track) அளவுக்கருவி
5. சீரான அஞ்சல் கட்டண முறை
6. கலங்கரை விளக்கு ஒளி
7. கீறிவிச் ரேகைக் குறியீடு
8.சூரிய ஒளி கொண்டு கண்களைச் சோதிக்கும் கருவி
9. மணிச்சட்டம்
10. நேப்பியர் கருவி
11.பாஸ்கல் இயந்திரம்
12.டிபரன்ஸ் இயந்திரம்

பொது அறிவு வினா விடை

பொது அறிவு வினா விடை

*1. பொதுத்துறை நிறுவனமான மாநிலதொழில்மேம்பாட்டுக் கழகம்(SIPCOT) எப்பொழுது தொடங்கப்பட்டது?*

1972 ஆம் ஆண்டு

*2. தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் மட்டும் எத்தனை?*

12,115 ( 2013 வரை )

*3. தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல்மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை ?*

3504 ( 2013 வரை )

*4. தமிழ் எந்த ஆண்டு ஆட்சி மொழியாககொண்டுவரப்பட்டது ?*

1958

*5. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு ?*

1,30,058 சதுர கிலோமீட்டர்கள்

*6. தமிழ்நாட்டின் மாநிலப் பறவை எது?*

மரகதப் புறா

*7. தமிழ்நாட்டின் மாநிலப்பூ ?*

செங்காந்தள் மலர்

*8. தமிழ்நாட்டின் மாநில விலங்கு ?*

வரையாடு

*9. தமிழ்நாட்டின் மாநில மரம்?*

பனை மரம்?

*10. தமிழ்நாட்டின் மிக உயர்ந்த சிகரம்?*

தொட்டபெட்டா

Tuesday, 25 December 2018

ஒரு வரி உண்மைகள்....💞💕💞💕💞💕💞💕

ஒரு வரி உண்மைகள்....💞💕💞💕💞💕💞💕

*சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்…

*வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!!

*எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும்.
யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும் !!

*விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம்.
ஆனா , வேலை இல்லாம சொந்தக்காரன் வூட்டுக்கு மட்டும் போக முடியாது !!!!

*உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது!!

*பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகக்கூட இருக்க முடியாது !!

*ஒவ்வொரு கைபேசியிலும் இருக்கின்றன, தொடர்புகொள்ள முடியாத ,ஆனாலும் அழித்துவிட மனமில்லாத எண்கள்!

*நேற்று வைத்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மீது வரும் சந்தேகம், ஒரு வாரமாயிருக்கும் வாட்டர் கேன் தண்ணீர் மீது வருவது இல்லை!!

*சதுரங்கத்தில் கூட ‘மந்திரிகள்’ நேர் வழியில் பயணிப்பதில்லை!!

மறுக்கமுடியாத சில  உண்மைகள் !!!

மருமகள் நைட்டி போட்டதால்
சண்டை வந்த வீடுகளில் எல்லாம்,
பேத்திகள் லெக்கிங்ஸ் போடுகிறார்கள்!

👄👩👖👠👜

தான் செஞ்ச தவற்றைப்
பொண்டாட்டிகிட்ட மறைக்கிறவன்
சராசரி மனுஷன்;

தனக்கு ஒரு பொண்டாட்டி
இருக்கிறதையே மறைக்கிறவன்
பெரிய மனுஷன்!

😇🤡😇🤡

OMR -ல சம்பாதிக்கிறதை
ECR-ல செலவு பண்றாங்க!

🍿🥛🍻🥃

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைக் குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் பொம்மைகளை அடிப்பது இல்லை !

😺😺😽👶

ஆண்களின் பெருங்குறைகளுள் ஒன்று...
'அன்பாக இருக்கத் தெரியும்;
ஆனால், யார் மீதெனத்
தேர்ந்தெடுக்கத் தெரியாது!’

😅😆🤠😆

ஒரு நடிகர் நாலு பொண்ணுங்களோடு ஆடினா, அது ‘ஓப்பனிங் சாங்’காம்.

அதே ஒரு நடிகை நாலு பசங்களோடு ஆடினா, அது ‘அயிட்டம் சாங்’காம்.

ஆணாதிக்கச் சமூகம் !

💃👯‍♂🕺👗

நம்மதான் விளம்பரம் போடுறப்பல்லாம் சேனலை மாத்திடுறோமே...
அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க ?

💿📽📡📽

முன்னர் எல்லாம் மழைக்காலம்
என ஒன்று இருந்தது.

இப்போது மழை நாட்கள் மட்டுமே !

⛈☔💦☔🤷‍♀🏃‍♀👨‍👦🏃‍♀

ஆன்லைனால் மிச்சமான நம் நேரத்தை, ஆன்லைனிலேயே செலவழிக்கிறோம் !

💯🈁📶🔈

நம்ம வீட்ல 24 மணி நேரமும் டி.வி ஓடிட்டே இருந்தாலும் கண்டுக்காத நாமதான்,
சலூன்ல வாயைப் பிளந்துகொண்டு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கோம் !

💥🖥⚡💥

யாரும் இல்லாதபோதும்
குழந்தைகள் காதுக்குள் வந்தே
ரகசியங்கள் சொல்கிறார்கள் !

🤰🙎👨‍👩‍👦‍👦🙎

நம் வீட்டைச் சேர்ந்த ஒருவர்
வெளியில் சென்றிருக்கும்போது
அவரை மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால்,
அவர் ஏதோ ஆபத்தில் இருப்பது போன்ற பிரமை வருகிறது.

📞📲📱

‘ஏன் எங்கிட்ட பேசல?’னு ஆரம்பிச்சு,
பேசாம இருந்ததுக்காகச் சண்டைய போட்டு,
அதுக்குத் தண்டனையா நம்மகூடப் பேசாம இருக்கப் பெண்களால் மட்டும்தான் முடியும் !

⛄😥⛄😥

ஒருகாலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்களை வியந்து பார்த்த நாம,
இப்ப நல்லா தமிழ் பேசறவங்களை வியந்து பார்க்கிற நிலைமைக்கு ஆளாகிட்டோம் !!

🕺🤹‍♂🕺🤹‍♂

"அப்பாக்கிட்ட காசு இல்லம்மா"
எனும் சொல் கேட்டு
அழகாகத் தலையாட்டும் மகளின் புரிதல்,
தந்தைக்குச் சோகமயமானது!

💃👫💃👫

காசு கொடுத்துக் கடவுளைப் பார்த்து,
கடவுளுக்கும் காசு கொடுத்து,
கடைசியில கடவுள்கிட்டயே
காசு வேணும்னு கேட்கிறவன்தான் மனிதன் !

🙏🙏🙏🙏

இந்த பதிவுக்குச் சொந்தக்காரர் எங்கிருந்தாலும் வாழ்க!
இதை படித்து ரசித்து சிரித்து புரிந்து திருந்தும் நண்பர்களுக்கு நன்றி.
மிக சிறந்த தொகுப்பு. மற்றவருக்கும் பகிரவும் . நன்றி💞💕💞💕💞💕

☆☆☆"வாங்க சிரிக்கலாம்"..☆☆☆

☆☆☆"வாங்க சிரிக்கலாம்"..☆☆☆

■""என் மகன் ரொம்ப புத்திசாலி. ஒரு தீப்பெட்டி வாங்கினா அதுல ஐம்பது குச்சி இருக்கான்னு எண்ணிப் பார்த்துதான் வாங்கிட்டு வருவான்.''
●""என் மகன் உங்க மகனைவிட புத்திசாலி. எல்லா குச்சியும் எரியுதான்னு கொளுத்திப் பார்த்துட்டுதான் வாங்கிட்டு வருவான்.''

■""உங்க சொந்த ஊர் எங்கே இருக்கு?''
●""எனக்கு அவ்வளவு வசதியெல்லாம் கிடையாது. சொந்த வீடு மட்டும்தான் இருக்கு.''

■""காலையில் எழுந்ததுமே எதுக்கு பனியனும், சட்டையும் போட்டுக்கிறீங்க?''
●""வெறும் வயித்துல மாத்திரை சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு!''

■""ஏண்டா... என்னிடம் இப்படி பொய் பேசறே..?''
●""உன்னை பார்த்ததும் "மெய்” மறந்து போயிடுறேன, அதான்!''

■கேள்வி: Love marriage’கும் arranged marriage’கும் என்ன வித்தியாசம்???
●பதில்: நாமளா போய் கிணத்தில விழுந்தா, அது Love marriage!, அப்படியில்லாம பத்து பதினஞ்சு பேர் சேர்ந்து நம்மளக் கிணத்தில தள்ளி விட்டா, அது arranged marriage!!!

■ஒருவர்: என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது;அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
●இன்னொருவர்: யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
■ஒருவர்: நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

■ஒருவர்: மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவிக் கொடுக்குறீங்க?
●இன்னொருவர்: டாக்டர் தான் தலைவலிச்சா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.

■ஒருவர்: தோல்வியைக் கண்டு பயப்படக்கூடாதுன்னு என் பையனுக்கு அட்வைஸ் பண்ணினது தப்பாப் போச்சு?
●இன்னொருவர்: ஏன்?
ஒருவர்: டுட்டோரியல் காலேஜ் பீஸூக்கு ■பணத்தை ரெடி பண்ணி வைங்கன்னு சொல்லிட்டு பரீட்சைக்குப் போறான்.

■ஒருவர்: தலைவரே மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க... வாங்க ஓடிடலாம்...!
●இன்னொருவர்: இருய்யா.. எனக்கு ஒரு செருப்புத் தான் கிடைச்சிருக்கு...!

■தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
●மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.

■ஒருவர்: எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க?
●இன்னொருவர்: என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்.
■ஒருவர்: இந்நேரம் விழுந்திருக்குமே சார்?
●இன்னொருவர்: இன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ!

■ஒருவர்: ஏன் அந்த லேடி கான்ஸ்டபிள் அவ்வளவு மேக்கப் பண்ணிக்கிட்டு வந்திருக்காங்க...?"
●இன்னொருவர்: இன்னைக்கு "ஷூட்டிங்" இருக்குன்னு சொன்னதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க போலிருக்கு...!"

■ஒருவர்: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகும் கூட ஆள் மாறவே இல்லைங்க.!
மற்றொருவர்: அப்படியா.. பரவாயில்லையே!
●ஒருவர்: அட நீங்கவேற., அவர் எனக்கு தர வேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் திருப்பி தரவேயில்லைன்னு சொல்லவந்தேன்.

■ஒருவர்: உன்னுடைய மாத வருமானம் ரூபாய் 500-ன்னு உன்னோட ரேசன் கார்டுல போட்டிருக்கே அப்புறம் எப்படி இவ்வளவு பெரிய பங்களாவை உன்னால கட்ட முடிஞ்சது..?
●மற்றொருவர்: இதெல்லாம் நான் என்னுடைய ‘நாள்’ வருமானத்தில கட்டினது..!

■நீதிபதி: ஒரு மாதம் சிறை தண்டனை அல்லது நூறு ரூபாய் அபராதம் இரண்டில் எது வேண்டும் உனக்கு..?
●குற்றவாளி: நூறு ரூபாய் கொடுங்க சாமி அது போதும்..!

■மனைவி: என்னங்க இது., ஒருவாரமா தினமும் ஒரு காலண்டர் வாங்கிட்டு வர்றீங்க..?
●கணவன்: (கோபமாக) நீதானடி ‘டெய்லி’ காலண்டர் வாங்கிட்டு வாங்கன்னு சொன்னே..!

■நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.
●டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.

Monday, 24 December 2018

பொது அறிவு வினா விடை

பொது அறிவு வினா விடை

*1. தமிழ் மொழி எந்த வெட்டெழுத்துகளை அடிப்படையாக கொண்டது?*

பிராமி வெட்டெழுத்துகள்.

*2.எந்த நபரின் பெரும் முயற்சியில் உலக தமிழ் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது?*

தனிநாயகம் அடிகள் என்கிற சேவியர் தனிநாயகம் அடிகளார்.

*3. முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது?*

வீரமாமுனிவர் மூலம் லத்தீன்.

*4. ஜெலோடோலாஜி(Gelotology)  என்றால் என்ன?*

சிரிப்பை பற்றிய படிப்பாகும்.

*5. எது உலகின் நீண்டநேர நாடகம்?*

ஹேம்லட்(Hamlet) 4042 வரிகளும் மற்றும் 29551 சொற்களையும் கொண்டுள்ளது.

*6. யார் பல் தூரிகை கண்டுபிடிக்கப்பட்டது?*

1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் அவர்களால்.

*7. எந்த பண்டைய காவியம் மணலால் எழுதப்பட்டது?*

பாபிலோன் நாகரிகத்தின் கில்கமெஷ்(Gilgamesh).

*8. எந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட தொடங்கினார்?*

குலசேகர பாண்டியன்.

9. *மிசா (MISA) மற்றும் பொடா(POTA) என்றால் என்ன ?*

உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் -(மிசா), பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம்(பொடா) (பிரவன்சன் ஆப் டெர்ரிஸ்ட் ஆக்டிவிட்டிஸ் ஆக்ட் (பொடா))

*10. யாரால் மிதிவண்டி (சைக்கிள்)கண்டுபிடிக்கப்பட்டது?*

 பேட்ரிக் மேக்-மில்லன்.

Sunday, 23 December 2018

பொது அறிவு வினா விடைகள்.

பொது அறிவு வினா விடைகள்.

*1. பலூசிஸ்தானில் உள்ள மக்கள் பேசும் ஒரு திராவிட மொழி எது?*

பிராகுயி, இது திராவிட மொழி.

*2. எந்த நாடுகளின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது?*

அர்ஜென்டீனா மற்றும் உருகுவே

*3. ஆசியாவில் தற்போது உள்ள எந்த ஒரு நகரம் மிகவும் பழமையான நகரம்?*

பெஷாவர்.

*4. இயேசு கிறிஸ்துவின் தாய் மொழி என்ன?*

அராமைக்(Aramaic)

*5. பாகிஸ்தான் என்ற பெயர் கொடுக்க காரணம் யார்?*

சௌத்ரி ரஹம்மத் அலி.

*6. ஏது உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு?*

மாஜுலி.

*7. எந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப்படும் செயல்முறையை பயன்படுத்துகிறது?*

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம்.

*8. அடால்ஃப் ஹிட்லரின் விமானப்படையின் பெயர் என்ன?*
                                    லுஃப்ட்வாஃபே(Luftwaffe)

*9. இரண்டாம் உலக போரின் போது அமெரிக்க மற்றும் நேச நாடுகள் இடையே ஏற்றப்பட்ட ஒப்பந்த்தின் பெயர் என்ன?*

கடன்-குத்தகை(Lend-Lease Agreement) ஒப்பந்தம்.

*10. எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது?*

கோலாலம்பூர் (மலேஷியா).

Thursday, 20 December 2018

பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

*1. அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்?*

எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford)

*2. அணு எண் என்றால் என்ன?*

அணு எண் என்பது ஒரு அணுக்கருவில் உள்ள
       ப்ரோட்டான்களின்(Protons) எண்ணிக்கையாகும்.

*3. தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்?*

நெல்சன் மண்டேலா

*4. மண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்?*

27 ஆண்டுகள்

*5. மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது?*

ராபன்தீவில்

*6. மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்?*

பிப்ரவரி 2 1990 ஆண்டு

*7. மண்டேலா விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவை/வயது என்ன?*

 71

*8. அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது.*

1993

*9. மண்டேலா அவர்கள் பெற்ற வேறு விருதுகள்?*

பாரத ரத்னா, அமைதி, நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி  சர்வதேச விருது.

*10. மண்டேலா அவர்களின் முழுப்பெயர்?*

நெல்சன்ரோபிசலா மண்டேலா

Sunday, 16 December 2018

சும்மாவா சொன்னாங்க!!! பெரியவங்க!!!

சும்மாவா சொன்னாங்க!!! பெரியவங்க!!!

1. 'தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது. அப்படிச் செய்தா... வீட்டுல சண்டை வரும்.'

அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.

2. 'வீட்டுக்குள்ள நகம் வெட்டினா... வீடு விளங்காது.'

வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.

3. 'நகத்தைக் கடித்தால் தரித்திரம்.'

நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.

4. 'உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.'

கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.

5. 'இருட்டிய பிறகு குப்பையை வெளியே கொட்டினால்  வீட்டுக்கு ஆகாது.

வீட்டுக்குள் பகல் முழுக்க நடமாடும் நாம், ஏதாவது சின்னஞ்சிறு நகை போன்ற பொருட்களை தவறவிட்டிருந்தால், அது குப்பையில் சேர்ந்திருக்கும். இரவு நேரத்தில் அள்ளி தெருவில் கொட்டிவிட்டால், பிறகு தேடிக் கண்டுபிடிப்பது சிரமத்திலும் சிரமம்.

6. வீட்டில் புறா வளர்க்கக் கூடாது. வளர்த்தால் குடும்பம் அழிந்துவிடும்.'

புறாக்கழிவுகளின் வாசனை பாம்பை ஈர்க்க வல்லது. அதனால் அதைத் தேடி விஷப்பாம்புகள் வரும்.

7. 'இரவு நேரங்களில் கீரை சாப்பிட்டால்... எமனுக்கு அழைப்பு வைப்பதுபோல!'

கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் படுத்தால், தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே, பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.

8. 'புளிய மரத்துக்கு கீழே படுத்தால் பேய் அடிக்கும்.'

புளிய மரம் இரவில் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடும். அதனால் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். இதைத்தான் அமுக்குவான் பிசாசு என்றுகூட சொல்வார்கள்.

9. முருங்கை மரம் வீட்டு வாசலில் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.'

மரங்களிலேயே மிகவும் மென்மையான மரம் என்பதால், குழந்தைகள் ஏறினால்கூட பட்டென்று கிளைகள் முறிந்து, விபத்துக்கு வழி வகுத்துவிடும். தவிர, அதில் வரும் கம்பளிப்பூச்சி உள்ளிட்டவை எளிதாக வீடு தேடி வந்து தாக்குதல் நடத்தும்

10. தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக் கூடாது...'

சமைக்கும்போதும்... பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக!

11. . 'வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.'

பூமியின் காந்த சக்தியானது வடதுருவத்தை நோக்கி நிற்கிறது. வடதிசையில் தலை வைத்து படுக்கும்போது அதன் ஈர்ப்பு சக்தியானது நம் தலையையும் மூளையையும் தாக்குகிறது. அதனால் ஆரோக்கியம் குறையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.

12. . 'வாழை இலை போடாமல் விசேஷம் நிரக்காது.

'இந்த இலையில் 'பினாலிக்ஸ்' எனும் இயற்கை சத்து உள்ளது. இதில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு. இதை அனுபவத்தில் கண்டுணர்ந்து காலகாலமாகக் கடைபிடிக்கிறார்கள்.

தஹஜ்ஜத் தொழுகையின் சிறப்புகள் !!!

தஹஜ்ஜத் தொழுகையின் சிறப்புகள் !!!

01. பர்ளான தொழுகைக்கு அடுத்த அந்தஸ்த்து...
02. கப்ரில் ஒளி கிடைக்கிறது ...
03. முகத்தில் ஒளி கிடைக்கிறது ...
04. எல்லா நோய்களையும்   நிவாரணமாக்குகிறது...
05. இருதய நோயை விட்டும் பாதுகாக்கிறது...
06. சிறிய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகிறது...
07. அமல்களில் இஃலாஸ் உண்டாகிறது...
08. எந்த கண்ணும் பாத்திறாத எந்த காதுகளும் கேட்டிறாத எந்த உல்லங்களாலும் சிந்தித்திறாத பெறிய நிஃமத்களை அல்லாஹ் அளிப்பான்...
09. பாவகாரியங்களை விட்டும் தடுக்கிறது...
10 . அல்லாஹ்வுடைய நெருக்கம் கிடைக்கிறது...
11 . இல்மில் பிரகாசம் உண்டாகும்...
12 . மனதை விசாலமாக்குகிறது...
13 . ஆயுலை அதிகரிக்கிறது...
14 . சொர்க்கத்தில் ஒரு கண்ணாடி மாளிகை கிடைக்கும்.அதின் உள்ளே இருந்து பார்த்தால் வெளியே உள்ளவைகள் தெறியும் வெளியே இருந்து பார்த்தால் உள்ளே உள்ளவைகள் தெறியும்...
15 . சுவர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது அதன் மேல் பட்டாடைகள் வெளியாகின்றன.அதன் அடியில் யாகூத் எனும் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை இருக்கும் அந்த குதிரையில் தஹஜ்ஜுத் தொழுபவர்கள் தாம் நாடிய இடத்திற்கெல்லாம் செல்லலாம்...
16 . உள்ளமும் நாவும் ஒன்றுபடுகிறது...
17 . தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்றுதல் , நோன்பு தோற்றல் , அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்தல் , தீனுடைய முன்னேற்றத்திற்காக பாடுபடுதல் , அல்லாஹ்வின் பாதையில் பொருட்களை செலவு செய்தல்.மேற்கண்ட அமல்களை நிறைவேற்றியவர்களுக்கு அல்லாஹ்த்தஆலா சொர்க்கத்தில் பறக்கும் குதிறையை அளிப்பான்...
18 . எவறொருவர் தொடர்ந்து தஹஜ்ஜத் நியமமாக தொழுது வருவாரோ அவர் அல்லாஹ்வின் நேசராக ( வலியாக ) மரணமடைவார்.அல்லாஹ்வுடைய நேசர்களுக்கு பயமென்பது கிடையாது மேலும் கவலை படவும் மாட்டார்கள்.
19 . தஹஜ்ஜத்துடைய நேறத்தில் துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.இத்தொழுகை குறைந்தபட்ச்சம் இரண்டு ரகஅத்துகளும்.அதிக பட்ச்சமாக இவ்விரண்டாக எவ்வளவும் தொழுது கொல்லலாம்...
20 . என்னுடைய உம்மத்திற்கு  சிறமமில்லையென்றிருந்தால் இத்தொழுகையை நான் கடமையாக்கியிருப்பேன்...

♨♨♨ எவர் இதனை மற்றவர்களுக்கு அறிவித்து அறிந்தவர் இதனை கொண்டு அமல் செய்வாரோ இன்ஷா அல்லாஹ் இதனை அறிவித்தவருக்கும் மேற்க்குறிப்பிட்ட அனைத்து ரஹ்மத்துகளையும் வல்ல இறைவன் வழங்குவான் 💯👍🏻

Friday, 14 December 2018

பெற்றோரின் சிறப்பு!!!!

பெற்றோரின் சிறப்பு!!!!!




அல்லாஹ்வின், கட்டளைப்படி பெற்றோருக்கு எதிராக ‘சீ’ என்ற வார்த்தையைக் கூட பாவிக்கலாகாது. அந்தளவுக்கு இஸ்லாம் அவர்களை கெளரவப்படுத்தி இருக்கின்றது.
இது தொடர்பாக அல்லாஹுத்தஆலா தன் அருள் மறையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றான்.

‘உம்முடைய இறைவன், அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மைசெய்ய வேண்டும் என்றும் விதித்து இருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமையை அடைந்து விட்டால் அவர்களை (நோக்கி) ‘சீ’ என்றும் சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் (உம்மிடமிருந்து) விரட்டவும் வேண்டாம். இன்னும் அவ்விருவரிடமும் கண்ணியமான பேச்சையே பேசுவீராக.குர்ஆன் 17 : 23

‘இன்னும் இரக்கம் கொண்டு பணிவு எனும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும் என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது என்னைப் (பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல் நீயும் அவர்கள் இருவருக்கும் கிருபை செய்வாயாக! எனப் பிரார்த்திப்பீராக!(அல்-குர்ஆன் – 17 : 24)

இதேநேரம் இந்த இடத்தில் ஒவ்வொருவரும் ஒரு முக்கிய விடயத்தைக் கருத்தில்கொள்ள வேண்டும். அது தான் தம் பெற்றோருக்காக நன்மை செய்யுமாறு அல்-குர்ஆன் பல இடங்களில் வலியுறுத்தியுள்ள போதிலும், அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்குமாறு வற்புறுத்துவார்களாயின் அதனை ஏற்று நடக்கலாகாது என்பதாகும். இதனை அல்-குர்ஆன் ஸ¤ரா அன்கபூத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றது.

‘தம் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும் படியாக நாம் மனிதனுக்கு வலியுறுத்தி இருக்கின்றோம். எனினும் (மனிதனே) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் நீர் அவ்விருவருக்கும் கீழ்ப்படிய வேண்டாம். என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கின்றது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்குர்ஆன் 28 : 08


*பெற்றோரின் சிறப்பு*

மேலும் இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் பெற்றோரின் மகத்துவம் சிறப்பு, முக்கியத்துவம், அவர்களைப் பராமரிக்க வேண்டிய ஒழுங்குகள் என்பன தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் எடுத்துக் கூறியுள்ளார்கள்.

ஒருமுறை முஹம்மத் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மகிழ்ச்சி பெற்றோரின் மகிழ்ச்சியிலேயே உள்ளது. அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்திலேயே உள்ளது’என்று கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஆதாரம் : திர்மிதி)

மற்றொரு சந்தர்ப்பத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் மனிதர் ஒருவர் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் மீது தாய் - தந்தையருக்குரிய உரிமைகள் என்ன? எனக்கேட்டார். அதற்கு முஹம்மத் (ஸல்) அவர்கள், ‘தாய் தந்தையரே உம்முடைய சுவனம் ஆவார்கள். அவர்களே உம்முடைய நரகமும் ஆவார்கள்’ என்று கூறியதாக அபூ உமாமா (ரலி) அறிவித்துள்ளார்கள். (ஆதாரம் : இப்னு மாஜா)

Thursday, 13 December 2018

வியந்து போன வரிகள்

வியந்து போன வரிகள்
"" "" "" "" "" "" "" "" "" "
👌👌👌👌👌👌👌
நோய் வரும் வரை உண்பவன்,
உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!
👌👌👌👌👌👌👌👌

பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல...
ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!
👌👌👌👌👌👌👌👌

பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?  செலவு செய்யுங்க.....!
உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!
👌👌👌👌👌👌👌👌

பிச்சை போடுவது கூட சுயநலமே...,
புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...
👌👌👌👌👌👌👌👌

அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை...,
ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.
👌👌👌👌👌👌👌👌

வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு...,
அதற்கு அவமானம் தெரியாது
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!
 👌👌👌👌👌👌👌👌

வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".
வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"
👌👌👌👌👌👌👌👌

திருமணம் -
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்...,
ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!
👌👌👌👌👌👌👌👌

முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்...,
பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.
அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
👌👌👌👌👌👌👌👌

மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும்
என்ற ஒரு காரணத்திற்காகவே,
நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன...!
👌👌👌👌👌👌👌👌



நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.
👌👌👌👌👌👌👌👌

இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட...,
வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!
👌👌👌👌👌👌👌

பகலில் தூக்கம் வந்தால்,
உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!!
இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!
👌👌👌👌👌👌👌👌

துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது
கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது.. 
👌👌👌👌👌👌👌

தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள *அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..*
👌👌👌👌👌👌👌

அழகான வரிகள்....
படித்ததில் பிடித்தது*
பிடித்திருந்தால் பகிரவும்...!!!

Wednesday, 12 December 2018

பொது அறிவு வினா விடை

பொது அறிவு வினா விடை


*1) உலகின் மிகப் பெரிய திரையரங்கம் எது ?*

 நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம்.

*2) உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் எங்கே உள்ளது?*

 தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்தில் உள்ளது.

*3) உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி எங்கே உள்ளது?*

 வெனிசுலா நாட்டில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி.

*4) உலகின் மிகப் பெரிய அணை எங்கே உள்ளது?*

 அமெரிக்காவில் உள்ள கௌல்டாம் அணை.

*5) உலகின் மிகப் பெரிய வளைகுடா எது?*

 மெக்ஸிகோ வளைகுடா.

*6) உலகின் மிகப் பெரிய அஞ்சல்துறை கொண்ட நாடு எது?*

இந்தியா.

*7) உலகின் மிகப் பெரிய தேசிய கீதம் எது?*

 கிரேக்க நாட்டின் தேசிய கீதம் தான். இதில் 128 வரிகள் உள்ளன.

*8) உலகின் மிகப் பெரிய பூங்கா எது?*

ஜாம்பியா நாட்டிலுள்ள குல்பா பூங்காதான். இதன் பரப்பளவு 22,144 சதுர கிலோ மீட்டர்.

*9) உலகின் மிகப் பெரிய சிறைச்சாலை எங்கே உள்ளது ?*

 ரஸ்ய நாட்டிலுள்ள கார்கோவ் சிறைச்சாலை தான். இங்கு ஒரே சமயத்தில் 40,000 கைதிகளை அடைக்க முடியும்.

*10) உலகின் மிகப் பெரிய நூலகம் எங்கே உள்ளது ?*

 அமெரிக்காவில் வாஷிங்டன் நகரிலுள்ள அமெரிக்க காங்கிரஸ் நூலகம் தான்.

Monday, 10 December 2018

பொது அறிவு வினா விடைகள்.

❇ *பொது அறிவு வினா விடைகள்*


*1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது?*

 திமிங்கிலம்

*2) உலகில் உயரமான விலங்கு எது?*

 ஒட்டகச்சிவிங்கி

*3) உலகில் மிக உயரமான மலை எது?*

 இமயமலை

*4) உலகிலேயே மிக நீளமான நதி எது?*

 அமேசன்(6.750 கிலோமீற்றர்)

*5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது?*

நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)

*6) உலகியே மிக ஆழமான ஆழி எது?*

மரியானாஆழி(11.522மீற்றர்)

*7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது?*

 லண்டன்

*8 ) உலகிலேயே பெரிய பாலைவனம் யாது?*

 சஹாராப்பாலைவனம்

*9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது?*

 வத்திக்கான்

*10) உலகிலேயே பெரிய சமுத்திரம் எது?*

 பசுபிக் சமுத்திரம்

Friday, 7 December 2018

பொது அறிவு சம்பந்தமான கேள்விகளும், அதற்கான பதில்களும்.



பொது அறிவு சம்பந்தமான கேள்விகளும், அதற்கான பதில்களும்.


*1.இ‌ந்‌தியா‌வி‌ல் யாரை கெளர‌வி‌க்கு‌ம் ‌விதமாக ஆ‌சி‌ரிய‌ர் ‌தின‌ம் கொ‌ண்டாட‌ப்படு‌கிறது?*

 a)மகா‌த்மா கா‌ந்‌தி
 b)சுவா‌மி ‌விவேகான‌ந்த‌ர்
 c)டா‌க்ட‌ர் ராதா‌கிருஷ்ண‌ன்
 d)ஜவக‌ர்லா‌ல் நேரு

Ans:c

*2.இ‌ந்‌தியா‌வி‌ல் எ‌ந்த ஆ‌ண்டு முத‌ல் முறையாக ஆ‌சி‌ரிய‌ர் ‌தின‌ம் கொ‌ண்டாட‌ப்ப‌ட்டது.*

 a)1947
 b)1962
 3)1969
 4)1975

Ans:b

*3.ச‌ர்வதேச ஆ‌சி‌ரிய‌ர் ‌தினமாக‌ எ‌ந்த நாளை‌க் கொ‌ண்டாடு‌கிறோ‌ம்?*

 a)5, ஆக‌ஸ்‌ட்
 b)5, ஏ‌ப்ர‌ல்
 c)5, ஆக‌ஸ்‌ட்
 d)5, செ‌ப்ட‌ம்ப‌ர்

Ans:a

*4.பேரா‌சி‌ரியராக இரு‌ந்த ஆ‌ல்ப‌ர்‌ட் ஐ‌ன்‌ஸ்டீ‌ன் வேறு எ‌ந்த துறை‌யி‌ல் ‌பிரபலமானவ‌ர்?*

 a)யதா‌ர்‌த்த‌க் கொ‌ள்கை
 b)மே‌ம்பா‌ட்டு‌க் கொ‌ள்கை
 c)தொட‌ர்பு‌க் கொ‌ள்கை
 d)தெ‌ர்மோடைன‌மி‌க் கொ‌ள்கை

Ans:c

*5.இ‌ந்த ‌பிரபல‌ங்க‌ளி‌ல் யா‌ர் ஆ‌சி‌ரிய‌ர் இ‌ல்லை?*

 a)ஆ‌ல்ப‌ர்‌ட் ஐ‌ன்‌ஸ்டீ‌ன்
 b)ம‌ரியா மொ‌ன்‌டெ‌ஸ்சோ‌ரி
 ‌c)ஸ்டீப‌ன் ஹா‌க்‌கி‌ன்‌ஸ்
 d)ஜவக‌ர்லா‌ல் நேரு

Ans:d

*6.1985ஆ‌ம் ஆ‌ண்டு உருவா‌க்க‌ப்ப‌ட்ட தே‌சிய ‌திற‌ந்த‌நிலை ப‌ல்கலை‌க்கழக‌ம் ‌பி‌ன்ன‌ர் எ‌ந்த இ‌ந்‌திய ‌பிரதம‌ரி‌ன் பெய‌ரி‌ல் மா‌ற்ற‌ப்ப‌ட்டது?*

 a)ப‌ண்டித ஜவக‌ர்லா‌ல் நேரு
 b)இ‌ந்‌திரா கா‌ந்‌தி
 c)லா‌ல் பகதூ‌ர் சா‌ஸ்‌தி‌ரி
 d)மெரா‌ர்‌ஜி தேசா‌ய்

Ans:B

*7.எ‌ந்த ஆ‌ண்டு டா‌க்ட‌ர் ராதா‌கிருஷ்ண‌ன் இ‌ந்‌தியா‌வி‌ன் குடியரசு‌த் தலைவராக பத‌வி ஏ‌ற்றா‌ர்?*

 a)1962
 b)1959
 c)1969
 d)1947

Ans:A

*8.இ‌ந்‌தியா‌வி‌ல் எ‌ப்போது ஆ‌சி‌ரிய‌ர் ‌தின‌ம் கொ‌ண்டாட‌ப்படு‌கிறது?*

 a)5, அ‌க்டோப‌ர்
 b)25, ஆக‌ஸ்‌ட்
 c)15, ஜூலை
 d)5 செ‌ப்ட‌ம்ப‌ர்

Ans:d

*9.இ‌தி‌ல் எ‌ந்த அமை‌ப்பு உலக ஆ‌சி‌ரிய‌ர் ‌தின‌‌க் கொ‌ண்டா‌ட்ட‌த்தை‌த் துவ‌க்‌கியது?*

 a)ரெ‌‌ட் ‌கிரா‌ஸ்
 b)யுனெ‌ஸ்கோ
 c)சா‌ர்‌க்
 d)ஐ.நா

Ans:b

Thursday, 6 December 2018

ஜூம்ஆவின் ஒழுங்குகள்

︻︻︻︻︻︻︻︻︻︻︻︻︻︻︻︻
🌙人
    ( ◎ )  _______ 人
  ║∩║____   .-:''''''"''";-.
  ║∩║___ (*(*(*|*)*)*)
  ║∩║_    ⎡⎡⎡⎡⎡⎡⎡⎡⎨⎬⎤⎤⎤⎤⎤⎤⎤⎤
▤▤▤▤.  ⎟⎟⎟⎟⎟⎟⎟⎟⎧▦⎫⎜⎜⎜⎜⎜⎜ ▣▣▣▣▣▣▣▣▣▣▣
⬛⬛⬛⬛⬛⬛⬛⬛□□□□□□□□□□□□
▒▒▒▒▒▒▒▒▒▒▒▒
🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲
  *⚜بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ⚜*
︶︵︶︵︶︵︶︵︶︵︶︵︶︵︶︵
*❀◎•••••••••••🌙•••••••••••◎❀*
_*அஸ்ஸலாமு அலைக்கும்*_
_*வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு*_
|•|•|•|•|•|•|•|•|•|•|•|•|•|•|•|•|•|•|•|•|


ஜூம்ஆவின் ஒழுங்குகள்


*1. ஜூம்ஆ நேரத்தில் கொடுக்கல் வாங்கலை  விட்டு விட வேண்டும்*
*(அல்குர்ஆன் 62:9)*

*2. குளிப்பு கடமையைப் போல் குளிக்க வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1530)*

*3. பல் துலக்க வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1537)*

*4. தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1538)*

*5. நறுமணம் பூச வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1537)*

*6. இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன் நேரத்தோடு பள்ளிக்கு வர வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1540)*

*7. வாகனத்தில் செல்லாமல் நடந்தே பள்ளிக்கு செல்வது*

*யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு*

*(வாகனத்தில் செல்லாமல் நடந்து) அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*(சூனன் நஸயீ 1364)*

*8. ஜும்ஆ தொழுகைக்காக இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன் நேர காலத்துடன் செல்லுதல், அப்போதுதான் மலக்கு மார்களின் பட்டியலில் பெயரைப் பதித்துக்கொள்ள முடியும் குர்பானியின் நன்மை ஒட்டகம் மாடு ஆடு கோழி முட்டை என்ற வரிசையில் கிடைக்கும்*
*( ஸஹீஹ் புகாரி 929)*

*9. பள்ளிக்குல் நுழைந்த உடன் இடம் இல்லையெனில் யாரையும் நகர சொல்லாமல் யாரையும் பிரிக்காமல் தனக்கு கிடைத்த இடத்தில் நின்று அமர்வதற்கு முன் கூடுதல் தொழுகை தொழ வேண்டும் தொழாமல் அமரக் கூடாது*

*(ஸஹீஹ் புகாரி 910 911,ஸஹீஹ் முஸ்லிம் 1585)*

*10. இமாம் உரை நிகழ்த்த ஆரம்பித்த உடன் யாரிடமும் பேசாமல் மெளனமாக இருந்து உரையை கவனிக்க வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1556)*

*11. அருகில் இருப்பவரிடம் மெளனமாக இருங்கள் என்று கூறினாலும் வீண் காரியத்தில் ஈடுபட்டதாக அமைந்துவிடும் (ஜூம்ஆ உடைய கூலி முழுமையாக கிடைக்காமல் போகலாம்)*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1542)*

*12. யார் (இமாம் உரை நிகழ்த்தும்போது தரையில் கிடக்கும்) சிறு கற்களைத் தொட்டு (விளை யாடி)க்கொண்டிருக்கிறாரோ அவர் வீணான செயலில் ஈடுபட்டுவிட்டார்.(ஜூம்ஆ உடைய கூலி முழுமையாக கிடைக்காமல் போகலாம்)*
*(ஸஹீஹ் முஸ்லிம்_1557)*

*13. இமாம் உரையை கவனமாக செவி தாழ்த்தி கேட்டு விட்டு தொழுகையையும் இமாமமுடன் தொழ வேண்டும்..*
*(ஸஹீஹ்முஸ்லிம்_1556)*

*மேற்கண்ட இவற்றை எல்லாம் சரியாக செய்தீர்கள் ஆனால் முழு ஜூம்ஆ வையும் அடைந்ததாக அமையும் ஜூம்ஆ உடைய கூலி இன்ஷா அல்லாஹ் முழுமையாக கிடைக்கும்*

*மேலும் அடுத்த ஜூம்ஆ வரையும் மேற்க்கொண்டு மூன்று நாட்கள் மொத்தம் வரக்கூடிய 10 நாட்கள் ஏற்படக்கூடிய பாவத்திற்கு பரிகாரமாக அமையும்*

*(ஸஹீஹ்_முஸ்லிம்_1556)*

Wednesday, 5 December 2018

நபிகள்_நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் உபதேசங்கள்...

நபிகள்_நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் உபதேசங்கள்...
------------------------------
01. Fajr மற்றும், அஸர் மற்றும் மஃரிப், மஃரிப் மற்றும் இஷா இடையே தூங்க வேண்டாம்.
------------------------------
02. நாற்றமுற்றவர்கலோடு அமர வேண்டாம்.
------------------------------
03. தூங்கும் முன் மோசமான பேச்சு பேசக் கூடிய மக்களிடையே தூங்க வேண்டாம்.
---------------------------------
04. உங்கள் இடது கையால் குடிக்க, சாப்பிடவோ வேண்டாம்.
------------------------------
05. உங்கள் பற்களின் இடையே மாட்டிய உணவை எடுத்து சாப்பிட வேண்டாம்.
---------------------
06. உங்கள் விரலில் நெட்டி முறிக்க வேண்டாம்.
------------------------------
07. காலணிகளை அணியும் முன் சரிபார்க்கவும்.
------------------------------
08. தொழுகையின் போது வானத்தை பார்க்க கூடாது.
------------------------------
09. கழிவறை உள்ளே எச்சில் துப்பக் கூடாது.
------------------------------
 10. கரியைக் கொண்டு பற்களை சுத்தம் செய்யக்கூடாது.
------------------------------
11. உங்கள் கால்சட்டையை உட்கார்ந்து அணியவும்.
------------------------------
12. கடினமானதை பற்களைக் கொண்டு கடிக்கக் கூடாது.
------------------------------
13. சூடான உணவை ஊதி சாப்பிடக் கூடாது.
------------------------------
14. மற்றவர்களின் தவறுகளை பார்க்க வேண்டாம்.
------------------------------
15. அதான் [பாங்கு ] மற்றும் இகாமத்  இடையே பேச வேண்டாம்.
------------------------------
16. கழிப்பறை உள்ளே பேச வேண்டாம்.
------------------------------
17. உங்கள் நண்பர்கள் பற்றி கதைகள் பேச வேண்டாம்.
------------------------------
18. உங்கள் நண்பர்களை விரோதம் கொள்ள வேண்டாம்.
------------------------------
19.நடந்து செல்லும்போது பின்னால் அடிக்கடி திரும்பி பார்க்க வேண்டாம்.
------------------------------
20. நடக்கும் போது உங்கள் கால்களை பூமியில் முத்திரை பதிக்க வேண்டாம்.
------------------------------
21. உங்கள் நண்பர்கள் பற்றி சந்தேகம் வேண்டாம்.
------------------------------
22. எந்த நேரத்திலும் பொய் பேச கூடாது.
------------------------------
23. சாப்பிடும் போது உணவை நுகரக்கூடாது.
------------------------------
24. மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி தெளிவாக பேசுங்கள்.
------------------------------
25. தனியாக பயணம் செய்ய வேண்டாம் .
------------------------------
26. உங்கள் சொந்த முடிவு ஆயினும் மற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.
------------------------------
27. உங்களை பற்றி பெருமை கொள்ள கூடாது.
------------------------------
28. உணவை குறைக்கூற வேண்டாம்.
------------------------------
29. பெருமை வேண்டாம்.
------------------------------
30. பிச்சைக்காரர்களை விரட்டியடிக்காதீர்கள்.
------------------------------
31. விருந்தாளியை நல்ல மனதோடு உபசரியுங்கள்.
------------------------------
32. வறுமையின் போது பொறுமை காக்கவும்.
------------------------------
33. நல்ல விஷயத்திற்காக உதவி செய்யுங்கள்.
------------------------------
34. செய்த தவறுகளை நினைத்து வருந்துங்கள்.
------------------------------
35. உங்களுக்கு கெட்டது செய்தவர்களுக்கு நல்லது செய்யுங்கள்.
------------------------------
36. இருப்பதைக் கொண்டு திருப்தி அடையுங்கள்.
------------------------------
37. அதிகம் தூங்க கூடாது - அது மறதியை ஏற்படுத்தும்.
------------------------------
38. ஒரு நாளைக்கு குறைந்தது 100 முறை பாவமன்னிப்பு தேடுங்கள்.
------------------------------
39. இருட்டில் சாப்பிட கூடாது.
------------------------------
40. வாய் முழுக்க சாப்பிட வேண்டாம் .

உங்களது நண்பர்களை முடியுமான வரை பகிருங்கள்

பொது அறிவு சம்பந்தமான கேள்விகளும், அதற்கான பதில்களும்.

பொது அறிவு சம்பந்தமான கேள்விகளும், அதற்கான பதில்களும்.


*1. முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?*

*2. குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?*

*3. ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?*

*4. சர்வதேச உணவுப்பொருள் எது ?*

*5. காகமே இல்லாத நாடு எது ?*

*6. எரிமலை இல்லாத கண்டம் எது ?*

*7. கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ?*

*8. உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?*

*9. தமிழ்நாட்டின் மரம் எது ?*

*10. முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது?*

*பதில்கள்*

_மெக்கா, விஸ்வநாதன் ஆனந்த், மூன்று, முட்டைகோஸ், நீயூசிலாந்து, ஆஸ்திரேலியா, SPRUCE, கருவிழி, பனைமரம், பெரு._

எது கெடும் ?!?

எது கெடும் ?!?

01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.

11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.

21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும்  கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.

31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.

41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.

51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.
கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு

படித்ததில் அசந்தது....☝

Tuesday, 4 December 2018

பொது அறிவு சம்பந்தமான கேள்விகளும், அதற்கான பதில்களும்


பொது அறிவு சம்பந்தமான கேள்விகளும், அதற்கான பதில்களும்.


*1. கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?*

*2. சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?*

*3. உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?*

*4. டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?*

*5. பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?*

*6. திட்டக்கமிஷனின் தலைவர் யார் ?*

*7. இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?*

*8. ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?*

*9. கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?*

*10. பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?*

*பதில்கள்*

_இந்தியா, வன்மீகம், இந்தியா, வானம்பாடி, விக்டோரியா மகாராணி, பிரதமர், விசாகப்பட்டினம், அல்பேனியா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து._

Friday, 30 November 2018

*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

Dr.NK.Gobinath B.S.M.S
     (CENCER SPECIALIST)
       9444522298,
        9445226034.

*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்*
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*

உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*

*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*💎சித்தம் தெளிய வில்வம்*💚
*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚

*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*💚

*🎀நலம் உடன் வாழ்வோம்...

💎💎💎💎💎💎💎
ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க எல்லோருக்கும் பயன்படட்டும்

அன்பு மனைவிகளுக்கு !* *அருமையான உபதேசங்கள்!!*

🍇🍇🍇🍇🍇🍇🍇


*அன்பு மனைவிகளுக்கு !*
*அருமையான உபதேசங்கள்!!*



*1. நீங்கள் தான் உங்கள் வீட்டின் வாசனை. கணவன் வீட்டினுள் நுழைந்த உடன் நீங்கள்தான் முதல் வாசனை என்பதை கணவருக்கு உணரச் செய்யுங்கள். நல்ல மணமுடன் எப்போதும் இருங்கள்.*

*2. கணவன் ஓய்வு எடுக்க கூடிய இடங்களை தயார் செய்து வையுங்கள். எப்பொழுதும் அழகிய தோற்றத்தில் சுறுசுறுப்பானவராக செயல்படுங்கள்.*

*3. கணவனுடனான தொடர்ச்சியான கலந்துரையாடலை பேணிக்கொள்ளுங்கள். வாதாட்டம், தங்களது கருத்தில் பிடிவாதம் போன்றவற்றை தவிர்த்து கொள்ளுங்கள்.*

*4. உங்களுக்கு ஷரிஅத் விதித்துள்ள பொறுப்புகளை விளங்கி கொள்ளுங்கள். பெண்களுக்கு இயல்பாக இருக்க கூடிய விடயங்களை ஷரீஅத் தங்களுக்கு வழங்கியுள்ளது.*

*5. உங்கள் சத்தத்தை அவருக்கு முன் உயர்த்தாதீர்கள். குறிப்பாக கணவன் இருக்கும் பொழுது.*

*6. நீங்கள் இருவரும் "கியாமுல் லைல்" போன்ற பின்னிரவுத் தொழுகைகளை ஒன்றாக நிறைவேற்றுவதில் கவனமாக இருங்கள். ஏனெனில், அது உங்கள் இருவருக்கும் இடையில் சந்தோஷத்தையும், அன்பையும், ஒளியையும் ஏற்படுத்துகின்றது.*

*7. கணவன் கோபத்திலிருக்கும் போது, நீங்கள் அமைதியாக இருங்கள். கணவனின் திருப்தியின்றி, இரவில் உறங்க செல்ல வேண்டாம்.*

*8. கணவன் ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் உதவி செய்யுங்கள். அவருக்கு பொருத்தமான ஆடைகளை தேர்ந்தெடுத்து வழங்குங்கள்.*

*9. கணவனின் தேவைகளை விளங்கி கொள்வதற்கும், அவருடன் அழகிய முறையில் பழகுவதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள்.*

*10. உங்களுடைய தோற்றத்திலும் உடையிலும் கவனம் செலுத்துங்கள்.*

*11. உங்களுடைய கணவன் தனது அன்பை, விருப்பத்தை வெளிப்படுத்தும் வரை காத்து கொண்டிருக்காதீர்கள்.*

*12. ஒவ்வொரு இரவிலும் கணவனுக்கு புதுமண பெண்ணை போல தயாராகி தோற்றமளியுங்கள். கணவனை முந்தி நீங்கள் உறங்க செல்ல வேண்டாம்.*

*13. கணவன் அழகிய முறையில் உங்களை எதிர் கொள்வார் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில், அவர் பல வேலைப்பளுக்களில் ஈடுபட்டவராக இருப்பார்.*

*14. எப்போதும் புன்னகையுடனும், அன்பை வெளிப்படுத்தும் உணர்வுகளுடனும் கணவன் பயணித்திலிருந்து திரும்பும் போது வரவேற்பளியுங்கள்.*

*15. கணவனின் திருப்தி அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறுவதற்கு முக்கியமானது என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். எப்போதும் தோற்றத்திலும், வார்த்தையிலும் அவரை வரவேற்கும் போது புதிய விடயங்களை செய்யுங்கள்.*

*16. ஏதாவது ஒரு விடயத்தை கணவன் கேட்கும் போது மறுக்கவோ அல்லது தாமதிக்கவோ வேண்டாம். மாறாக, உற்சாகத்துடன் விரைவாக அதனை நிறைவேற்றுங்கள்.*

*17. வீட்டில் உள்ள பொருட்களை கணவன் பயணத்திலிருந்து திரும்பும் போது புதிய முறையில் ஒழுங்குபடுத்துங்கள். அதனை கணவனின் மகிழ்ச்சிக்காக செய்கின்றீர்கள் என்பதை உணர்த்துங்கள்.*

*18. வீட்டை அழகிய முறையில் நிர்வகிப்பதற்கும், நேரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், முதன்மைபடுத்த வேண்டிய விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.*

*19. பெண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய திறமைகளை(உதாரணம்: சமையல்) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், அவை உங்களது வீட்டிற்கும், உங்கள் தஃவாவிற்கும் அவசியமானவையாகும்.*

*20. கணவன் வீட்டுக்கு கொண்டுவரும் எந்தவொரு பொருளாக இருந்தாலும் அவற்றை இன்முகத்தோடு பெற்று கொள்ளுங்கள். அதற்காக நன்றி செலுத்துங்கள்.*

*21. வீட்டை சுத்தமாக வைப்பதிலும், ஒழுங்காக வைப்பதிலும் பேணுதலாக இருங்கள். சில வேலை கணவன் அதனை உங்களிடம் எதிர்பார்க்காத போதும் கூட.*

*22. எப்போதும் திருப்திப்படுபவராக இருங்கள். வீண் விரயங்களை விட்டும் தவிர்த்திடுங்கள். வரவுக்கு மேலதிக செலவுகளை ஏற்படுத்தாதீர்கள்.*

*23. குடும்ப ஒன்று கூடல்களை பொருத்தமான நேரத்தில் ஏற்பாடு செய்யுங்கள்.*

*24. கணவன் நீண்டதொரு இடைவெளியின் பின்னர் வீட்டுக்கு வரும் போது, அவரிடம் முறைப்பாடுகளை வேதனைகளை முன் வைக்காதீர்கள்.*

*25. குழந்தைகள் கணவனை வரவேற்கும் வகையில் தயார்படுத்தி வையுங்கள்.*

*26. குழந்தைகளை பற்றி கணவன் வீடு திரும்பியவுடன் அல்லது தூங்கி எழுந்தவுடன் அல்லது உணவு சாப்பிடும் போது முறையிடாதீர்கள்.*

*27. கணவன் குழந்தைகளுடன் உரையாடும் போது அல்லது ஏதாவது ஒரு விடயத்திற்காக தண்டிக்கும் போது நீங்கள் தலையிட வேண்டாம்.*

*28. குழந்தைகளுக்கும் தந்தைக்கும் இடையில் சிறந்த தொடர்பை பேணிக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.*

*29. நீங்கள் எவ்வளவு தான் வேலை பளுவுடன் இருந்தாலும், குழந்தைகளை பராமரிப்பதில் பொடுபோக்காக இருப்பதில்லை என்பதை உணர செய்யுங்கள்.*

*30. குழந்தைகளுக்கு ஓய்வு கிடைக்கும் போது அவர்களது திறமைகளை வளர்ப்பதிலும்,  அவர்களுக்கு அவசியமான விடயங்களை கற்று கொடுப்பதிலும் அதிக கவனம் செலுத்துங்கள்.*

*31. நீங்கள் தொழுகையை பேணி கொள்ளுங்கள். கணவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் தொழுகையை பேண சொல்லி, அன்பு கட்டளையிடுங்கள்.*

*32. சிறு குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு தேவையான விடயங்களை செய்யுங்கள்.*

*33. குழந்தைகள் மீதும் கணவர் மீதும் உள்ள உங்கள் கடமைகளுக்கு இடையில் நடுநிலைமையை பேணுங்கள்.*

*34. கணவனின் பெற்றோருக்கு கண்ணியம் செலுத்துங்கள். அவரையும் அவரது பெற்றோரையும் பிரிக்கும் செயலில் ஈடுபடாதீர்கள்.*

*35. கணவனின் குடும்பத்தினரை அன்புடனும், கண்ணியத்துடனும் நடத்துங்கள். அவர்களுக்கு பொருத்தமான சந்தர்ப்பங்களில் பரிசு பொருட்களை வழங்குங்கள்.*

*36. கணவனின் விருந்தினர்களை கவனிப்பதில் அக்கறை செலுத்துங்கள். திடீரென்று அவர்கள் வந்தாலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்.*

*37. கணவனின் உபகரணங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.*

*38. எப்போதும் எந்தவொரு விருந்தாளியையும் அழைத்து வரும் நிலையில் நல்ல முறையில் உபசரித்துக் கொள்ளுங்கள்.*

*39. கணவன் தாமதமாக வரும் போது, அவரை கடிந்து கொள்ளாதீர்கள். மாறாக, அவரை எதிர்பார்த்து இருந்ததை நளினத்துடன் உணர செய்யுங்கள்.*

*40. வீட்டின் ரகசியங்களை பேணி பாதுகாத்து கொள்ளுங்கள்.*

*இவை ஒரு மனைவி கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள் மட்டுமே. ஆனால், மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது.*
♦♦♦♦♦♦♦

*எப்போதும் நாம் அல்லாஹ்வின் திருப்தியின் பால் தேவையுடையவர்களாக இருக்கின்றோம். அதனை ஒரு போதும் மறந்துவிட கூடாது.*

_*அல்லாஹ் நம் பெண்கள் அனைவரையும் விவாகரத்து என்னும் கொடிய விடயத்திலிருந்து பாதுகாப்பானாக..!*

*_குறிப்பு_*: *இச்செய்தியை தங்களது குடும்பத்தில் மற்றும் நட்பு வட்டத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பகிரவும். ஏதேனும் ஒரு பெண் இச்செய்திகளை தனது வாழ்க்கையில் பேணி நடந்து, இறைவனின் பொருத்தத்தை பெற்றுக்கொண்டால், அதில் நமக்கும் நன்மை கிடைக்கும்.

Thursday, 29 November 2018

பொது அறிவு சம்பந்தமான கேள்விகளும், அதற்கான பதில்களும்.



❇ *பொது அறிவு சம்பந்தமான கேள்விகளும், அதற்கான பதில்களும்.

*1. ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?*

_வோலடைல்._

*2.தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?*

_கங்காரு எலி._

*3.ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?*

_ஏழு._

*4.பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?*

_330._

*5.தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது?*

_மக்ரானா._

*6.பனிக்கட்டிகளின் மேல் வளரும் செடிகளின் பெயர் என்ன?*

_க்ரயோ பைட்ஸ்_

*7.டயாலிஸிஸ் இயந்திரத்தைக் கண்டறிந்தவர் யார்?*

_வில்லியம் கோல்ப்_

*8.உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?*

_நெதர்லாந்து._

*9.கடற்கரை மணலைச் சுத்தம் செய்யும் கருவியின் பெயர் என்ன?*

_பீச் கோம்பர்._

*10.நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன?*

_ஆறு தசைகள்._

*11.அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?*

_பிப்ரவரி 28._

*12.நாய்களே இல்லாத ஊர் எது?*

_சிங்கப்பூர்._

*13.மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?*

_ஆன் ட் ரோ •போபியா._

*14.எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?*

_ஹீலியம்._

*15.உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது?*

_தாலின் - இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது._

*16.வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?*

_ஆறு மூலைகள்._

*17.சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன?*

_சிரிக்க - 17 தசைகள் உம் - 43 தசைகள்_

*18.மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது. அதுபோல மாட்டை அடையாளம் காண பயன்படுவது எது?*

_மூக்கு ரேகை._

*19.கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?*

_வவ்வால். (வௌவால்)_

*20.ருத்ராட்சம் எத்தனை வகைப்படும்?*

_38 வகைகள்._

*21.விமானத் தபால்தலைகள் வெளியிட்ட முதல்நாடு எது?*

_பாரதம் 1929._

*22.உலகிலேயே பத்திரிகைகளுக்கு அதிக நேரம் பேட்டியளித்த பிரதமர் யார்?*

_திரு. வி.பி.சிங். இவர் பதவியேற்ற இரண்டாவது சந்திப்பில் 800 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு டெல்லி ஸ்ரீபோர்ட் ஆடிட்டோரியத்தில் 2 மணி நேரம்வரை பதில் அளித்து உலக சாதனை புரிந்தார்._

*23.உலகின் மிகச் சிறிய சந்து எது?*

_புனித ஜான் சந்து. ரோமில் உள்ளது. 48 செ.மீ. அகலம்._

*24.உலகிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் உள்ள நாடு எது?*

_ஸ்வீடன்._

*25.இந்திய விமானப்படையின் வாசகம் எது?*

_Touch of the glory._

Wednesday, 28 November 2018

❇ *பொது அறிவு சம்பந்தமான கேள்விகளும், அதற்கான பதில்களும்.*



❇ *பொது அறிவு சம்பந்தமான கேள்விகளும், அதற்கான பதில்களும்.*


1. ‘உள்ளாட்சியின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?

2. தேசிய இயற்பியல் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

3. போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் யார்?

4. சாக்பீஸ் எந்த வேதிப்பொருளால் ஆனது?

5. பிராண வாயு சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் இந்தியர் யார்?

6. பீனியல் சுரப்பி எங்கு அமைந்துள்ளது?

7. அமெரிக்க டாலர் நோட்டின் பெயர் என்ன?

8. தேசிய காவலர் பயிற்சி அகாடமி எங்குள்ளது?

9. மலைப்பகுதியில் நெல் சாகுபடிக்கு புகழ்பெற்ற இடம் எது?

10. முதன்முறையாக தமிழை ஆட்சிமொழியாக அறிவித்த வெளிநாடு எது?

11. மழையின் அளவை கணக்கிட உதவும் கருவி எது?

12. பென்சில் செய்ய உதவும் மரம் எது?

13. மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடு எது?

14. இந்தியாவில் உப்புச்சுரங்கம் எங்குள்ளது?

15. முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது?

*விடைகள் :*

1. ரிப்பன் பிரபு, 2. புதுடெல்லி, 3. ஜோனாஸ் சால்க், 4. கால்சியம் கார்பனேட், 5. புதோர்ஜி, 6. மூளையில், 7. கிரீன்பேக், 8. ஐதராபாத், 9. கொல்லிமலை,10.சிங்கப்பூர், 11. ரெயின் கேஜ், 12. கோனிபெரஸ், 13. அயர்லாந்து, 14. பஞ்சாப், 15. அனிச்சம்.

*பூமான் நபிகள் சொன்ன* *பொருளாதாரத் திட்டம்*

☄☄☄☄🌈☄☄☄☄

*பூமான் நபிகள் சொன்ன*
 *பொருளாதாரத் திட்டம்*

☄☄☄☄🌈☄☄☄☄




திருத் தூதர் வழிகாட்டிய ஏழ்மையும், வறுமையும் என்பது, நம்மை நாமே வதைத்துக் கொள்ளும் ஒரு வகை சுயவதை அல்ல. மாறாக, இருப்பதை இல்லாத மக்களுக்கு பகிர்ந்தளித்து விட்டு அடுத்த நாளைக்கு படைத்தவனை நம்பி உறங்கச் செல்லும் உத்தமப் பண்பு அது.

காரணம், இந்த உலகத்தில் உள்ள எந்தப் பொருளும் நாம் படைத்தது அல்ல. இவை அனைத்துமே வல்ல இறைவன் படைத்த பொருட்கள் தான். வல்ல இறைவன் படைத்த பொருள்களின் மீது நமது உழைப்பைச் செலுத்தி, நாம் அதை இன்னொரு பொருளாக மாற்றுகிறோம். எனவே, இங்கு மூலப் பொருள் என்பது இறைவன் தந்ததுதான். ஏன் ? அதன் மீது நாம் செலுத்தும் உழைப்பும் கூட இறைவன் தந்த சக்தியின் புற வடிவம் தான் .

அப்படி இருக்க,
இங்கு பொருளும் நம்முடையதல்ல. உழைப்பும் நம்முடையதல்ல.
ஏன்? நாமே கூட நம்முடையதல்ல.

இந்த சூழலில், 
நான் உழைத்தேன், நான் உருவாக்கினேன்,  நான் சேர்த்து வைக்கிறேன் என்பதெல்லாம் ஒரு எல்லைக்கு வெளியே நின்று பார்க்கும் போது இவை அத்தனையுமே கேலிக் குறியதாகி விடும். இப்படிப் பார்க்க நமக்கு ஒரு வகை மனப் பக்குவம் வேண்டும்.

இதை உணர்ந்த மேன் மக்கள் தான் , அன்றைய உழைப்பை அன்றே தானம் செய்து விட்டு அடுத்த வேளைக்கு ஆண்டவனிடம் போய் நிற்பார்கள்.

அதற்காக, வணிகம் செய்து செல்வம் சேர்ப்பதை கூடாத செயலாகப் பார்க்க கூடாது. இந்த உலகம் என்னும் வர்த்தக உருண்டையை சுழலச் செய்வதே இந்த வணிக செயல்பாடுகள் தான்.
எனவே, சக்தி உள்ளவரை வணிகத்தை மேன்மைப் படுத்தி, அதன் மூலம் வருகின்ற  செல்வத்தை மலையளவு சேர்த்து வை. இந்தப்
பரந்த பூமிப் பரப்பில் பயணம் செய்து உன் செல்வாக்கை நிலை நாட்டு.ஆனால், அந்த செல்வத்தை செயல் இழக்கும் வகையில் கொண்டு போய்  dead investment- ஆக முடக்கி  வைத்து விட வேண்டாம். அதனை தொடர்ச்சியான பொருளாதார மாற்றத்திற்கு உட்படுத்து. ஒரு மிகப் பெரிய பொருளாதார சுழற்ச்சியை உன்னைச் சுற்றி உருவாக்கி அதன் மையப் பகுதியில் நின்று கொள்.
இப்பொழுது தான் உன் உழைப்பும், உன் செல்வமும் உன் கண்களுக்கு பேரழகாகத் தெரியும். அதன் ஒளித் திவலைகள் எல்லாம் உனக்கு மறுமைக்கான வீதி விளக்குகளாக மாறும். இதுதான் இம்மையை வளப்படுத்தி அதன் வழியாக மறுமையை வசப்படுத்தும் உயரிய வித்தை.

அதற்கான மூல சூத்திரம் தான் *"ஜக்காத்"* எனும் உயரிய பொருளாதாரத் திட்டம் என்பது. இதன் மூலம் உன்னைச் சுற்றி இயங்கி வரும் சிறு தொழில்களை
( cottage industries ),
புதிய முயற்சிகளை ( start-up )
புதிய காலத் தேவையான கண்டு பிடிப்புகளை ( innovative development) எல்லாம் உன் முதலீட்டைக் கொண்டு உயிர்த்தெழச் செய். அப்பொழுதான் இந்த உயரிய பொருளாதாரத் திட்டம் பொலிவு பெறத் தொடங்கும். இந்த பொருளாதார  திட்டத்தின் தத்துவமே இந்த diversification- தான்.  அதுவரையிலும், இது வெறும் தர்மக் கணக்காக மட்டுமே நீடிக்கும்.

நம்மில் எத்தனை பேர் இந்த திட்டத்தில் இணைந்து இதனை ஆக்கப்பூர்வமான திட்டமாக மாற்றத் தயாராக உள்ளோம் ?  அல்லது ஏற்கனவே இதில் இணைந்து அதனை ஆக்கபூர்வமாக பயன் படுத்தி வருகிறோம் ?

*சொல்லை விட செயல் அழகானது*

☄☄☄☄🌈☄☄☄☄

Friday, 23 November 2018

இவற்றில் உங்களிடம் எத்தனை செல்வங்கள் இருக்கின்றது என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்

︻︻︻︻︻︻︻︻︻︻︻︻︻︻︻︻
🌙人
    ( ◎ )  _______ 人
  ║∩║____   .-:''''''"''";-.
  ║∩║___ (*(*(*|*)*)*)
  ║∩║_    ⎡⎡⎡⎡⎡⎡⎡⎡⎨⎬⎤⎤⎤⎤⎤⎤⎤⎤
▤▤▤▤.  ⎟⎟⎟⎟⎟⎟⎟⎟⎧▦⎫⎜⎜⎜⎜⎜⎜ ▣▣▣▣▣▣▣▣▣▣▣
⬛⬛⬛⬛⬛⬛⬛⬛□□□□□□□□□□□□
▒▒▒▒▒▒▒▒▒▒▒▒
🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲🔲
  *⚜بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ⚜*
︶︵︶︵︶︵︶︵︶︵︶︵︶︵︶︵

*❀◎•••••••••••🌙•••••••••••◎❀*
_*அஸ்ஸலாமு அலைக்கும்*_
_*வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு*_
|💠♦💠♦💠♦💠♦💠♦💠



இவற்றில் உங்களிடம் எத்தனை செல்வங்கள் இருக்கின்றது என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

இதோ 16 வகையான செல்வங்கள்

1. புகழ் 2. வெற்றி 3. பணம் (பொன்), 4. இரக்கம் 5. அறிவு 6. அழகு 7. கல்வி 8. நோயின்மை 9. வலிமை 10. நல்விதி 11. உணவு 12. நன் மக்கள் 13. பெருமை 14. இனிமை 15. துணிவு 16. நீண்ட ஆயுள்.

16 செல்வங்களைப் பெரும் வழிகள்

1. புகழ்

யாரும் புகழோடு தோன்றுவதில்லை. செய்யும் செயலிலும், நடக்கும் விதங்களிலும், நன்னடத்தை மற்றும் உதவி மனப்பான்மையான குணங்களைப் பொறுத்து தான் புகழ் கிடைக்கும்.

2. வெற்றி

வெற்றி என்பது பிறரை தோற்கடித்து நாம் வெற்றி பெறுவது அல்ல. நம்மை நாமே வெற்றி கொள்வதாகும். இன்றைய நிலையை விட நாளைய நிலைமை உயர்த்துவதற்கு கடின உழைப்பும், விடாமுயற்சியும் மேற்கொள்ளுதல் வேண்டும்.

3. பணம் (பொன்)

செழிப்பான வாழ்க்கைக்குத் தேவையானவைகளில் பணமும், பொன்னும் ஆகும்.அவற்றைப் பெறுவதற்குச் சிறந்த வழிகள் தொழில் செய்வது அல்லது நல்ல வேலைக்குச் சென்று சம்பாதிப்பது.

4. இரக்கம்

இருப்பவர்களுக்கு கொடுக்கிற மனமில்லை. மனமிருப்பவர்களுக்கோ கொடுப்பதற்கு ஏதுமில்லை. இது தான் இன்றைய நிலை. அன்பு காட்டுவது, அரவணைப்பிற்கு கூட பணம் கேட்கும் காலம். இருப்பினும் வெகு சிலர் இரக்கம் காட்டி பல ஏழைகளுக்கு உதவி செய்து இறைவனைப்போல் தரிசனம் தந்து கொண்டிருக்கின்றனர்.

5. அறிவு

கல்வியும், அறிவும் வேறு வேறு என்று உணர வேண்டும். படித்துத் தெரிந்து கொள்வது கல்வி. அறிவோ பார்த்து, கேட்டு, அனுபவப்பட்டு வருவது. அறிவுடையோருக்கு கல்வி குறைவாக இருந்தாலும் எந்த நேரத்தில் என்ன செய்தால் வாழ்க்கை நன்றாக வாழ முடியும் என்பதில் அதிக அறிவு இருக்கும்.

6. அழகு

பார்த்தவுடன் கவருகின்ற தன்மையை அழகு என்று பெரும்பாலோர் எண்ணிக்கொண்டு சற்று கருப்பாக, குண்டாக இருப்பவர்கள் ‘தாங்கள் அழகில்லையே’ என்று தாழ்வு மனப்பான்மையோடு வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்குள் பலவகையான அழகுகள் இருப்பதை தெரிந்துகொண்டால் இந்த மாதிரி தாழ்வுமனப்பான்மை எண்ணங்கள் வரவே வராது.சில வகை அழகுகள் இதோ ! குரல் இனிமை, கவரும் பேச்சு, தாளம் போட வைக்கும் பாட்டு, நளினமான நடனம், உடை அழகு, அறிவு, அன்பு, கருணை காட்டுதல் இன்னும் பல.

7. கல்வி

கல்வி பெரிதாக தேவைபடாவிட்டாலும் அடிப்படை கல்வி மிகமிக அவசியம். அதுவும் படித்து மனப்பாடம் செய்யும் ஏட்டுக் கல்வி வாழ்க்கை வாழ்வதற்கு உதவாது. அதோடு செய்முறை பயிற்சி வளமான துணையோடு கையும் கொடுக்கும். வளமான வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்வது நல்லது.

8. நோயின்மை

நல்ல உணவு, சிந்தனை மற்றும் செயல் நோயற்ற வாழ்வுக்கு ஆணிவேராகும். ‘நோயின்மை’ ஒருவன் வாழ்நாளில் பெற்ற விலைமதிப்பில்லாத பொக்கிசமாகும். எங்கே நோய் இல்லையோ அங்கே மகிழ்ச்சி பொங்கி வழியும்.

9. வலிமை

உடல் வலிமை பெற உடற்பயிற்சியும், மனவலிமை பெற தியானம் மற்றும் தன்னம்பிக்கை வேண்டும். வலிமை பெற அதிக நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. வெறும் 5 முதல் 10 நிமிடங்களே போதுமானது.

10. நல்விதி

நல்ல எண்ணமும், செயலும் நல்விதிக்கு அடிப்படை காரணமாக விளங்குகின்றது.’விதி’ என்பது கஷ்டம் தருவது மட்டுமல்ல. நன்றாக மகிழ்ச்சியோடு இருப்பது கூட விதியாகும். ஆக விதி என்பது உன் கையில் தான் இருக்கின்றது. அதை நமக்கு சாதகமாக ஏற்படுத்திக்கொள்வது நமது புத்திசாலித்தனத்தில் இருக்கின்றது.

11. உணவு

உடை, இருப்பிடம் முக்கியமானதாக இருந்தாலும் வேளா வேளைக்கு நல்ல உணவு உண்ணுவது அவசியம் வேண்டும். உணவு , உடலும் அருவும் வளர்வதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாகும்.

12. நன் மக்கள்

பொதுவாக குழந்தையாக இருக்கும்போது சூது, வாது ஏதும் தெரிவதில்லை.தீ ஜுவாலை கூட கவர்ச்சி மிக்க பொருளாகத் தெரியும். தீ கங்கு கூட சாப்பிடும் பழமாகத் தெரியும். ஆனால் அவர்களை நன்மக்களாக வளர்ப்பது பெற்றோர் கையிலும், சிறந்தவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள் கையிலும் , அவர்களை நன்றாக உபயோகித்துக் கொள்வது மக்கள் கைகளிலும் இருக்கின்றது.

13. பெருமை

பிறர் பெருமைபட வாழ்தல் ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் சாதனையாகும். ஆனால் ‘தற்பெருமை’ என்பது அறவே விரும்பத் தகாததாகும். பெரும்பாலும் தற்பெருமை பேசுபவர்களைச் சுற்றிலும் ஒரு கூட்டம் வெறும் பணத்திற்காகவும், பதவிக்காகவும் வேறு பல எதிர்பார்ப்போடும் இருப்பார்கள். உண்மையான பெருமை என்பது சர்க்கரையைத் தேடி எறும்பு வருவது போல நல்ல செயல்களைச் செய்யும் போது பெருமை தானாக தேடி வரும்.

14. இனிமை

பேச்சில் இனிமை, நன்மைக்களிடம் பழகுவதில் இனிமை, சொற்களில் இனிமை, எழுதுவதில் இனிமை ஆகியவைகள் என்றுமே நன்மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.

15. துணிவு

துணிவு இல்லையேல் வெற்றி இல்லை. திட்டமிடுதல் துணிவுக்கு அடித்தளம். திட்டம் சரியாக இருந்தால் எந்த செயலையும் துணிவோடு செய்யலாம். வெற்றி பெறலாம்.

16. நீண்ட ஆயுள்

மேற்கூறிய எல்லா (15) செல்வங்களை பெற்றுவிட்டால் நீண்ட ஆயுளுக்குத் துணையாய் இருக்கும்.


Saturday, 13 October 2018

இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர்* *ஆளுநர் விபரங்கள்

*இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர்* *ஆளுநர் விபரங்கள்:*


*தெரிந்துக் கொள்ளுங்கள்!*



*1.ஆந்திரா பிரதேசம்*

மாநிலம்: ஆந்திர பிரதேசம்

தலைநகரம்: அமராவதி ஹைதராபாத்

முதலமைச்சர்: சந்திரபாபு நாயுடு

ஆளுநர்: ஈ.எஸ்.எல். நரசிம்மன்

*2.அருணாச்சல் பிரதேசம்*

மாநிலம்: அருணாச்சல பிரதேசம்

தலைநகரம்: இட்டாநகர்

முதலமைச்சர்: பெமா கந்தூ

ஆளுநர்: Dr.B.D. மிஸ்ரா

*3. அசாம்*

மாநிலம்: அசாம்

தலைநகரம்: திஸ்பூர்

முதலமைச்சர்: சர்பானந்த சோனுவாள்

ஆளுநர்: ஜக்திஷ் முகீ

*4. பீகார்*

மாநிலம்: பீகார்

தலைநகரம்: பாட்னா

முதலமைச்சர்: நிதீஷ் குமார்

ஆளுநர்: சத்யா பால் மாலிக்

*5. சத்தீஸ்கர்*

மாநிலம்: சத்தீஸ்கர்

தலைநகரம்: புதிய ராய்பூர்

முதலமைச்சர்: டாக்டர் ராமன் சிங்

ஆளுநர்: ஆனந்திபென் பட்டேல்

*6. கோவா*

மாநிலம்: கோவா

தலைநகரம்: பானாஜி

முதலமைச்சர்: மனோகர் பாரிக்கர்

ஆளுநர்: மிருதுளா சின்ஹா

*7.குஜராத்*

மாநிலம்: குஜராத்

தலைநகரம்: காந்திநகர்

முதலமைச்சர்: விஜய் ரூபனி

ஆளுநர்: ஓம் பிரகாஷ் கோஹில்

*8. ஹரியானா*

மாநிலம்: ஹரியானா

தலைநகரம்: சண்டிகர்

முதலமைச்சர்: மனோகர் லா கஹ்தார்

ஆளுநர்: கப்டன் சிங் சோலங்கி

*9. ஹிமாச்சல பிரதேசம்*

மாநிலம்: இமாச்சல பிரதேசம்

தலைநகரம்: சிம்லா மற்றும் குளிர்காலத்தில் தர்மசாலா

முதலமைச்சர்: ஜெய் ராம் தாகூர்

ஆளுநர்: ஆச்சார்யா தேவ் வட்

*10. ஜம்மு & காஷ்மீர்*

மாநிலம்: ஜம்மு & காஷ்மீர்

தலைநகரம்: ஸ்ரீநகர் மற்றும் குளிர்காலத்தில் ஜம்மு

முதலமைச்சர்:

ஆளுநர்: சத்ய பால் மாலிக்

*11. ஜார்கண்ட்*

மாநிலம்: ஜார்கண்ட்

தலைநகரம் : ராஞ்சி

முதலமைச்சர்: ரகுபார் தாஸ்

ஆளுநர்: திரௌபதி முர்மு

*12. கர்நாடகம்*

மாநிலம்: கர்நாடகா

தலைநகரம் : பெங்களூரு

முதலமைச்சர்: எச். டி.குமாரசாமி

ஆளுநர்: வாஜூபாய் வாலா

*13. கேரளா*

மாநிலம்: கேரளா

தலைநகரம்: திருவனந்தபுரம்

முதலமைச்சர்: பினராயி விஜயன்

ஆளுநர்: பி.சதாசிவம்

*14. மத்தியப் பிரதேசம்*

மாநிலம்: மத்திய பிரதேசம்

தலைநகரம்: போபால்

முதலமைச்சர்: சிவராஜ் சிங் சௌஹான்

ஆளுநர்: ஆனந்தீபன் படேல்

*15.மகாராஷ்டிரா*

மாநிலம்: மகாராஷ்டிரா

தலைநகரம் : மும்பை மற்றும் இந்தியாவின் பொருளாதார தலைநகரம்

முதலமைச்சர்: தேவேந்திர பத்னாவிஸ்

ஆளுநர்: சி.வி.யாசாகர் ராவ்

*16. மணிப்பூர்*

மாநிலம்: மணிப்பூர்

தலைநகரம்: இம்பால்

முதலமைச்சர்: N.பிரென் சிங்க்

ஆளுநர்: நஜ்மா ஹெப்டுல்லா

*17. மேகாலயா*

மாநிலம்: மேகாலயா

தலைநகரம்: ஷில்லாங்

முதலமைச்சர்: கான்ராட் சங்மா

ஆளுநர்: கங்கா பிரசாத்

*18. மிசோரம்*

மாநிலம்: மிசோரம்

தலைநகரம்: அய்சால்

முதலமைச்சர்: பூ லால்லான்ஹவாலா

ஆளுநர்: நிர்பாய் சர்மா

*19. நாகலாந்து*

மாநிலம்: நாகாலாந்து

தலைநகரம்: கோஹிமா

முதலமைச்சர்: நேபியூ ரோ

ஆளுநர்: பத்மநாப ஆச்சார்யா

*20. ஒடிஷா*

மாநிலம்: ஒடிசா

தலைநகரம்: புவனேஸ்வர்

முதலமைச்சர்: நவீன் பட்நாயக்

ஆளுநர்: சத்யா பால் மாலிக்

*21. பஞ்சாப்*

மாநிலம்: பஞ்சாப்

தலைநகரம்: சண்டிகர்

முதல்வர்: கேப்டன் அம்ரிந்தர் சிங்

ஆளுநர்: வி.சி.சிங் பாட்னோர்

*22. ராஜஸ்தான்*

மாநிலம்: ராஜஸ்தான்

தலைநகரம்: ஜெய்ப்பூர்

முதலமைச்சர்: வசுந்தரா ராஜே

ஆளுநர்: கல்யாண் சிங்

*23. சிக்கிம்*

மாநிலம்: சிக்கிம்

தலைநகரம்: கேங்டாக்

முதலமைச்சர்: பவன் சாம்லிங்

ஆளுநர்: ஸ்ரீனிவாஸ் தாதாசாஹேப் பாட்டில்

*24. தமிழ்நாடு*

மாநிலம்: தமிழ்நாடு

தலைநகரம்: சென்னை

முதலமைச்சர்: எடப்பாடி கே.பழனிச்சாமி

ஆளுநர்: பன்வாரிலால் புரோஹித்

*25. தெலுங்கானா*

மாநிலம்: தெலுங்கானா

தலைநகரம்: ஹைதராபாத்

முதலமைச்சர்: கே. சந்திரசேகர் ராவ்

ஆளுநர்: ஈ.எஸ்.எல். நரசிம்மன்

*26. திரிபுரா*

மாநிலம்: திரிபுரா

தலைநகரம்: அகர்தலா

முதலமைச்சர்: பிப்லாப் குமார் தேவ்

ஆளுநர் : ததகதா ராய்

*27. உத்தரப் பிரதேசம்*

மாநிலம்: உத்தர பிரதேசம்

தலைநகரம்: லக்னோ

முதல்வர்: யோகி ஆதித்யநாத்

ஆளுநர் : ராம் நாயக்

*28. உத்தரகண்ட்*

மாநிலம்: உத்தரகண்ட்

தலைநகரம்: டேராடூன்

முதலமைச்சர்: திரிவேந்திர சிங் ராவத்

ஆளுநர்: கிருஷ்ணா காந்த் பால்

*29. மேற்கு வங்கம்*

மாநிலம்: மேற்கு வங்கம்

தலைநகரம்: கொல்கத்தா

முதலமைச்சர்: மம்தா பானர்ஜி

ஆளுநர்: கேசரிநாத் திரிபாதி

Wednesday, 10 October 2018

*கியாமத் நாளின் அடையாளங்கள்.*

*கியாமத் நாளின் அடையாளங்கள்.*


  *மகளின் தயவில் தாய்*

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

• அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777, 50

*பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்*

‘வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று” என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.

• அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777

ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி
வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள்.

• நூல்: புகாரி 50

*குடிசைகள் கோபுரமாகும்*

இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர். இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

• நூல் : புகாரி 7121

*விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்*

யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.

• நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231

 *தகுதியற்றவர்களிடம் பொறுப்பு*

‘நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறிய போது ’எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ’தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று விடையளித்தார்கள்.

• நூல் : புகாரி 59, 6496

*பாலை வனம் சோலை வனமாகும்*

செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக

மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது

• நூல் : முஸ்லிம் 1681

*காலம் சுருங்குதல்*

காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.

• நூல் : திர்மிதீ 2254)

*கொலைகள் பெருகுதல்*

கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

• நூல் : புகாரி 85, 1036, 6037, 7061

*நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்*

பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.

• நூல்: புகாரி 1036, 7121

*பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது*

மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

• நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,

12079, 12925, 13509.

*நெருக்கமான கடை வீதிகள்*

கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

• நூல்: அஹ்மத் 10306

*பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்*

பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

• நூல்: புகாரி 81, 5231, 5577, 6808

*ஆடை அணிந்தும் நிர்வாணம்*

ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.

• நூல் : முஸ்லிம் 3971, 5098

*உயிரற்ற பொருட்கள் பேசுவது*

விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

• நூல்: அஹ்மத் 11365

*பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்*

தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

• நூல்: அஹ்மத் 1511

*தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்*

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

• நூல்: ஹாகிம் 4/493

*பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்*

பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

• நூல்: ஹாகிம் 4/493

*சாவதற்கு ஆசைப்படுதல்*

இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

• நூல்: புகாரி 7115, 7121

*இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்*

ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

• நூல்: புகாரி 3609, 7121

*முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்*

‘உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ’வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)” என்று கூறினார்கள்.

• நூல்: புகாரி 3456, 7319

*யூதர்களுடன் மாபெரும் யுத்தம்*

யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போது ’முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்” என்று பாறைகள் கூறும்.

• நூல்: புகாரி 2926

*கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்*

கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் ’கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்” என்பது நபிமொழி.

• நூல் : புகாரி 5179

*யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்*

யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.

• நூல் : புகாரி 7119

*கஹ்தான் இன மன்னரின் ஆட்சி*

(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.

• நூல் : புகாரி 3517, 7117

*அல்ஜஹ்ஜாஹ் மன்னர்*

ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி.

• நூல் : முஸ்லிம் 5183

*எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்*

கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.

• நூல் : முஸ்லிம் 5191

*செல்வம் பெருகும்*

செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.

• நூல் : புகாரி 1036, 1412, 7121

ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்
கொடுப்பார். ’நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று எனக்குத் தேவையில்லை” என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.

• நூல் : புகாரி 1424

மாபெரும் யுத்தம்
இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள்

ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.

• நூல் : புகாரி 3609, 7121, 6936

 *பைத்துல் முகத்தஸ் வெற்றி*

*யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!*

1. எனது மரணம்

2. பைத்துல் முகத்தஸ் வெற்றி

3. கொத்து கொத்தாக மரணம்

4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில் திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு

5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்

6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம். அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12 ஆயிரம் பேர் இருப்பார்கள்.

• நூல் : புகாரி 3176

 *மதீனா தூய்மையடைதல்*

துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம் தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது என்பது நபிமொழி.

• நூல் : முஸ்லிம் 2451

*அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை*

யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.

• நூல் : முஸ்லிம் 3546

 *மாபெரும் பத்து அடையாளங்கள்*

இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.

1 - புகை மூட்டம்

2 - தஜ்ஜால்

3 – (அதிசயப்) பிராணி

4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது

5 - ஈஸா (அலை) இறங்கி வருவது

6 - யஃஜுஜ், மஃஜுஜ்

7 - கிழக்கே ஒரு பூகம்பம்

8 - மேற்கே ஒரு பூகம்பம்

9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

10 - இறுதியாக ஏமனி’லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்

ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

• அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162.

 *புகை மூட்டம்*

வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக அமைந்திருக்கும்.

• (அல்குர்ஆன் 44:10,11)

*உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல்*

பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி. மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

• அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி) நூல்: தப்ரானி

 *யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை*

இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.

• (அல்குர்ஆன் 21:96)

*ஈஸா(அலை) அவர்களின் வருகை*

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.

• (அல்குர்ஆன் 43:61)

 *மூன்று பூகம்பங்கள்*

(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

• அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்

 *பெரு நெருப்பு*

எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச் செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

• அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்:  முஸ்லிம் . 

*Please share to all...*