Sunday, 20 January 2019

சதகத்துல் ஜாரிய்யா சதகாவின் நன்மை..!!!

சதகத்துல் ஜாரிய்யா
சதகாவின் நன்மை..!!!

_இறைவன் மீது சத்தியமாக சதகாவின் பலன் என்னவென்பதை யாரும் அறியமாட்டார்கள், அதனை செயல்படுத்தி பார்த்தவர்களைத் தவிர!_

சதகா செய்யுங்கள், ஸபர் என்னும் பொறுமையை கடைபிடியுங்கள், அல்லாஹ்வின் கிருபையும் அருளும் மழையாக பொழிவதை கண்கூடாக பார்ப்பீர்கள்!

குறிப்பு:

_1. நீங்கள் முஸ்லீம் ஒருவருக்கு சதகா செய்ய ஆலோசனை கொடுத்து அதனை அவர் செயற்படுத்தினால் சதகா செய்வதால் அவருக்கு கிடைக்கும் புண்ணியமே ஆலோசனை கூறியவருக்கும் கிடைக்கும். அதனால் சதகா செய்தவரின் புண்ணியம் குறையாது._

யோசியுங்கள்!!!

நீங்கள் இவ்வுலகை விட்டு சென்றுவிட்டாலும் உங்கள் ஆலோசனையை செயல்படுத்தி சதகா கொடுப்பவர்கள் இருந்துக் கொண்டிருப்பார்கள். இதனால் உங்களுக்கு புண்ணியம் கிடைத்துக் கொண்டேயிருக்கும்!

*2. இதே போல் நீங்களும் இச்செய்தியினை பரப்பச் செய்து அதனால் யாரேனும் சதகா செய்வதை பழக்கமாக்கிக் கொண்டால் உங்களுக்கும் சதகா செய்பவருக்கு கிடைக்கும் அளவு புண்ணியம் கிடைக்கும்.*

நண்பரே!

நீங்கள் மாணவராக இருப்பின் உங்களுக்கு கிடைக்கும் அரசு ஊக்கத்தொகையாகவோ கைச்செலவுத்தொகையாகவோ இருந்தாலும் அதிலும் சிறு தொகையினை சதகா கொடுக்கச் செய்யுங்கள்.ر

சதகா பெறுபவரின் கையை அடைவதற்கு முன் அல்லாவின் கையை அடைந்தால் நிச்சயமாக பெறுபவருக்கு கிடைக்கும் சந்தோஷத்தைவிட கொடுப்பவருக்கு கிடைக்கும் சந்தோஷம் அதிகமாக இருக்கும்.

என்ன தாங்கள் சதகாவின் பலன்களை அறிவீர்களா?

முக்கியமாக 17,18,19 எண் விஷயங்களை கவனமாக படியுங்கள்.

*சதகா கொடுப்பவர்களும், அதற்கு காரணமாக இருப்பவர்களும் கேளுங்கள்:*

1. சதகா சுவர்க்க வாயில்களில் ஒன்றாகும்.

2. சதகா நற்செயல்களில் முக்கியமானதாகும். அன்னதானம் அவற்றிலும் முக்கியமானது.

3. சதகா கியாமத்து நாளில் நிழல் கொடுக்கும். சதகா கொடுப்பவர்களுக்கு நரக நெருப்பிலிருந்து காக்கும்.

4. சதகா இறை கோபத்தை தணிக்கும், கப்ரு வெப்பத்தை தணிக்க உதவிடும்.

5. சதகா மய்யத்திற்கு சிறந்த அன்பளிப்பும், லாபகரமானதும் ஆகும். அல்லாஹ் இதற்கான புண்ணியத்தை அதிகரித்துக் கொண்டேயிருப்பான்.

6. சதகா அழுக்கு நீக்கியாகும். மனதை சுத்தப்படுத்துவதால் புண்ணியம் அதிகரிக்கும்.

7. சதகா, அதை செய்பவர்களின் முகத்திற்கு கியாமத்து நாளில் பிரகாசத்தையும் தேஜஸையும் கொடுக்கும்.

8. சதகா கியாமத் நாளின் பயங்கரத்திலிருந்து காப்பாற்றும், நடந்தவைகளைப் பற்றி பச்சாதாபப்படச் செய்யாது.

9. சதகா பாவ மன்னிப்பாகவும், தவறுகளுக்கு பரிகாரமாகவும் இருக்கிறது.

10. சதகா நல்முடிவிற்கு சுபச்செய்தியாகவும், மலக்குகள் துவாவிற்கு காரணமாக இருக்கிறது.

11. சதகா கொடுப்பவர் சிறந்த மனிதர்களில் சேர்ந்தவராவார், இதற்கு காரணமானவர்களுக்கும் புண்ணியம் சேரும்.

12. சதகா கொடுப்பவருக்கு பெரிய வெகுமதிக்கு வாக்குறுதியாகும்.

13. மற்றவர்களுக்காக செலவழிப்பவர் இறையச்சமுள்ளவர்களின் வரிசையில் சேர்க்கப்படுவார், சதகா கொடுப்பவரை இறைவனின் படைப்புகள் விரும்பும்.

14. சதகா கொடுப்பது கருணை உள்ளத்திற்கும் வள்ளல் தன்மைக்கும் அடையாளமாகும்.

15. சதகா துவா ஏற்கப்படுவதற்கவும் கஷ்டங்களிலிருந்து விடுபடுவதற்கான வழியாகும்.

16. சதகா முஸீபத் மற்றும் கஷ்டங்களை விலக்குகிறது. உலகில் தவறுகளின் 70 கதவுகள் அடைக்கப்படுகின்றன.

17. சதகா ஆயுள் மற்றும் சொத்துக்கள் அதிகரிப்பிற்கும் காரணமாகும். ரிஜ்கும் வெற்றியும் கிடைக்கச் செய்யும்.

18. சதகா மருத்துவமும், மருந்தும், ஷஃபாவுமாகும்.

19. சதகா நெருப்பில் எரிவதிலிருந்தும், நீரில் மூழ்கி விடுவதிலிருந்தும், திருட்டு மற்றும் துர்மரணத்திலிருந்தும் தடுக்கும்.

20. சதகா விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு செய்தாலும் கூட புண்ணியம் கிடைக்கும்.

கடைசி வார்த்தை:

❤சதகாவின் நிய்யத்தில் இத்தகவலை பரப்புவது மிகச்சிறந்த சதகாவாகும்.❤

No comments:

Post a Comment