Sunday 27 January 2019

திக்ரின் சிறப்புகள்:

🌹🌹🌹 *திக்ரின் சிறப்புகள்*

*ஸுப்ஹானல்லாஹில் அளீம் வபி ஹம்திஹீ* என யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு பேரீத்த மரம் நடப்படுகிறது.

📗 *ஆதாரம் :- திர்மிதீ*

*அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக்க லஹு, வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு*

என்று யாரேனும் ஒருவர் முறையாக உளுச் செய்து, கூறுவரானால் சொர்க்கத்தின் எட்டு வாயில்களும் அவருக்காக திறக்கப்படுகின்றன. அதில் அவர் விரும்பிய வாயிலில் நுழைந்து கொள்ளலாம்.

📗 *ஆதாரம் :- புகாரி முஸ்லிம்*

*லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்* என்பது சொர்க்கத்துப் பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும்.

📗 *ஆதாரம் :- புகாரி முஸ்லிம்*

*​லாஇலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்*

என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமாக நற்பலன் பெற்றுக் கொடுப்பதாகும். மேலும், *அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து அவர் புரிந்த நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாக்கும் அரணாக அது அவருக்கிருக்கும்*. மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது. ஒருவர் இதை விட அதிகமாக இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர. என்று கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

📗 *ஆதாரம் :- புகாரி*

*சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி* அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன் என்று, யார் *ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று மிகுதியாக இருந்தாலும் சரியே*❗என்று கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

📗 *ஆதாரம் :- புகாரி*

*لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ*

*லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்*.

என பத்து முறை ஓதுகிறவர், *இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்)* அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார். என்று கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

📗 *ஆதாரம் :- புகாரி*

*சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி*.

*பொருள்* :-  கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன், அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன். இந்த இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். நன்மை தீமை நிறுக்கப்படும். தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளின் பிரியத்திற்குரியவையுமாகும்.

📗 *ஆதாரம் :- புகாரி*

​சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாஹிலாஹா இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று நான் கூறுவது சூரியன் உதயமாகும் இவ்வுலகத்தை விட எனக்கு மிகவும் பிரியமானதாகும் என்று கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

📗 *ஆதாரம் :- புகாரி முஸ்லிம்*

நாங்கள் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களோடு அமர்ந்திருந்தபோது, உங்களில் எவரேனும் ஒருநாளில் ஆயிரம் நன்மைகள் சம்பாதிக்க முடியுமா❓என்று கேட்டார்கள். ஆயிரம் நன்மைகள் எப்படி சம்பாதிக்க முடியும்❓ என்று ஒரு தோழர் கேட்க, நூறு தடவை தஸ்பீஹ் செய்யுங்கள். ஆயிரம் நன்மைகள் எழுதப்படும் அல்லது ஆயிரம் தீமைகள் அழிக்கப்படும் என கூறினார்கள்.

📗 *ஆதாரம் :- புகாரி முஸ்லிம்*

*லா ஹவ்ல வலா கூவத்த இல்லா பில்லாஹ்*  அப்துல்லாஹ் இப்னு கைஸே! உனக்கு சொர்க்கத்துப் பொக்கிஷம் ஒன்றை அறிவிக்கட்டுமா❓ என கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதரே❗ கூறுங்கள் என்றார்கள். அப்போது நாயகம், “இந்த முறையில் கூறுவீராக” என கூறினார்கள்.

No comments:

Post a Comment